நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 8, 2011

உயிர் மீது வைக்கப்பட்ட "செக்"


உயிர் மீது வைக்கப்பட்ட
"செக்" போலச்
சிரித்துக் கொண்டு உடல்
நுழைந்தது நோய்......

எனககே தெரியாமல்
என் உயிரைப் பிடித்து
இழுத்துக் கொண்டு
யாருக்கும் தெரியாமல்

ஏழு கடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
ஏழு வானம் தாண்டி
ஏழு நிறம் கொண்ட

கண்ணாடிப் பேழையில்
வைத்துப் பூட்டிச் சாவியைத்
தொலைக்கும் கனவை
அடிக்கடிக் கண்டது மனம்......

16 comments:

Anonymous said...

arumai, it means somthing in my live.

Anonymous said...

பிடித்தது...குறிப்பாய் கடைசி நான்கு வரிகள்...

Philosophy Prabhakaran said...

சூப்பரா இருக்குது மேடம்...

சாந்தி மாரியப்பன் said...

அசத்தல் கவிதை அருணா மேடம்..

ஹேமா said...

ஆழ்ந்து உணர்ந்து எழுதப்பட்ட வரிகள்.பூங்கொத்து டீச்சர் !

கவி அழகன் said...

Supper kavithai

K.s.s.Rajh said...

மனதை நெருடும் வரிகள்

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை அருணா!

KSGOA said...

நல்லா இருக்கு.பூங்கொத்து.

rajamelaiyur said...

அருமையான கவிதை

அன்புடன் அருணா said...

Anonymous said...
/ arumai, it means somthing in my live./
என்னால் புரியமுடிகிறது Anonymous! Take Care!

SURYAJEEVA said...

கற்பனை என்னும் பட்சத்தில் மட்டுமே அருமை என்று சொல்ல முடியும்... இதை உண்மையாய் அனுபவிப்பவர்களுக்கு?

காமராஜ் said...

எனக்கும் கூட சூரிய ஜீவாவின் கருத்துதான் அருணா

அன்புடன் அருணா said...

suryajeeva said...
/ கற்பனை என்னும் பட்சத்தில் மட்டுமே அருமை என்று சொல்ல முடியும்... இதை உண்மையாய் அனுபவிப்பவர்களுக்கு?/
காமராஜ் said...
/எனக்கும் கூட சூரிய ஜீவாவின் கருத்துதான் அருணா/
உண்மைதான் suryajeeva காமராஜ்!

VELU.G said...

மேடம் நல்ல டாக்டரை கன்சல்ட் பன்றது நல்லதுன்னு நினைக்கிறேன். ஹ ஹ ஹ ஹ ஹ ஹ


அருமை

Suresh Subramanian said...

super kavithai... thanks for sharing... please read my tamil kavithaigal in www.rishvan.com

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா