நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, June 28, 2010

கை விரித்துச் சிரித்தது மரம்!!

கீழே விழுந்த பந்து
எம்பி எழுந்து வந்ததைப்
பார்த்து இறகை உதிர்த்து
விட்டுக் காத்திருக்கிறது
ஏமாறப் போகும் பறவை!

தானே கீழே விழுந்த மழை
இனி எப்போ மேலே
போவோமெனச் சூரியனைப்
பார்த்துச் சிரித்துக் கிடந்தது
குளத்தில்....

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!

53 comments:

அம்பிகா said...

\\ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !\\
அழகான வாழ்வியல் தத்துவம்.
அருமை மேடம்.

Unknown said...

அற்புதமான கவிதை ...

ஷர்புதீன் said...

அழகான வாழ்வியல் தத்துவம்.

:)

கார்க்கிபவா said...

கடைசி பத்தி ரொம்ப பிடிச்சிருக்கு

சந்தனமுல்லை said...

A WOW kavithai!

பத்மா said...

ரொம்ப அழகு
ஆனா உலகமே conservation of energy /mass ல என்ன சொல்லுது?nothing can be made nor lost ன்னு தானே?
நல்ல கவிதை மேடம்

ராமலக்ஷ்மி said...

//ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று//

அருமை.

//கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!//

ஆகா.

நல்ல கவிதை அருணா.

சிவாஜி சங்கர் said...

:) Nice

Chitra said...

டித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!


.... கவிதை, அருமையாகவும் அழகாகவும் இருக்கிறதுங்க... பாராட்டுக்கள்!

VELU.G said...

மிகவும் அருமையான முடிவு

ஒன்றைப்போட்டு திருப்பி எடுப்பதில்லை வாழ்வு

super

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புதமான கவிதை

முனைவர் இரா.குணசீலன் said...

சிரித்த மரம் மனதில் காட்சியாய் விரிகிறது.

ஹுஸைனம்மா said...

//ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !//

ஆனா, நாம் விதைப்பதுதானே நமக்குக் கிடைக்கும்?

செ.சரவணக்குமார் said...

கை விரித்துச் சிரித்த மரம் மிக அருமை.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு டீச்சர்.

தலைப்பு- A class!

வினையூக்கி said...

அருமை

அன்புடன் நான் said...

ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !//

அனைவரும் புரிந்துணர்ந்தால்.... நல்லதுதான்.
கவிதை பிடித்திருக்கிறதுங்க.

Sivaaa said...

\\ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !\\

எதையுமே திருப்பி எடுக்க முடியாததே வாழ்வு..

மேலே உள்ள வரிகளுக்கும்,தலைப்பிற்கும் கட்டாயம் உங்களுக்கு என் பூங்கொத்து!

மாதேவி said...

"கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி" அழகு.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super Aruna.
அழகான வாழ்வியல் தத்துவம்

priya.r said...

அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!

//ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!! //

இந்த வரிகள் ரொம்ப பிடித்து இருக்கிறது .
வாழ்க்கையின் நோக்கத்தை சொல்லாமல்
சொல்லி இருக்கிறது !
படித்த பின் நிறைவாகவும் இருக்கிறது!
பூங்கொத்து வோடு சில வண்ணத்து பூச்சிகளும்
தங்களுக்கு தர ஆசை !

ஆ.ஞானசேகரன் said...

அருமை ... அழகு
பூங்கொத்து!

தெருப்பாடகன் said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள் !

Katz said...

Good one.

ny said...

simply beautiful :)

ஹேமா said...

அழகான சிந்தனை தந்த கவிதை.
பூங்கொத்துத்தான்.
பிடியுங்கோ அருணா !

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!//

அருமை பிரின்ஸ்..

அன்புடன் அருணா said...

அம்பிகா
கே.ஆர்.பி.செந்தில்
ஷர்புதீன்
கார்க்கி அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி
Sivaji Sankar
Chitra
VELU.G அனைவருக்கும் நன்றி!

Mohan said...

Superb!

Thamira said...

துவக்கம் சுமாராக இருந்ததைப்போல தெரிந்தாலும் முடிவு ரொம்பக் கிளாஸ்.!

Karthik said...

அட்டகாசம்..

சுசி said...

கை விரித்துச் சிரிக்கும் மரம்..

ரொம்ப அருமையா இருக்குங்க.

அன்புடன் அருணா said...

பத்மா said...
/ஆனா உலகமே conservation of energy /mass ல என்ன சொல்லுது?nothing can be made nor lost ன்னு தானே?/
உண்மைதான் பத்மா! ஆனால் உணர்வுகள் இதற்கு விதிவிலக்குன்னு நினைக்கிறேன்!

அன்புடன் அருணா said...

நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ஹுஸைனம்மா said...
/ஆனா, நாம் விதைப்பதுதானே நமக்குக் கிடைக்கும்?/
ஆமா ஹுசைனம்மா அனால் பதிலுக்குப் பதில் செய்வது சில/பல நேரங்களில் சரி வருவதில்லை!

செ.சரவணக்குமார்
பா.ராஜாராம்
வினையூக்கி
சி. கருணாகரசு அனைவருக்கும் நன்றி !

R.Gopi said...

அருணா...

முழு கவிதையும் அழகு என்றாலும், இந்த வரிகள் என் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொண்டது... பலே

//அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!//

சூப்பர் ரகமான வரிகள்....

skamaraj said...

இயல்புக்கும் ஏக்கத்த்துக்கும் நடுவில் உட்கார்ந்து ஒரு கவிதையை அபாரமாகக்கோர்க்க முடிந்திருக்கிறது.

outsatnding.

ஒற்றைப்பூ, பூங்கொத்து,பூக்கூடை,பூந்தோட்டம் எல்லாம் உங்களுக்குத்தான் அருணா.

லதானந்த் said...

அன்புடையீர்!
என்னுடைய செம்மொழி மாநாட்டு உரையில் தங்களைப் பற்றிய குறிப்பு ஒன்று இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும்

சுரேகா.. said...

மிக மிக அற்புதமான கவிதைங்க!


வாழ்வின் எதிர்பார்ப்பை இவ்வளவு சுலபமாகச் சொல்வது கடினம்! வாழ்த்துக்கள்!

சமீப காலங்களில் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டி..எங்காவது மேற்கோள் காட்டவைக்கும் கவிதை!
என்னுடைய மேடை நிகழ்ச்சியில் உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்கிறேன். அனுமதிக்கவும்.

அன்புடன் அருணா said...

லதானந்த் said...
/அன்புடையீர்!
என்னுடைய செம்மொழி மாநாட்டு உரையில் தங்களைப் பற்றிய குறிப்பு ஒன்று இருக்கிறது. நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும் /
இதோ வந்துட்டேன்!தெரியப் படுத்தியதற்கு நன்றி லதானந்த் !

அன்புடன் அருணா said...

சுரேகா.. said...

/சமீப காலங்களில் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டி..எங்காவது மேற்கோள் காட்டவைக்கும் கவிதை!
என்னுடைய மேடை நிகழ்ச்சியில் உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்கிறேன். அனுமதிக்கவும். /
அட!இதுக்கெல்லாமா அனுமதி!நான்தான் பெருமைப் பட்டுக்கணும்...ரொம்ப நன்றி சுரேகா!

அன்புடன் அருணா said...

priya.r said...
/பூங்கொத்து வோடு சில வண்ணத்து பூச்சிகளும்
தங்களுக்கு தர ஆசை ! /
பரிசே பெரிசு இதுலே போனஸ் வேறயா???யாராவது வேண்டாம்னு சொல்வாங்களா?கொடுங்க! கொடுங்க!

அன்புடன் அருணா said...

நன்றி T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ஹுஸைனம்மா said...
/ ஆனா, நாம் விதைப்பதுதானே நமக்குக் கிடைக்கும்?/
காடுகளில் முளைத்தவை நாம் விதைத்ததில்லையே ஹுஸைனம்மா!
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி பா.ராஜாராம்
வினையூக்கி said...
/அருமை /
அப்பாடா இப்போவாது நேரம் கிடைச்சுதா!நன்றி !

அன்புடன் அருணா said...

ஆ.ஞானசேகரன்
sarvesh s
வழிப்போக்கன்
kartin
ஹேமா கருத்துக்கும் பூங்கொத்துக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

ப்ரியமுடன்...வசந்த்
Mohan
ஆதிமூலகிருஷ்ணன்
Karthik
சுசி அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

ப்ரியமுடன்...வசந்த்
Mohan
ஆதிமூலகிருஷ்ணன்
Karthik
சுசி அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி R.Gopi
skamaraj said...
/ஒற்றைப்பூ, பூங்கொத்து,பூக்கூடை,பூந்தோட்டம் எல்லாம் உங்களுக்குத்தான் அருணா. /
அனைத்தயும் வாங்கீட்டேன்!

அன்புடன் அருணா said...

விருதுக்கு நன்றி ஜெய்லானி !

அன்புடன் அருணா said...

நன்றி ஜெய்லானி விருதுக்கு!

கமலேஷ் said...

/// கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!! ///

ரொம்ப நல்லா இருக்குங்க

Events in chennai said...

Hi,
I love kavithai very much.I read all your kavithai,really wonderful and there is no words to tell about your kavithai.Keep it up and all the very best. Dont stop ...

I would like to contact you for some discussion, could you please mail me to chennaimomsinfo@gmail.com.

Thank you sharing your wonderful kavithai.If you interested post your kavithaikal in this women blog website and give your feedback
check here chennai parents blog.

Anisha Yunus said...

//அடித்து வீசும் காற்றில்
கொஞ்சம் இலைகளையும்
நிறைய மலர்களையும்
உதிர்த்து பதிலுக்கு
எதுவும் வேண்டாமல்
கை விரித்துச் சிரித்தது மரம்!!
//

என்னவொரு ரசனை உங்களுக்குள்!! Hats off!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

//ஒன்றைப் போட்டுத்
திருப்பி எடுக்கும்
வித்தையல்ல வாழ்வு !
எனச் சொல்லாமல்
சொல்லிப் போயிற்று
கன்னம் தொட்டு
வண்ணம் விட்டுப் பறந்த
வண்ணத்துப் பூச்சி!!//

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க.. :-))

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா