நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, October 2, 2010

Taken for granted!

இதை எப்படித் தமிழ்ப் படுத்துதல் என்று தெரியவில்லை. இது எல்லோருடைய வாழ்விலும் இப்படி ஒருமுறையாவது நிகழ்ந்தே இருக்கலாம்.அலுவலகத்தில் ஒரு சின்ன பொருளை எடுத்துக் கொடுப்பவரிடம் கூட நன்றி சொல்ல மறப்பதில்லை.அனாவசியமாகக் கூட நிறைய நேரங்களில் Excuse Me கேட்டிருப்போம்.தும்மினால் கூட!
ஆனால் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மை விரும்புபவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்கிறோம்
அது மனைவியாயிருந்தாலும்,கணவனாயிருந்தாலும்,பிள்ளைகளாயிருந்தாலும்,அக்கா தம்பியாக இருந்தாலும்,அண்ணன்,நண்பர்கள், அம்மா அப்பாவாயிருந்தாலும் ஒரு நன்றி என்ன?நமக்குச் செய்வதை,செய்ததை  உணர்ந்து கொண்டதாகக் கூடக் காட்டிக் கொண்டதில்லை.அல்லது இப்போ என்ன அவசரம் என்று நினைத்திருக்கலாம்.அல்லது மெல்லச் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்திருக்கலாம்.அல்லது நன்றி சொல்லி அந்நியப்படுத்த விரும்பவில்லை என்று சப்பைக் கட்டு கட்டியிருக்கலாம்.
ஆனால் உலகில் எல்லோரும் விரும்புவது பாராட்டையும்,அங்கீகாரமும் தான்.அது கிடைக்காத நிராசையினால்தான் கோபமும் வெறுப்பும்,பழிவாங்கும் எண்ணமும்.கூடவே வாழும் அம்மாவிடம் பேச நேரமேயில்லை.வெளிநாட்டிலிருந்து வந்த நண்பனுடன் ஒருவாரம் விடுப்பெடுத்துச் சுற்றமுடிகிறது.இதெல்லாம் என்ன?Taken for granted தானே???

எல்லா நாட்களையும் நாம் கொண்டாடுவதில்லை.பிறந்த நாளோ,தீபாவளியோ,காதலர் தினமோ ஒரு சிறப்பைப் பெறுவதைப் போல ஏன் எல்லா நாட்களும் கொண்டாடப்படுவதில்லை?தினம் குடிக்கும் தண்ணீர் பெறாத சிறப்பை எப்படிப் பழச்சாறும்,இளநீரும் பெற்றுக் கொள்கிறது?இதன் அடிப்படையைப் பார்த்தால் வெகு அருகாமையில்,அல்லது நினைத்த பொழுது கிடைக்கும் அல்லது எப்போதும் தொடர்புடைய ஒன்றைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.நம்முடைய நினைப்பெல்லாம் கிடைக்காத ஒன்றைப் பற்றியதாகவே இருக்கிறது.இது ஒரு மாயையோ?

நதி இழுத்துச் செல்லும் மணல்துகள்,சருகு,இலை,மீன்கள் போல இழுபட்டுக் கொண்டே இருக்கிறோம்.வாழ்க்கையில் ஓட்டம் நன்றுதான்.ஆனால் பந்தயத்தின் எல்லை நூலையும் அறுத்துக் கொண்டு என் கடமை ஓடுவதே என்னும் ஓட்டத்தை நிறுத்தி மூச்சு வாங்கலாம்.
கொஞ்சம் அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்கலாம்.நமக்கானவர்கள்,நம்மைச் சார்ந்தவர்கள் பற்றிக கவலைப்படலாம்.அவர்கள் செய்யும் சின்னஞ்சிறு வேலைகளைப் பாராட்டலாம்.நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே அன்பு காட்டலாம்.ஒரு சிறு புன்னகை,ஒரு கைப்பற்றுதல,ஒரு தோளில் கை போடுதல்,முதுகைத் தட்டிக் கொடுத்தல் இவை செய்யும் மந்திரங்களை உணரலாம்.
Let us not take anything for granted!

29 comments:

skamaraj said...

//ஏன் எல்லா நாட்களும் கொண்டாடப்படுவதில்லை?தினம் குடிக்கும் தண்ணீர் பெறாத சிறப்பை எப்படிப் பழச்சாறும்,இளநீரும் பெற்றுக் கொள்கிறது?இதன் அடிப்படையைப் பார்த்தால் வெகு அருகாமையில்,அல்லது நினைத்த பொழுது கிடைக்கும் அல்லது எப்போதும் தொடர்புடைய ஒன்றைப் பற்றி நமக்கு அக்கறையில்லை.//
splendid...

மிக அமையான இடம் இது. அருணா, இப்படி நாட்களை மீளச்சுற்றி சரிபண்ணச் சொல்லும் நிதானம் அழகு.இந்த கணத்திலிருந்தே சரி செய்யவேண்டும்.ஆசான் எப்போதும் ஆசான்.வந்தனம் அருணா.

பழமைபேசி said...

உரிமை மீறல்!

தனக்கான உரிமையை மீறிச் செயல்படுதல்!!

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா. முடிவாய் சொல்லியிருப்பது திருவார்த்தைகள்!!!

அன்புடன் அருணா said...

நன்றி காமராஜ்!

கிறுக்கன் said...

அருணா மேடம்,
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த பதிவு...உங்களிடம் கற்கும் மாணவ மணிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...இந்த கருத்துக்கள் யாவும் அவர்களுக்கும் போதிப்பீர்கள் என நம்புகிறேன்...தொடருங்கள் உங்கள் நல்சேவையை....

"உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட."

ஆனால்

"எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு."

-
கிறுக்கன்

KParthasarathi said...

சுவாதீனம் அல்லது உரிமை கொண்டாடுதல் என்று சொல்லலாமா?நன்னா எழுதுகிறீங்க .சரளமா எளிமையா புரியும்படியா அழகா எழுத உங்களால் முடிகிறது..சரக்கும் உள்ளது.பின்ன என்ன?ஜமாய் க்கறீங்க !!

Karthik said...

நல்ல பதிவு. :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//Taken for granted!
இதை எப்படித் தமிழ்ப் படுத்துதல் என்று தெரியவில்லை//

"நம் உணர்வை அலட்சியப் படுத்துதல்" என்று கொள்ளலாமோ?

அன்னு said...

அருமையான பதிவு அருணா.
என்னுடைய கொள்கை சிறு வயதிலிருந்தே இதுதான். எதையும் சும்மா கிடைத்தது போலெண்ணி இருந்து விடக் கூடாது. நிறைய நேரம் உறவுகளின் சிதறுதலில்தான் இந்த உண்மை புரியும். நன்றி, பதிவிற்கு :)...

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

//தண்ணீர் பெறாத சிறப்பை எப்படிப் பழச்சாறும்,இளநீரும் பெற்றுக் கொள்கிறது?//

ம்ம்...

Thenral said...

Nichayam intha padhivukku poongothu koduthe aaganum!!!!!!Poongothukalodu en vaazhthukkal!Arumaiyana padhivu

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

புதுகைத் தென்றல் said...

அருமை அருணா. taken for granted படிக்கும்பொழுது இதனால் காயப்பட்டவர்களுக்கு அதன் வலி புரியும். இங்கே இன்னொரு வாக்கியத்தை சொல்ல விரும்புகிறேன். எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம். ஒரு டீ ஷர்ட்டில் படித்தது மிகவும் பிடித்தது.

BEING ABLE TO SURVIVE IT DOES MEAN IT WAS EVER OK!!!

ரங்கன் said...

super Message!!

வாழ்த்துக்கள்!!

அன்புடன் அருணா said...

நன்றி பழமைபேசி!
நன்றி ராமலக்ஷ்மி !

அன்புடன் அருணா said...

கிறுக்கன் said...
/"உறவு உயர்ந்திடும் உள்ளம் இணைந்திடும்
உற்றோரை உளமார பாராட்ட."
ஆனால்
"எதிலும் எதிர்பார்த்து ஏங்கும் உறவு
என்றும் இணையா பிளவு."/
அதுவும் சரிதான் கிறுக்கன்!

அன்புடன் அருணா said...

நன்றி KParthasarathi சார்!
நன்றி Karthik
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/ "நம் உணர்வை அலட்சியப் படுத்துதல்" என்று கொள்ளலாமோ?/
சொல்லலாமே!

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்

வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

சுந்தரா said...

அருமையான இடுகை அருணா...

பிடிங்க பூங்கொத்தை!

அன்புடன் அருணா said...

நன்றி அன்னு!
நன்றி ஹுஸைனம்மா!

kutipaiya said...

மிக உண்மை!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி!Thenral
ஈரோடு தங்கதுரை said...
நன்றி!சீக்கிரம் வர்றேன்!

புதுகைத் தென்றல் said...
புரிதலுக்கு நன்றி தென்றல்!

/ BEING ABLE TO SURVIVE IT DOES MEAN IT WAS EVER OK!!!/அருமையான வாசகம்!

அன்புடன் அருணா said...

நன்றி sweatha
நன்றி ரங்கன்!kutipaiya ,சுந்தரா!

SanjaiGandhi™ said...

சூப்பர்க்கா. ஒரு நாளைக்கு 25 நன்றியாவது சொல்றேன். ரொம்ப பிடிச்ச விஷயம். குறிப்பா, ஆட்டோக்காரர் கிட்ட நன்றி சொல்லும் போது அவர் முகத்துல சந்தோஷம் பார்க்கனுமே..எவ்வளவு பேரம் பேசி சண்டை போட்டு ஆட்டோவில் ஏறினாலும் , இறங்கும் போது தானாகவே நன்றி சொல்லிடறேன் :)

priya.r said...

//நம்முடைய நினைப்பெல்லாம் கிடைக்காத ஒன்றைப் பற்றியதாகவே இருக்கிறது.இது ஒரு மாயையோ//

//சருகு,இலை,மீன்கள் போல இழுபட்டுக் கொண்டே இருக்கிறோம்.வாழ்க்கையில் ஓட்டம் நன்றுதான்.ஆனால் பந்தயத்தின் எல்லை நூலையும் அறுத்துக் கொண்டு என் கடமை ஓடுவதே என்னும் ஓட்டத்தை நிறுத்தி மூச்சு வாங்கலாம்.
கொஞ்சம் அக்கம் பக்கம் சுற்றிப் பார்க்கலாம்.நமக்கானவர்கள்,நம்மைச் சார்ந்தவர்கள் பற்றிக கவலைப்படலாம்.அவர்கள் செய்யும் சின்னஞ்சிறு வேலைகளைப் பாராட்டலாம்.நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இன்றே அன்பு காட்டலாம்.//

நல்ல கருத்துக்கள் ;நன்றாக எழுதி இருக்கிறீர்கள் மிகவும் நன்றாக இருக்கிறது
சொல்லி புரிய வைத்ததற்கு நன்றி
நல்ல பகிர்வுங்க அருணா

மோகன் குமார் said...

பூங்கொத்து !!

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான எழுத்து நடை. அழகான, அனைவரும்
கட்டாயம் தங்களது வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய
விஷயத்தைப் பற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்
மேடம்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா