நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, June 12, 2010

கறிச் சோறாக்கின கதை!

கோழி இறகு முற்றத்தில் பறந்து கிடக்க
கோழியின் முடிவு குறித்தான
கவலையுடன் விசாரிக்க

தனக்கு உடல் நலமில்லையென்று
போனவாரமும்
கோழிக்கு உடல் நலமில்லையென்று
இந்த வாரமும்
கறிச் சோறாக்கின கதை கேட்டு...

கூண்டுக் கதவைத் திறந்து கிளியைப்
பூனைக்கு விருந்தாகப் போ என்று
வெளியேற்றிப் பூனைவரச்
சன்னலைத் திறந்து...


கட்டிலில் காத்திருக்கும் மருந்து
சீசாக்களைக் கவிழ்த்து
கடல் குடித்து முடிக்கும் தாகத்துடன்

வாழ்வின் குரூரங்களைக்

குடித்து முடித்தான்...

காய்ச்சக்காரப் பய....

காலிக் கூண்டைப் பார்த்து
எந்தக் கோட்டிக்காரன்
கூண்டைத் திறந்து போட்டதுன்னு
அலறிக் கொண்டிருந்தாள் கிழவி...

24 comments:

அண்ணாமலையான் said...

gud one....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதைதாங்க ..

ஹேமா said...

கவிதைக்குள் நீதிக்கதையொன்று.
பூங்கொத்து !

Anonymous said...

aruna u r story very nice but you write other story also

ராமலக்ஷ்மி said...

அருமை அருணா. நல்ல கதை.

நேசமித்ரன் said...

பூங்கொத்து ! :)

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;)

அன்புடன் அருணா said...

நன்றி அண்ணாமலையான் !
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi !
நன்றி ஹேமா !

அன்புடன் நான் said...

உள்ளத சொல்லனும்முன்னா.....
//கட்டிலில் காத்திருக்கும் மருந்து
சீசாக்களைக் கவிழ்த்து
கடல் குடித்து முடிக்கும் தாகத்துடன்
வாழ்வின் குரூரங்களைக்
குடித்து முடித்தான்...
காய்ச்சக்காரப் பய....//

சரியா புரியலிங்க.

மதுரை சரவணன் said...

கிழவி அலறல் அருமை. வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ aruna u r story very nice but you write other story also /
நல்ல அட்வைஸ்தானே!!பேரைப் போட்டுச் சொல்லிருக்கலாமே அனானி!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
பூங்கொத்துக்கு நன்றி நேசமித்ரன் !
நன்றி கோபிநாத் !

HVL said...

நல்லாயிருக்கு. ஒரு பூங்கொத்து பார்சல்!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு டீச்சர். :-)

அது சரி(18185106603874041862) said...

//
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
//

பூங்கொத்து!

Very good!

அன்புடன் அருணா said...

நன்றி சி. கருணாகரசு !
நன்றி மதுரை சரவணன்!

Karthik said...

புரிஞ்ச மாதிரிதான் இருக்கு. நாட் ஷ்யூர். :)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாயிருக்கு அருணா கதை.

கமலேஷ் said...

பூங்கொத்து தோழி..

அன்புடன் அருணா said...

பூங்கொத்து பார்சலுக்கு நன்றி!HVL
நன்றி ஷர்புதீன்
நன்றி பா.ராஜாராம்
நன்றி அது சரி

அன்புடன் அருணா said...

நன்றி Chitra !
நன்றி ஜெஸ்வந்தி !

அன்புடன் அருணா said...

எனக்கே கொஞ்சமாப் புரிஞ்சமாதிரிதான் இருக்கு கார்த்திக்!நாட் ஷ்யுர்தான்!!!

VELU.G said...

ரசித்த கவிதை

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி கம்லேஷ்!
நன்றி வேல்!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா