நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, April 19, 2010

சிலச் சில நேரங்களில்..

மாடிப்படியிலிருந்து
அறுந்து விழுந்த
கழுத்து மணி போல
சிதறித் துடிக்கின்றன
சிலநேரங்களில்...

பைட் பைப்பரின் இசை
பின்னால் போகும்
எலிகள் போல ஓடிப் போய்
நதியில் விழுந்து உயிர் விடுகின்றன
சில நேரங்களில்....

நடுக்கடலில் ஆடிக்
கொட்டமடிக்கும்
கப்பல் போல்
தனித்துத் திரியும் போது
ஆர்ப்பரித்து அடங்குகிறது
சில நேரங்களில்....

பிழைத்துக் கிடந்தால்
மீட்டெடுத்துக் கொள்வதற்கான
மனக் குறிப்புகளைப் பதிய முடியாத
இயலாமை உணர்வோடு
பூங்காவின் வட்டப்பாதையில்
சுற்றிச் சுற்றி வரும்
சில நேரங்களில்...

எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...

41 comments:

kaamaraj said...

//எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...//

இப்படி மனநிலைகள் மாறி
மாறி வரும் இடவல மாற்றம் போல.கூட்டத்துக்குள் இருக்கையில் மனம் தனித்து
ஒதுங்கும்.தனிமையில் இருக்கையில் ஒரு கோடி சத்தங்களோடு ஆர்ப்பரிக்கும்.

எல்லோருக்குமான இதைப்
படம்பிடித்த தருணமே கவிதை.

நல்லா... இருக்கு மேடம்.

kaamaraj said...

கொடுக்க மறந்த பூங்கொத்தை,
எடுக்கமரக்காதீர்கள்.
இதோ பூங்கொத்து.

அமைதிச்சாரல் said...

மாறிமாறி வரும் எண்ண அலைகளை அழகா படம் பிடிச்சிருக்கீங்க மேடம். நல்லாருக்கு.

Chitra said...

ஆஹா, அருமையான கவிதையில் உங்கள் எண்ண அலைகள்.......... பாராட்டுக்கள்!

Madumitha said...

வானம் ஒரு
அட்சயப் பாத்திரம்.
வாரி வாரி வழங்கும்
எவ்விதத் தடையும் இல்லாமல்.

இரசிகை said...

poongoththu......:)

cheena (சீனா) said...

அன்பின் அருணா
மனம் ஒரு குரங்கு - கிளைக்கு கிளை தாவும் - பல்வேறு தொடர்ச்சியற்ற எண்ணங்கள் - பல்வேறு உணர்ச்சிகளின் கலவை - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் அருணா
ந்ட்புடன் சீனா

cheena (சீனா) said...

அய்யோ பூங்கொத்து கொடுக்க மறந்துட்டேனே
இந்தாங்க - வாங்கிக்கங்க

க‌ரிச‌ல்கார‌ன் said...

பிடிங்க‌ பூங்கொத்தை

முகிலன் said...

பூங்கொத்து

KParthasarathi said...

It is a nice poem to read but I could not understand what you were trying to convey

Anonymous said...

எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...

சொல்லவண்ணா எண்ணங்களை கொண்டு மனம் இப்படித்தான் பல நேரம்...

Porkodi (பொற்கொடி) said...

எல்லாருக்கும் புரிஞ்சுடுச்சு ஆனா எதுக்கோ எனக்கு புரியலையே.. :‍((

RaGhaV said...

அழகான நடை.. :-))

அருமையான வார்த்தைகள்.. :-))

ராமலக்ஷ்மி said...

எண்ண அலைகள் அருமை. வாங்கிக் கொள்ளுங்கள் என் பூங்கொத்தையும்!

க.பாலாசி said...

நல்ல கவிதை... வானம் பார்த்துகிடப்பதுவும் சுகம்தான்...

ஹேமா said...

மனம் குழம்பி அலைவதை அழகாக அடுக்கிச் சொல்லிவிட்டீர்கள்.சில நேரங்களில் இப்படித்தான்.நாங்கள்தான் சமப்படுத்திக் கொள்ளவேணும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்று.

மாதேவி said...

எண்ண அலைகளுடன் கவிதை அருமை.

Karthik said...

superb!

ஜிஜி said...

நானும் வானம் பார்த்து கிடந்தேன் என்பதில்தான் கவித்துவமே அடங்கியிருக்கிறது என்பேன்.

ரசித்தேன்.

வாழ்த்துக்கள்.

நேசமித்ரன் said...

பூங்கொத்தை
பிடிங்க‌
:)

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள். மனம் மாறும் முன். ...வாழ்த்துக்கள்

padma said...

அருமையா இருக்கு .எல்லாத்தையும் சேகரித்து வைங்க .பாதுகாத்து வைங்க

Anonymous said...

இந்தாங்க சகோதரி பூங்கொத்து

அன்புடன் அருணா said...

kaamaraj said...

/கொடுக்க மறந்த பூங்கொத்தை,
எடுக்க மறக்காதீர்கள்.
இதோ பூங்கொத்து. /
பூங்கொத்து விடுவேனா????
நன்றி அமைதிச்சாரல்!
நன்றி Chitra !

அன்புடன் அருணா said...

cheena (சீனா)
க‌ரிச‌ல்கார‌ன்
முகிலன்
மூவரின் பூங்கொத்துக்கும் நன்றியோ நன்றி!

அன்புடன் அருணா said...

Madumitha said...
/வானம் ஒரு
அட்சயப் பாத்திரம்.
வாரி வாரி வழங்கும்
எவ்விதத் தடையும் இல்லாமல்./
அதே!அதே!Madumitha
நன்றி தமிழரசி !
நன்றி RaGhaV !
நன்றி பாலாசி!
நன்றி ஹேமா!

பாச மலர் / Paasa Malar said...

அழகாய் வந்திருக்கிறது அருணா அனுபவத்தின் வார்ப்பு....வாழ்த்துகள்

Anonymous said...

அருமை

VELU.G said...

//எல்லோருக்குமான
வானம் விரிந்து பரந்து கிடந்தது....
எனக்கான எண்ணங்களுக்காய்
நானும் வானம் பார்த்துக் கிடந்தேன்...
//

சிறந்த கவிதை

அன்புடன் அருணா said...

KParthasarathi said...

/ It is a nice poem to read but I could not understand what you were trying to convey/
Porkodi (பொற்கொடி) said...
/எல்லாருக்கும் புரிஞ்சுடுச்சு ஆனா எதுக்கோ எனக்கு புரியலையே.. :‍((/
ஒவ்வொரு சிலநேரங்களிலுக்கு அப்புறம் மனது/எண்ணங்கள் எனப் படித்துப் பாருங்கள் புரிந்தாலும் புரியலாம்.

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன்
மாதேவி
Karthik
ஜிஜி
மதுரை சரவணன்
padma
அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றிகள் நேசமித்ரன் ! abarasithan !

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு டீச்சர்.

அன்புடன் அருணா said...

நன்றி பாச மலர் / Paasa Malar !
நன்றி கடையம் ஆனந்த்!

LK said...

நல்ல கவிதை அருணா வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

நல்ல கவிதை டீச்சர்

அன்புடன் அருணா said...

நன்றி VELU.G !
நன்றி செ.சரவணக்குமார் !

ஜெஸ்வந்தி said...

நல்வாழ்த்துகள் அருணா

அன்புடன் அருணா said...

நன்றி ஜெஸ்வந்தி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா