நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 11, 2008

ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி
ஒரு புது மாதிரியான இன்ப அதிர்ச்சி சரவணகுமார் கொடுத்துருக்கார்......."Blogging Friends Forever Award".... என்ற அவார்ட் கொடுத்திருக்கிறார்........அவார்ட் வாங்குவது நமக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஆச்சே...ஆனால் அது கூடவே ஒரு சிக்கலும் வச்சுருக்காங்க....அது என்னான்னா?????

1)நான் இந்த அவார்டை 5 பேருக்கு கொடுக்கணும்..
(அஞ்சே பேருக்கு எப்பிடி? எல்லோரும் கோபித்துக் கொள்ளமாட்டார்களா?..)

2)இந்த 5 பேருல 4 பேரு நம்ம ப்ளாகை தொடர்ந்து படிக்கிறவங்களா இருக்கணும்.. ஒருத்தர் நம்ம ப்ளாகை புதுசா படிக்க தொடங்கினவங்களா இருக்கணும்..
(இங்கே ஆரம்பிக்குது சிக்கல்........நாலு பேராவது படிக்கிறாங்களா??)

3)இந்த அவார்ட் உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்களுக்கு மறுபடியும் ஒரு link தரணும்..
(அப்பாடா இந்த ஒரு வேலையாவது கொஞ்சம் சிக்கலில்லாமல் முடிக்கலாம்..)

இவங்க தான் அந்த ஐந்து நண்பர்கள்......

முதல்ல இப்போ எழுதுவதை நிறுத்திவிட்ட dreamzzக்கு அவருடைய சுறு சுறுப்புக்கு எல்லோர் blogலெயும் முதல் கமென்ட் போடுறதுனாலெ கொடுக்கலாம்னுதான் நினைச்சேன் ....ஆனால் அவர் இப்போ ஆட்டத்துலேயே இல்லையேன்னு ஒரு சிக்கல்.அதனாலே...

நேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி.........புன்னகையுடன் வாழ்வை....எதிர் நோக்கும் .......அந்தோணிமுத்து

ஒரு நிமிடக் கதைகளில் அடித்து ஆடும்.......வினையூக்கி

மொக்கைக்கு மேல மொக்கை போட்டு கொலை வெறியோட பதிவும், ரசித்து ரசித்துக் கமென்டும் போடும்..........ரசிகன்

அக்கா...... அக்கா...என்று சுற்றி வரும் தம்பி..........ஸ்ரீ

புதுசா என் blog படிக்கிறவங்களில் அனுஜன்யாவிற்கு இந்த அவார்டைக் கொடுக்கப் போறேன்.

அப்புறம் என்னை இப்படிப் பிரபலமாக்கிய சரவணகுமாருக்கு ஒரு நன்றி card போட்டுடலாமா???..........

22 comments:

M.Saravana Kumar said...

கலக்கல்..

புதுகைத் தென்றல் said...

ayyo ippadi oru thodar pathiva?!!???


puthusu puthusa kandu pidikarangale! ukkanthu yosipangalo!!

SanJai said...

ஆஹா.. ஜஸ்ட் மிஸ்ட்.. புது பேர்ல பதிவு போட்டு நான் வாங்கி இருப்பேனே அருணாக்கா.. :))

விருது வாங்கியதர்கு கன்னாபின்னாவென்று ஒரு வாழ்த்து... இன்னும் அதிகமாக எழுதி ஏராளமான விருதுகள் வாங்குங்கோ.. :))

அனுஜன்யா said...

அருணா, என்ன இது? இப்படி மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்களே! Really appreciate your nice gesture. விரைவில் எனது பட்டியலை எழுதுகிறேன். மீண்டும் நன்றிகள் பல.

அனுஜன்யா

Aruna said...

M.Saravana Kumar said...
//கலக்கல்..//

உங்க புண்ணியத்திலதான்.....
அன்புடன் அருணா

Aruna said...

புதுகைத் தென்றல் said...
//ayyo ippadi oru thodar pathiva?!!???
puthusu puthusa kandu pidikarangale! ukkanthu yosipangalo!!//

எங்களை எங்க யோசிக்க விடுறாங்க?
புதுசு புதுசா யாரோ யோசிச்சு ஆரம்பிச்சுடறாங்க.....நாங்க தொடர்கிறோம்....அவ்வ்ளோதான்.
அன்புடன் அருணா

Aruna said...

SanJai said...
//ஆஹா.. ஜஸ்ட் மிஸ்ட்.. புது பேர்ல பதிவு போட்டு நான் வாங்கி இருப்பேனே அருணாக்கா.. :))//

கொஞ்ச நாளா வலைப் பக்கம் ஆளையே காணோமே......இல்லைன்னா உங்களுக்குக் கொடுத்திருப்பனே...
அன்புடன் அருணா

Aruna said...

SanJai said...
//விருது வாங்கியதர்கு கன்னாபின்னாவென்று ஒரு வாழ்த்து...//

அதென்னா கன்னா பின்னாவென்று ஒரு வாழ்த்து??
இருந்தாலும் நன்றி.
அன்புடன் அருணா

Aruna said...

அனுஜன்யா said...
//அருணா, என்ன இது? இப்படி மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்து விட்டீர்களே! Really appreciate your nice gesture. விரைவில் எனது பட்டியலை எழுதுகிறேன். மீண்டும் நன்றிகள் பல.//

யான் பெற்ற இன்பம் வையகம் பெறுக....policy தான்...
அன்புடன் அருணா

ஸ்ரீ said...

அக்கா இன்பமா இருந்தது ஆனா அதிர்ச்சியா இல்லை :) ஏன்னா என்னை குறிப்பிடாம இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியுமே!!!! ஆனாலும் என்னிய ஆட்டத்துக்கு சேத்துக்கிட்டதுக்கு நன்றி எப்பவுமே நட்போட இருப்போம் ;)

Aruna said...

ஸ்ரீ said...
//அக்கா இன்பமா இருந்தது ஆனா அதிர்ச்சியா இல்லை :) ஏன்னா என்னை குறிப்பிடாம இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியுமே!!!!//

அடடா அப்பிடியா?இப்பிடிக் கூட நினைப்பு இருக்கா ஸ்ரீ தம்பி?
அன்புடன் அருணா

M.Saravana Kumar said...

அடிக்கடி பதிவு எழுதற பழக்கமெல்லாம் கிடயாதயா??

அனுஜன்யா said...

அருணா, இப்போது வந்து பாருங்கள்.

Sri said...

உங்கள பார்த்து நானும் பெண்டிங்ல இருந்த இந்த தொடர் பதிவ போட்டுட்டேன்..!! :)

Raghavan alias Saravanan M said...

வாழ்த்துக்கள் :)

நல்ல வரிகள் உங்கள் வலைப்பூவில் !

//நின்னைச் சில வரங்கள் கேட்பேன்...
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்...
என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்...
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி...
எனக்கேதும் கவலையறச் செய்து...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!//

படித்தவுடன் ஒரு பரவசம் தோழி! :)

உங்கள் பணி தொடரட்டும்!

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

Aruna said...

அனுஜன்யா said...
//அருணா, இப்போது வந்து பாருங்கள்.//
வந்துட்டோமில்லே!!!...அசத்தல்....
அன்புடன் அருணா

Aruna said...

Sri said...
//உங்கள பார்த்து நானும் பெண்டிங்ல இருந்த இந்த தொடர் பதிவ போட்டுட்டேன்..!! :)//

very good...very good...நம்மளைப் பார்த்துக் கூட ஏதாவது படிக்கிறீங்களே!
அன்புடன் அருணா

Aruna said...

Raghavan alias Saravanan M said...
//வாழ்த்துக்கள் :)
நல்ல வரிகள் உங்கள் வலைப்பூவில் !
//நின்னைச் சில வரங்கள் கேட்பேன்...
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்...
என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்...
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி...
எனக்கேதும் கவலையறச் செய்து...
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!//

படித்தவுடன் ஒரு பரவசம் தோழி! :)

நன்றி சரவணன்,
எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்..
அன்புடன் அருணா

Aruna said...

M.Saravana Kumar said...
//அடிக்கடி பதிவு எழுதற பழக்கமெல்லாம் கிடயாதயா??//

கொஞ்சம் பிஸியா இருந்துட்டேம்பா...அதான் போட்டுட்டோமில்லே!!!
அன்புடன் அருணா

senthil said...

Romba nalla irunthathu. Keep it up. I will join in this network soon. Life inimae bore adikka koodathunu nenakkaraen. :)

Aruna said...

senthil கூறியது...
//Romba nalla irunthathu. Keep it up. I will join in this network soon. Life inimae bore adikka koodathunu nenakkaraen. :)//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்தில்....வலைப் பூவுக்கு வந்துட்டீங்களே...எப்படி போரடிக்கும்??போரடிக்க விட்டுடுவோமோ...???
அன்புடன் அருணா

Ganesh said...

simple improve it

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா