நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, March 6, 2010

பத்தே நாள்லே வீடு வாங்கும் திட்டம்...

"கொஞ்சம் வெளைச்சல் நிலத்துலே இன்வெஸ்ட் பண்ணிருக்கேம்பா.."

"அப்பிடியா? எப்போ?"

நேற்றுச் சாயங்காலம்"

"அப்பிடியா? என்னா போடலாம்னு இருக்கே..?"

"அதான் யோசிச்சுட்டே இருக்கேன்...."

"இதிலென்ன யோசனை?"

"கொஞ்சமா பணம் போட்டு உடனே வெளையறதைப் போடவா....அல்லது நிறைய பணம் போட்டு நிறைய நாளாகுறதைப் போடவான்னு ஒரே ரோசனையா இருக்கு..."

"இதிலென்ன இவ்வ்ளோ ரோசனை பண்றே? சட்டுப்புட்டுனு ஆரம்பிச்சா மட மடன்னு ஆடு ,மாடு ,கோழிப் பண்ணைத், தோட்டம் தொரவுன்னு பெரியாளாயிடலாம்....."

"அதுசரி நீ என்னா போட்டுருக்கே?"

"நா எப்பவுமே அவசரக்காரனப்பா.....எது மட மடன்னு வெளையுதோ அதைப் போட்டு சட்னு ...வீடு அது இதுன்னு வாங்கி இப்போ ஜெகஜோதியா இருக்கோமாக்கும்!? அடுத்தாப்புலே பக்கத்துலேயே இன்னும் கொஞ்சம் நிலம் வேற வாங்கப் போறேன்"

"இருந்தாலும் பயமாவே இருக்கப்பா....."

அட! நம்பி இறங்குப்பா....பக்கத்து தோட்டத்துக்காராங்க அத இதைன்னு கொடுத்துதவி நல்லாப் பார்த்துப்பாங்க...கொஞ்சம் சூதானமா நடந்துக்கிட்டா நீயும் வீடு தோட்டம்னு பத்தே நாள்லே எங்கேயோ போயிரலாம்பா!!!!"

"பத்தே நாள்லேயெவா??????????ரைட்டு.....உன்னை நம்பி வெவசாயத்துலே இறங்கிடுறேம்பா! ஒகே...வா????"

அட! நீங்க வேற! நம்ம மக்கள் FARMVILLE பற்றித் தீவிரமா ஆராய்ச்சி பண்றதைப் பற்றிச் சொன்னா.............????

29 comments:

asiya omar said...

குட்டீஸில் இருந்து குமரன் வரை இப்ப ஆராய்ச்சி செய்றது farmville பற்றி தானே.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

neengalumaa?!!!!

அமைதிச்சாரல் said...

// நம்ம மக்கள் FARMVILLE பற்றித் தீவிரமா ஆராய்ச்சி பண்றதைப் பற்றிச் சொன்னா//

நெசமான வெவசாயத்துல இறக்கி விட்டா தெரியும்..:-)))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இப்ப லீவ் வேற விட்டாச்சா எந்நேரமும் விளைச்சல் பத்தி தான் பேச்சு மகளுக்கு.. எனக்கு கணினி கிடைக்கமாட்டேங்குது :(

நாஞ்சில் பிரதாப் said...

இந்த பார்ம்வில்லே பண்ற அநியாயம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. இனிமே யாரையும் விவசாயம் பாருன்னு கட்டாயப்படுத்த முடியாது. அதுகூட இணையத்துல வந்துருச்சு.

இதை பண்றவங்க கைல ரெண்டு மாட்டைக்கொடுத்து நிலத்தை உழுவுடா சொல்லனும்...அப்ப தெரியும் டங்குவாரு எப்படி கிழியுதுன்னு...விவசயாயம்ங்கறது விளையாட்டாப்போச்சு....

KParthasarathi said...

siricchu siricchu vayaru valikkaradhu Aruna!!!

அன்புடன் அருணா said...

asiya omar said...

/குட்டீஸில் இருந்து குமரன் வரை இப்ப ஆராய்ச்சி செய்றது farmville பற்றி தானே./
அதே!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி asiya omar!

Gowripriya said...

:))

ஜெய்லானி said...

முடியல...

சுந்தரா said...

//பக்கத்து தோட்டத்துக்காராங்க அத இதைன்னு கொடுத்துதவி நல்லாப் பார்த்துப்பாங்க...கொஞ்சம் சூதானமா நடந்துக்கிட்டா நீயும் வீடு தோட்டம்னு பத்தே நாள்லே எங்கேயோ போயிரலாம்பா!!!!"//

:)

இப்ப பானைபானையா தங்கமெல்லாம் கிடைக்குதாம்...சொல்லிக்கிறாங்க :)

ஆடுமாடு said...

ஆடு மாடை இப்பலாம்
வளர்க்கிறது கஷ்டம்.

அன்புடன் அருணா said...

வெள்ளிநிலா ஷர்புதீன் said...
/neengalumaa?!!!!/
அட! நாங்களுமேதான்!அப்பப்போ ரிலேக்ஸ் பண்ண வேண்டாமா?

Karthik said...

ஸப்பா, முடியல.. :)

தியாவின் பேனா said...

தாங்க முடியல சாமியோ

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said.../ நெசமான வெவசாயத்துல இறக்கி விட்டா தெரியும்..:-)))/
நாஞ்சில் பிரதாப் said...
/ இதை பண்றவங்க கைல ரெண்டு மாட்டைக்கொடுத்து நிலத்தை உழுவுடா சொல்லனும்...அப்ப தெரியும்/
ரொம்ப சரியாச் சொன்னீங்க அமைதிச்சாரல் ,நாஞ்சில் பிரதாப்...நன்றி!

இய‌ற்கை said...

vangooo..vangaoo...:-))

இய‌ற்கை said...

//இதை பண்றவங்க கைல ரெண்டு மாட்டைக்கொடுத்து நிலத்தை உழுவுடா சொல்லனும்...அப்ப தெரியும்//


athukku interest irunthu vazhi illathavanga thanga farmville choose panranga...

புலவன் புலிகேசி said...

:))

காமராஜ் said...

'அந்த Farm ville என்னான்னு தெரியலங்க' அதான்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நான் அந்த பக்கமே போகலைங்க..:))

அன்புடன் அருணா said...

KParthasarathi said...
/siricchu siricchu vayaru valikkaradhu Aruna!!!/
சிரிங்க!நல்லா சிரிங்க! அதுக்குத்தானே எழுதியது.
நன்றி Gowripriya !
நன்றி ஜெய்லானி !

அன்புடன் அருணா said...

சுந்தரா said...
/ இப்ப பானைபானையா தங்கமெல்லாம் கிடைக்குதாம்...சொல்லிக்கிறாங்க :)/
தங்கத்தை இப்படிப் பார்க்கத்தானே முடியும்! விக்கிற வெலையிலே வாங்க முடியுமா! அதனாலே பானை பானையா வாங்கிக்கட்டும்!

ஆடுமாடு said...
/ஆடு மாடை இப்பலாம்
வளர்க்கிறது கஷ்டம்./
அதனாலேதான் இப்பூடி!

புதுகைத் தென்றல் said...

:)

R.Gopi said...

ஹா...ஹா...ஹா...

இப்போ நீங்களுமா அருணா??

நான் கூட நெசமாலுமே விவசாயம்னு நெனச்சு, உரம் பேரெல்லாம் சொல்லலாம்னு இருந்தேன்...

நல்ல வேளை....

கலக்கல் நகைச்சுவை.... கொஞ்சம் ரிலீஃபா இருந்தது...

அன்புடன் அருணா said...

Karthik said...
/ஸப்பா, முடியல.. :)/
அவ்வ்ளோ அறுவையாவா இருக்கு கார்த்திக்!!???

தியாவின் பேனா said...
/தாங்க முடியல சாமியோ/
அவ்வ்ளோ அறுவையாவா இருக்கு தியாவின் பேனா??

அன்புடன் அருணா said...

இய‌ற்கை said...
/ athukku interest irunthu vazhi illathavanga thanga farmville choose panranga.../
ம்ம்ம்....விளக்கம் நல்லவே இருக்கு இயற்கை!

அன்புடன் அருணா said...

நன்றி புலவன் புலிகேசி
காமராஜ் said...
/'அந்த Farm ville என்னான்னு தெரியலங்க' அதான்./
ஃபேஸ் புக்லே கலக்கிக்கிட்டு இருக்கும் ஒரு விளையாட்டுதான் FARM VILLE!

அன்புடன் அருணா said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
/நான் அந்த பக்கமே போகலைங்க..:))/
அப்பப்போ போய் என்னான்னு பார்க்கலாம் தப்பில்லே ஷங்கர்!

அன்புடன் அருணா said...

நன்றி புதுகைத் தென்றல் !

R.Gopi said...
/ஹா...ஹா...ஹா...
இப்போ நீங்களுமா அருணா??/
அட! அப்பப்போ நாங்களும்தான் கோபி! அப்பப்போ ரிலேஃஸ் பண்ண வேண்டாமா????

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா