நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Tuesday, April 29, 2008
என் வேர்கள் என்னை அழைக்கின்றன
திடீரென ஒரு நாள்
என்னைப் பிரித்தெடுத்து
எங்கோ ஒரு ஈரமண்ணில்
என்னைப் புதைத்து
இலையாய் மலராய்
உயிராய் உணர்வாய்
பூத்துக் குலுங்க வைத்து
புன்னகை பூக்க வைத்து
வெயில் மழையில் நனைய வைத்து
இரவு நட்சத்திரங்களுடன் பேச வைத்து
என்னைப் பற்றி மறக்க வைத்து
பறவை பல கூட வைத்து
அன்பு நிழல் குடை விரித்து
சட்டென்று திரும்பிப் பார்க்க
அட வாழ்வுப் பாதையில் எங்கோ
ஒரு மைல் கல் முன் நான்.....
திடீரென்று கண்ணீர் துளிர்க்க
என் வேர்களை நினைத்துக் கொள்கிறேன்
அம்மா........
ஆமாம் என் வேர்கள் என்னை அழைக்கின்றன...
அம்மா உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.....
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகு, வியக்க வைக்கிறது.
உண்மையில் நானும் இதே நிலையில்தான் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறேன்.
என் வயதான தாயின் உருவம் என் கண் முன்னால் இப்போதும் நிழலாடுகிறது.
நமது கடன் இந்தப் பிறவியில் தீருமா?
சட்டென்று திரும்பிப் பார்க்க
அட வாழ்வுப் பாதையில் எங்கோ
ஒரு மைல் கல் முன் நான்.....
திடீரென்று கண்ணீர் துளிர்க்க///
ஹ்ம்ம்.. ரொம்பவே உணர்ச்சிகரமான கவிதை. இன்னும் வேர்களை காண முடியாத தூரத்திற்கு நான் வளரவில்லை ;)
நல்லாயிருக்கு அருணா
நிறைய எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
நல்லாயிருக்கு அருணா
நிறைய எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com
நெகிழ்ச்சியான கவிதை...
\\என் வேர்களை நினைத்துக் கொள்கிறேன்
அம்மா........
ஆமாம் என் வேர்கள் என்னை அழைக்கின்றன...
அம்மா உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.....\\
சேம் பிளட்..;(
Anthony Muthu said...
//நமது கடன் இந்தப் பிறவியில் தீருமா?//
Aruna said....
அந்தக் கடன் தீர்ப்பதற்குத் தானே இந்த ஓட்டம் அந்தோணி!
surya said...
//நல்லாயிருக்கு அருணா
நிறைய எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்..//
Aruna said....
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சூர்யா!
கோபிநாத் said...
//நெகிழ்ச்சியான கவிதை...//
Aruna said....
பின்னூட்டத்திற்கு நன்றி கோபிநாத்!
அன்புடன் அருணா
//திடீரென ஒரு நாள்
என்னைப் பிரித்தெடுத்து
எங்கோ ஒரு ஈரமண்ணில்
என்னைப் புதைத்து
இலையாய் மலராய்
உயிராய் உணர்வாய்
பூத்துக் குலுங்க வைத்து
புன்னகை பூக்க வைத்து//
திருமணத்தின் போது ,பிறந்தகம் பிரியும் ஒவ்வொரு பெண்ணின் மனநிலையும். கலக்கலா வந்திருக்குப்பா...:)
//என் வேர்களை நினைத்துக் கொள்கிறேன்
அம்மா........
ஆமாம் என் வேர்கள் என்னை அழைக்கின்றன...
அம்மா உன்னைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.....//
பெண்கள் கணவனுக்காக ,அட்லிஸ்ட் மனத்திருப்தியாவது இருக்கும்:)
நாங்கெல்லாம் பொருளாதாரத்திற்க்காக நாடு விட்டு நாடு வந்து... எனக்கும் வீட்டு ஞாபகம் வருது.:)
//திருமணத்தின் போது ,பிறந்தகம் பிரியும் ஒவ்வொரு பெண்ணின் மனநிலையும். கலக்கலா வந்திருக்குப்பா...:)//
அடடா பசங்களுக்கு இதெல்லாம் கூடப் புரியுமா???
நன்றி ரசிகன்.
பெண்கள் கணவனுக்காக ,அட்லிஸ்ட் மனத்திருப்தியாவது இருக்கும்:)
நாங்கெல்லாம் பொருளாதாரத்திற்க்காக நாடு விட்டு நாடு வந்து... எனக்கும் வீட்டு ஞாபகம் வருது.:)
என்ன செய்வது?? கூட இருக்கும் போது எப்போ எப்போ என்று வெளிநாட்டு வேலைக்காகப் பறப்பது....பிரிந்து இருக்கும் போது தானே வீட்டு அருமை புரிகிறது??
அன்புடன் அருணா
என்னக்கா இப்படி ஒரு பீலிங் கவிதை சொல்லிட்டீங்க. நல்லா இருக்கு :)
மிக நெகிழ்ச்சியான கவிதையிது அருணா.
மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தாயின் அருமை பிரிவின் பின்னரே புரிகிறது.
நாடு தாண்டிக் கடல் தாண்டி வந்த பிறகு எங்கோ தொலைவில் ஒலிக்கும் அம்மாவின் குரல் மட்டும் இரவு தோறும் கேட்கின்றது.
அம்மாவைப் பார்த்து ஒரு வருஷம் ஆச்சு Shree....feelings இருக்காதா??
அன்புடன் அருணா
எம்.ரிஷான் ஷெரீப் said...
// எங்கோ தொலைவில் ஒலிக்கும் அம்மாவின் குரல் மட்டும் இரவு தோறும் கேட்கின்றது.//
எனக்கும் அப்பிடியே எம்.ரிஷான் ....
அன்புடன் அருணா
தாய்மையின் தனித்துவத்தை அழகாக வார்த்தைகளில் வார்த்திருக்கிறீர்கள்.
உண்மையில் ரசிக்கிறேன்...
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா