நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, October 19, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!-7

நிலம் வாங்கியவுடன் சிலமுறை....
வீடு கட்ட ஆரம்பிக்கும் போது பலமுறை....
அப்புறம் தோன்றும் போதெல்லாம் அடிக்கடி...
ஓடி ஓடிப் போய்ப் பார்த்தாச்சு

இது உன் ரூம்....இது எங்க ரூம்
இது பாப்பாவுக்கு....
இங்கே டி.வி....
இங்கே பூந்தோட்டம்...
இங்கே பூனைக்கு மெத்தை.....
ரெண்டே தென்னைமரமாவது....
ஒரே ஒரு கருவேப்பிலை மரமும்....
கொஞ்சம் ரோஜாச் செடிகளும்...

இப்படிக் கனவுகளுக்கும்...நிஜங்களுக்கும்
பாலம் கட்டிக் கொண்டே
காலம் ஓட்டியாச்சு....

கடைசியில் கிடைத்தது...
ஐந்தாறு வீடுகளுக்கு மேல்
ஒரு கூடு.....
ஜன்னலில் தெரியும் கொஞ்சூண்டு வானமும்....
ஜன்னல் விளிம்புகளில் ரோஜத் தொட்டிகளும்...

மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே?

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!
இது தமிழ்க்குறிஞ்சியில்!!

29 comments:

அமைதிச்சாரல் said...

//இப்படிக் கனவுகளுக்கும்...நிஜங்களுக்கும்
பாலம் கட்டிக் கொண்டே
காலம் ஓட்டியாச்சு...//

அருமையா சொன்னீங்க...

அன்னு said...

//ஜன்னலில் தெரியும் கொஞ்சூண்டு வானமும்....
ஜன்னல் விளிம்புகளில் ரோஜத் தொட்டிகளும்...//

நிதர்சனம் எப்பொழுதும் லேட்டகத்தான் பிடிபடுகிறது போல.
நலா வந்திருக்கு கவிதை. கடைசி லைன் இயல்பாய் அமைந்த ஒரு வடு போல். :)

Chitra said...

மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே?

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!


.....Reality Bites. Very nice kavithai.

சுந்தரா said...

//மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே? //

இப்படித்தான் தேற்றிக்கொள்கிறோம் மனதை.

அருமை.

தமிழ்குறிஞ்சி said...

தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது.

ராமலக்ஷ்மி said...

என்னவொரு அருமையான கவிதை!

//மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே? //

அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் அருணா. பூங்கொத்து!

எஸ்.கே said...

யதார்த்தத்தை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்! சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள்!

Deepa said...

Wow! Beautiful.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருணா... பூங்கொத்து:)

பதிவுலகில் பாபு said...

நல்லாயிருக்கு..

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல நெகிழ்வான கவிதைங்க.......எளிமையான வரிகள்.....இதம்....

vinu said...

cuuuuuuuuuuuuuuuuuute

மாதேவி said...

"கடைசியில் கிடைத்தது...
ஐந்தாறு வீடுகளுக்கு மேல்
ஒரு கூடு....."

அழகாய் சொல்லியுள்ளீர்கள். இன்றைய வாழ்க்கையில் கிடைப்பது.... இதுதான்

Sundaram said...

இன்றைய நடைமுறை வாழ்க்கை. நிதர்சனம். பாராட்டு மாத்திரம் பரிசாகாது.

இதனினும் இனிமையாய் எழுதுக......

மேலும் வளர்க........

சுந்தரம்

திரவிய நடராஜன் said...

கவிதைக்கும் எனக்கும் ரெம்ப தூரம். இருந்தாலும் நான் ஆஜர்.

காமராஜ் said...

//மரக் கிளையில் கூட்டிற்கும்
பரணில் கட்டியிருக்கும் கூட்டிற்கும்
வேறுபாடு குருவிக்கென்ன தெரியவா போகிறது???
மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே? //

அப்படியே அணில்களோடும் குருவிகளோடும் ஓடித்திரிந்த உணர்விருக்கிறது இந்தக் கவிதையில்.

பூந்தோட்டம்.

சுல்தான் said...

இப்பத்தான் நிலம் வாங்கப் போகிறோம் பற்பல கற்பனைகளோடு.....:)
என்ன இப்படி............:(

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல்
அன்னு
Chitra
சுந்தரா அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

தமிழ்குறிஞ்சி said...
/தங்களது பதிவை எமது தமிழ் குறிஞ்சி இணைய இதழில்கவிதை பகுதியில் வெளியிட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழ்குறிஞ்சி தங்கள் படைப்புகளை வரவேற்கிறது./
ரொம்ப நன்றிங்க தமிழ்குறிஞ்சி!
ரொம்ப நன்றிங்க ராமலக்ஷ்மி !

பாச மலர் / Paasa Malar said...

கலைகின்ற வீடுகள் ...கலையாத அழகுகள்...வாழ்த்துகள் அருணா

அன்புடன் அருணா said...

எஸ்.கே
Deepa
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

பதிவுலகில் பாபு
நித்திலம்-சிப்பிக்குள் முத்து
vinu அனைவருக்கும் நன்றி!

நா.மணிவண்ணன் said...

நல்ல இருக்கு

அன்புடன் அருணா said...

மாதேவி
Sundaram
திரவிய நடராஜன் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

பூந்தோட்டத்துக்கு நன்றி காமராஜ்!
நன்றி சுல்தான் !

ப்ரியமுடன் வசந்த் said...

//மழைக்கும் வெயிலுக்கும் ஒதுங்க ஒரு இடம்தானே? //

ம்ம் இது இல்லாதவங்களுக்கு!

இருக்குறவங்க செயற்கை மழை அருவி வெயில் இதெல்லாம் கூட வச்சுப்பாங்க!:(

எதார்த்தம் நிறைய கவிதையில் நல்லாருக்கு ப்ரின்ஸ்!

அன்புடன் அருணா said...

நன்றி பாச மலர்!ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கீங்க!
நன்றி நா.மணிவண்ணன்!

priya.r said...

அருணா ! இந்த பதிவு தங்களுடைய 200 பதிவு என்று நினைக்கிறேன் ;நல்ல பகிர்வு

வாழ்த்துக்கள் ! மேலும் வளர எல்லாம் வல்ல இறைநிலை அருள் புரியட்டும் !

25 பதிவுக்கே பில்ட் அப் செய்யும் எங்களை போன்றோர்க்கு உங்களின் ஆரவாரமில்லாத சாதனை
வியக்க வைக்கிறது !

இதோ உங்களுக்கு 200 பூங்கொத்துக்கள் !!

அன்புடன் அருணா said...

அடடா! இருநூறா????பதிவு போட்டுற வேண்டியதுதான்!!!!
/உங்களின் ஆரவாரமில்லாத சாதனை
வியக்க வைக்கிறது ! /
அட! நீங்க வேற! கணக்கு மறந்து போச்சு!
ஆனா உங்களுக்கெப்பிடி இது இருநூறாவது பதிவுன்னு தெரிஞ்சுது?தெரியப் படுத்தியதுக்கு நன்றியோ நன்றி!
பூங்கொத்துக்கு நன்றி பிரியா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா