ரபுன்செல்லின் சிடுக்கில்லாத கூந்தலின்
இடுக்குகளிலும்
சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்
மடிப்புகளிலும்
ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்
குட்டி உலகத்தின்
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்
குட்டித் தேவதை தம்போலினாவின்
இறகுகளுக்குள்ளும்
ஏழு குள்ளர்களின் சூப்
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்
தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது
செய்ய ஒன்றுமில்லாமல்
தேவதைக் கதைகளுள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......
இடுக்குகளிலும்
சின்ட்ரெல்லாவின் உடுப்புகளின்
மடிப்புகளிலும்
ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்
குட்டி உலகத்தின்
குட்டிச் செப்புச் சாமான்களுக்குள்ளும்
குட்டித் தேவதை தம்போலினாவின்
இறகுகளுக்குள்ளும்
ஏழு குள்ளர்களின் சூப்
கிண்ணங்களுக்குள்ளுமாய்த்
தொலைந்து கொண்டிருந்த குட்டிம்மா
திடீரென வீட்டுப் பாடக் கணக்குகளில் மூழ்கிய போது
செய்ய ஒன்றுமில்லாமல்
தேவதைக் கதைகளுள்
கொஞ்சம் கொஞ்சமாய்ச்
சிக்கிக் கொண்டிருந்தாள் அம்மா ......
18 comments:
நேர்த்தியான கவிதை...
வாவ் !ரொம்ப பிடித்திருக்கிறது எனக்கு இந்த கவிதை
அழகான வரிகள்
ரொம்ப அழகான கவிதை..
ரொம்ப நல்லா இருக்கு.
நடப்பில் உள்ள அருமையான வரிகள்.
அனைவருக்கும் நன்றி!!
ரொம்ப அழகான கவிதை அருணா.
ரொம்ப பிரமாதம்.எனக்கு ஒரே பிடித்துவிட்டது
அழகாய் இருக்கிறது அருணா..
ஆஹா அப்படியானால் இது நிச்சயம் மறு பிறப்புதான்.குழந்தைகளிடமிருந்து தொலைந்ததை பெரியவர் தேடுவது பெரும் சிலாக்கியம்.
:-)
ஆமாம்,
உண்மைதான்
முதலில் சில சொல்லுக்கான பொருட்கள் புரியல.... ஆனா வடிவமும்... கவிதை தரும் வருத்தத்தையும் நானும் உணர்கிறேன்.... என்ன செய்ய இயந்திர காலம்!
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.
வாவ்!
மிகப் பெரிய பூங்கொத்து! :-)
Hey Happy new year :) Have read about the feeling mom go through as the kid grows into different stages:) I think you mean that in this :) lovely words as usual.
Srivats said...
/ Hey Happy new year :) Have read about the feeling mom go through as the kid grows into different stages:) I think you mean that in this :) lovely words as usual./
You are right Sri!Thanx for the wishes n wish you the same!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா