நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, July 23, 2008

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...


இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...

கரடு முரடான மலைகள்....
மென்மையான மணல்துகள்...
உடலை உலுக்கும் சரிவுகள்
மனதை அமைதியாக்கும் சமவெளிகள்.....

சில நேரம் பூக்களை உடுத்தி....
சில நேரம் உதிர்ந்த இலைகளைப் போர்த்தி...
சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....
சில நேரம் பிணங்களைச் சுமந்து...
பல நேரம் மழையைச் சுமந்து.....

சற்றே திரும்பிப் பார்க்கும் இந்த நதி
எதற்காகக் கவலைப் படப் போகிறது?

எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?

உயிர்வலிப் பயணமாக இருந்தாலும்....
நினைவுச் சுவடுகளை கூடவே எடுத்துச் செல்வதை நினைத்தா?

அடித்துப் புரண்டு சேருமிடம்
கடலைப் பார்த்து மிரளப் போகிறதா?

பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பல
சுமக்கும் என் சுயம் எங்கே?என்று தேடித் தேடியா???....

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...
இந்த நதி திரும்பிப் பார்த்து அழுதால் கூட
யாருக்குத் தெரியப் போகிறது?????

16 comments:

MSK / Saravana said...

//சில நேரம் பூக்களை உடுத்தி....
சில நேரம் உதிர்ந்த இலைகளைப் போர்த்தி...
சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....
சில நேரம் பிணங்களைச் சுமந்து...//

இதை படிக்கையில்..
//சில நேரம் பிணங்களைச் சுமந்து..//
இங்கு அதிர்ந்துவிட்டேன்.. உண்மைதான் நதி பிணங்களையும் சுமக்கிறது.

//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//
//எதற்காகக் கவலைப் படப் போகிறது?//
சுவடுகள் பதிக்கமுடியா பயணம் தானே..

இல்லை நதி அழாது..

இங்கு நதிக்கு பதில் மனிதர்கள் இட்டு நிரப்பி கொண்டால், அருமை.. அப்படிதான் எடுத்துக்கொண்டேன்..

மிக்க நன்றி.. என் சில கேள்விகளுக்கான் பதில்கள் கண்டேன்..

Unknown said...

அருணா, வீண்பேச்சுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.

//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும் சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//

அருமையான வரிகள்... ஆனாலும் ஒரு வெற்றுணர்ச்சி தோன்றுகிறதே..

ரசிகன் said...

//பூ,இலை,நிலவு,பிணம்,மழை இன்னும் பல
சுமக்கும் என் சுயம் எங்கே?என்று தேடித் தேடியா???....

இந்த நதி சற்றே திரும்பிப் பார்க்கிறது...
இந்த நதி திரும்பிப் பார்த்து அழுதால் கூட
யாருக்குத் தெரியப் போகிறது????? //

அருணா, கலக்கல்ப்பா.., இப்டில்லாம் கூட கவிதையில ஆழத்தை புகுத்த முடியுமான்னு ஆச்சர்யப் படுத்திட்டிங்க.. அருமை. வாழ்த்துக்கள்:)

Aruna said...

M.Saravana Kumar said...
//இல்லை நதி அழாது..

இங்கு நதிக்கு பதில் மனிதர்கள் இட்டு நிரப்பி கொண்டால், அருமை.. அப்படிதான் எடுத்துக்கொண்டேன்..//

அப்படியேதான் நினைத்து எழுதினேன்....
அன்புடன் அருணா

Aruna said...

Vijay said...


//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும் சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//

//அருமையான வரிகள்... ஆனாலும் ஒரு வெற்றுணர்ச்சி தோன்றுகிறதே..//

ரொம்ப சரி...சில நேரங்களில் இம்மாதிரியான உணர்ச்சிகள் தவிர்க்க முடியாதவை..
அன்புடன் அருணா

Aruna said...

ரசிகன் said...

//அருணா, கலக்கல்ப்பா.., இப்டில்லாம் கூட கவிதையில ஆழத்தை புகுத்த முடியுமான்னு ஆச்சர்யப் படுத்திட்டிங்க.. அருமை. வாழ்த்துக்கள்:)//

அப்பிடியா? நன்றி..நன்றி....
அன்புடன் அருணா

வினையூக்கி said...

பல நதிகள் சிற்றோடைகளாக தங்களது பயணத்தை முடித்துக்கொள்கையில் சிலநதிகள் மட்டுமே கடலை அடைகின்றன.அருமை

Aruna said...

வினையூக்கி said...
//
பல நதிகள் சிற்றோடைகளாக தங்களது பயணத்தை முடித்துக்கொள்கையில் சிலநதிகள் மட்டுமே கடலை அடைகின்றன.அருமை//

உண்மை..
அன்ம்புடன் அருணா

sukan said...

அழகானதும் ஆழமானதுமான கவிதை. வாசிக்க கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி

தினேஷ் said...

அழுத்தமான வரிகள்...

Aruna said...

நர்மதா, தினேஷ்...நன்றி வருகைக்கும், வாழ்த்துக்கும்...
அன்புடன் அருணா

BALA.GANESAN said...

//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//..(

அருமையான வரிகள்....

வாழ்த்துக்கள்

Aruna said...

வாழ்க தமிழ் said...
//எங்கெங்கோ ஓடிக் களைப்படைந்தாலும்
சுவடு பதிக்கவே முடியாத பயணத்தை நினைத்தா?//..(

//அருமையான வரிகள்....
வாழ்த்துக்கள்//

நன்றி தமிழ்...
அன்புடன் அருணா

ச.முத்துவேல் said...

சில நேரம் இரவு நிலவைச் சுமந்து....
சில நேரம் பிணங்களைச் சுமந்து...
கலவையான அனுபவம் கொண்டது இயற்கை.
அருமையான கவிதை போங்கள்!

Tech Shankar said...

The picture is so nice

Aruna said...

தமிழ்நெஞ்சம் கூறியது...
//The picture is so nice//

அச்சச்சோ படம் மட்டும்தான் நல்லாருந்ததா??? அடப் போங்கப்பா!!!
அன்புடன் அருணா

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா