நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, April 6, 2010

வில்லங்கம் புடிச்ச பாட்டி...

                 எப்போதும் போல நிறுத்தத்தில் நிற்காமல்............தூஊஊஊஊஊஊஊஊஊஊஊரமாகப் போய் நிறுத்தினார் பஸ் ஓட்டுனர்.அந்தப் பாட்டி தூக்க முடியாத பெரிய கூடையுடன்
"கடங்காரன் எம்புட்டுத் தூரத்திலே போய் நிறுத்துறான்" என்றவாறே வாசலில் நின்றிருந்த கல்லூரி மாணவர்களை இடித்துக் கொண்டே கூட்டத்தில் நுழைந்து பொதுவில் பார்த்துச் சும்மா சிரித்து வைத்தாள். 

"பாட்டி டிரைவர் உங்களுக்கு எம்புட்டுக் கடன் த்ரணும்னு சொல்லுங்க பாட்டி ....தூக்கிரலாம்" என்றான் அருண். அவ்வ்ளோதான் இன்னிக்குப் பொழுது பாட்டியைக் கலாய்ப்பதில் போகப் போகிறதென்பது புரிந்தது எல்லோருக்கும். 

"எனக்கெதுக்குப்பா டிரைவர் கடன் தரணும்" என்றாள் பாட்டி அப்பாவியாக. நீங்கதானெ பாட்டி டிரைவரைக் கடங்காரன்னு சொன்னீங்க"என்றான் அருண் விடாமல். பொக்கை வாயை அகலமாய்த் திறந்து சிரித்தாள் பாட்டி. 

"எப்பா...கொஞ்சம் தள்ளி உக்காரேன்! நானும் செத்தோலெ உக்காந்துக்கிறேன்" என்றாள் பாட்டி 
"என்னா பாட்டி இவ்வ்ளோ பெரிய பாம்படம் போட்டிருக்கே....எத்தனை பவுனு ? " பவுனு வெலை தெரியுமா??? அத்துட்டுப் போயிருவானுங்க! பாத்துக் கவனமாயிரு பாட்டி" என்று முனைப்போடு  கலாய்த்துக் கொண்டிருந்தான் அருண்..
" என்னாப்பா...எனக்குக் காது கொஞ்சம் மந்தம்ப்பா...சரியாக் கேக்காது...கொஞ்சம் சத்தமாச் சொல்லுப்பா"
அருண் சும்மா ஏதோ சொல்வது போல வாயைசைத்தான்.."இப்போ கேக்குதா பாட்டி" என்றான்
பாட்டி அருணின் காதிலிருந்த ஹெட் போனைக் காட்டி
"அச்சோ உனக்கும் காது கேக்காதா தம்பி...செவிட்டு மெஷின் மாட்டிருக்கே..???

"ஹூம்....முன்னெல்லாம் எங்கியோ யாருக்கோ காது கேக்கலைன்னு ஒண்ணு ரெண்டு பாம்படக் கிழவிகள்தான் சொல்லுவாய்ங்க....இப்போ பாரு யாரைப் பார்த்தாலும் செவிட்டு மெஷினை மாட்டிருக்காங்க......செவிட்டு மெஷின் அவ்வ்ளோ சல்லிசாவா கிடைக்குது?????........என்று எங்களைச் செமையாய்க் கலாய்த்து விட்டுக் கலாய்த்தது தெரியாமல் இறங்கிப் போய்க் கொண்டிருந்தாள் வில்லங்கம் புடிச்ச பாட்டி...

32 comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

பாட்டி தெளிவு தான்!! :)

Madumitha said...

பாட்டி சொன்னது ஒரு வகையில்
உண்மைதான். மற்றவர்கள் பேச்சைக்
கேட்கும் பொறுமையை நாம் அனைவரும்
இழந்துவிட்டோமோ?

R.Gopi said...

ஹா...ஹா...ஹா....

எல்லார் கிட்டயும் மாட்டினது போதாதுன்னு இப்போ ”பாம்பட காது பாட்டி” கிட்டயுமா??!!

பாட்டியின் அங்கலாய்ப்பு கூட ஓரளவு சரியோ!!??

இதோ என் லேட்டஸ்ட் பதிவுகள்... வரலாமே!!

வெற்றியின் விழுதுகள் – (பகுதி-7) http://edakumadaku.blogspot.com/2010/04/7.html ”எந்திரன்” - ஒரு எலெக்ட்ரிக் சந்திப்பு http://jokkiri.blogspot.com/2010/03/blog-post_31.html

Chitra said...

நல்லா இருக்குங்க.
ஒரு சந்தேகம்: என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ல மட்டும் இப்படி சின்ன எழுத்தாக (very very very small) தெரிகிறதா? இல்ல ஒரிஜினல் பதிவே இப்படித்தானா?

+Ve Anthony Muthu said...

Chitra said...
//ஒரு சந்தேகம்: என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ல மட்டும் இப்படி சின்ன எழுத்தாக (very very very small) தெரிகிறதா? இல்ல ஒரிஜினல் பதிவே இப்படித்தானா?//

ஆம். உண்மைதான். இதற்குத் தீர்வாக பிரின்சி மேடம் அவங்களுடைய Post Font Size பெரிசாக்கணும்.

கோபிநாத் said...

:-))

ப்ரியமுடன் வசந்த் said...

ஹாஹாஹா

பாட்டி சொல்றதும் சரிதானோன்னு தோணுது...

இன்னும் ப்ளூடூத் மாட்டிட்டு தானா பேசறவங்களை கண்டால் பாட்டி என்ன சொல்லுமோ தெரியலை லூசுன்னு சொல்லுமோ?

சாந்தி மாரியப்பன் said...

பாட்டி சொல்றதும் சரிதான்.

ஒரு வாழைப்பழத்தோலை,யாராவது நடந்துவரும்போது, முன்னாடி போட்டா போதும்,காதுல இருக்கிறது ஹெட்போனா இல்லையா,வெறுமனே மாட்டியிருக்காங்களா,இல்லை பேசிக்கிட்டிருக்காங்களான்னு கண்டு பிடிச்சிடலாம். :-D.

Anonymous said...

ஹஹஹா, பாட்டியா கொக்கா

அன்புடன் அருணா said...

நன்றி செந்தில்நாதன்!
Madumitha said...
/மற்றவர்கள் பேச்சைக்
கேட்கும் பொறுமையை நாம் அனைவரும்
இழந்துவிட்டோமோ?/
இன்னுமா சந்தேகம்?நன்றி Madumitha !

அன்புடன் அருணா said...

R.Gopi said...
/ எல்லார் கிட்டயும் மாட்டினது போதாதுன்னு இப்போ ”பாம்பட காது பாட்டி” கிட்டயுமா??!!/
ஹாஹாஹா! ரொம்ப நாளைக்கு அப்புறம் கோபி?வர்றேன் உங்க வலைப்பூவுக்கு!

Karthik said...

haha :))

Anonymous said...

இந்தாங்க பூங்கொத்து....! நல்ல பதிவு.பாட்டி சொன்னது ஒரு வகையில உண்மைதான். இப்பெல்லாம் (சில பேரு) ஹெட் போனை மாட்டிக்கிட்டு பாட்டுக் கேட்டாலும் சரி, கடலையப் போட்டாலும் சரி அவங்களுக்கு காதே கேக்குறது இல்ல.....ஐயோ பாவம்!

பத்மா said...

பாட்டி செமையான பாட்டிதான்

காமராஜ் said...

பாட்டிகள் காலத்தை அளந்தவர்கள். சீனியர் சிட்டிசன்ஸ் இல்லையா ?.இந்தப்பதிவு அவர்களைப் பெருமைப்படுத்தும் பதிவு. எத்தனை வெரைட்டி. இந்தாங்க புடிங்க பூங்கொத்து.

க ரா said...

அருமைங்க அருணா. நன்றி.

அன்புடன் அருணா said...

Chitra said...
/ஒரு சந்தேகம்: என் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ல மட்டும் இப்படி சின்ன எழுத்தாக (very very very small) தெரிகிறதா? இல்ல ஒரிஜினல் பதிவே இப்படித்தானா?/
இல்லை சித்ரா...யாரோ ஒரு பதிவர் கேட்டுக் கொண்டதற்காக இப்படிச் சின்னதாக்கினேன்...ம்ம் மாற்றி விடுகிறேன்!நன்றி
April 6, 2010 10:28 AM
+Ve Anthony Muthu said...

/ஆம். உண்மைதான். இதற்குத் தீர்வாக பிரின்சி மேடம் அவங்களுடைய Post Font Size பெரிசாக்கணும்./
யாரோ ஒரு பதிவர் கேட்டுக் கொண்டதற்காக இப்படிச் சின்னதாக்கினேன்...ம்ம் மாற்றி விடுகிறேன் Antony!நன்றி

அன்புடன் அருணா said...

நன்றி கோபிநாத்!
நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

நன்றி அமைதிச்சாரல்!
நன்றி சின்ன அம்மிணி!

அன்புடன் அருணா said...

Karthik said...
/ haha :))/
Thanx karthik for the haha!

padmahari said...
/இந்தாங்க பூங்கொத்து....!/
வாங்கீட்டேன் padmahari!

தாராபுரத்தான் said...

அவுங்க அனுபவம் பேசும்மில்ல.

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி

http://kjailani.blogspot.com/2010/04/blog-post_5104.html
################

பித்தனின் வாக்கு said...

ஹா ஹா முதலில் நானும் ஒரு சில பெண்கள் பூளூடூத் மாட்டியிருக்கும் போது அடாட அழகைக் கொடுத்த ஆண்டவன் இப்படி ஒரு குறையைக் கொடுத்துவிட்டானே என்று நினைப்பேன்.
உண்மை தெரிந்த பின்னர் நீங்க எல்லாம் பந்தாவை விட மாட்டிங்களான்னு நினைச்சுக்குவேன்.
கார் ஓட்டறவன்,வண்டி ஓட்டறவன் பூளூ டூத் மாட்டினா நியாயம், பஸ்ஸில்,டிரைனில் போகும் போது கூட மாட்டிக் கொண்டு போனால் என்ன அர்த்தம்.

அன்புடன் அருணா said...

Thanx Rajeswari!
காமராஜ் said...
/இந்தாங்க புடிங்க பூங்கொத்து./
வாங்கீட்டேன்!நன்றி காமராஜ்!

அன்புடன் அருணா said...

நன்றி இராமசாமி கண்ணண்!
நன்றி தாராபுரத்தான் முதல் வருகைக்கும் கருத்துக்கும்!

அன்புடன் அருணா said...

ஜெய்லானி said...
/ உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி/
வந்து வாங்கிக் கொண்டேன் வைரத்துக்கு நன்றி ஜெய்லானி!

அம்பிகா said...

வில்லங்க பாட்டி....
இப்படி இருந்தாத்தான் இப்போ பொழைக்க முடியும்
நல்லாயிருக்கு அருணா.

அன்புடன் அருணா said...

பித்தனின் வாக்கு said...
/ஹா ஹா முதலில் நானும் ஒரு சில பெண்கள் பூளூடூத் மாட்டியிருக்கும் போது அடாட அழகைக் கொடுத்த ஆண்டவன் இப்படி ஒரு குறையைக் கொடுத்துவிட்டானே என்று நினைப்பேன்./
ஹாஹாஹாஹா!

அன்புடன் அருணா said...

நன்றி அம்பிகா!

சாமக்கோடங்கி said...

கெழவியே உங்களைக் கலாய்ச்சுட்டாங்களா ....

அன்புடன் அருணா said...

ஆமாமா!நன்றி கருத்துக்கும் முதல் வருகைக்கும்!

சிநேகிதன் அக்பர் said...

சரியான பாட்டிதான். நல்ல எழுத்து நடை.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா