நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 9, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......7

பவுடர் பூசிக் கொண்டன சுவர்கள்
மாலையிட்டுக் கொண்டன வாசல்கள்...
பொட்டு வைத்துக் கொண்டன கதவுகள்...
புதுச் சட்டை மாட்டிக் கொண்டன இருக்கைகள்...
அலமாரிகள் பழைய சேலை உடுத்திக் கொண்டன.....

பரணிலிருந்து குத்து விளக்குகளும்
பித்தளை அண்டாக்களும் தரை இறங்கின....
கோல நோட்டுக்கள் தேடப்பட்டன!
கலர்ப் பொடிகள் கிண்ணங்களுக்குள்
குடி புகுந்தன......

ஒட்டடைக் கம்புகள் சுறு சுறுப்பாகின....
கொஞ்சம் தூசியையும் நிறைய
சிலந்திகளையும் வீட்டை விட்டுத் துரத்தின...
கரப்பான் பூச்சிகள் வீடில்லாமல் அங்குமிங்கும் ஓடின....

தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......
கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்......

31 comments:

காமராஜ் said...

பரபரவென ஒரு திருவிழாக்களை வந்துவிடுகிறது முதல் பத்தியில்.பின்னவைகள் பேசும் பேச்சு காக்கை குருவி எங்கள் ஜாதி.அழகு அருணா.பிடியுங்கள் பெரும் பூக்காடு.

நேசமித்ரன் said...

அருமை .

தொடர்க !

பூங்கொத்து :)

LK said...

பூங்கொத்து. பண்டிகைக் கால பரபரப்பு

Chitra said...

தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......


......இன்னும் குருவிகள், வீட்டுக்குள் கூடுகள் கட்டுகின்றனவா? கூடு கட்ட இடமில்லாமல், அந்த இனமே அழிந்து கொண்டு வருகிறதே.... :-(

நல்லா எழுதி இருக்கீங்க.

ராமலக்ஷ்மி said...

//தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......//

அடடா..

//நிறைய
சிலந்திகளையும் வீட்டை விட்டுத் துரத்தின...
கரப்பான் பூச்சிகள் வீடில்லாமல் அங்குமிங்கும் ஓடின....//

உலகம் அனைவருக்குமானது. மனிதருக்கு மட்டும் தமக்கே தமக்கானது.

அருமையான கவிதை அருணா.

Balaji saravana said...

அருமை அருணா.. :)

KParthasarathi said...

அப்பப்பா !!அருமை தான் போங்க
உண்மையை சொல்லட்டுமா .உங்க மேல ஒரே பொறாமையா (envy) இருக்கு.எப்படி எல்லோருடைய வீட்டிலும் நடக்கிற சாதாரண விஷயத்தை இவ்வளவு அழகாக கவி நயத்துடன் சொல்ல முடிகிறது..பூங்கொத்து போறாது.வைர மோதிரமே சரியா இருக்கும்

அமைதிச்சாரல் said...

பின்றீங்க அருணா மேடம்.. பூந்தோட்டத்தையே கொடுக்கிறேன் :-)

சந்தனமுல்லை said...

hmm....

priya.r said...

Nice Aruna

பத்மா said...

அய்யோ அருணா !இப்படி மனச சட்ன்னு கனக்க வச்சுடீங்களே

அன்புடன் அருணா said...

காமராஜ்
நேசமித்ரன் பூக்காடுக்கும் பூங்கொத்துக்கும் நன்றி!

ஹேமா said...

அருணா...ஒருவேளை தீபாவளி மனிதருக்கு மட்டும் என்கிற நினைப்போ !

அம்பிகா said...

அருமை அருணா..
பூங்கொத்து.

kutipaiya said...

//தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்//

:( :(

அருமை

அன்புடன் அருணா said...

நன்றி LK!
Chitra said...
/ ......இன்னும் குருவிகள், வீட்டுக்குள் கூடுகள் கட்டுகின்றனவா? கூடு கட்ட இடமில்லாமல், அந்த இனமே அழிந்து கொண்டு வருகிறதே.... :-(/
நீங்க சொல்வது உண்மைதான் சித்ரா!

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி Balaji saravana

ஜோதிஜி said...

அற்புதம். நெகிழ்ந்து விட்டேன்.

சுந்தர்ஜி said...

விரட்டப்பட்ட சிலந்திகளும் வீடுதேடும் கரப்பான்களும் தூக்கியெறியப்பட்ட குருவிக்கூடும் அது விட்டுச்சென்ற முட்டைகளும் மனதை ரணமாக்கியது. தீபாவளியை வேறொரு கோணத்தில் பார்த்த கனிவான மனத்துக்கு கசியும் வார்த்தைகளை விட்டுச் செல்கிறேன் அருணா.

சுந்தர்ஜி said...

ஹையோ! என்ன அருணா இது? உங்க ப்ளாக் முகவரியைக் கண்டதும் துடித்துவிட்டேன்- மென்மையான உங்கள் எழுத்தில் அறிமுகமாகையில் இப்படி ஒரு முகவரியா? என்று.

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
./பூங்கொத்து போறாது.வைர மோதிரமே சரியா இருக்கும்/
பூங்கொத்துக்கு ஈடாகுமா???
பூந்தோட்டத்துக்கு நன்றி அமைதிச்சாரல்
வெறும் ஹ்ம்ம்தானா சந்தனமுல்லை .?
நன்றி priya.r
நன்றி பத்மா

அன்புடன் அருணா said...

ஹேமா said...
/அருணா...ஒருவேளை தீபாவளி மனிதருக்கு மட்டும் என்கிற நினைப்போ !/
அதே ஹேமா!
நன்றி அம்பிகா
நன்றி kutipaiya!

Deepa said...

Lovely!

vinu said...

he he he sorry paa konjam late aayudichu thalaippai eatkanavea padiththunnu ninachu emaanthuttean;


as usual sweeeeeeeeeeeeeet poets;

கலாநேசன் said...

அருமையா இருக்குங்க.

அன்புடன் அருணா said...

நன்றி ஜோதிஜி !
நன்றி Deepa !

அன்புடன் அருணா said...

சுந்தர்ஜி said...
/ஹையோ! என்ன அருணா இது? உங்க ப்ளாக் முகவரியைக் கண்டதும் துடித்துவிட்டேன்- /
கருத்துக்கு நன்றி சுந்தர்ஜி !சும்மா புதுசா வைக்கணும் என்று வைத்ததுதான்...இப்போ மாற்றினால் லிங்க் விட்டுர்மேன்னுதான் அப்படியே இருக்கு!!!

அன்புடன் அருணா said...

vinu said...
/he he he sorry paa konjam late aayudichu /
அட இதுக்கெல்லாமா சாரி கேப்பாங்க????

கே. பி. ஜனா... said...

//தீபாவளிக் கலாட்டாவுக்காகக்
கலைத்துத் தூக்கியெறியப் பட்டவைகளுள்
ஒரு குருவிக்கூடும் சில முட்டைகளும் அடக்கம்......//
Excellent!

Harani said...

அன்புள்ள...

பாரதி குறிப்பிடுவதுபோல நல்ல காட்சிப் படிமம் கொண்ட கவிதை. அதேசமயம் மனதைச் சங்கடத்துக்குள்ளாக்கும் கவிதை. கசிய வைக்கிறது.
குருவிக்கூட்டையும் முட்டைகளையும் மனதிலேந்தி அவை பொரிந்துகொள்ள எடுத்துக்கொண்டுவிட்டேன்.

Karthik said...

Sema!

மணிவேலன் said...

அசத்திட்டீங்க டீச்சர் எப்போதும்போல்...........

பிடிங்க பூங்கொத்தை!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா