நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, January 14, 2012

இன்று பறவைக்குப் பின்னால் போனது மனம்.....

அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!
ம்ம்...பட்டம் வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன் "ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம் வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம் சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.
              
                வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..
          
                  முற்றம் நிறைக்க கோலம் போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத் துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல் கொண்டாடி....
              
                நீர் நிலம் எல்லாம் எனக்கேயென எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான் மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும் இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில் பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4 மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.
                 
                வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும் பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்.
               
                      ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில் வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச் சாப்பாடு.???
                         
                     கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர் குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக் கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய வருவோரும்..போவோரும்...
                  
                       மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப் பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல்  சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.

14 comments:

Philosophy Prabhakaran said...

டபுள் தமாக்கா... படிக்கும்போதே சங்க்ராந்தி பார்க்க வேண்டும் போல இருக்கிறது...

நல்லா ஆரம்பிச்சீங்க... ஆனா ஃபீல் பண்ணி முடிச்சிட்டீங்க...

அன்புடன் அருணா said...

நன்றிப்பா!!!

KParthasarathi said...

மனதில் ஒரு கனம்.விவரிக்க முடியாத வேதனை.
வாயில்லா பட்சிகளின் அவதி தெரிய வேண்டாமோ.
SPCA போன்ற நிறுவனங்கள் இது பற்றி என்ன செய்து கொண்டிருக்கிறது?இந்த பொங்கல் நன்னாளில் இப்படி மனதை பொங்க வைக்கும் அவலம் வேண்டுமா?
நன்றி அருணா இதை வெளி கொணர்ந்தமைக்கு

அமைதிச்சாரல் said...

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

பட்டம் விடும் கொண்டாட்டத்துக்குப் பின்னாடி இப்படியொரு அவலமும் இருப்பது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு..

சி.கருணாகரசு said...

வணக்கம்....

தங்களுக்கும் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்....

Anonymous said...

மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு...Anyhow..இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோதரி

T Azeez Luthfullah said...

ஏன் இப்படி?
கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!
போகியில் புகைமூட்டம்
தீபாவளியில் காதைப் பிளக்கும் சத்தம்
ஆயுத பூஜையில் சாலையை நிறைக்கும் பூசணி
ஏன் இப்படி?
பிற மக்களுக்குத் தொல்லை கொடுக்காமல்
சுற்றுச் சுழலுக்கு ஊறு விளைவிக்காமல்
பண்டிகைகளைக் கொண்டாட முடியாதா?
ஏன் இப்படி?
ஏழை எளியவர்களுக்கு ஈகை செய்தும்
பண்டிகை நாளில் எவருமே பசித்திருக்கக் கூடாது என்கிற நிலைமையை ஏற்படுத்துகின்ற வகையிலும் கொண்டாட முடியாதா?

வல்லிசிம்ஹன் said...

பட்டம் விடுவதில் இப்படிய்ரு பிரச்சினையா. பாவங்கள் .அநேகமாக புறாக்களாகத்தான் இருக்கும் இல்லையா.
உணர்ந்து அழகாக் எழுதி இருக்கிறீர்கள் அருணா. மிக மென்மையான மனம். பொங்களுக்குத்தாமதமாக வாழ்த்துகள் அனுப்புகிறேன். பறவைகளை இறைவன் தான் காக்கணும்.

அன்புடன் அருணா said...

KParthasarathi
அமைதிச்சாரல்
சி.கருணாகரசு அனைவருக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

do u know? i can do all kind of kites! one of my ambition is - participate in ahamedabad kite festival in jan 16th!!

பாச மலர் / Paasa Malar said...

பட்டங்களின் கொண்டாட்டம் ஆனந்தம்....பறவைகள் பாவம்தான்...

பாச மலர் / Paasa Malar said...

பட்டங்களின் கொண்டாட்டம் ஆனந்தம்....பறவைகள் பாவம்தான்...

அன்புடன் அருணா said...

நன்றி வெங்கட் நாகராஜ்
நன்றி ரெவெரி !
நானும் யோசித்துக் கொணடேதான் இருக்கேன்.....T Azeez Luthfullah
நன்றி வல்லிம்மா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா