நமக்கு எப்போதுமே ஒற்றைப் பெட்டிதானுங்க...அது ஜெய்ப்பூரிலிருந்து சென்னையானாலும் சரி,சென்னையிலிருந்து கனடாவானாலும் ச்ரி.அதையும் ஸ்டையிலாகப் பிடித்துக் கொண்டு அந்த ஜெய்ப்பூர் டு சென்னை ரயிலில் ஏறி உட்கார்ந்ததுமே இரண்டு பேர் கொண்ட அந்தக் குடும்பம் 24 பெட்டியை வைத்துக் கொண்டு வேர்த்து விறு விறுத்த அந்தக் குடும்பத்துத் தலையும் மற்றும் அங்கிருந்த பெரியோரெல்லாம் என்னை விசித்திரமாகப் பார்த்ததில் எனக்குக் கொஞ்சம் பெருமையாகவே இருந்தது
அப்போதான் அவர்கள் வந்தார்கள்..ஒரு அழகான Made for each other ஜோடி.புது வாழ்வின் மினு மினுப்பு முகத்திலும்,சந்தோஷப் பூக்களின் மின்னல் கண்களிலும் தெரிந்தது.தேனிலவுப் பயணம் போல..இரண்டே இரண்டு பெட்டி..அந்தப் புதுப் பொண்ணைப் போலவே அந்தப் புதுப் பையனும் வெட்கப் பட்டான்.எனக்கு எதிரில் உள்ள சீட்டில் வந்து உட்கார்ந்தார்கள்.
செயின் போட்டுரலாமா என்று அவன் பொதுவாகச் சொல்லிவிட்டு ஒரு பெட்டியைத் திறக்க முயன்றான்.திறக்கவில்லை.அப்படியும் இப்படியுமாக திருகித் திருகிப் பார்த்தான்.ஒன்றும் நடக்கவில்லை.திருகித் திருகிக் கை சிவந்ததுதான் மிச்சம்.உதட்டைப் பிதுக்கிக் கொண்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்தான்.அவளும் அவளால் இயன்றவரை திருகித் திருகிப் பார்த்துவிட்டு... ப்ச்..ப்ச். என்றாள்.
"டிக்கெட்,மேற்கொண்டு பணம் எல்லாம் அதில்தான் இருக்கு" என்றான் மெதுவாக.
"இப்போ என்ன பண்றது?"என்றாள் அவள்.
நாம கொஞ்சம் இளகின மனசுங்க...ரொம்பப் பாவமாக இருந்தது."இப்பிடிக் கொடுங்க என்று உரிமையோடு பெட்டியை வாங்கிக் கொண்டேன்.சும்மா "கணேஷ் வசந்த்" ரேஞ்சுக்கு ஆராய்ந்தேன்.அப்படியும் இப்படியும் திருகிவிட்டு உதட்டைப் பிதுக்கினேன்.
அதற்குள் அங்கிருந்தோர் அத்தனை பேர் பார்வையும் என் மேல்..மனசுக்குள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டேன்.இன்னமும் கொஞ்சம் சாகசம் செய்ய எண்ணி என் சாவிக் கொத்தையும் எடுத்து திருகித் திருகி அடிக்கடி அனைவரையும் பார்த்து ஒரு பெருமைப் புன்னகையும் செய்து கொண்டே என் வேலையில் கவனமாயிருந்தேன்..
இதை.... இதை...இதைத்தானே எதிர்பார்த்தேன் என்று மனது கூ...கூ..என்று கூக்குரலிட்டது. அட....க்ளிக் என பெட்டி திறந்து கொண்டது.ஒரு வீரப் புன்னகையுடன் ஏதோ அவார்ட் வாங்குபவனைப் போல ரொம்பப் பெருமையுடன் பளிச்சென்ற சிரிப்புடன் பெட்டியைத் திருப்பிக் கொடுத்தேன்.
என் பக்கத்தில் இருந்தவன் ஒருவிதக் கடுப்புடனேயே இருந்தான்.திரு திருவென்று அங்கும் இங்கும் பார்த்தான்.விருட்டென்று எழுந்து போனான்."வயிற்றெரிச்சல் பிடிச்ச பாவிங்க" என்று மனதுக்குள் கறுவினேன்.....
அட அவன் டி.டி.ஈ உடன் வந்தான்.அவர் என்னருகில் வந்து ......
"உங்க டிக்கெட்டைக் காட்டுங்க.."என்றார்.நான் ஒன்றும் புரியாமல் டிக்கேட்டை எடுத்துக் காட்டினேன்.
"எங்க வேலை பார்க்கிறீங்க?"
"ஐ.டி கார்ட் இருக்கா?"
"ஐ.டி.கார்ட் காட்டுங்க"
"எங்க போறீங்க?"
"என்ன விஷயமாகப் போறீங்க?"
"வேலை பார்க்கிற இடத்து அட்ரெஸ் சொல்லுங்க..
"போற இடத்துலே எங்க தங்குவீங்க?"
"அந்த அட்ரெஸ் கொடுங்க..."
"எந்தச் சாவி கொத்தால திறந்தீங்க..அதைக் காட்டுங்க..."
என்று சகட்டுமேனிக்கு கேட்ட கேள்வில நான் வேர்த்து விறு விறுக்க "அடப் பாவிகளா ....ஒரு பாவி வாய் திறக்கட்டுமே உதவிக்கு?அட அந்தப் பெட்டி கோஷ்டியாவது உதவிக்கு வரும்னு பார்த்தால்"அடச் சே!" நான் நொந்து நூடுல்ஸ் ஆகி மெல்ல எல்லோரையும் "பெட்டியைத் திறந்து கொடுத்தது தப்பாடா" என்று வடிவேல் ரேஞ்சுக்குப் பரிதாபமாக பார்க்கையில் அத்தனை பேர் கண்களிலும் "அட! ஒரு நிமிஷத்தில திருடனாயிட்டோமில்லே!!!
18 comments:
ROFL! hahaha
nalla thaan thirudareenga!
sari second business ready!
kai thozhil onrai katrukol..kavalai unarkillai...othukol!
அட கொடுமையே...!
haa haa
paavum akka neenga
natpodu
nivisha
நல்ல அனுபவம் தான் :)
அது சரி ஆனா அடுத்தவங்க பெட்டிய உங்க சாவி எப்டி திறந்தது!! dreamzz சொன்னது போல் கைதொழில் ஒன்னு கத்து வச்சிருக்கீங்க :))
நல்லதுக்குக் காலமில்லை..
ஹா ஹா ஹா ஒரே தமாசு. ஆனா தலைப்பு "ஒரு நிமிஷத்திலே திருடியாயிட்டோமில்லே" னு இருக்கணுமே ;)
ஹிஹி.. அருணா ..,அந்த கலையை எனக்கும் கத்துக்குடுங்களேன்... ஹிஹி..
அட, எல்லாரும் ஏன் இப்டி பாக்கறிங்க?...எல்லாத்தையும் கத்துக்கிட்டு மறக்கனும்ன்னு சொல்லியிருக்காங்கல..
நம்புங்க மக்கல்ஸ்.......
//ஸ்ரீ said...
ஹா ஹா ஹா ஒரே தமாசு. ஆனா தலைப்பு "ஒரு நிமிஷத்திலே திருடியாயிட்டோமில்லே" னு இருக்கணுமே ;)//
அதானே?... ஏன் இப்டி...?
இதைத் தான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிவது என்பதோ?
Dreamzz said...
ROFL! hahaha
nalla thaan thirudareenga!
sari second business ready!
கோபிநாத் said...
அட கொடுமையே...!
aruna said
கொடுமைதான் போங்க!
சதிஷ் said
நல்ல அனுபவம் தான் :)
அருணா சொன்னது...
நிஜம்தான்!
//அது சரி ஆனா அடுத்தவங்க பெட்டிய உங்க சாவி எப்டி திறந்தது!!
அருணா சொன்னது...//
அதானே...எப்பிடித் திறந்தது??
நிவிஷா..... said..
haa haa
paavum akka neenga
ஆமா நான் ரொம்ப பாவம்தான் நிவிஷா!
பாச மலர் said...
நல்லதுக்குக் காலமில்லை..
அருணா சொன்னது...
எப்பவுமே நல்லதுக்கு காலமில்லைங்க...
ரசிகன் said...
//ஸ்ரீ said...
ஹா ஹா ஹா ஒரே தமாசு. ஆனா தலைப்பு "ஒரு நிமிஷத்திலே திருடியாயிட்டோமில்லே" னு இருக்கணுமே ;)//
அதானே?... ஏன் இப்டி...?
அருணா சொன்னது...
திருடனைப் பற்றித்தானே அதிகமா கேள்விப் பட்டிருக்கிறோம்..அதான் !!!
hahahaha!!!
நான் சாக விரும்புகிறேன் , ஏனெனில் சைட்...
இதைத் தான் பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிவது என்பதோ?
அருணா சொன்னது...
அதேதாங்க!!!
என்னங்க ஜீவா அடிக்கடி எழுதுறீங்க அப்புறம் delete பண்றீங்க!!
என்ன கோபம் என் மேல?
அன்புடன் அருணா
Dreamzz said...
ROFL! hahaha
nalla thaan thirudareenga!
sari second business ready!
aruna said..
I'm thinking over it!!!!
anbudan aruna
The way to someone heart , to connect to someone is through humour and you did it in very natural way!
Had a good time reading ur story
வணக்கம் அக்கா.
பேரு கொஞ்சம் நம்ப பேரு மாதிரி
இருக்கே அப்படீன்னு வந்தா நம்ப
தொழிலைத்தான் நீங்க பண்ணிக்கி
ட்டிருக்கியளா? வாழ்க களவுத்தொழில்.
கனடாவிலும் அதயெ செஞ்சு பொளச்சுக்கோங்கோ.
அருண்யா
srivats கூறியது...
//The way to someone heart , to connect to someone is through humour and you did it in very natural way!
Had a good time reading ur story//
Tank u Srivats...
anbudan aruna
பெயரில்லா கூறியது...
//வணக்கம் அக்கா.
பேரு கொஞ்சம் நம்ப பேரு மாதிரி
இருக்கே அப்படீன்னு வந்தா நம்ப
தொழிலைத்தான் நீங்க பண்ணிக்கி
ட்டிருக்கியளா? வாழ்க களவுத்தொழில்.
கனடாவிலும் அதயெ செஞ்சு பொளச்சுக்கோங்கோ.//
பேரு உங்க பேரு மாதிரிதான்.....ஆனால் நான் கனடாவுலே இருக்கிறதா யார் சொன்னாங்கப்பா???
அன்புடன் அருணா
நல்லதற்குக் காலமில்லை
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா