நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, September 30, 2008

இரவுத் தூக்கம் போயிருந்தது ........வியர்வைக்கு விசிறி விடும்
பனிக்காற்றை சிதறிவிடும்
பனையோலை விசிறி இரண்டு
பானைச் சோறு வடிக்க
அடுப்புக்குள் குடி போக..........

இன்று.......
இரவுக்கு அந்தக் குடிசைக்குள்
பானைச் சோறிருந்தது.....
படுக்கை வியர்வையில் நனைந்திருந்தது.....
இரவுத் தூக்கம் போயிருந்தது ........

நேற்றோ????
இரவுக்கு அந்தக் குடிசைக்குள்
பனையோலை விசிறியிருந்தது
பானைச் சோறில்லை.....
இரவுத் தூக்கம் போயிருந்தது........

எப்படியோ
தூக்கம் அந்தக் குடிசைக்குள்
நிரந்தரமாய் தங்குவதில்லை..........

13 comments:

Karthik said...

சூப்பராயிருக்குங்க.
:)

ஒளியவன் said...

அன்புடன் அருணா, இந்தக் கவிதை வெகு நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது.

இரவுத் தூக்கமில்லா இரவுகள் பல கண்டிருக்கிறது குடிசை. வறுமை கொடிதுதான்.

Aruna said...

Karthik கூறியது...
//சூப்பராயிருக்குங்க.
:)//

நன்றி கார்த்திக்!..
அன்புடன் அருணா

Aruna said...

ஒளியவன் கூறியது...
//அன்புடன் அருணா, இந்தக் கவிதை வெகு நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது.//

ரொம்ப நன்றி...
அன்புடன் அருணா

Saravana Kumar MSK said...

//ஒளியவன் கூறியது...
அன்புடன் அருணா, இந்தக் கவிதை வெகு நேர்த்தியாக சொல்லப் பட்டிருக்கிறது.

இரவுத் தூக்கமில்லா இரவுகள் பல கண்டிருக்கிறது குடிசை. வறுமை கொடிதுதான்.//

வழிமொழிகிறேன்.

Saravana Kumar MSK said...

நல்லா எழுதி இருக்கீங்க அருணா..

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
//நல்லா எழுதி இருக்கீங்க அருணா../

நன்றி சரவணன்...
அன்புடன் அருணா

Yaaro said...

நல்ல முயற்சி அருணா ....எதுகை மோனை நல்லா அமைஞ்சு வந்திருக்கு
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலே ஒரு நடை போல தோணுது....
தொடர்ந்து எழுதுங்க ...நானும் ஒரு வலைப்பதிவு போட்ருக்கேன்
valaikkulmazhai.wordpress.com பாருங்களேன்
கார்த்தி

AMIRDHAVARSHINI AMMA said...

அழகான அர்த்தமுள்ள கவிதை.

குட்டிபிசாசு said...

அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

இன்று...(தமிழ்நாட்டில்)
எங்க வீட்டில்
மின்விசிறி விசிறியிருந்தது
பானையில் சோறிந்தது
மின்சாரமில்லை...
இரவுத் தூக்கம் போயிருந்தது...

Aruna said...

Yaaro கூறியது...
//நல்ல முயற்சி அருணா ....எதுகை மோனை நல்லா அமைஞ்சு வந்திருக்கு
கவிதைக்கும் உரைநடைக்கும் இடையிலே ஒரு நடை போல தோணுது....
தொடர்ந்து எழுதுங்க ...நானும் ஒரு வலைப்பதிவு போட்ருக்கேன் //

நன்றி யாரோ....முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும்....
உங்க வலைப் பதிவுக்கு வந்துட்டேனே!!!
அன்புடன் அருணா

Aruna said...

AMIRDHAVARSHINI AMMA கூறியது...
//அழகான அர்த்தமுள்ள கவிதை.//
நன்றி AMIRDHAVARSHINI AMMA ..
அன்புடன் அருணா

Aruna said...

குட்டிபிசாசு கூறியது...
//அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

இன்று...(தமிழ்நாட்டில்)
எங்க வீட்டில்
மின்விசிறி விசிறியிருந்தது
பானையில் சோறிருந்தது
மின்சாரமில்லை...
இரவுத் தூக்கம் போயிருந்தது...//

வாங்க குட்டிப் பிசாசு....முதல் வருகை....நன்றி.
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா