நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Thursday, August 18, 2011

கூடிப்பேசும் கல்முற்றம் !

யாருமற்ற
வீட்டுக் கல்முற்றத்தில்
சுவரிடுக்கில் முளை விட்ட
செடி நுனியும்
குருவி கொத்தக் கொட்டிய
அரிசியும்
காய் நகர்த்திக் கலைந்த
தாயக்கட்டமும்
மௌனமாகப் பிரியங்களின்
அதிர்வை நினைவுறுத்துகின்றன

உலகம் வளர, வளர
வீடு விரிய,விரிய
கூடிப்பேசும் கல்முற்றம் 
வெயில் மழையுடன் 
தனிமைப் பட்டுக்கிடந்தது  ....

கொஞ்சம் எறும்புகளின் வரிசையும்
எலிகளின் கொண்டாட்டமும்
முடிவற்ற மௌனமும்
நினைவுபடுத்திப் பார்ப்பதற்குரிய
பிரியங்கள் என்றேனும் மீளும்
என்ற நம்பிக்கையுடன்.....
கல்முற்றத்தில்
அம்மம்மாக்களும் தாத்தாக்களும்....

27 comments:

இரசிகை said...

pidichurukku

Lifewithspices said...

wow very well written..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை..
அந்நாளைய பின்முற்றத்து
கதையாடல்களை நினைவு படுத்துகிறது.
பல் தேய்க்கும் நேரத்திலிருந்து படுக்கப்போகும் வரை
அங்கே பேச ஆட்களுமிருப்பார்கள்.
கதைகளும் இருக்கும்..

யாழினி said...

காத்திருப்புகளின் பிரதிபலிப்பு..
கடந்துபோன சிலிர்ப்புகளை
நினைத்திருக்கையில்...
இன்னும் கொஞ்ச நாளில்
கல்முற்றமும் காணாது போகும்
பின் அம்மாக்களும் தாத்தாக்களும்
பிற முதியோர் இல்லங்களிலும் நிறைந்துபோவார்கள்

ரொம்ப நல்லா இருக்கு கவிதை வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

பூங்கொத்து :)

மகேந்திரன் said...

அழகான மீளும் நினைவுகள் சகோதரி....
வடித்தவிதம் அருமை.

ஷர்புதீன் said...

வெயில் மழையுடன்
தனிமைப் பட்டுக்கிடந்தது
.
.
.
.
ஞாபகங்களும்தான்!

சாந்தி மாரியப்பன் said...

பூங்கொத்து..

முற்றங்களில் அமர்ந்து விடியவிடிய கதை பேசிக் கிடந்த நாட்கள் நினைவு வருது :-)

KParthasarathi said...

நெஞ்சை தொட்டது

rajamelaiyur said...

//
உலகம் வளர, வளர
வீடு விரிய,விரிய
கூடிப்பேசும் கல்முற்றம்
வெயில் மழையுடன்
தனிமைப் பட்டுக்கிடந்தது ....
//
அருமையான வரிகள்

rajamelaiyur said...

இன்று என் வலையில்

மனசாட்சிய தொட்டு சொல்லுங்கள். நீங்கள் நல்லவரா?

KSGOA said...

மிகவும் பிடித்தது.அருமை.

KABEER ANBAN said...

மிக அழகான சொல் ஓவியம்.வாழ்த்துகள்.

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப பிடிச்சிருக்குங்க அருணா மேடம். பிடியுங்க பூங்கொத்து

அன்பேசிவம் said...

வாவ்.... அருமை மேடம். வாழ்த்துக்கள்,பூங்கொத்து.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை. பழைய நினைவுகளைக் கவிதையாய் வடித்த விதம் அழகு.

Rathnavel Natarajan said...

சொந்த பந்தங்களின் பிரிவுகள் பெரியவர்களை தனிமைப்படுத்துகிறது.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

அன்புடன் அருணா said...

இரசிகை
Kalpana Sareesh
முத்துலெட்சுமி/muthuletchumi
யாழினி அனைவருக்கும் நன்றி!

தமிழ்விருது said...

இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

K.s.s.Rajh said...

வணக்கம் இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன்.இனி தொடர்ந்து வருவேன்.

அன்புடன் அருணா said...

புதுகை.அப்துல்லா said...
பூங்கொத்து :)
அட! என்னப்பா பெரியவங்கல்லாம் வந்துருக்கீங்க! அதுவும் பூங்கொத்தோடு! நன்றிப்பா!
மகேந்திரன்
ஷர்புதீன்
அமைதிச்சாரல்
KParthasarathi அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

"என் ராஜபாட்டை"- ராஜா
KSGOA
KABEER ANBAN அனைவருக்கும் நன்றிங்க!
ரொம்ப நாளைக்கப்புறம் வந்துருக்கீங்க கல்யாணி சுரேஷ் !

சத்ரியன் said...

//உலகம் வளர, வளர
வீடு விரிய,விரிய
கூடிப்பேசும் கல்முற்றம்
வெயில் மழையுடன்
தனிமைப் பட்டுக்கிடந்தது...//

அருணா,

இது கல்முற்றத்திற்கு மட்டுமானதாக தெரியவில்லை.
கனிந்த முதியவர்களையும் சுட்டுகிறது.
தனிமைப் படுத்தல் தான் இன்றைய தலையாய கடமையாய் செய்துக் கொண்டிருக்கிறோம்.’முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’,என்பதை மறந்து.

அன்புடன் அருணா said...

முரளிகுமார் பத்மநாபன்
வெங்கட் நாகராஜ்
Rathnavel அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

முதல் வருகைக்கு நன்றி K.s.s.Rajh
கண்டிப்பா வர்றேன் தமிழ்விருது !
சத்ரியன்...... /
இது கல்முற்றத்திற்கு மட்டுமானதாக தெரியவில்லை. /
உண்மைதான் சத்ரியன்!

ரிஷபன் said...

நினைவுபடுத்திப் பார்ப்பதற்குரிய
பிரியங்கள் என்றேனும் மீளும்
என்ற நம்பிக்கையுடன்.....

எங்கள் கிராம வீட்டில் முற்றம் இருந்தது. இப்போது அந்த வீடு இடிக்கப்பட்டு நாகரீக வீடு வந்து விட்டது.
முற்றமும் திண்ணையும் இல்லாத வீடுகள் இருந்தென்ன.. இல்லாமல் போனால் தான் என்ன..

AshIQ said...

ஹும் எப்படித்தான் இப்படில்லாம் எழுதுறாங்களோ?
நானும் எப்படில்லாமொ ட்ரை பன்னி பார்க்கிறேன்
இப்படி எழுத முடியலையே..
இப்படி எழுதி எழுதிதான் கடசில எப்படில்லாமோ
நடக்குது, எது எப்படியோ யாரு யாருக்கு எப்படி எப்படினு தலையில எழுதி வச்சிருக்கோ அப்படித்தான் நடக்கும். எப்படியோ....இப்படியே படி படியா எழுதிதான் எல்லாரும் புக் போடுறாங்க..ஆனா இதையே புக்கா போட்டுட்டா அதை புக் பன்றதுக்கு இப்பவே நிறைய பப்ளிக்கேஷன்ஸ் வரிசையில் வரலாம். எப்படியோ அடுப்படியே கதினு இல்லாம வெளியே வந்தும் எல்லாமே உருப்படியா இருந்தா சரிதான். அடிக்கடி எழுத வாழ்த்துக்கள், இப்படில்லாம் எழுதிருக்கேனு இதை பப்ளீஸ் பன்னாம விட்டுராதீங்க...எனக்கு இப்படித்தான் எழுத வருது என்ன செய்ய

இப்படிக்கு
ஆஷிக்
நட்புடன் :-)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா