நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Friday, August 22, 2008
எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்?
சுடும் சூரியனாய்த்தான் இரேன்....
மாலையானால் மறையத்தான் வேண்டும்
பின் எங்கேயிருந்து வந்தது
நான் ஒருவனே என்ற திமிர்?
பச்சையாய் மரத்துடன் ஒட்டிக்
கொண்டிருக்கும் இலைக்குத் தெரியாது...
காய்ந்தவுடன் சருகாகி உதிர
வேண்டியதுதான் என்று...
பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
மின்னிச் சிணுங்கும் நட்சத்திரங்களுக்கு
என்ன தெரியும்? விடிந்தால்
காணாமல் போய்விடுவோமென்று?
வெறும் இரவு வாழ்க்கைக்கே இந்தச்
சிமிட்டலா?
எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை....
பின் எங்கேயிருந்து வந்தது
அந்தத் திமிர்?
எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்....
எல்லா மனங்களுக்குள்ளும்
இந்தத் திமிர் சிக்கிக்
கொண்டுதான் இருக்கிறது....
மனதைத் திறந்து வைப்போம்...
திமிரைத் திணறடிக்கும்
அன்பினால் விரட்டுவோம்...
அதிரடி வேக வாழ்க்கையில்
திமிரையும் அன்பையும் ஒன்று சேர
பத்திரப் படுத்துவது..........
சில நேரங்களில் மௌனங்களைச்
சுமக்கும் கண்ணீராய் கஷ்டப் படுத்துகிறது......
மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?//
சரிங்கோ..
:)
திடீரென்று ஏன் இப்படி ஒரு கவிதை??
எதாவது சிறப்பு காரணம்??
நல்லா எழுதி இருக்கீங்க.. கலக்கல்..
M.Saravana Kumar said...
//திடீரென்று ஏன் இப்படி ஒரு கவிதை??
எதாவது சிறப்பு காரணம்??//
//என்றுமே நான் கவிதைகளை இந்த மாதிரி, இந்த தலைப்பு, இந்த மாதிரியான உவமை, உருவகம், அல்லது இது தான் கருத்து OR தீம் என்றெல்லாம் யோசித்து எழுதியதில்லை.. கவிதை அதுவாய் உள்ளிருந்து வரும். நான் எழுதிவைத்து கொள்கிறேன். அவ்வளவு தான்.. அப்படி வந்த கவிதை தான் இதுவும்.//
உங்க பதிலேதாங்க என் பதிலும்.....உங்க பின்னூட்டத்திலேருந்து சுட்டதுதாங்க....
அன்புடன் அருணா
M.Saravana Kumar said...
//நல்லா எழுதி இருக்கீங்க.. கலக்கல்..//
நன்றிங்க...
அன்புடன் அருணா
//உங்க பதிலேதாங்க என் பதிலும்.....உங்க பின்னூட்டத்திலேருந்து சுட்டதுதாங்க....
அன்புடன் அருணா//
ஓஹோ.. ஓகே.. :):)
//அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?//
இதற்காகத்தான் உங்களிடம் இந்த கேள்வியை கேட்டேன்.. எதற்காக என்று??
அருமையான வரிகள்
திகழ்மிளிர் said...
//அருமையான வரிகள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திகழ்மிளிர்.
ரொம்ப நல்லா இருக்கு !
சேவியர் said...
//ரொம்ப நல்லா இருக்கு !//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேவியர்...
அன்புடன் அருணா
அருணா,
மிக அருமையான, ஆழமான கவிதை. "வீழ்ந்தால்தான் நீ மழை" - வாவ், நிறைய யோசிக்க வைத்தது. வாழ்த்துக்கள் அருணா. இது போல மேலும் எழுதுங்களேன்.
பி.கு. : 'அலைபாயுதே' படத்தில் பெண் பார்க்கும் காட்சியில், திடீரென்று சகஜ நிலை மாறி, நிலைமை சூடாகும் தருணத்தில் பெண்ணின் தந்தை கேட்பார் 'உங்களுக்கு எப்போ சார் இந்த திமிர் வந்தது' என்று. மறக்க முடியாத வசனம்/தருணம்.
அனுஜன்யா
அனுஜன்யா said...
//மிக அருமையான, ஆழமான கவிதை. "வீழ்ந்தால்தான் நீ மழை" - வாவ், நிறைய யோசிக்க வைத்தது. வாழ்த்துக்கள் அருணா. இது போல மேலும் எழுதுங்களேன். //
நன்றி!கண்டிப்பா எழுதறேன் !!எழுதறேன்!!
//'அலைபாயுதே' படத்தில் பெண் பார்க்கும் காட்சியில், திடீரென்று சகஜ நிலை மாறி, நிலைமை சூடாகும் தருணத்தில் பெண்ணின் தந்தை கேட்பார் 'உங்களுக்கு எப்போ சார் இந்த திமிர் வந்தது' என்று. மறக்க முடியாத வசனம்/தருணம். //
எனக்குக் கூட ரொம்பப் பிடித்த ஸீன் அது.
அன்புடன் அருணா
எல்லா பறவைகளின்
சிறகுகளுக்குள்ளும் கூரிய நகங்கள்
ஒளிந்து கொண்டு இருப்பது போல்....
நல்ல குறியீட்டுத் தன்மையுள்ள கவித்துவமான வரிகள்
கவிதை வெகு அருமை அருணா.
//எங்கேயிருந்து வந்தது அந்தத் திமிர்?//
சாட்டையடிகளாய் அடித்து விட்டு
// "மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?"//
என முடித்திருப்பதும் அற்புதம்.
உண்மைதான் அன்பு திமிரைத் திணறடித்து விடும்தான்.
எந்த வரிகளை எடுத்துக்காட்ட எனத் திணறடிக்கும் கவிதை. வாழ்த்துக்கள் அருணா!
நன்றி ராமலக்ஷ்மி அவர்களே!.
//எந்த வரிகளை எடுத்துக்காட்ட எனத் திணறடிக்கும் கவிதை. வாழ்த்துக்கள் அருணா!//
முதல் முதலாக வந்து பாராட்டு வார்த்தைகளால் திணறடித்து விட்டீர்கள்!!வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
அன்புடன் அருணா
அச்சச்சோ அக்கா ரொம்ப நல்லாருக்கு..!! :)))
//மண்தரையும் மலர்களும்
சேரக் கூடாதா என்ன?
அதுபோல் திமிரும் அன்பும்
இணைந்திருந்தால்தான் என்ன?//
நல்லாருக்கு
//எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை.... //
கவிதை பஞச்!!! இன்னிக்குதா பாக்கறன்.
Vapurdha பிளாக் மூலம் தங்கள் பதிவுக்கான வளி கிடைத்தது.
அருமையாக எழுதிகிறீர்கள்
வாழ்த்துக்கள்
//பிடிக்கலைன்னாலும் எழுதுங்க....//
அதுக்கில்ல. நிஜமாகவே நல்லாருந்துது.
Sri said...
//அச்சச்சோ அக்கா ரொம்ப நல்லாருக்கு..!! :)))//
அச்சச்சோ.....நன்றி ஸ்ரீ!
அன்புடன் அருணா
hisubash said...
//எல்லோருக்கும் பிடித்த மழையாய்
இருந்தென்ன பலன்...
வீழ்ந்தால்தான் நீ மழை.... //
கவிதை பஞச்!!! இன்னிக்குதா பாக்கறன்.
முதல் வருகைக்கும்,அருமையான பின்னூட்டத்துக்கும்.....
அன்புடன் அருணா
hisubash said...
//பிடிக்கலைன்னாலும் எழுதுங்க....//
//அதுக்கில்ல. நிஜமாகவே நல்லாருந்துது.//
அட அப்பிடியா??
அன்புடன் அருணா
சுடும் சூரியனாய்த்தான் இரேன்....
மாலையானால் மறையத்தான் வேண்டும்
பின் எங்கேயிருந்து வந்தது
நான் ஒருவனே என்ற திமிர்?
////
நல்லாயிருக்கு
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி....பிரபு..
அன்புடன் அருணா
நல்லா எழுதி இருக்கீங்க..
தொடருங்கள்
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா