நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Friday, November 23, 2012

மழையே நலமா?


ஜன்னல் கம்பிகள் குளித்து நாளாச்சு!
குருவி ஈரஇறகில் சிடுக்கெடுக்க மறந்தாயிற்று
உன்னைச் சுமந்த குடைகள் மூலையில் முடங்கிக் கிடக்கிறது...
கை விரித்துக் குளிக்கும் மரம் கடுப்பாகிக் கொண்டிருக்கிறது..

உன்னை ஏந்த நீட்டிய கரங்கள் காலியாக.....
உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....
உன் சொட்டு பட்டுத் தெறிக்காத முற்றம்  

கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...
நான் நலமே என்று ஒரு வரி சொல்லிப்போ மழையே....
அது போதும் எனக்குக் கொஞ்சம் கவிதையெழுத....



21 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மகள் அம்மாவை மணமாகிப் பிரிந்த பின் ஒரு மழைத் திவலை வந்து எழுப்ப வேண்டியதாயிற்றோ கவிதையை?

இடைவெளிக்குப் பிந்தைய மழையின் மணம் போல் கவிதையும் அருமை அருணா.

புதுகை.அப்துல்லா said...

பூங்கொத்து.

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

கவிதை மொத்தமும் அழகுன்னாலும் கடைசி வரிகள் க்ளாசிக் :-)

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
வராத மழை தந்த கவிதையே
இத்துணை அற்புதம் எனில்
மழை பெய்யும் கணம் எத்தனை
அழகிய கவிதை தரும்
அத்ற்காகவேணும் மழையே சீக்கிரம் வா

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

KParthasarathi said...

மனதில் நினைத்தது எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள் உங்கள் நேர்த்தியான கவிதையில்

திண்டுக்கல் தனபாலன் said...

வருவதற்கு முன்னே விசாரணை வரிகள் அழகு... அருமை...

வாழ்த்துக்கள்...
tm2

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை. அதிலும் அந்த கடைசி இரு வரிகள்... பிரமாதம் போங்க!

பூங்கொத்து!

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தர்ஜி !
புதுகை.அப்துல்லா அட! நீங்களா???
நன்றி ராமலக்ஷ்மி !!

ADHI VENKAT said...

பூங்கொத்து.

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல்
Ramani
KParthasarathi அனைவருக்கும் நன்றி!!

pudugaithendral said...

ஏக்கம் தொணிக்கும் வரிகள்.....

நல்லா இருக்கு கவிதை
வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு  said...

அருமை தோழி மழையுடனான நட்பு

இரசிகை said...

mm......

mazhai venum yenakkum.

Robert said...

உன்னுடன் குடிக்கும் தேனீர் நேரங்கள் ரத்து செய்யப்பட்டன...
நீ விழுந்து பரப்பும் மண்வாசனை மறந்தது மண்....//அருமையான வரிகள், முத்தாய்ப்பாய் அந்த கடைசி வரி. பல பூங்கொத்துகள்.

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல், Ramani KParthasarathi சார்,
திண்டுக்கல் தனபாலன் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

கோவை மு சரளா
இரசிகை
வெங்கட் நாகராஜ்
கோவை2தில்லி அனைவருக்கும் நன்றி!!
வலைச்சர தகவலுக்கு நன்றி தனபாலன் ஜி!

Unknown said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !

Anonymous said...

சிறப்பான கவிதை.
இனிய வாழ்த்து.
Vetha.Elangathilakam.

Muruganandan M.K. said...

நலம் கொடுக்கும் மழையை
நலமா எனக் கேட்கும் கவியின் உள்ளம் ஈரமானது
"கன்னத்தில் ஒன்றும் கைவிரலில் ஒன்றுமாக
ஒற்றைத்துளியாவது கொட்டிப்போ மழையே...
நான் நலமே "

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா