நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-
அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதும் கவலையறச் செய்து -
மதி தன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.
Wednesday, April 9, 2008
மீண்டும் ஒரு மழைநாளில்.....
இது கதையுமில்லாமல், நிகழ்வுமில்லாமல், மொக்கையுமில்லமல் ஒரு பதிவு ...ஆனாலும் எனக்குப் பிடித்த ஒரு பதிவு.......
அன்று அதிகாலயில் ஆரம்பித்த மழை காலைக் கோலத்தைப் புள்ளியாக புள்ளியாக அழித்தது.....சட்டென்று இமைகளின் மேல் ஒரு மழைத் துளி
கன்னங்களின் மேலொரு மழைத் துளி
குட்டி நகங்களின் மேலொரு மழைத் துளி
இப்படித்தான் ஆரம்பிக்கும் ஆரவாரமில்லாமல்.
ஆனாலும் அடித்துக் கொண்டு ஓடிவிடும் மனதை.......
மழையில் நனையும் மலரழகு...மலரை நனைக்கும் மழையும் அழகு.....9 மணிக்கெல்லாம் தெருவெங்கும் குடை மலர்கள்...நிறைய கறுப்பு மலர்கள்...குடையைக் கண்டு பிடித்தவனை மனதுக்குள் கண்டித்தேன்.மெல்ல வெழியே வந்து ...வானத்தை விரும்பிப் பார்த்தேன்.
"குடை எடுத்துப் போடா" என்ற அம்மாவை கோபமாகப் பார்த்து விட்டுத் தெருவில் நடந்தேன்....
பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் இடம் கிடைத்தவுடன் ஆனந்தமாக அமர்ந்தேன்....சில்லென்று சீறிய துளிகளை கண்ணை மூடி ரசிப்பதற்குள் "ஜன்னலை மூடுங்க தண்ணீர் தெறிக்குதுல்லே" என்று ஒரே காட்டுக் கத்தல்..."அட ரசனை கெட்ட ஜென்மங்களா" என்றவாறு மூடினேன்...
வேலையே ஓடவில்லை....ஜன்னல் வழியே மழையில் நனையும் குருவி,மழையில் நனையும் வெயில்,நனைய மறுத்து ஓடும் மனிதர்கள் என்று மனம் பறந்து கொண்டே இருந்தது...மழையில் விரும்பி நனையும் அனைவரும் மனதில் நச்சென்று ஒட்டிக் கொண்டார்கள்.
சாயங்கால வேளை மழை சந்தோஷப் படுத்த, உடனே கடற்கரைக்கு ஓடினேன்.மழையும் கடலும் ஓவென்று இரைச்சலுடன் என்னை வரவேற்றது.......மழையும் கடலும் என்ன பேசியிருக்கும்? கடலில் பாதம் நனைய...உடம்பு முழுவதும் மழையில் நனைய மனம் ஆனந்தக் கும்மியடித்தது...
இன்னும் மழை விடவில்லை.இருட்டு மழை இரகசியமாக மனதைச் சிலிர்க்கச் செய்தது.மொட்டை மாடிக்குப் போய் மேலே நிமிர்ந்து பார்த்தால் நட்சத்திரங்களுடன் மழை...இதயம் சந்தோஷத்தில் நிரம்பி வழிந்தது.
கரண்ட் கட் ஆகி விட்டது..அம்மா மேலே வந்தாங்க ....கவனமாக நனைந்து விடாமல் எட்டிப் பார்த்து "என்னடா பண்றே மழையிலே? உள்ளே வாடா..." என்றார்கள்.இப்பிடித்தான் மழையில் நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அருணா,ரொம்ப நினைந்து விட்டீங்களா மழையில்!
பதிவு படிக்கும் போது மழை சாரலில் நினைந்தது போன்ற ஒரு உணர்வு!
ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க அருணா!
\நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .\
இதை மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......கவிதை!!!
இந்த தொல்லை எதும் இல்லாமல்
நான் தினமும் நனைகிறேன் சாரலில்
ஷவரில்.
:) நல்லா இருக்கு
mmm azhagaana pathivu... kavithuvama.. kadhaiya.. alaga irundhuchu...
\\Dreamzz said...
mmm azhagaana pathivu... kavithuvama.. kadhaiya.. alaga irundhuchu...
\\
ரீப்பிட்டே ;))
கலக்குறிங்க ;)
//நின்னைச் சில வரங்கள் கேட்பேன்... அவை நேரே இன்றெனக்குத் தருவாய்... என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்... இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும். இனி என்னைப் புதிய உயிராக்கி... எனக்கேதும் கவலையறச் செய்து... என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!
//
ithuvum arumai! pathivum arumai! naanum puthusa kadai thirandhu irukken arunga. paarunga!
மழை ரசனை அருமையா இருக்கு அருணா. ஆனா நம்மோட ரசனை மத்த யாருக்கும் கஷ்டத்தை தரப்டாதில்லையா?
//"ஜன்னலை மூடுங்க தண்ணீர் தெறிக்குதுல்லே" என்று ஒரே காட்டுக் கத்தல்..."//
அவங்க கஷ்டம் அவங்களுக்கு..:P
//..அம்மா மேலே வந்தாள்....கவனமாக நனைந்து விடாமல் எட்டிப் பார்த்து "என்னடா பண்றே மழையிலே? உள்ளே வாடா..." என்றாள்.//
பின்ன உங்களுக்கு ஜல்பு வந்தா,கஷ்டப் படப்போறது அம்மா தானே.(ஆமா உங்க ஊர்ல அம்மாவ அவள் இவள் என்ற ஏக வசனத்துல தான் பேசுவிங்களோ?:P)
ஹிஹி. நான் உஷாரா தலையில தொப்பி போட்டுக்கிட்டு நனைஞ்சவனாக்கும்:))))))
ஆஹா.. எங்கக்காவுக்குள்ள இப்படி ஒரு குட்டிபாப்பாவா?... பொதுவாகவே ஆண்களைவிட பெண்களுக்கு மழை மீது மோகம் அதிகம். அது ஏன்?..
ரசனையான பதிவு..
Divya said...
\நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .\
Aruna said...
இதை மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......கவிதை!!!
அட ஆமா dhivya!!!!
மங்களூர் சிவா said...
இந்த தொல்லை எதும் இல்லாமல்
நான் தினமும் நனைகிறேன் சாரலில்
ஷவரில்.
Aruna said...
அட இப்பிடி ஒரு மழையனுபவமா?
Dreamzz ,கோபிநாத் ,said...
mmm azhagaana pathivu... kavithuvama.. kadhaiya.. alaga irundhuchu...
Aruna said...
tank u tank u dreamzz and gopinath
சத்யா said...
//நின்னைச் சில வரங்கள் கேட்பேன்... அவை நேரே இன்றெனக்குத் தருவாய்... என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்... இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும். இனி என்னைப் புதிய உயிராக்கி... எனக்கேதும் கவலையறச் செய்து... என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்...!
//
ithuvum arumai! pathivum arumai! naanum puthusa kadai thirandhu irukken arunga. paarunga!
Aruna said...
நன்றி... sathya....
வந்துட்டோம்லே!!!!
ரசிகன் said...
பின்ன உங்களுக்கு ஜல்பு வந்தா,கஷ்டப் படப்போறது அம்மா தானே.(ஆமா உங்க ஊர்ல அம்மாவ அவள் இவள் என்ற ஏக வசனத்துல தான் பேசுவிங்களோ?:P)
Aruna said...
மன்னிக்கவும்....மாற்றி விடுகிறேன்.....தப்பு...தப்பு...
ரசிகன் said...
ஹிஹி. நான் உஷாரா தலையில தொப்பி போட்டுக்கிட்டு நனைஞ்சவனாக்கும்:))))))
Aruna said...
அப்பாடா என்ன ஒரு ரசனையான நனைதல்.....நிஜம்மாகவே ரசிகன் தான்!!!!!
அன்புடன் அருணா
:) மழையில் நனைதல்! புன்னகைக்க வைத்தது...
இரவு மழை! அட இது இன்னும் அழகா இருக்கே :)
Divya said...
//\நனையத் தெரியாதவர்களைப் பற்றியும், வாழத் தெரியாதவர்களைப் பற்றியும் கவலைப் படாமல்....நனையவும் ,வாழவும் தெரிந்தவர்கள் மேல் இஷ்டப் பட்டுப் பெய்து கொண்டே இருந்தது மழை!! .\
இதை மடக்கி மடக்கி நாலு வரியா எழுதியிருந்தா......கவிதை!!!
//
திவ்யாக்கா சொன்னா சரியா இருக்கும், கொஞ்சம் மடக்கி மடக்கி எழுதிபாருங்க :)
ada super
mazhai pathi padichadhey nananja madhiri erukku.
Engey singaporela mazhai nalla erukku, mostly drizzling dhaan, endha veyullukku nenaja supera erukkum, engey adikkadi varum , ana namma kodai use panradhe ellai :)
Srivats said...
ada super
mazhai pathi padichadhey nananja madhiri erukku.
Engey singaporela mazhai nalla erukku, mostly drizzling dhaan, endha veyullukku nenaja supera erukkum, engey adikkadi varum , ana namma kodai use panradhe ellai :)
நன்றி Srivats....கொடுத்து வைத்தவர்கள்....சிங்கப்பூர் சாரலில் நனைவதற்கு..அதுவும் குடையில்லாமல்....
இங்கே ராஜஸ்தானில் அப்பிடி மழைக்காக ஏங்கி கொண்டிருக்கிறோமாக்கும்!!!
அன்புடன் அருணா
sathish said...
:) மழையில் நனைதல்! புன்னகைக்க வைத்தது...
இரவு மழை! அட இது இன்னும் அழகா இருக்கே :)
நன்றி சதீஷ்....
அன்புடன் அருணா
:)))) arumai.... appadiye konja neram kanna moodi nanaiya mudinjathu unga kavikathai pathivaala :)))
சின்னக்குட்டியரின் மழையிலிருந்து இங்கே வந்தேன். அது ஈழ மழை, இது இந்திய மழை. எல்லைகள் வேறாயினும் மழையும் அனுபவமும் ஒன்றே. அருமையாக எழுதியிருக்கிறீங்கள். மனுஷ்யபுத்திரனின் 'மழை' யும் ஞாபகம் வந்தது.
http://desikann.blogspot.com/2004_06_19_desikann_archive.html
வாழ்த்துக்கள் அருணா.
மிக அருமை :)
ஜி said...
:)))) arumai.... appadiye konja neram kanna moodi nanaiya mudinjathu unga kavikathai pathivaala :)))//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி !
அன்புடன் அருணா
எல்லைகள் வேறாயினும் மழையும் அனுபவமும் ஒன்றே. அருமையாக எழுதியிருக்கிறீங்கள். மனுஷ்யபுத்திரனின் 'மழை' யும் ஞாபகம் வந்தது.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ! அடடா அப்பிடியா?மிக்க நன்றி
அன்புடன் அருணா
சேவியர் said...
மிக அருமை :)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சேவியர்!
அன்புடன் அருணா
வணக்கம் அருணா...
தங்கள் பதிவைப் படித்தேன். பிடித்திருந்தது.
எமது பதிவை படித்து, கருத்தையும் பதிந்தமைக்கு நன்றி.
அதில் மழை என்பதையும் நனைதல் என்பதையும் நேரடி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. மழை என்பதை வாழ்வின் இனிமை என்றும், நனைதல் என்பதை சந்தோஷத்தை அனுபவிக்கும் மனது என்றும் உருவகப்படுத்த முயன்று இருக்கிறேன்.
மழை யாருக்காகவும் பெய்வதில்லை. அதில் நனைய முடிவதில்லை என்று கூறுவது எல்லாம் வெறும் சாக்கு போக்குகள் தானே? நாம் நனைவதை யார் தான் தடுக்க முடியும்? அதைப்போலத் தான், வாழ்வில் இனிமைகள் கொட்டிக் கொண்டே இருக்கிறது. அவற்றை அனுபவிக்காது போனால், இழப்பு யாருக்கு...?
எமது மற்ற பதிவுகளையும் கண்டு, அவற்றின் பிழை உரைக்க வேண்டும்.
நன்றி.
அன்பன்,
ராஜ ராஜ ராஜன்,
சென்னை.
Anbu thozhi Aruna,
Arumaiyana pathivu.... mazhaiyil natchathiram.... nan ithuvarai paarkathathu. Adukku maadi kudi iruppugalukku naduvil innum eththanai thani veedugal vaasalil kolathodu irunthu vidukindrana, atha nanaikatha mazhai enna mazhai.
Oru thamirabarani karaiyil mazhaiyil nanaithapadi kidakkirathu oru nenjam, athaiyum anaiththu kollungal ungal thozhaimai karangalal.
Aangilathai payanpaduththamal pathividungalen..... amilthinum iniyathu tamil.
"kadaisiyil ammavin anbil nanainthathai ezhutha maranthuteengalae" aruna
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா