நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, August 28, 2008

அனுராதா எனும் ஓர் மழைத் துளி.......

பதிவர் "அனுராதா" துன்பங்களிலிருந்து விடுதலை! "லக்கிலுக்" அவர்களின் இந்தப் பதிவின் தொடர் பதிவு
அந்த மழைத் துளிக்கு
என்னைத் தெரியாது
எனக்கும் அந்த
மழைத் துளியைத்
தெரியாது.

ஆயினும் அந்த
மழைத் துளியின்
மரணம்
என் விழிகளில்
அடை மழையை
வரவழைத்தது.

எல்லா மழைத் துளியும்
மண்ணைத்தானே
முத்தமிடும்.....??????

மண்ணை முத்தமிடும்
முன்
மழைத் துளிக்கும்
மண்ணுக்கும்
இடையில் ஏன் வந்தது
இந்தக் கேன்சர்?

ஒவ்வொரு
யுத்தங்களின் முடிவில்
ஜெயித்தவனும்
ரணங்களுடன்
தோற்றவனும்
ரணங்களுடன்
யாரை யார்
தேற்றுவது?

இங்கே
ஜெயித்தது, யார்?
தோற்றது யார்?

15 comments:

Saravana Kumar MSK said...

கவிதை நன்று.

யாருங்க அந்த அனுராதா???

Saravana Kumar MSK said...

//ஜெயித்தது யார்?
தோற்றது யார்?//

என்னிடம் பதில் இல்லை..
:(

Aruna said...

அனுராதாவும் ஒரு வலைப் பதிவர் சரவணன்.

http://anuratha.blogspot.com/

http://madippakkam.blogspot.com/2008/08/blog-post_28.html
அன்புடன் அருணா

சேவியர் said...

நமது வாழ்வைத் திரும்பிப் பார்க்க வைக்கும் தருணமே அடுத்தவர் மரணம்.

மறைந்தவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

ஆர்.நாகப்பன் said...

மரணம் எந்த அளவிற்கு நம்மை பாதிக்கிறது என்பதை உணராதவர்கள் அல்ல நாம்...
மனதை அழுத்திய பதிவு...
தோழி அனுராதா ஆன்மா சாந்தி பெற பிரார்த்திக்கிறேன்....

அன்புடன்,
ஆர்.நாகப்பன்.

Saravana Kumar MSK said...

இப்போதுதான் லக்கிலுக்கின் பதிவை படித்தேன்..
கொடூரம்..

சில சமயங்களில் வாழ்க்கையை சற்று வெளியே இருந்து பார்த்தால் பயமாய் இருக்கிறது..

அனுராதாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஜி said...

:((( இப்பத்தான் அனுராதா பற்றி அறிந்து கொண்டேன்.. அவரது வலைப்பதிவையும் சற்றுமுன் பார்த்துவிட்டு அதிர்ந்து போனேன்... :((( அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்...

Sri said...

:((

Vapurdha said...

Aruna ..

அப்ப அப்ப என் வலைப்பதிவுக்கு வந்த குற்றத்திற்காக, உங்களை தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. கண்டிப்பாக பங்கெடுத்து தகவல்களை பகிர்ந்துக்கோங்க :)

http://vapurdhaa.blogspot.com/2008/09/for-apple.html

Anonymous said...

simply superb

Saravana Kumar MSK said...

புது பதிவு எப்போ போடுவீங்க..??

Saravana Kumar MSK said...

என்னங்க ஆளையே காணோம் என் பிளாக் பக்கம்..??

Aruna said...

A for apple படிக்கக் கூப்பிட்டதுக்கே இன்னும் போடலை....கொஞ்சம் பிஸி...போடுறேன்...போடுறேன்...
அன்புடன் அருணா

Aruna said...

Saravana Kumar MSK கூறியது...
//என்னங்க ஆளையே காணோம் என் பிளாக் பக்கம்..??//

வர்றேன்...வர்றேன்....வந்துட்டேன்...
அன்புடன் அருணா

தங்ஸ் said...

கவிதை நல்லாருக்குங்க..அனுராதா மேடத்த நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு..அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா