நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, October 25, 2010

நான் என் ஹீரோவைத் தேர்ந்தெடுத்தாச்சு!!!நீங்க?

 விசு மக்களரங்கம் பார்த்தவுடன் பதிந்தது.....
CNN அமெரிக்கத் தொலைக்காட்சி உலகம் முழுவதுமான 'நிஜ கதாநாயகர்களை' அடையாளம் கண்டு வருடந்தோறும் விருது வழங்கிவருகிறது. அந்த விருதை தனது தன்னலமற்ற சமூக சேவைகளுக்காக உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் மதுரை N.கிருஷ்ணன்..முதல் இடத்தை அடைவதற்கு இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது.முதல் இடத்தில் தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்திய ரூபாய் மதிப்பில் 45 லட்சம் அக்ஷயா ட்ரஸ்ட்டுக்குக் கிடைக்கும் அது மேலும் மேலும் கிருஷ்ணனின் சேவைகளுக்கு உதவ முடியும். திரு.கிருஷ்ணன்.யார் இந்த கிருஷ்ணன்?
              இவர் மதுரை மாநகர தெருக்களில், மனநிலை குன்றிய 400 பேருக்கு வருடம் 365 நாட்களும், நாளுக்கு மூணு வேளையுமாக உணவு வழங்கிக் கொண்டு இருக்கும் இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை. வெறும் 28 தான். கடந்த ஏழு வருடங்களாக, அக்‌ஷ்யா டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் மூலமாக இதை செய்து வருகிறார்.
கிருஷ்ணனின் எல்லை உணவு கொடுப்பதோடு முடிந்து விடவில்லை.இன்னும் பரந்து இருக்கிறது. கேட்பாரற்று இருக்கும் அனாதை பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியையும் செய்து வருகிறார் கிருஷ்ணன்.பிணத்தை claim செய்து, குளிப்பாட்டி, உரிய முறையில் நல்லடக்கம் தருவதுமாக இருக்கும் இவரை, மதுரை முனிசிபாலிடியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும், இறுதி சடங்கு செய்ய சொல்லி அழைக்கிறார்கள்.

நான் ஹீரோவைத் தேர்ந்தெடுத்து விட்டேன்! நீங்க???
இங்கே போய்த் தேர்ந்தெடுங்கள்!!!
நவம்பர் 18 வரை ஓட்டுப் போடலாம். !
http://heroes.cnn.com/vote.aspx 
எவ்வ்ளவோ ஓட்டுப் போட்டிருக்கோம்!இதுக்குப் போடமாட்டீங்களா?

நன்றி!

http://www.akshayatrust.org/
http://idlyvadai.blogspot.com/2009/08/blog-post_15.html
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/index.html
http://ithumadurai.blogspot.com/2010/05/blog-post_08.html
http://agalvilakku.blogspot.com/2010/10/blog-post.html
http://itsmeena.wordpress.com/

23 comments:

ராமலக்ஷ்மி said...

கண்டிப்பாகச் செய்கிறோம். நல்ல பகிர்வு அருணா.

Philosophy Prabhakaran said...

ரெண்டு ஓட்டு போட்டுவிட்டேன்... ஒன்னு நாராயனுக்காக CNNல்... மற்றொன்று அருணாவுக்காக தமிழிஷில்..

Anonymous said...

ஒட்டு போட்டுட்டேன்..
பகிர்வுக்கு நன்றி அருணா!

vanjimagal said...

I voted for the maharasan krishanan

KParthasarathi said...

ippodhae pOttuvidugiraen.nandri ungalukku

தேவன் மாயம் said...

நான் எழுதி ட்ராப்டில் வைத்துள்ளேன்! வடை போச்சே!

Asiya Omar said...

நானும் ஓட்டு போட்டு விட்டேன்,2முறை.

vinu said...

present madam

Anisha Yunus said...

i voted three people whom i thought are doing wonderful jobs, in my view the ultimate price shud be shared in someway so that more people get benefited.

சாந்தி மாரியப்பன் said...

பாராட்டப்பட வேண்டிய மனிதர்.ஓட்டுப்போட்டாச்சு..

The cost of enterprise mobility solutions said...

I already voted him..

எஸ்.கே said...

அவருக்கு என் வணக்கங்கள் 3 முறை ஓட்டு போட்டுவிட்டேன்!!

மாதேவி said...

ஓட்டுப்போட்டுவிட்டோம்.

Sanjai Gandhi said...

அக்காவுக்கு பூங்கொத்து..

kamaraj said...

மிக அவசியமான தகவல்.
பகிர்வுக்கு நன்றி மேடம்.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ப்ரின்ஸ்!

மாணவன் said...

//அன்புடன் அருணா said...
நிறைய நிறங்கள்....நிறைய குழப்பமாய் இருக்கு!கொஞ்சம் சிம்பிள் ஆக மாற்றுங்கள் வலைப்பக்கத்தை!//

நீங்கள் சொன்னதைப்போலவே என் தளத்தை சிம்பிளாக அதுவும் உங்கள் தளத்தின் டெம்ப்ளேட்டைப் போலவே மாற்றி விட்டேன்
மிக்க நன்றி என்னை நல்வழிபடுத்தியதற்கு தொடர்ந்து ஆதரவு தந்து இந்த மாணவனின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாய் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இந்த மகிழ்ச்சியான தருனத்தில் தமிழராகிய நாம் பெருமைபட வேண்டிய செய்தியை பகிர்ந்துகொள்கிறேன்
நானும் உங்களைப்போலவே நண்பர் சசிகுமார் உதவியுடன் என் தளத்திலும் பதிவிட்டுள்ளேன்

தமிழரின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு மதுரை தமிழன்
பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?
அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
நன்றி

Anonymous said...

i got in mail as well, i'll do it w/o fail

அன்புடன் அருணா said...

ஓட்டுப் போட்ட அனைவருக்கும் நன்றி!

Chitra said...

Super Hero!!

Unmaivirumpi said...

நான் என் ஹீரோவைத் தேர்ந்தெடுத்தாச்சு!!! also posted your link in my twitter to get more votes

priya.r said...

பதிவு மூலம் தெரியபடுத்தியதற்கு நன்றிங்க அருணா
இந்த தடவை
தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்வுடன்
உங்களுக்கு பூங்கொத்து கொடுக்கட்டுமா!

அன்புடன் அருணா said...

Unmaivirumpi said.../ நான் என் ஹீரோவைத் தேர்ந்தெடுத்தாச்சு!!! also posted your link in my twitter to get more votes/
Thanx Unmaivirumpi!
priya.r said...
/இந்த தடவை
தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் ஸ்வீட் பாக்ஸ்வுடன் உங்களுக்கு பூங்கொத்து கொடுக்கட்டுமா!/
ஸ்வீட்ஸ் +பூங்கொத்து யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா??பிரியா?

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா