நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, March 24, 2010

அடப் போங்க கடவுளே!

திடீரென எல்லோருமாய்ச் சேர்ந்து என்னைக் கடவுளாக ஆகிவிடுங்கள் என்று சொல்லி விட்டுப் போனார்கள்...கடவுளாக இருப்பது கஷ்டமா?உள்ளங்கையைக் கொஞ்சம் விரித்துப் புன்னகைக்கத்தானே வேண்டும்! இதென்ன பெரிய விஷயம்?செய்து விடலாம்.என்றுதான் நினைத்தேன்.பிறகு சிலர் வந்து நிறைய நகைகளை அணிவித்து பெரிய கிரீடத்தையும் வைத்து விட்டுப் போய் விட்டார்கள்.சரி அழகாய்த்தானே இருக்கிறேன் என நினைத்துக் கொண்டேன்.

கொஞ்சம் அழகான பூக்களாலான மாலை தோள்களில்....கொஞ்சம் பூக்கள் கூந்தலில்...கொஞ்சம் பூக்கள் பாதங்களில்..........பாதங்களில் கிடந்த ஒரு பூ என்னைக் கேட்டது..
"ஏன் கடவுளே இந்தப் பாரபட்சம்? சில பூக்களை உன் தோள்களிலும்,சில பூக்களைக் கூந்தலிலும்,சில பூக்களைப் பாதங்களிலுமாய் ஏனிப்படி????பதில் சொல்லியே ஆக வேண்டும்...."எனப் பிடிவாதம் பிடித்தது.

எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை...கடவுளாயிற்றே...
எப்படிப் பதில் தெரியாது எனச் சொல்வது?

"அட! நீயாவது பரவாயில்லை ...கடவுளின் பாதங்களில் இருக்கிறாய்....சில பூக்கள் பிணத்தின் மேல் மாலையாக....இருக்கிற இடத்தில் நிம்மதியாக இரு நிறைவாய் இரு..." புத்திசாலித்தனமாகப் பதில் சொல்லிவிட்டதாக நினைத்துப் புன்னகைத்தேன்..

"அடக் கடவுளே ...அதை எப்படி ஏன் செய்கிறாய் என்றுதான் கேட்டேன்.....எதை வைத்து நிர்ணயம் செய்கிறாய் இந்தப் பூ கடவுளுக்கென்றும் இந்தப் பூ பிணத்துக்கென்றும்???? ஏன் அப்படிப் பாரபட்சம் காட்டுகிறாய்? பெற்ற குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் எனப் பெற்றோருக்கும்...மாணவர்களிடம் பாரபட்சம் காட்டாதீர்கள் என்று ஆசிரியரிடமும் கத்திக் கொண்டியோருக்கும் காலகட்டத்தில் நீ மட்டும் எப்படிப் பாரபட்சமாயிருக்கிறாய்?"


எனக்குப் பதிலொன்றும் தெரியவில்லை.இந்தப் பூ என்ன இப்படியெல்லாம் கேட்கிறது.நாளைக்கு வேணும்னா இந்தப் பூ கடவுளுக்கு....இந்தப் பூ பிணத்துக்குன்னு செலெக்ட் பண்ணாம இருந்துடலாம்......ஆனா இப்போ பதில் தெரிலியே!கடவுளுக்கே தெரியவில்லையென்று எப்படிச் சொல்வது? அதனால் எப்போதும் போல புன்னகைத்துக் கையை உயர்த்திக் கண்களை மூடிக் கொண்டேன்.


பரீட்சைக் காலம்....பசங்க எல்லாம் எளிதான பேப்பர் வேண்டும் என்றும், நான் படித்தவையே வரவேண்டும் என்றும், டெரிவேஷன்ஸ் வரவேண்டும், என்றும், வரக் கூடாது என்றும்,ஈகுவேஷன்ஸ் வரவேண்டும் என்றும், வரக்கூடாது என்றும்,பலவிதமான வேண்டுதல்......யாரையும் ஏமாற்றக் கூடாது என்றும் ,எல்லோரையும் மகிழ்விக்கவேண்டும் என்றும் கங்கணம் கட்டிக் கொண்டு கேள்வித்தாள் தயாரிக்க ஆரம்பித்தேன்............அச்சோ.
..எப்பூடி...?ஒருத்தன் படித்ததை மட்டும் கேட்பது? அட? ஒருத்தனுக்கு ஈகுவேஷன்ஸ் வராதுன்னா...இன்னொருத்தனுக்கு அது மட்டும்தானே வருது....ஒண்ணும் புரிலியே...இப்போ என்னா பண்றது?...சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.
ஐயய்யோ இவங்களுக்கு யார் கேள்வித்தாள் ரெடி பண்ணுவாங்கன்னு கவலையாயிருந்தாலும் நான் என்ன பண்ண?

"கடவுளே என் புள்ளே முதமுதல்லே பட்டணம் போறான் கூடவே இருந்து பர்த்துக்கோப்பா....."என்று வேண்டினான் அவன்.நான் பெட்டி ரெடி பண்ணி கிளம்பிட்டிருக்கப்ப.....
"Ohhh...God..my child first time அமெரிக்கா போறான்...Be with him....."என்று இவனும் வேண்ட.....சரி சரி அமெரிக்கா போலாம்னு நினைக்கும் போதே.....இன்னொருத்தன்.....ம்ம்
ம் எங்கதான் போறது? ம்ம்ம்ம் ஒண்ணும் முடிலை....
சரி சரி எப்போதும் போல கையை உயர்த்திப் புன்னகைத்துக் கண்களை மூடிக் கொண்டேன்.

யாரும் பார்க்காதபடி ஓடியே வந்து விட்டேன். ரூமுக்குள் போய் அடைந்து கொண்டேன்......காதை மூடிக் கொண்டேன்...........ஹையா! இனி யார் வேண்டினாலும் கேட்காது.....என நினைத்துக் கொண்டே தூங்கலாம்னு நினைத்த போது...........ஒரே குழப்பநிலையில் பலவேண்டுதல்கள் தெளிவில்லாமல்...எல்லோரும் வேண்டுதல்களும் கேள்விகளுமாகக் கேட்டுக் கத்திக் கொண்டிருந்தார்கள்.....சிலர் ஜப்பானிய மொழியிலும்,சில சீன மொழியிலும் ....பல்வேறு மொழிகளிலுமாய் காட்டுக் கத்தல்.....யாருக்குப் பதில் சொல்ல...யாரைக் காப்பாற்ற என்று பயங்கரக் குழப்பத்தில் ........அய்யோடா கடவுளாய் இருப்பதில் இவ்வ்ளோ கஷ்டமா???? அப்படீன்னு அடக் கடவுளேன்னு தலையில் கைவைத்துக் கொண்டேன்.

நாளைக்குக் காலையில் பூக்கள் எங்கே போகும்? நாம்தான் நம்ம வேலையைச் செய்யலியே????நாளைக்குப் பரீட்சை எப்பிடி நடக்கும்????நாம்தான் கேள்வித்தாள் தயாரிக்கலியே?????அவன் கூடச் சென்னைக்கு யார் போறது....இவன் கூட அமெரிக்கா யார் போறதுன்னு ஒரே குழப்பம்....கடவுளுக்கு இவ்வ்ளோ வேலையா???? போங்கடா...கொஞ்ச நாளைக்கு எதுவுமே செய்யப் போறதில்லை என்னதான் செய்றீங்கன்னு பார்க்கிறேன்..........அப்பிடி
யே தூங்கிட்டேன் போல.....காலையில் கண்ணக் கசக்கிட்டே வெளியே வந்தா அட....
சாமிப் படத்துலே பூ!
நம்மதான் இந்த உலகத்தைத் தாங்கிட்டிருக்கோம்னும்...நாம இல்லைன்னா எதுவும் நடக்காதுன்னும் நினைச்சுட்டிருந்தோமே.....இந்
தப் பூவை யார் சாமிக்குன்னு செலெக்ட் பண்ணுனது???

அடப் போங்க கடவுளே!
கடவுளையே படைச்சு........அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கோமே!...இத்தனூண்
டுப் பூ...இதைக் கடவுளுக்குன்னு செலெக்ட் பண்றதா பெரிய விஷயம்னு.....மனிதன் சிரித்துக் கொண்டான்.!

35 comments:

KParthasarathi said...

I have no words Aruna to express my appreciation adequately.Humourously written your post brought out a telling message at human frailties.For sheer imagination and creative style your post takes the cake.Thank you soooooooo much

Rajalakshmi Pakkirisamy said...

Excellent

+Ve Anthony Muthu said...

அற்புதமான உருவகக்கதை. Excellent.
Great Great Satire work.

Porkodi (பொற்கொடி) said...

:))) ஆமா பின்ன? என்னவோ நெனப்பு தான் தான் உலகத்தையே சுத்தி விடறாப்போல..

Porkodi (பொற்கொடி) said...

//கடவுளையே படைச்சு........அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியிருக்கோமே// வி.வி.சி!

Chitra said...

கடவுளாய் இருப்பதில் இவ்வ்ளோ கஷ்டமா???? அப்படீன்னு அடக் கடவுளேன்னு தலையில் கைவைத்துக் கொண்டேன்.

.......... அட! அட! நல்ல உருவக கதை.

Anonymous said...

சூப்பருங்க...

Tamilan said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்...

அன்புடன் அருணா said...

KParthasarathi said...

/I have no words Aruna to express my appreciation adequately/
Thanx for that nice appreciation Sir.

அன்புடன் அருணா said...

Thank you Rajalakshmi !
Thank you Antony!

கண்மணி/kanmani said...

நீங்க உர்ஹிர்த்த பூக்களை ஒன்றாகச் சேர்த்து உங்களுக்கு என் பூச்செண்டு
பர்ஸ்ட் கிளாஸ் நிஜம்/கற்பனை.
எல்லோருடைய தேவைகளுக்கும் தானே வரமுடியாதுன்னு தான் அம்மாவை அனுப்பினானாம் கடவுள்.
முதலில் அம்மாவாக
பின் மனைவியாக
இடையில் மகளாக

mightymaverick said...

//நம்மதான் இந்த உலகத்தைத் தாங்கிட்டிருக்கோம்னும்...நாம இல்லைன்னா எதுவும் நடக்காதுன்னும் நினைச்சுட்டிருந்தோமே.....இந்தப் பூவை யார் சாமிக்குன்னு செலெக்ட் பண்ணுனது???//

இதற்கென்றே ஒரு கதை உண்டு... கிறிஸ்துவையும் சில காட்டுமரங்களையும் வைத்து... ஆனாலும், கடவுளை வெளியில் தேடிக்கொண்டுசிலையை கும்பிடும் வழமை இருக்கும் போது, தன் குறை போக்கும் எவரையும்கடவுளாக ஏற்கும் மனம் நிறைய பேருக்கு உண்டு... இன்னிக்கு ஒரு நித்திய கடவுள் தலைமறைவாய் இருக்கிறார்... உலகம் இயங்காமலா இருக்கிறது?

பத்மா said...

நல்ல புனைவு .நெஜம்மாவே பாவம் கடவுள் இல்ல? அவருக்கு கொஞ்சமா பிரார்த்தனைகள் வரணும்ன்னு வேண்டிப்போம் :))

காமராஜ் said...

//கடவுளாக இருப்பது கஷ்டமா?உள்ளங்கையைக் கொஞ்சம் விரித்துப் புன்னகைக்கத்தானே வேண்டும்! இதென்ன பெரிய விஷயம்?செய்து விடலாம்//

எவ்வளவு நேரம் சிரிதேன் அப்படியும் சிரித்தும் தீரவில்லை. அசத்தல். நல்லாயிருக்கு கடவுள் பாடு.புதுமைப்பித்தனின்
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் படித்த பிறகு சிரிப்புக்காட்டிய கடவுள் அருணாவோட கடவுள்.

Radhakrishnan said...

:) எத்தனை அழகான பதிவு. இறைவன் இயக்கத்தில் மட்டுமல்ல, இயக்கமற்றதிலும் இருக்கிறான்.

அன்புடன் அருணா said...

Porkodi (பொற்கொடி) said...
வி.வி.சிக்கு ரொம்ப ரொம்ப நன்றி பொற்கொடி!

அன்புடன் அருணா said...

நன்றி சித்ரா!
நன்றி சதீஷ் குமார்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூங்கொத்து அருணா.. :))

ப்ரியமுடன் வசந்த் said...

பிரின்ஸ் சூப்பர்ப்...

இப்போதான் தெரிது நீங்க கொடுக்கும் பூங்கொத்துக்களின் அர்த்தம்....

:)

புலவன் புலிகேசி said...

அட போங்க அருணா....

சுந்தரா said...

ரசித்துச் சிரிக்கவைத்த அசத்தலான பதிவு அருணா.

நல்லாவே யோசிச்சிருக்கீங்க கடவுள்மாதிரி :)

அன்புடன் அருணா said...

நன்றி தமிழன்!
நன்றி முகிலன்!

அன்புடன் அருணா said...

கண்மணி/kanmani said...
/ எல்லோருடைய தேவைகளுக்கும் தானே வரமுடியாதுன்னு தான் அம்மாவை அனுப்பினானாம் கடவுள்.
முதலில் அம்மாவாக
பின் மனைவியாக
இடையில் மகளாக/
இந்த ஸ்ட்ராடஜி தான் எனக்கும் பிடித்தது கண்மணி!!

அன்புடன் அருணா said...

/தன் குறை போக்கும் எவரையும் கடவுளாக ஏற்கும் மனம் நிறைய பேருக்கு உண்டு/
தவறில்லை வித்தியாசமான கடவுள்!!!

அன்புடன் அருணா said...

padma said...
/ அவருக்கு கொஞ்சமா பிரார்த்தனைகள் வரணும்ன்னு வேண்டிப்போம் :))/
எந்தக் கடவுள்கிட்டே பத்மா????!
காமராஜ் said...
/ புதுமைப்பித்தனின்
கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் படித்த பிறகு சிரிப்புக்காட்டிய கடவுள் அருணாவோட கடவுள்./
இதைவிடப் பாராட்டு என்ன வேண்டும் காமராஜ்!

அன்புடன் அருணா said...

V.Radhakrishnan said...
/ இறைவன் இயக்கத்தில் மட்டுமல்ல, இயக்கமற்றதிலும் இருக்கிறான்./
உண்மைதான் ராதாகிருஷ்ணன்!
பூங்கொத்து கிடைக்கப் பெற்றேன் முத்துலெட்சுமி!

அன்புடன் அருணா said...

பிரியமுடன்...வசந்த் said...
/ பிரின்ஸ் சூப்பர்ப்...
இப்போதான் தெரிது நீங்க கொடுக்கும் பூங்கொத்துக்களின் அர்த்தம்..../
அப்பாடா! எவ்வ்ளோ கஷ்டப் பட வேண்டியதிருக்கு!

தக்குடு said...

வீட்ல உக்காந்து யோசிப்பய்ங்க போலருக்கு!!!...:) அருமையான புனைவு. வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/ அட போங்க அருணா..../
அதுசரி!.... எங்கே போறது???

சுந்தரா said...
/ நல்லாவே யோசிச்சிருக்கீங்க கடவுள்மாதிரி :)/
நன்றி சுந்தரா!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தக்குடுபாண்டி!

sri said...

As a creative story this really rocks,there are certainly wow moments, but sorry I am not able to understand the story, may be i am jus too dumb

அன்புடன் அருணா said...

Don't be sorry Sri,It's not a story..It's just an imagination...if god thinks this way...!!!

ரோஸ்விக் said...

கடவுள்களைப் பல உருவங்களில் படைத்த மனிதன் கடவுளை விட பெரியவன் தானே! :-)

கடவுள் நல்லாத்தான் குழம்பிருக்கார்...

ரோஸ்விக் said...

முடிந்தால் படித்துப்பாருங்களேன்.


பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்) - 2

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஸ்விக்!
இதோ வருகிறேன் உங்க வலைப்பூவுக்கு!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா