நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, October 14, 2012

கடவுளின் ஞாபகம் வருகிறது....

கையில் காசு இல்லாமல்
கடந்து செல்லும் பெரும் செலவு
மருத்துவர் அறையில் காத்திருக்கும் நொடி 
இயல்பாகக் கடவுளை ஞாபகப் படுத்துகிறது.....

கூடிப் பிரியும் நட்பு நிரந்தரமாக் விலகிப் 
போகும் நிராகரிப்பின் போதும்
தனிமை கழுத்தை நெறிக்கும் போதும்
எப்போதும் கடவுள் ஞாபகம் வருகிறது....

சுனாமி, பூகம்பம், நில அதிர்வு
தீவிரவாதம்,குண்டு வெடிப்பு, விபத்து
இவையெல்லாம் வெறுமே உச்சரிக்கும் போது கூட
கடவுள் ஞாபகம் வருகிறது....

தன்னைக் குறித்த அயர்ச்சியும்
வாழ்வைக் குறித்த அச்சமும்
கொஞ்சமாய் எட்டிப் பார்க்கும் போது
கடவுளின் ஞாபகம் வருகிறது....

இயல்பாக வாழும்
இனிமையான காலங்களிலும்
வெள்ளிக்கிழமைகளில் கூட
எண்ணெய்க் கிண்ணத்துடன் சுற்றும் போதும்
கோவிலின் சூடம் ஒத்தும் போதும் கூட
என்னை நினைப்பதில்லையென
வருந்திக் கொண்டிருந்தார் கடவுள்.....

14 comments:

Venkat said...

i like it

KParthasarathi said...

கஷ்டத்தின் போதுதான் கடவுளின் நினைவு வருகிறதால் பாண்டவர்களின் தாய் குந்தி தனக்கு எப்போதுமே கஷ்டத்தை கொடு கிருஷ்ணா என்று வேண்டிகொண்டதாக படித்து இருக்கிறேன்.
கவிதை நன்றாக உள்ளது.

ராமலக்ஷ்மி said...

மிக நன்று அருணா.

கோவை2தில்லி said...

அருமையான வரிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை வரிகள்...

த.ம. 3

இரசிகை said...

:)
nallaayirukkunga mam

மாதேவி said...

அருமை.

அன்புடன் அருணா said...

நன்றி Venkat சார்!
நன்றி KParthasarathi சார்!

ஸ்ரீராம். said...

மிக அருமை. உண்மை. கஷ்டகாலத்தில் மட்டுமே கடவுளை நினைக்கும் ஜனம்/மனம்!

Venkat said...

ஹய்யோ என்னை சார் எல்லாம் சொல்லாதீங்க, நான் உங்க பையன் வயசு.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/2.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

kg gouthaman said...

http://blogintamil.blogspot.in/2012/10/2.html
வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ ! வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

மாற்றுப்பார்வை said...

அருமை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா