நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, September 19, 2008

இன்னமும் தேடுகிறேன்.........


தொலைந்து போயிருக்கும்
காற்றைத் தேடும் வேலை
எனக்கு........

நட்சத்திரக் கூட்டத்தில்
அப்பாவை எங்கே
தேடுவது?

அப்பா இறந்த நாள்
அப்பா நட்சத்திரமாகி
விட்டார்...என்று
அம்மா சொன்னது
முதல் தேடுகி்றேன்......

இலதென்பர்
உளதென்பர்
அதனாலெல்லாம்
தேடுவதை விட்டு
விடுவதா?

இன்னமும் தேடுகிறேன்.........

21 comments:

MSK / Saravana said...

ரொம்ப வருத்தப்பட வச்சிட்டீங்க..


இது கற்பனை கவிதை தானே..??
கற்பனையாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன்..

Aruna said...

இது கற்பனையில்லை.....நிஜக் கவிதை சரவணன்....இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்........
அன்புடன் அருணா

வினையூக்கி said...

உருக்கமானது..உணர்வுப்பூர்வமானது

MSK / Saravana said...

என்னிடம் வார்த்தைகள் இல்லை..
:[

Karthik said...

//இது கற்பனையில்லை.....நிஜக் கவிதை சரவணன்....இன்னமும் தேடிக் கொண்டேயிருக்கிறேன்........
அன்புடன் அருணா

:(
It's really Sad. But move on...

ஆயில்யன் said...

:(((

Aruna said...

Karthik கூறியது...

//:(
It's really Sad. But move on...//

thanx kaarthik...
anbudan aruNaa

Anonymous said...

:-( உணர்வுபூர்வமாய் உள்ளது!

Sanjai Gandhi said...

//இன்னமும் தேடுகிறேன்......... //

அப்பாவை உங்களுக்குள் வச்சிகிட்டு எதுக்கு அக்கா வெளிய தேடறிங்க.. உங்களோட ஒவ்வொரு செயல்லயும் சிந்தனைலையும் அப்பா இருப்பாரே.. உங்களுக்குள்ள தேடுங்க... வெளிய வேண்டாம்.

அன்புத் தம்பி.

Aruna said...

இனியவள் புனிதா கூறியது...
//:-( உணர்வுபூர்வமாய் உள்ளது!//

நன்றி புனிதா...
அன்புடன் அருணா

Aruna said...

SanJai கூறியது...
//இன்னமும் தேடுகிறேன்......... //
//அப்பாவை உங்களுக்குள் வச்சிகிட்டு எதுக்கு அக்கா வெளிய தேடறிங்க.. உங்களோட ஒவ்வொரு செயல்லயும் சிந்தனைலையும் அப்பா இருப்பாரே.. உங்களுக்குள்ள தேடுங்க... வெளிய வேண்டாம்.//
உண்மைதான் சஞ்சய்.....இருந்தாலும் அப்பா ஏற்படுதிட்டுப் போன வெறுமையை இப்பிடி எதையாவது தேடித்தான் போக்கிக்கணும்....
அன்புடன் அருணா

butterfly Surya said...

நல்லாயிருக்கு..

நிறைய எழுதுங்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

Venkata Ramanan S said...

Great One !!!

Life is all about sailin thro.. Hope u will ..

Aruna said...

surya கூறியது...
//நல்லாயிருக்கு..
நிறைய எழுதுங்கள்//

நன்றி....சூர்யா!!!
அன்புடன் அருணா

Aruna said...

ரமணன்... கூறியது...
//Great One !!!
Life is all about sailin thro.. Hope u will ..//

Thank you Ramanan...
I understand...
anbudan aruNaa

narsim said...

உணர்வுகளை வார்த்தைகளாக வடிக்கும்பொழுது அது கவிதையோ, கதையோ, கட்டுரையோ.. எந்த கட்டமைப்பையும் மீறி மனதின் ஓரத்தில் ஒரு "அட" அல்லது "ப்ச்" தோன்றும்.. அதுவே அந்த உணர்வின் அங்கீகாரம்..

நல்ல பதிவு

நர்சிம்

இவன் said...

எனக்கு என் அப்பாவைப்பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.... கவிதை அருமை

Aruna said...

நர்சிம் said,
//மனதின் ஓரத்தில் ஒரு "அட" அல்லது "ப்ச்" தோன்றும்.. அதுவே அந்த உணர்வின் அங்கீகாரம்..

நல்ல பதிவு//

அட!!அப்படியா??
நன்றி நர்சிம்...
அன்புடன் அருணா

Aruna said...

இவன் கூறியது...
//எனக்கு என் அப்பாவைப்பார்க்க வேண்டும் போல் இருக்கிறது.... கவிதை அருமை//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இவன்!!
அன்புடன் அருணா

காஞ்சனை said...

உங்க‌ள் வ‌லைப்பூவிற்கு என் முத‌ல் வ‌ருகை இது தான் தோழி. தேட‌ல் எப்போவுமே முடிஞ்சு போற‌தில்லை. தொட‌ர்ந்தால் தான் வாழ்க்கையை ர‌சிச்சு வாழ‌ முடியும் இல்லையா? ந‌ட்ச‌த்திர‌ அப்பாவை தேடுங்க. ஆசிக‌ள் உண்டு.
வ‌லைப்பூவின் முக‌வ‌ரியை ம‌ற்ற‌லாமே. ஏன் இப்ப‌டி?

நேச‌த்துட‌ன்,
ச‌காராதென்ற‌ல்

Aruna said...

சகாராதென்றல் கூறியது...
//உங்க‌ள் வ‌லைப்பூவிற்கு என் முத‌ல் வ‌ருகை இது தான் தோழி. தேட‌ல் எப்போவுமே முடிஞ்சு போற‌தில்லை. தொட‌ர்ந்தால் தான் வாழ்க்கையை ர‌சிச்சு வாழ‌ முடியும் இல்லையா? ந‌ட்ச‌த்திர‌ அப்பாவை தேடுங்க. ஆசிக‌ள் உண்டு.
வ‌லைப்பூவின் முக‌வ‌ரியை ம‌ற்ற‌லாமே. ஏன் இப்ப‌டி?//

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகாரா...வலைப்பூவின் முகவரி மாற்றத்திற்கு யோசித்து வருகிறேன்....
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா