நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Monday, July 28, 2008
அந்தக் காம்பில்லாத பூக்கள்......
அந்தப் பூக்கடைக்காரர் மிகக் கவனமாகப் பூக்களை அடுக்கி பூங்கொத்து தயாரித்துக் கொண்டிருந்தார்.....
ராஷி அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.அவர் எல்லாக் காம்பு உடைந்த பூக்களையும் தனியே பிரித்து வைத்து விட்டு மற்ற பூக்களை அடுக்கிக் கொண்டேயிருந்தார்.
மெதுவாக அவர் அருகில் சென்ற ராஷி...."அந்தக் காம்பில்லாத பூக்களை ஏன் உபயோகப் படுத்தவில்லை" எனக் கேட்டாள்....
அதற்கு அவர்.."அவைகள் காம்பு இல்லாதவை...ஒன்றிற்கும் பிரயோசனமில்லை...."என்றார்.
"அந்தக் காம்பில்லாத மலர்களை எனக்குத் தருவீங்களா" என்றாள் ராஷி
ஓ இந்தா வைத்துக் கொள்...என்றார் பூக்காரர்
.திடீரென்று நினைவு வந்தவராக "ஆமாம் அந்தப் பூக்களை வைத்து என்ன செய்யப் போகிறாய்?"என்றார் பூக்காரர்.
உடனே ராஷி"அவைகளை இறைவனின் பாதத்தில் வைக்கலாமே?....நான் கூட ஒரு காம்பில்லாத பூதானே????எனக்கும் கால்கள் இல்லை...."
என்றவாறு கட்டைகளை ஊன்றியவாறு செல்வதை நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டேயிருந்தார் பூக்கடைக்காரர்...
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
அந்தக் காம்பில்லாத பூக்களுக்கள்.. குட்டிக்கதையில் எத்தனை கனம் !! அருமையாக உள்ளது.
நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்..
:(
நல்ல ஒரு கருத்து! உலகில் மனது வைத்தால் அனைத்துமே நல்லவைதான், பிரயோஜனமானவைதான் ...:)
:-( சொல்ல வார்த்தைகளே இல்லை அக்கா..!! :'-(
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நர்மதா.....
அன்புடன் அருணா
M.Saravana Kumar said...
//நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்..
:(//
நன்றி சரவணகுமார்.
அன்புடன் அருணா
Mathu said...
//நல்ல ஒரு கருத்து! உலகில் மனது வைத்தால் அனைத்துமே நல்லவைதான், பிரயோஜனமானவைதான் ...:)//
உண்மைதான் மது..
அன்புடன் அருணா
Sri said...
//:-( சொல்ல வார்த்தைகளே இல்லை அக்கா..!! :'-(//
முதல் முதல்ல வந்திருக்கீங்க....நன்றி sri.
anbudan aruNaa
கதை மனதில் ஏற்படுத்திய வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை அருணா......மனதை கணமாக்கியது:(
என் வலைத்தளத்தில் தங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.... சென்று பார்க்கவும்...
(இப்படிதான் என்கிட்டே சொன்னாங்க)
நிஜம்மாவே இன்ப அதிர்ச்சிதான் சரவணன்!!!!tank u...tank u!!!!
அன்புடன் அருணா
உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.. என் வலைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்.
(இப்படித்தான் என்கிட்டே மறுபடியும் சொன்னாங்க)
சிறுகதை ஆனால் மனதில் பெரிய வலி... அருமை அருணா
M.Saravana Kumar said...
//உங்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி.. என் வலைத்தளத்திற்கு வந்து பார்க்கவும்.
(இப்படித்தான் என்கிட்டே மறுபடியும் சொன்னாங்க)//
அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி..????அதுவும் இன்ப அதிர்ச்சியா? வரேன்....வந்து பார்க்கிறேன்....
அன்புடன் அருணா
நன்றி தினேஷ்....
அன்புடன் அருணா
Divya said...
//கதை மனதில் ஏற்படுத்திய வலியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை அருணா......மனதை கணமாக்கியது:(//
அப்பிடியா திவ்யா?வருகைக்கு நன்றி..
அன்புடன் அருணா
சின்ன சின்ன வரிகளில் இத்தனை வலியா...? வாழ்த்துகள்!
மிக மிக அருமையான வரிகள், கருத்துக்களுடன்!
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
வணக்கம் அன்புடன் அருணா,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
உங்களின் பொரும்பளுனர் பதில்ககை பார்த்துடன் எனக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வும் மாற்றம் பொருப்பும் கூடுக்கிறது
நன்றி
வாழ்க தமிழ்
http://valkatamil.blogspot.com/
அருணா,
அருமையான குட்டிக் கதை.
இறைவனுக்கு அருகில் அமர்ந்தன
காம்பில்லாத சில பூக்களும்
காலில்லாத ஒரு பூவையும்
அனுஜன்யா
யக்கோவ் அருமையா எழுதி இருக்கீங்க சின்னதா இருந்தாலும் படித்து முடித்ததும் தாக்கத்தை ஏற்படுத்துது. சூப்பர்....................
நன்றி புனிதா, நவீன்
அன்புடன் அருணா
கோவை விஜய் said... //விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.//
தவிர்த்துட்டோமில்லே விஜய்.....நன்றி!
அன்புடன் அருணா
வாழ்க தமிழ் said...
//வணக்கம் அன்புடன் அருணா,
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
உங்களின் பெரும்பாலான பதில்களைப் பார்த்தவுடன் எனக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வும் மாற்றம் பொறுப்பும் கூடுக்கிறது//
நல்லது..நல்லது...எழுதுங்க..எழுதுங்க...தமிழ்.
அன்புடன் அருணா
அனுஜன்யா said...
அருணா,
//இறைவனுக்கு அருகில் அமர்ந்தன
காம்பில்லாத சில பூக்களும்
காலில்லாத ஒரு பூவையும் //
அட அழகான கவிதை வரிகள்..
அன்புடன் அருணா
ஸ்ரீ said...
//யக்கோவ் அருமையா எழுதி இருக்கீங்க சின்னதா இருந்தாலும் படித்து முடித்ததும் தாக்கத்தை ஏற்படுத்துது. சூப்பர்....................//
வாங்க தம்பி...படிச்சுட்டீங்களா?நன்றி...
அன்புடன் அருணா
விழிஒரம் நீர்கோர்க்க வைக்கும் அந்த இறுதி வரிகள்
Maddy said...
//விழிஒரம் நீர்கோர்க்க வைக்கும் அந்த இறுதி வரிகள்//
வருகைக்கு நன்றி maddy...
அன்புடன் அருணா
Maddy said...
//விழிஒரம் நீர்கோர்க்க வைக்கும் அந்த இறுதி வரிகள்//
வருகைக்கு நன்றி maddy...
அன்புடன் அருணா
அசத்தலான கதை. வாழ்த்துக்கள். சமீபத்தில் நடந்த விட்டல்தாஸ் சுவாமியின் சொற்பொழிவில் இறைவனுக்கு பூக்களை சமர்ப்பிக்கும் போது காம்பில்லாமல் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் இறைவனின் காலில் காம்புகள் உறுத்தும் என்றார். உங்கள் கதை அதை நினைவுபடுத்தியது.
nalla story.. short and memorable..
superunga aruna......
அருணா,
முதன்முறை வருகை இங்கே 'இனியாள்'ன் வலைப்பதிவில்....
நல்ல பதிவு. மனதைக் கனக்கச் செய்தது என்று சொன்னால் மிகையாகாது!
நிதர்சனத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள் வரிகளில்....
'குட்டி'யான கதை ஆனாலும் 'கெட்டி':)
வாழ்த்துக்கள்..
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.
DT said...
//nalla story.. short and memorable..//
tank u! tank U!!
anbudan aruNaa
shri ramesh sadasivam said...
//அசத்தலான கதை. வாழ்த்துக்கள். சமீபத்தில் நடந்த விட்டல்தாஸ் சுவாமியின் சொற்பொழிவில் இறைவனுக்கு பூக்களை சமர்ப்பிக்கும் போது காம்பில்லாமல் சமர்ப்பிக்க வேண்டும் இல்லையென்றால் இறைவனின் காலில் காம்புகள் உறுத்தும் என்றார். உங்கள் கதை அதை நினைவுபடுத்தியது.//
ரொம்ப நன்றி ரமேஷ்....
அன்புடன் அருணா
Iniyal said...
//superunga aruna......//
tank u tank u..Iniyal..
anbudan aruNaa
Raghavan alias Saravanan M said...
//அருணா,
நிதர்சனத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள் வரிகளில்....
'குட்டி'யான கதை ஆனாலும் 'கெட்டி':)//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..சரவணன்..
அன்புடன் அருணா
:(
Strong message!
Tank U Tank U karthik.
anbudan aruNaa
அருணா,
இந்தக் கதை உங்களது சொந்த கற்பனையா அல்லது மொழிபெயர்ப்பா?
அடப் பாவமே.....வராதவங்க வந்திருக்காங்கன்னு பார்த்தா இப்படி ஒரு கேள்வியோடு வந்திருக்கீங்க....
என்னுடையது....என்னுடையதுதாங்க...மண்டபத்துலே யாராவது எழுதிக் கொடுத்தாங்கன்னு பார்த்தீங்களா??
அன்புடன் அருணா
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா