நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, February 12, 2008

ஒரே நாளில் கதாநாயகியாயிட்டோமில்லே!!!

அருட்பெருங்கோவின் கால்குலேட்டரின் ரணகளம் படித்த பின் வந்த மலரும் நினைவுகள் இந்தப் பதிவு ...சம்பத்தப் பட்டவர்கள் படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் பெயர் மாற்றம் செய்து போட்டிருக்கேனுங்கோ! அப்பிடியே படிச்சு ப்ழைய கால நினைவுகள் வந்தாலும் நான் செஞ்ச தப்பை மறந்து மன்னிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..என்னா பில்ட் அப் நல்லாருக்கா?

பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.அது ஒரு கோ-எட் பள்ளிக் கூடம்.ஆனாலும் பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் கொஞ்சம்.36 பசங்க அனால் 11 பேரே பெண்கள்..அப்பப்பா பண்ற அலப்பறை இருக்கே!!

அதுல ஒரு பொண்ணு ஒரு டீச்சரோட பொண்ணு.என்ன ஆட்டம் போட்டாலும் அதோட பிட் அந்த டீச்சருக்குப் போயிரும்...அவ்வ்ளோ தான் அடுத்த நாள் வந்து காவடி எடுத்து ஆடிடும்..

விளையாட்டு மைதானத்தின் பின்னால ஒரு சின்ன வாசல் ..அது பெண்களின் அந்தப் புற திட்டி வாசல்.அதில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி..அதன் பக்கத்தில் ஒரு சின்னூண்டு சுவர்.அதுதான் பையன்களோட காதல் நோட்டீஸ் போர்ட்.தினம் ஒரு பொண்ணொட பெயர் யாராவது ஒரு பையனோட "I love you" மெசேஜோட அதில எந்த லூஸோ எழுதி வைச்சுட்டு அது பாட்டுக்கு போயிடும்.இங்க காலையில இருந்து ஒவ்வொருத்தரா வந்து கிழித்து பந்தல் போட்டு விடுவார்கள்.ஒரு தப்புமே செய்யாத அந்தப் பொண்ண எல்லோரும் ஒரு தினுசா திரும்பித் திரும்பிப் பார்த்துட்டு போவார்கள்.

அந்த டீச்சர் அம்மா கொஞ்சம் ஜாஸ்தி..."பொண்ணுங்க ஒழுங்கா இருந்தா யாரும் இப்பிடி எல்லாம் எழுத மாட்டாங்க..என் பொண்ணுக்கு எவனாவது எழுதுறானா? ஏன்னா என் பொண்ணை நான் வளர்த்த விதம் அப்பிடி இப்பிடின்னு ஆரம்பிச்சா இன்னிக்கி எல்லாம் ஒரு மெகா சீரியலா போடுற அளவுக்கு மேட்டர் வெளிய வந்து கொட்டும்.

இதை இப்பிடியே விடக் கூடாது...பொண்ணுங்க மனசோட சிந்திச்சா இதுக்கு வழி கிடைக்காதுன்னு ஒரு வில்லத்தனமா சிந்திக்கணும்னு ஒரு மாநாடு போட்டு கடைசியா குட்டியூண்டா இருந்த என்னைத் தேர்ந்தெடுத்து அந்த் வேலையை ஒப்படைத்தார்கள்...அது வேறொன்றுமில்லை...அந்த டீச்சர் பொண்ணோட பெயரை ஒரு பையனோட சேர்த்து அந்தக் காதல் நோட்டீஸ் போர்ட்லெ எழுதிப் போடற வேலைதாங்க அது.....கொஞ்சம் உதறல்தான் இருந்தாலும் அவ்வளோ பேர் இருக்கும் போது என்னைத் தேர்ந்தெடுத்ததனால நம்ம ஸ்டார் அந்தஸ்தைக் காப்பாற்ற வேண்டி ரொம்பத் தைரியமா இருக்கிற மாதிரி இளித்துக் கொண்டே சரி என்றேன்.

ஒவ்வொரு அடிக்கு ஒருத்தியாக நின்று எனக்கு சிக்னல் கொடுப்பதற்குத் தயாராக நின்று கொண்டார்கள்.எனக்கு வேர்த்து விறு விறுத்தது..கையில் பிடித்திருந்த சாக் பீஸ் ஈரமாகியது..கை நடுங்க 100 வயது கிழம் எழுதியது போல கிறுக்கி விட்டு ஓடியே வந்து விட்டேன்.

பெரிய சாதனை செய்தது போல ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் என்ன ஆகுமோ என்ற பயமும் இருந்தது.இரவெல்லாம் ஒரே கனவு..அந்த டீச்சர் என் கையெழுத்தையும் அந்த போர்ட்லெ உள்ள கையெழுத்தையும் ஒன்று என்று கண்டு பிடித்து விட்டதாகவும்,போலீஸ்காரங்க நாயெல்லாம் கூட்டிட்டு வந்து மோப்பம் பிடிக்க வைத்து என்னைக் கண்டு பிடித்து விட்டதாகவும்,என் நட்புகள் எல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜகா வாங்கியதாகவும்,என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றும்போது என் அம்மா பின்னல் ஓடியே வருவதாகவும், எல்லா கனவுகளும் ஒரே நாளில் விட்டு விட்டு பட ட்ரெயிலர் போல பிட் பிட்டாக வந்தது.

இந்தக் கொடுமையில் காய்ச்சல் வேறு வந்து விட்டது.ஒரு மாதிரி மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் ஸ்கூலுக்குக் கிளம்பினேன்.

அட ரொம்ப சூப்பரா எங்க ப்ளான் வொர்க் அவுட் ஆகியிருந்துதுங்க.!!அதே டீச்சர் தன் பொண்ணின் அழுகையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தார்."பாருங்கம்மா எப்பிடி ஒழுக்கமா இருந்தாலும் இந்தப் பையனுங்க விடறதில்லெ! இந்தப் பையனுங்க பண்ற வேலையினாலே சேட்டையினாலே பொண்ணுங்களுக்கு எவ்வளோ கஷ்டம்?பாவம்......நீங்க என்னம்மா பண்ணுவீங்க?....என்று ஒரே பாச மழைதான் போங்க.!!

இதுல சந்தடி சாக்கில நடந்த இன்னொரு நல்லது..எந்தக் கூட்டம் அங்கே தொடர்ந்து எழுதுச்சோ அதுங்க மிரண்டு போய்அதுக்கப்புறம்எழுதவேயில்லை!!!.ஒரே நாளில் பெண்கள் கூட்டத்திலே ஒரு கதானாயகியாயிட்டோமில்லே!!!!!!!!

21 comments:

மங்களூர் சிவா said...

ஹாஹா ஹா

நல்லா வெள்ளாடிருக்கீங்க!!

J K said...

உங்களுக்குள்ள பல ரவுடிங்க இருப்பாங்க போல...

Dreamzz said...

நல்லா தான்.. கலாய்க்கறீங்க!

Dreamzz said...

நல்லா பிள்ளைகள்!

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

nalla irundhadhu...

நிவிஷா..... said...

nice. bayangara samathu ponna iruntheenga pola

நட்போடு
நிவிஷா

கோபிநாத் said...

சாக் பீஸ் வைத்து ஆப்பு அடித்து ஒரு புதிய புரட்சியை உண்டாக்கிய கதாநாயகி அருணா வாழ்க ;))சாக் பீஸ் கதாநாயகி அருணா சங்கம்
ஷார்ஜா கிளை
யூ.எ.ஈ

Raj said...

Aruna,

Ithellaam romba over-ngka.
Paavam anthap ponnu,athoda ammavoda kuuchchalukku magalak
kaaychittingkalee?
unga pera anga ezhuthunangalaa illayaa?

Raj.

Anthony Muthu said...

என் கொள்கையை சற்றே தளர்த்தி...

இங்கே என் அனுபவம் ஒன்றைச் சொல்ல விருபுகிறேன்.

நான் 2nd Standard படித்த சமயம்.

அதுக்கு முந்தின வகுப்பிலெல்லாம்... Last Rank தான் வாங்குவேன்.

என் அண்ணன் அந்த வ்ருடம்தான் என்னைக் நன்றாக கவனிக்கத்
(!!!!வேறென்ன அடிதான்)
தொடங்கி குறுகிய காலத்திலேயே... 1-st Rank எடுத்து நல்ல பேர் வாங்கியிருந்த நேரம்.

ஒரு நாள் கிரிஜா மிஸ் G.K கிளாஸ்.

எல்லா பாடமும் நான் முன்னாடியே படிச்சு முடிச்சுடறதால, ஆர்வமே இல்லாமல் சும்மா உட்காந்திருக்கையில்...

என் பென்சில் டெஸ்க்கிற்கு கீழே விழுந்துடுச்சு.

யாரும் என்னை பார்க்கலைன்னு உறுதிப்படுத்திக் கொண்டு...

மெல்லக் கீழே இறங்கி மூழ்கியபடி தேடுகிறேன்.

சட். அது எங்கே போய் தொலஞ்சுது???

திடீர்னு மிஸ் ஒரு கேள்வி கேக்கறாங்க.

"What are the colours of our National Flag.?"

யாருமே பதில் சொல்லவில்லை.

திடீர்னு ஒரு குரல் சத்தமாய்.

"Saffron, white & Green."

மிஸ் சுற்றுமுற்றும் தேடறாங்க...

யார் பதில் சொன்னாங்கன்னு.

(குரல் மட்டும் வருது. ஆளைக் காணோமே...!)

நான் அவசரப்பட்டு பதிலைத் துப்பிட்டனே தவிர உடனே பயம் பிடிச்சிடிச்சு.

படவா நான் பாடம் நடத்தறேன்... நீ அங்க டெஸ்க் கீழ என்ன பண்றேன்னு ஸ்கேல் விளையாடத் தொடங்கிடும்னு எதிர்பார்ப்போட எழுந்து நிக்கறேன்.

முழு கிளாஸே என்னைத்தான் கவனிக்குது.

"மிஸ்... பென்சில் விழுந்துடுச்சு... அதான்..." எச்சிலைக் கூட்டி விழுங்குகிறேன்.

மிஸ் மெதுவா பக்கத்துல வந்து...

(ஐய்யோ அடிதான்.)

என் தலையை கலைச்சுவிட்டு...
சிரிக்கறாங்க.

மேக மூட்டம் விலகி பளீர் வெளிச்சம். (அப்பா...டா)

அதுக்கப்புறம்... மிஸ் சொன்னது... கிளாஸே...
கைத்தட்டினது...

யப்பா... இப்பவும் மறக்க முடியாத நினைவுகள்.

அதுக்கப்புறம் ஒரு நாள் அண்ணன் கூபிட்டு விசாரிச்சார்...

"ஸ்கூல்'ல இதுமாதிரி பண்ணினியா?"

திரும்பவும் பயம்.

யார் போட்டுக் குடுத்துருப்பாங்க....?

பயத்தோடு மீளவும் என் விளக்கம்.

"பென்சில் கீழே..."

என்று நான் தொடங்கவும்...

அண்ணன் அப்படியே வாரி அணைத்துக் கொண்டார்.

(இது அபூர்வம்)

பக்கத்தில் திரும்பி அண்ணியிடம்...

"இன்னைக்கு ஸ்கூல் போனா இவன் மிஸ் இவனப் பத்திதான் ஒரே பாராட்டு. செம ப்ரில்லியன்ட்ங்க உங்க தம்பி-ன்னு.."

அதுக்கப்புறம் அண்ணன் பேசியது இப்போ நினைவில்லை.

ஆனா இப்ப நினைச்சா கண்ணீரோடு...

"தன் மகன் சான்றோன் எனக் கேட்ட தாய்"

குறள் ஞாபகம் வருது.

aruna said...

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி, சிவா,J.K ,Dreamzz, செந்தில்நாதன் செல்லம்மாள்,நிவிஷா!
அன்புடன் அருணா

கோபிநாத் said...
//சாக் பீஸ் வைத்து ஆப்பு அடித்து ஒரு புதிய புரட்சியை உண்டாக்கிய கதாநாயகி அருணா வாழ்க ;))

சாக் பீஸ் கதாநாயகி அருணா சங்கம்
ஷார்ஜா கிளை
யூ.எ.ஈ//

கொஞ்சம் பார்த்துங்க! இன்டர்நேஷனல் புகழ் இவ்வளோ சீக்கிரம் பரவினால் தலைக்கனம் வந்துறப் போறது!!வெத்து சங்கம் தானே?வசூலுக்குக் கிளம்பிட மாட்டீங்களே??
அன்புடன் அருணா

Raj said...
Aruna,
Ithellaam romba over-ngka.
Paavam anthap ponnu,athoda ammavoda kuuchchalukku magalak
kaaychittingkalee?

என்ன பண்றது ராஜ்? என்ன இருந்தாலும் ஆசிரியரை காய்ச்சிடக் கூடாதுன்னு ஒரு சின்னக் கொள்கைதான்!!
அன்புடன் அருணா

Anthony Muthu said...
//என் கொள்கையை சற்றே தளர்த்தி...//

கொள்கையை தளர்த்தியதற்கு ரொம்ப நன்றி அந்தொணி முத்து.ரசிக்கும்படி இருந்தது உங்க ரெண்டாம் வகுப்பு அனுபவம்.
அன்புடன் அருணா

ரசிகன் said...

//டுத்த நாள் என்ன ஆகுமோ என்ற பயமும் இருந்தது.இரவெல்லாம் ஒரே கனவு..அந்த டீச்சர் என் கையெழுத்தையும் அந்த போர்ட்லெ உள்ள கையெழுத்தையும் ஒன்று என்று கண்டு பிடித்து விட்டதாகவும்,போலீஸ்காரங்க நாயெல்லாம் கூட்டிட்டு வந்து மோப்பம் பிடிக்க வைத்து என்னைக் கண்டு பிடித்து விட்டதாகவும்,என் நட்புகள் எல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜகா வாங்கியதாகவும்,என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றும்போது என் அம்மா பின்னல் ஓடியே வருவதாகவும், எல்லா கனவுகளும் ஒரே நாளில் விட்டு விட்டு பட ட்ரெயிலர் போல பிட் பிட்டாக வந்தது.//

ஹா..ஹா.. அருணா...இது நெசமாவே டாப்புப்பா.. கலக்கிட்டே போ....விழுந்து விழுந்து சிரிச்சேன்.. (வுழுந்ததுல.. தலையில அடிக்கூட பட்டுருச்சு..:P)
சாகச(?) நினைவுகள் அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள்.

கீழை ராஸா said...

பள்ளி நாட்களில்"வம்புடன் அருணா",மருவி இப்போ "அன்புடன் அருணா" வாக மாறி விட்டதோ..?

பாச மலர் said...

//பெரிய சாதனை செய்தது போல ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், அடுத்த நாள் என்ன ஆகுமோ என்ற பயமும் இருந்தது.இரவெல்லாம் ஒரே கனவு..அந்த டீச்சர் என் கையெழுத்தையும் அந்த போர்ட்லெ உள்ள கையெழுத்தையும் ஒன்று என்று கண்டு பிடித்து விட்டதாகவும்,போலீஸ்காரங்க நாயெல்லாம் கூட்டிட்டு வந்து மோப்பம் பிடிக்க வைத்து என்னைக் கண்டு பிடித்து விட்டதாகவும்,என் நட்புகள் எல்லாம் எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜகா வாங்கியதாகவும்,என்னை போலீஸ் ஜீப்பில் ஏற்றும்போது என் அம்மா பின்னல் ஓடியே வருவதாகவும், எல்லா கனவுகளும் ஒரே நாளில் விட்டு விட்டு பட ட்ரெயிலர் போல பிட் பிட்டாக வந்தது.//

அருமயான நகைச்சுவை நடை அருணா..நன்றாகச் சிரித்தேன்..இது போல் நடையில் அவ்வப்போது எழுதுங்கள்..உங்களுக்குச் சிறப்பாக வருகிறது.

KVR said...

:-) நீங்க வாத்தியாரு பொண்ணுக்கு ஆப்பு வெச்சிங்க, நான் வாத்தியாருக்கே ஆப்பு வெச்சவன். அநாவசியமா (இது நாங்க முடிவு செஞ்சது) ஒரு பையனை அடியோ அடின்னு அடிச்சாருன்னு ஒரே காரணத்துக்காக அவர் சைக்கிள் டையரை சல்லடையாக்கினது (இதுல என் கை இல்ல), பொங்கல் வந்தப்போ ஒரு பொண்ணு பேர்ல "அன்பு மனைவி"ன்னு போட்டு ஒரு பொங்கல் வாழ்த்து ஸ்டாம்பு ஒட்டாம அனுப்பியது (செலவு வைக்க தான்) ஆகிய நல்ல காரியங்கள் செஞ்சிருக்கோம். எங்க வாத்தியார் நாள் முழுக்க அந்தப் பொங்கல் வாழ்த்தை பாக்கெட்டில் வச்சிக்கிட்டு சுத்தினது இன்னைக்கும் கண்ணுலேயே நிக்குது. கையெழுத்தைக் கண்டுபிடிச்சு பின்னிடுவாரோன்னு நாள் முழுக்க நான் பயந்துகிட்டே இருந்ததும் இன்னும் மனசுல படமா ஓடுது :-).

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... நல்ல பதிவு அருணா.

mohamed said...

நிக எந்த ஊரு எழுத்துல ராமநாடு மாவட்டம் வாசம் விசூது. அந்த வயசுல அப்படி குறும்பு பண்ணின தாலதெ இப்படி ஓரிரு தலம் நடத்த முடிஇது

aruna said...

ரசிகன் said...
//விழுந்து விழுந்து சிரிச்சேன்.. (வுழுந்ததுல.. தலையில அடிக்கூட பட்டுருச்சு..:P)//
பார்த்து ரசிகன்..கட்டு கிட்டு போட்டுக்கிட்டீங்களா? பின்னூட்டத்திற்கு நன்றி!
கீழை ராஸா said...
//பள்ளி நாட்களில்"வம்புடன் அருணா",மருவி இப்போ "அன்புடன் அருணா" வாக மாறி விட்டதோ..?//

இருக்கும் இருக்கும்...நான் கொஞ்சம் வம்பு பிடிச்ச ஆளுதான் அப்போ!பின்னூட்டத்திற்கு நன்றி!
பாச மலர் said...
//அருமயான நகைச்சுவை நடை அருணா..நன்றாகச் சிரித்தேன்..இது போல் நடையில் அவ்வப்போது எழுதுங்கள்..உங்களுக்குச் சிறப்பாக வருகிறது.//

நன்றி பாசமல்ர்!ஒரு கப் போர்ன்வீட்டா சாப்பிட்ட தெம்பு வருது உங்க பின்னூட்டம் படிக்கும்போது!

KVR said...
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... நல்ல பதிவு அருணா.
நன்றி
mohamed said...
//நிக எந்த ஊரு எழுத்துல ராமநாடு மாவட்டம் வாசம் விசூது. அந்த வயசுல அப்படி குறும்பு பண்ணின தாலதெ இப்படி ஓரிரு தலம் நடத்த முடிஇது//
புதுசா தமிழ் கணினில எழுதப் படிச்சிருக்கீங்களா? எழுதினப்புறம் ஒரு தடவை வாசிக்கக் கூடாதா? உங்க ஊருப் பக்கம்தான் அதுதான் வாசம் வீசுது!
அன்புடன் அருணா

என் சுரேஷ்... said...

மலரும் நினைவுகள் பதிவுகளாய் பவனி வருவதில் தான் எத்தனை மகிழ்ச்சி.

இதில் ஒரு சுட்டித்தனம் இருப்பதை விட புத்திசாலித்தனம் முந்தி நிற்கிறது.

பிரச்சனைகளைக் கண்டு தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு அழுது கொண்டிருப்பதை விட அதை வெற்றிபெறும் அறிவாற்றல் மிக மிக முக்கியம் என்கிறது உங்களின் இந்த பதிவு.

வாழ்த்துக்கள்

என் சுரேஷ்

nathas said...

என்ன ஒரு வில்லத்தனம் ;) ... ஆனா கதாநாயகி ஆகிடீங்க :)

srivats said...

school days ellam gyabagam varudhu.. enga schooleyum epdi ella nadandhudhu.. unga kanavu romba top ,enakku kuda over reactionoda manirathanam kadhai madhiri kanavellam varum :)

cheena (சீனா) said...

அன்பின் அருணா

பள்ளியில் படிக்கும் போது இருக்க வேண்டிய குறும்பு இருந்திருக்கிறது - இப்பொழுது தலைமை ஆசிரியையாய் இருக்கும் போது பிள்ளைகள் செய்யும் குறும்பு சிரிப்பை வரவழைக்குமே !

viyukam said...

இந்த நல்ல நல்ல பிள்ளைகளா நம்பி நாடே இருக்குது தங்கை !
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது !
கதையிண்ட ஏ பசங்க குரூப் எழுதிறத நிப்பாட்னது தான் !

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா