நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, June 19, 2010

விட்டுக்கொடுத்தலும், ஏமாளித்தனமும்..!

வாழ்வு எல்லோருக்குள்ளும் எப்படி எப்படியெல்லாமோ புகுந்து வெளி வருகிறது.காலை அவசரமும் ஓட்டமும் வாழ்வின் புன்னகைக் காலங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விடுகிறது.பின்னாளில் புன்னகைக்க நினைக்கும் போது அதை வெளிக்காட்டும் பல் போய் பொக்கைவாயாகி விடுகிறது.

காலையிலேயே "எம்மாம்மா நேற்றிலிருந்து சாப்பிடல்லைம்மா ஏதாவது கொடும்மா" எனத் தொடரும் பிச்சைக்காரர்களின் கத்தல் எரிச்சலைக் கொடுத்தது.எப்போதோ போகும் வழியென்றால் காசு போட்டு விட்டுப் போகலாம்.இது தினமும் போய் வரும் வழி ..தினமும் ஒரு ரூபாய் போட்டாலும் முப்பது ரூபாய் தண்டம் ....வீட்டு பட்ஜெட் நினைவு வந்து தொலைத்தது. ஒரு குட்டிப் பையன் அவசர அவசரமாக "எம்மா ஏதாவது கொடும்மா"என்று கையைப் பிடித்தும் உதறியவுடன் திடீரென காலில் விழுந்து "எம்மா ஏதாவது கொடும்மா"என்றும் பின்னாலேயே வந்தான்.இது என்னால் தாங்க முடியாத ஒன்று...குழந்தைகள் இப்படிக் கேட்டால் சட்டென ஏதாவது கொடுத்து அனுப்பிவிடுவேன்..கைப்பையைப் பார்த்தால் சில்லறையாக இல்லை..ஐந்து ரூபாய்தான் இருந்தது.ஐந்து ரூபாயைப் போடவும் மனசில்லை."
சின்ன மாமியார் வீட்டு விசேஷத்துக்குப் போவதால் பூ வாங்கலாம் என்று நின்றேன்.
"பூ முழம் எவ்வ்ளோம்மா? "
"பத்து ரூபா
"
"அட எட்டு ரூபாய்தான் தருவேன்"

"கட்டுபடியாகாதும்மா..
"
"அதெல்லாம் ஆகும் ஆகும்..."

ரெண்டு ரூபாய் குறைத்து வாங்கிய சந்தோஷத்தில் மல்லிப்பூ அதிகமாக மணந்தது போலிருந்தது.

பஸ்ஸில் ஏறி டிக்கெட் வாங்க நடத்துனரிடம் 74 ரூபாய் டிக்கெட்டிற்கு 80 ரூபாய் பயந்து கொண்டே கொடுத்தேன்.சில்லறைக்காகக் கத்துவாரோ என்று...ஒன்றும் சொல்லாமல் டிக்கெட்டின் பின்னால் 6 ரூபாய் எனக் கிறுக்கிக் கொடுத்தார்.

ஓஹோ இவர் அந்த வகையோ என்று நினைத்துக் கொண்டேன்.நடத்துனர்கள் ரெண்டு வகை...ஒன்று சில்லறை இல்லைன்னா இறங்குன்னு கத்துகிற ரகம்.இன்னொன்று இப்படி டிக்கெட்டின் பின்னால் அமைதியாகக் கிறுக்கி விட்டு இறங்கும் வரை நம் கவனம் அவர் மேலேயே இருக்கும் படிப் பார்த்துக் கொண்டு கடைசியில் தராமலேயே ஏப்பம் விட்டு விடும் ரகம்.

எப்படியும் கேட்டு வாங்கி விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டு அவர் அங்குமிங்கும் நகரும் போது அவர் மீது "ஏய் நீ எனக்குக் காசு கொடுக்கணும் " அப்படீங்கிற பார்வையை வைத்துக் கொண்டிருந்தேன்.


அவரையே கொடுக்க வைத்துவிட வேண்டும் .அப்படியில்லையெனில் கேட்டாவது வாங்கிவிடவேண்டியதுதான்.நகரத்தின் நாகரீகங்களுள் இதுவும் ஒன்று. நம் பணத்தையே கூடக் கேட்டு வாங்க கூச்சமாய் இருக்கும்.அவருக்கு அடுத்தவங்க பணத்தை எடுத்துக் கொள்ள இல்லாத கூச்சம் நமக்கெதற்கு????.ஆனால் நானும் இப்படி அநேக நாட்கள் இப்படி காசு விட்டதுண்டு.


இன்னும் ரெண்டு ஸ்டாப்தான் .அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும்.ஆறு ரூபாயைக் கொடுப்பாரா...கேட்கத்தான் செய்யணுமா??என்று இரண்டு மணிநேரமாகக் குழம்பிக் கொண்டிருக்கிறேன் வேலையற்றுப் போய்...


ஷாலு ஏறினாள் அந்த ஸ்டாப்பில்.
"ஹாய் என்ன சுதா? எங்கே இன்னிக்கு ஆஃபீஸ் போகலையா? இந்தப் பக்கம் எங்கே ?"
அட....ஷாலு...இன்னிக்கு லீவு போட்டுட்டேன்.எங்க சின்ன மாமியார் வீட்டுலே ஒரு விசேஷம் அதுக்குத்தான் போயிட்டிருக்கேன்.நீ என்ன இப்பிடி.?

"எனக்குத்தான் ஓடுறெ வேலைதானே....அங்கேயும் இங்கேயும் ஷன்டிங் அடிச்சுட்டிருக்கேன்..."


ஷாலு எங்க ஆஃபீசுக்குத் தொடர்புடைய பெண். அடிக்கடி வந்து போவாள்.ஆனால் ரொம்ப லொட லொட....எல்லாரைப் பற்றியும் வம்பு பேசுவதில் ரொம்ப ஆர்வம்.
மனசுக்குள் இவள் ஏன் இப்போ வந்தாள் என்று நினைத்துக் கொண்டேன். இப்போ இவள் முன்னால் எப்படி மீதிக் காசைக் கேட்பதுன்னு யோசிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஆறு ரூபாய்தானே விட்டு விடவேண்டியதுதான்.இவள் முன்னால் கேட்டு அசிங்கப்பட்டால் அவ்வ்ளோதான் அறுநூறு பேர் வேலைபார்க்கும் ஆஃபீஸில் அசிங்கப் படுத்தி விடுவாள்.
இருந்தாலும் அவ்ரே தந்துவிட மாட்டாரா என்ற நப்பாசையுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்னாம்மா....பார்த்துக்கிட்டே நிக்கிறே...இறங்கலியா?" என்று கத்தினார்.நான் மீதிக் காசைக் கேட்டு விடுவேனோ என்ற பயத்தில்.
இந்த வாழ்வில் இவ்வகையான விட்டுக் கொடுத்தலும் விரும்பாமலே வேண்டித்தானிருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் மனதுக்குள் கொஞ்சமாக இப்படியிருப்பதற்கு என்னை நானே திட்டிக் கொண்டேன்.ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி. அப்புறமாய்..."ம்ம்ம்ம்ம் ...சரி நடத்துனருக்கு என்ன பணக்கஷ்டமோ ...இப்படியெல்லாம் காசு சேர்க்கவேண்டியிருக்கு"என்று அலுத்துக் கொண்டு என் ஏமாளித்தனத்தைக் கொஞ்ச நேரம் மறக்க முயன்றேன்.

22 comments:

Chitra said...

காலை அவசரமும் ஓட்டமும் வாழ்வின் புன்னகைக் காலங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து விடுகிறது.பின்னாளில் புன்னகைக்க நினைக்கும் போது அதை வெளிக்காட்டும் பல் போய் பொக்கைவாயாகி விடுகிறது.

..... :-)

உங்கள் கருத்துக்கள், ரொம்ப நல்லா இருக்குங்க.

முனைவர் இரா.குணசீலன் said...

கருத்து..

இனிமே சில்லறை மாத்திட்டுப் போங்கப்பா!!

சாந்தி மாரியப்பன் said...

//ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி.//

உண்மைதான்.. அடுத்ததடவையும் வலியப்போயில்ல அடிய வாங்கிட்டு வர்றோம் :-))))
விட்டுக்கொடுத்தலையும் ஏமாளித்தனத்தின் லிஸ்டில் சேத்து ரொம்ப நாளாச்சு...

VELU.G said...

நல்லாயிருக்குங்கு

இருந்தாலும் கேட்டிருக்கலாங்க 6 ரூபாய்ங்க 6 ரூபாய்

அன்புடன் அருணா said...

நன்றி சித்ரா, anonymous!

Anonymous said...

நான் ஆஜர் டீச்சர்

+Ve அந்தோணி முத்து said...

ம்!

Madumitha said...

மிகச் சரியாச் சொன்னீங்க.
இப்படித்தான் நிறைய விஷயங்கள்
நடக்குது நம்மைச் சுற்றி.

புலவன் புலிகேசி said...

:))

அன்புடன் அருணா said...

ஷர்புதீன்
முனைவர்.இரா.குணசீலன்
அமைதிச்சாரல் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி VELU.G
நன்றி பி.திரவிய நடராஜன்

அம்பிகா said...

\\உண்மைதான்.. அடுத்ததடவையும் வலியப்போயில்ல அடிய வாங்கிட்டு வர்றோம் :-))))
விட்டுக்கொடுத்தலையும் ஏமாளித்தனத்தின் லிஸ்டில் சேத்து ரொம்ப நாளாச்சு... \\
ஆமாங்க...!!!

அன்புடன் அருணா said...

+Ve அந்தோணி முத்து
Madumitha
புலவன் புலிகேசி அனைவருக்கும் நன்றி!

தாராபுரத்தான் said...

இந்த அனுபவம் உங்களுக்கு மட்டுமா-? ஆறு ரூபாய் கேட்டாவது வாங்கி விடலாம்.. ஆனால் இந்த ஒரு ரூபாய், இரண்டு ருபாய்...கேட்டாலும் கிடைப்பதில்லை...கேட்டால் அடியே விழும்.

கமலேஷ் said...

அருமையான கதை தோழி...இந்த கதை அனேமாக அனைவர் வாழ்க்கையிலும் நிகழ்ந்த ஒன்றாகத்தான் இருக்கும்...வாழ்க்கையோடு ஒட்டி எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்...தொடருங்கள்...

Unknown said...

அமைதிச்சாரல் said...

//ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி.//

உண்மைதான்.. அடுத்ததடவையும் வலியப்போயில்ல அடிய வாங்கிட்டு வர்றோம் :-))))
விட்டுக்கொடுத்தலையும் ஏமாளித்தனத்தின் லிஸ்டில் சேத்து ரொம்ப நாளாச்சு... //


ஒரு சின்ன திருத்தம் 'ஏமாளித்தனத்தையும் விட்டுக் கொடுத்தல் லிஸ்டில் சேர்த்து ரொம்ப நாளாச்சு'
என்று இருக்க வேண்டும்

அன்புடன் அருணா said...

நன்றி அம்பிகா
நன்றி தாராபுரத்தான்

ஹுஸைனம்மா said...

ஷைலுவின் டிக்கெட்டில் அந்தக் காசைக் கழிக்கச் சொல்லிருக்கலாம். ம்ம்... வெளிய வந்தபிறகுதான் இந்த மாதிரி ஐடியாக்கள் வரும்!!

சுசி said...

//இந்த வாழ்வில் இவ்வகையான விட்டுக் கொடுத்தலும் விரும்பாமலே வேண்டித்தானிருக்கின்றன. யாருக்கும் தெரியாமல் மனதுக்குள் கொஞ்சமாக இப்படியிருப்பதற்கு என்னை நானே திட்டிக் கொண்டேன்.ஒவ்வொருமுறை இப்படி அடிபடும் போதும் இனி அடிக்க விடக் கூடாது என்று நினைக்கிறதோடு சரி. //

எனக்கு இப்டி நிறைய நடக்கும். நானும் நினைக்கிறதோட சரி.. :))

நல்லா எழுதி இருக்கிங்க.

அன்புடன் அருணா said...

நன்றி கமலேஷ் !
நன்றி Karikal@ன் - கரிகாலன் !

goma said...

நன்றாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.அத்தனையும் சத்தியமான வரிகள்

priya.r said...

வாழ்வியல் அனுபவங்களை எதார்த்தமா சொன்ன விதம் பிடித்து இருக்கிறது .
பூங்கொத்து கொடுக்கலாம் !

நீங்கள் கைப்பை யில் உள்ள 5 ரூபாயை நடத்துனரிடம் கொடுத்து 10 ரூபாயை
திருப்ப பெற்று கொண்டு உங்கள் நஷ்டத்தையும் மன துயரத்தையும் சற்று குறைத்து
இருக்கலாம் என்று கூட தோன்றுகிறது !
பிரியா.r

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா