நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, October 14, 2010

சாலை சொல்லும் கதைகள்!

கொஞ்சம் ரத்தச் சிதறல் ....
அச்சோ என்ன விபத்தோ்....

குப்புற விழுந்திருக்கும் செருப்பு ...
அடடா.....யாருக்கு என்னவோ....

உடைந்த ஹெல்மெட் சிதறல்....
உயிரிருக்குமா ?போயிடுச்சோ?

கூடியிருக்கும் கூட்டம்....
காரும் சைக்கிளுமா?லாரியும் பைக்குமா?

108இன் திடீர் அலறல்....
எங்கே???என்னாச்சோ?

கொஞ்சம் உதிர்ந்த பூவிதழ் ......
அய்யோ யார் மரணமோ ...

முதல் முதலாகப் பைக்கில் பிள்ளையைப்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு......ம்ம்ம்
நல்லதையே எங்கிருந்து நினைக்க????

22 comments:

சங்கவி said...

Wav... Very Good Kavithi.......

அன்னு said...

கடைசி வரிகளில் யதார்த்தம் சுடுகிறது. எங்க வீட்டுல அவரும் பையனும் தனியா கார்ல போனாலே நேரத்துல வரலை, ஃபோனும் எடுக்கலைன்னா உலகமே முடிவுக்கு வந்த மாதிரி ஆயிடும், அவங்க வந்து சேர்ற வரை.....அவரவர் குழந்தைதானே அவரவர்களுக்கு பெரிது...ஆனா நல்லா எழுதியிருக்கீங்கப்பா....வாழ்த்துக்கள் :)

Balaji saravana said...

அம்மாவின் பதைபதைப்பு கடைசி வரிகளில்..
சாலைகள் சொல்லும் கதைகள் எப்போதும் விசித்திரமானவை..

சுந்தரா said...

தழும்புகிற தாயின் மனசு...

தவிக்கிற தவிப்பை வெளியே சொன்னா, நீ நல்லதே நினைக்கமாட்டியா என்ற இதே கேள்விதான் எப்பவும் வரும் :)

பூங்கொத்து அருணா!

அம்பிகா said...

யதார்த்தம் என்றாலும், பயமும், வலியும் தருகிறது.

எஸ்.கே said...

பலரின் நிலை இதுதான்! சிறிது வீட்டுக்கு வர தாமதமானாலும் மனம் கெட்டதை நினைத்து பார்க்காமல் இல்லை. பல விபத்துக்கள் நிகழ்வதுதான் இப்படி நினைக்க காரணமாகிறது! நன்றி! அருமையாக எழுதியுள்ளீர்கள்!

ஹுஸைனம்மா said...

நிஜம்!! வெளியே போனவங்க வர்ற வரை திக் திக்னு இருக்கும்.

//பைக்கில் பிள்ளையைப்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு....//

பள்ளிக்குப் போற பிள்ளைக்கு பைக் எதுக்குனும் கேட்கத் தோணுது...

கோபிநாத் said...

\\108இன் திடீர் அலறல்....
எங்கே???என்னாச்சோ?\\

இந்த சவுண்டை கேட்டமால் வீடு திரும்பினால் உலகத்தில் அடுத்த அதிசயம் நான் தான்..அப்படியிருக்கு இங்க (சென்னை)

vinu said...

enna paana kaalam appudi vaegamaaga payanikkirathu

அன்புடன் அருணா said...

நன்றி சங்கவி !
நன்றி அன்னு !

காமராஜ் said...

எல்லோருக்குள்ளும் உருளும் இந்த உருண்டை கவிதையாக வரும்போது என்ன அழகான ஓவியமாகிப்போகிறது.நல்லாருக்கு மேடம்.,

KParthasarathi said...

pl see my tamil blog
http://vasparth.blogspot.com/

அன்புடன் அருணா said...

நன்றி Balaji saravana
பூங்கொத்துக்கு நன்றி சுந்தரா !
நன்றிஅம்பிகா

kutipaiya said...

மிக யதார்த்தம்!!

சுல்தான் said...

யதார்த்தமாவது.
நல்லதாக நினையுங்கள்.

அன்புடன் அருணா said...

நன்றி vinu !
நன்றி காமராஜ் !

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/pl see my tamil blog
http://vasparth.blogspot.com//
Give me some time....My net troubles!

அன்புடன் அருணா said...

நன்றி kutipaiya !
நன்றி சுல்தான்!

ப்ரியமுடன் வசந்த் said...

பதபதப்புன்னு சொல்லுவாங்க வீட்ல!

அமைதிச்சாரல் said...

கெட்டதை நினைக்காட்டாலும், நேரத்துக்கு வீட்டுக்கு வந்து சேரலைன்னா, கொஞ்சம் பதபதப்பாத்தான் இருக்கு..

Anonymous said...

அக்கா!

நல்லதே நினைப்போம்.நல்லதே நடக்கும்.

எம்.எம்.அப்துல்லா

vazhipokanknr said...

அன்புடன் அருணாவுக்கு,
ஒரு பூங்கொத்து...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா