நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, April 2, 2010

நட்சத்திரங்கள் ஏன் மரணிக்கிறது?

ஒற்றைப் பனை மரத்தின்
உச்சியில் கூடு கட்ட
முயற்சித்துத் தோற்றது
அந்த ஒற்றைப் பறவை ..

தொங்கு கிளையில்
அழகானச் சிக்கல்களாய்
ஊஞ்சல் போல்
எளிதில் கூடு கட்டிக் கொண்டது
இன்னொரு பறவை..

ஜெயித்தலும் தோற்றலும்
அவரவர்
கண்டடைந்த வழிகளின்
தவறேயன்றிக் கூடு
கட்டுதலே தவறன்று..

தோற்றுப் போனவர்களுக்கான
புதிய உலகத்தின்
வானத்தில் நட்சத்திரங்கள்
தானே விழுந்து
மரணித்துக் கொண்டிருந்தன..

ஜெயித்தவர்களுக்கான
புதிய உலகத்தில்
வானமே நட்சத்திரமாய்
ஜொலித்துக் கொண்டிருந்தது!
ஜெயிப்போம்..!!ஜொலிப்போம்!!!

32 comments:

பழமைபேசி said...

பூங்கொத்து!

Anonymous said...

அருணா சூப்பரா இருக்கு கவிதை.

sathishsangkavi.blogspot.com said...

//ஜெயித்தலும் தோற்றலும்
அவரவர் கண்டடைந்த வழிகளின்
தவறேயன்றிக் கூடு
கட்டுதலே தவறன்று......//

அழகான ஆழமான வரிகள்....

புலவன் புலிகேசி said...

பிடிங்க பூங்கொத்தை...

பத்மா said...

பாசிடிவா இருக்கு .நம்பிக்கை தான் நம்மை உந்தி செலுத்தும் விசை .
நல்ல கவிதை அருணா

Anonymous said...

Very inspiring.

பொதுவா புதுக் கவிதைகள்ளே பெசிமிசம்தான் அதிகமா இருக்குன்னு பரவலா ஒரு கருத்து உண்டு. அதை முறியடிக்கிற மாதிரி எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)பூங்கொத்து

திகழ் said...

பூங்கொத்து

காமராஜ் said...

அசத்தல் அருணா
நம்பிக்கை வரிகள்.
தெம்போடு நடக்கச்சொல்லும்.

அன்புடன் அருணா said...

பழமைபேசி said...
/ பூங்கொத்து!/
வாங்கீட்டேன் பழமை பேசி!நன்றி,
நன்றி Ammu Madhu !

+Ve Anthony Muthu said...

அழகு. நிஜமாகவே ஜெயித்தல், தோற்றல் இரண்டுமே அழகுதான். சுகம்தான்.

கவிதையும், தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளும் மிக மிக அற்புதம். அழகோ அழகு.

Chitra said...

ஜெயித்தவர்களுக்கான
புதிய உலகத்தில்
வானமே நட்சத்திரமாய்
ஜொலித்துக் கொண்டிருந்தது!
ஜெயிப்போம்....!!ஜொலிப்போம்!!!


...... very nice! Super!

அம்பிகா said...

தன்னம்பிக்கை தரும் கவிதை
அழகு...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அருணா. என் பூங்கொத்தும்.

Madumitha said...

உதிர்ந்தவைகளை விட
ஜொலிப்பவைகளே
ஏராளம்.
கவிதை நன்று.

சுந்தரா said...

நம்பிக்கையே வாழ்க்கையென்று ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கீங்க...பாராட்டுக்கள்!

க ரா said...

நன்றி நல்ல கவிதைக்கு.

அன்புடன் அருணா said...

நன்றி Sangkavi
புலவன் புலிகேசி said...
/பிடிங்க பூங்கொத்தை.../
ம்ம் பூங்கொத்து வாங்கியாச்சி புலிகேசி!!
நன்றி padma

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

Super, Aruna.

மாதவராஜ் said...

:-))))

அன்புடன் அருணா said...

முத்துலெட்சுமி/muthuletchumi
திகழ் பூங்கொத்துக்கள் வாங்கியாச்சு!நன்றி!

அன்புடன் அருணா said...

kgjawarlal said...
/ Very inspiring.
பொதுவா புதுக் கவிதைகள்ளே பெசிமிசம்தான் அதிகமா இருக்குன்னு பரவலா ஒரு கருத்து உண்டு./
அச்சோ அப்பிடியா???இல்லியே!
நன்றி காமராஜ்!
நன்றி அம்பிகா!

அன்புடன் அருணா said...

நன்றி Antony!
நன்றி சித்ரா!
பூங்கொத்து வாங்கீட்டேன் ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி மதுமிதா!
நன்றி சுந்தரா!

இரசிகை said...

nice......mam:)

அன்புடன் அருணா said...

நன்றி இராமசாமி கண்ணண்!
நன்றி பிரியமுடன் பாலா பூங்கொத்துக்கு!

அன்புடன் அருணா said...

நன்றி மாதவராஜ்!
நன்றி ஜெஸ்வந்தி!

ஆடுமாடு said...

பாசிட்டிவ் கவிதை.

வாழ்த்துகள்

Thamira said...

கவிதை நன்று.

(ஒரு சஜஷன் : அர்த்தத்தின் நீட்சிக்கு இரண்டு புள்ளிகள் வைத்தாலே போதுமானது. எண்ணற்ற புள்ளிகள் வைக்கக்கூடாது என்று எங்கோ படித்த ஞாபகம். அதோடு அது படிப்போரையும் திசைதிருப்பும்)

அன்புடன் அருணா said...

நன்றி மாதவராஜ்!
நன்றி இரசிகை!

அன்புடன் அருணா said...

நன்றி ஆடுமாடு!
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்!ஒரு சஜஷன் : /அர்த்தத்தின் நீட்சிக்கு இரண்டு புள்ளிகள் வைத்தாலே போதுமானது. /
சஜஷனுக்கு நன்றி...திருத்திக் கொண்டேன்!

+Ve Anthony Muthu said...

அர்த்தத்தின் நீட்சிக்கு 2 புள்ளிகள் அல்ல. 3 புள்ளிகள்.

உதாரணம் இந்தப் பக்கத்திலேயே உள்ளது.

ஆடுமாடு said...

ஆதிமூலகிருஷ்ணன் said...

அன்புடன் அருணா said...


ஒவ்வொரு முறையும், Said-ற்கு பிறகு எத்தனை புள்ளிகள் என கணக்கிட்டுக் கொள்ளவும்.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா