நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, April 27, 2010

கேட்கும் வரம் ஒன்றே....

முன்பொரு நாள்
கூட்டம் கூட்டமாய்
வாழ்ந்திருந்தோம்

அப்புறமாய்

என் இலையுருவி
ஆடையாக்கி அணிந்து
கொண்டீர்கள்.........

மற்றொருநாள்

என் உடமைக்
காய் கனி கவர்ந்து
உணவென்றீர்கள்.....

சிலநாள் மலர்
பறித்து மாலையாக்கிக்
கடவுளைக் கொண்டாடினீர்கள்

பின்பொருநாள்
என் கைகாலுடைத்து
அடுப்பெரித்துக் கொண்டீர்கள்.........
வீடு கட்டிக் கொண்டீர்கள்

வன்மம் காட்டக் காரணங்கள்
இத்தனையிருந்தும் மௌனமாய்க்
கைகள் விரித்து வானம் பார்த்துத்
தவமிருந்தோம்......

கேட்கும் வரம் ஒன்றே
எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்..

எங்களின்
புகைப்படம் ஒன்றெடுத்து
பத்திரப் படுத்துங்கள்....
வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....

31 comments:

நேசமித்ரன் said...

கைகள் விரித்து வானம் பார்த்துத்
தவமிருந்தோம்......


!!!!

Nice

மணிநரேன் said...

இப்போதுதான் புறநகர் சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த இருந்த மரங்களையெல்லாம் வெட்டி உள்ளனர் என்று கேள்விப்பட்டு அவர்களை சாடிக்கொண்டிருந்தேன்; நிலைமைக்கேற்றார்போல தங்களின் கவிதையும் காணப்பெற்றேன். நம் நாட்டில் இதுதான் நடக்கப்போகிறதோ??? பயமாக உள்ளது.;(

Chitra said...

கருத்துள்ள நல்ல கவிதை. மனித கூட்டம் பெருக பெருக, மரத் தோட்டம் அழிகிறது. :-(

ஜெய்லானி said...

//எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்.//

சும்மா நச்சுன்னு நெத்தியடி..

Madumitha said...

நல்லாருக்கு.

மரமில்லா
உலகம்
மரண தேசமாகும்.

Ahamed irshad said...

//வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....///

வலியுள்ள வரி... அருமை..

ராமலக்ஷ்மி said...

அவசியமான நேரத்தில் அழுத்தமான கவிதை அருணா.

சத்ரியன் said...

//கேட்கும் வரம் ஒன்றே
எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்..//

அருணா,

”மரங்களுக்கு வாயிருந்தால் இப்படித்தான் பாடியிருக்குமோ” என எண்ண வைக்கிறது.

சத்ரியன் said...

//எங்களின்
புகைப்படம் ஒன்றெடுத்து
பத்திரப் படுத்துங்கள்....
வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....//

இந்த நிலையும் வரலாம்...!

RaGhaV said...

அற்புதமான கவிதை.. :-))

ஹேமா said...

என்ன சொல்ல அருணா !
மரங்களை வளர்ப்போம்னு சொல்லி
சொல்லிக்கிட்டே வெட்டிக்கிட்டுத்தானே இருக்காங்க.
அழகான ஆழமான கவிதை.

நட்புடன் ஜமால் said...

கேட்கும் வரம் ஒன்றே
எங்களைப் புதைக்கும் போது
மரப் பெட்டியில் புதைக்காதீர்..
அதற்காகவும் மரம் ஒன்றை வெட்டாதீர்..]]

ரண க(ல)ளம் ...

vasan said...

ஆகா, அருமையான‌ ம‌ட‌ல் ம‌ர‌த்திட‌மிருந்து.
`அனைத்துல‌க‌ செம்மொழி மாநாட்டுக்காக‌
கோவையில்,அர‌சால் வெட்ட‌ப்ப‌டும்
ம‌ர‌ங்க‌ளுக்கு, ம‌க்க‌ள் பாலூற்றினார்க‌ளாம்`.
இன்றைய‌ செய்தி.
நாளைக்கு பால் யாருக்கு?

ஈரோடு கதிர் said...

//பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!//

பூங்கொத்து போதுமா...

ஒரு மரக்கன்றே தரலாம்..
இந்த கவிதைக்கு

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை!
நன்றி நேசமித்ரன் !
நன்றி மணிநரேன் !

kamaraj said...

இப்படி மெதுவாக கிளம்பி கொஞ்சம் லாவகமாக முன்னேறி சடீரெனப்பாயும்
கவிதை மனதை அறுக்கிறது.

பூங்கொத்துக்கொடுக்கணும் ஆனாலும் பறிக்க கைகூசுகிறது. பூந்தோட்டம்.

ரொம்ப நல்ல கவிதை அருணா.

அன்புடன் அருணா said...

நன்றி Chitra
நன்றி ஜெய்லானி
நன்றி Madumitha

அன்புடன் அருணா said...

நன்றி அஹமது இர்ஷாத் !
நன்றி ராமலக்ஷ்மி !
நன்றி மனவிழி’சத்ரியன் !

அன்புடன் அருணா said...

RaGhaV
ஹேமா
நட்புடன் ஜமால்
நன்றி அனைவருக்கும்!

அன்புடன் அருணா said...

நன்றி vasan!
ஈரோடு கதிர் said...
/ஒரு மரக்கன்றே தரலாம்..
இந்த கவிதைக்கு/
ஆஹா...இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே!நன்றி!

சுந்தரா said...

அவசியமான கருத்தை அழுத்தமாகச் சொல்லுகிறது கவிதை. பாராட்டுக்கள் அருணா!

VELU.G said...

அருமையான கவிதை அழகான வரிகளில்

அன்புடன் அருணா said...

kamaraj said...
/பூங்கொத்துக்கொடுக்கணும் ஆனாலும் பறிக்க கைகூசுகிறது. பூந்தோட்டம்./
சும்மா காற்றில் பறிக்கும் பூங்கொத்துதானே....பறிக்கலாம்!நன்றி காமராஜ்!

prince said...

பூங்கொத்து )$$$(

இரசிகை said...

//
மௌனமாய்க்
கைகள் விரித்து வானம் பார்த்துத்
தவமிருந்தோம்......
//

POONGOTHTHU.........:)

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தரா !
நன்றி VELU.G !

அன்புடன் அருணா said...

நன்றி ப்ரின்ஸ்!
நன்றி இரசிகை !

பாச மலர் / Paasa Malar said...

கடைசி வரிகள் நச்..பஞ்ச்

சுந்தர்ஜி said...

இன்றுதான் நுழைகிறேன் ஒரு பூங்கொத்தோடு. சாவதானமாக வாசிக்க விரைவில் வருவேன் அருணா.

Sanjai Gandhi said...

//எங்களின்
புகைப்படம் ஒன்றெடுத்து
பத்திரப் படுத்துங்கள்....
வருங்காலத் தலைமுறைக்குச்
சொல்லுங்கள்
"இதுதான் மரமென்று!"....//

கோவைல நிஜமாவே இந்த நிலை வெகு விரைவில் வந்துடும் போல.. தினம் தினம் வெட்டி வீழ்த்துகிறார்கள்.. :((

Paul said...

நான் படித்து ரசித்த சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.. அடடே இப்படி நாமொரு கவிதை எழுதாமல் விட்டுவிட்டோமே என்று தோன்றியது.. சிந்தனை நன்று.. மிகவும் பிடித்திருந்தது.. இந்த கவிதை எழுதியதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன்..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா