அவள் பெயர் சாரிகா. பத்தாவது வகுப்பு. மைதா மாவு வெள்ளையில் எல்லாப் பெண்களும் இருக்கையில் கொஞ்சம் கறுப்பாக சுமாரான அழகாய் இருப்பாள். அவள் வகுப்பில் நான் எந்தப் பாடமும் நடத்தவில்லை.அப்பப்போ வாழ்வியல் கல்விக்காக (life skill) ஏதாவது ஒரு ஆசிரியை வராத போது செல்லும்போது வகுப்பில் அவளைப் பார்த்ததுண்டு.
ரொம்ப துடிப்பாக ஆர்வமாகப் பதில் சொல்வதிலும் கலந்து பேசுவதிலும் சிறப்பானவள்.செல்ஃப் இன்ட்ரோ கொடுக்கச் சொல்லும் போது ரொம்பத் தெளிவாக அவளது பலவீனம் ஸ்போக்கன் இங்கிலிஷ் எனவும் பலம் தவறு என்று தெரிவதை யாரானாலும் சுட்டிக்காட்டுவது எனவும் சொன்ன போது வித்தியசமாகவும் தெளிவான சிந்தனையுள்ளவளாவும் தெரிந்தாள்.வகுப்பு நேரம் முழுவதும் கலகலவென எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பாள்
கொஞ்ச நாட்களாக ஒரு மௌனத்துக்குள் போய் விட்டாள். இந்த வயதில் அடிக்கடி இப்படி மூட் ஸ்விங்க் வருவது சகஜம் என நினைத்து வகுப்பினூடே கவனிக்காதது போல் விட்டு விட்டேன். இடையிடையில் வகுப்பின் முடிவில் உங்களுக்கு எல்லோர் முன்னிலையில் தெரிவிக்க முடியாத பிரச்சினைகள் இருப்பின் எழுதிக் கொடுக்கலாம் என்று சொல்வதுண்டு. அநேகமாக படிக்க முடியவில்லை, கான்சென்ட்ரேஷன் குறைகிறது போன்ற பிரச்சினைகள்தான் வருவதுண்டு.
அன்று அவள் கொடுத்த தாளில் இருந்த பிரச்சினை என்னைத் திகைக்க வைத்தது. " என்னை நீரஜ் கொன்று விடுவானோ என்று பயமாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள்" என்றிருந்தது. ஒரு கணம் உடல் அதிர்ச்சியில் அதிர்ந்தது. அவளை ஒருமுறை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லத் தோன்றாமல் அங்கிருந்து சென்றுவிட்டேன். அப்படியென்ன பிரச்சினையாக இருக்கும் என்று ஒரே கவலை. என் அறைக்குள் போனவுடன் பியுனை அனுப்பி சாரிகாவை அழைத்து வரச் சொன்னேன்.
விஷயம் இதுதான். ஒருநாள் நீரஜ் வகுப்பிற்கு மொபைல் கொண்டு வ்ந்திருக்கிறான்.அதைத் தெரிந்து கொண்ட சாரிகா எப்பவும் போல "நீ செய்தது தப்பு உடனே இதை வகுப்பாசிரியரிடம் கொடுத்து விடு" என்று எடுத்துக் கூற நீரஜ் மறுக்க இந்தப் பெண் வகுப்பாசிரியரிடம் நீரஜ் மொபைல் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாள். அங்கே ஆரம்பித்திருக்கிறது பிரச்சினை.
ஏற்கெனவே படிப்பில் நீரஜ் முன்னணியில் இருந்திருக்கிறான். சாரிகா இந்த வருடம் சேர்ந்த மாணவி. வந்த சில நாட்களிலேயே படிப்பில் எல்லா ஆசிரியர்களின் வாயிலும் சாரிகா சாரிகாதான். ஏற்கெனவே இந்தக் காரணத்தினால் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்த நீரஜ், மொபைல் கொண்டு வந்ததைக் காட்டிக் கொடுத்தவுடன் மனதில் வன்மம் அதிகமாக தினமும் ஒரு கடிதத்தைக் கம்ப்யுட்டரில் டைப்படித்து சாரிகாவின் பையினுள் வைத்திருக்கிறான்.
அதில் வரும் வாசகங்கள் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மனதை ரணமாக்கும் வார்த்தைகள். சாரிகாவின் அப்பாம்மாவைத் தவறாகச் சித்தரிக்கும் வாசகங்கள். நாளைக்கு உன் பையிலிருந்து தவறான புத்தகங்கள் ஆசிரியரால் கண்டு பிடிக்கப் படும் என்றும் நீ அனுப்பியதாகத் தவறான் வாசகங்கள் கொண்ட எஸ்.எம்.எஸ் ஆசிரியரின் பார்வைக்குப் போகுமென்றும் கடிதம் வைத்தவன் அதிர்ச்சி தருவதாக "இன்று நீ உயிரோடிருக்கும் கடைசி நாள் "என்றும் ஒரு கடிதம் வைத்திருக்கிறான் .
அவ்வளவையும் யாரிடம் சொல்வதெனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறது இந்த அப்பாவிப் பெண் சாரிகா. அம்மா அப்பாவிடம் சொன்னால் என்ன ஆகுமோ என்று பயம். வகுப்பாசிரியரிடம் கூடக் கூற முடியாத பயம். தினம் வகுப்பிற்குப் போனாலும் தூர நின்று பாடம் மட்டுமே நடத்தும் வகுப்பாசிரியரின் தவறும் கூட இந்தப் பிரச்சினைக்குக் காரணமாயிருக்கலாம் .
இவ்வ்ளோ சின்ன வயதில் மனதிற்குள் இவ்வளவு வெறுப்பு எங்கிருந்து வந்தது? இதற்குக் காரணங்கள் என்று எவையெல்லாவற்றையும் யார் முன்னால் எடுத்து வைப்பது ? இப்படியெல்லாம் ஒரு பெண்ணை மனக் கஷ்டத்துக்குள்ளாக்கலாம் என்று எங்கிருந்து கற்றுக் கொண்டான் நீரஜ்? இப்படிப் பேப்பரில் எழுதிப் பிரச்சினைகளை வெளிப்படுத்திக் கொள்ள முடியாத எத்தனையோ சாரிகாக்கள் இருக்கலாம். அவர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு?
நட்பென்றால் ஃபேஸ் புக் நட்புக்குக் கூட உயிரை விடத் தயாராயிருக்கும் அன்பை வைத்திருக்கும் இவர்கள் வெறுப்பென்றால் எந்த நிலைக்கும் போய் உயிரை எடுக்கவும் தயாராயிருக்கும் இந்தத் தலைமுறையினை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

32 comments:
இதை இரண்டு விதமான பதிலாக கூற முடியும், என்னை பொறுத்தவரையில்
ஒன்று : ஆசிரியர்கள் மாணவர்களிடம் தோழன் போலவும், அதே நேரம் மதிப்பெண் மற்றும் வருங்காலம் எவ்வளவு முக்கியம் என்பதையும் சரி சமமாக பாலன்ஸ் செய்யக்கூடியவராக இருத்தல் வேண்டும்...
இன்னொன்று : இந்த பாலாய் போன பெற்றோர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன் மனநல டாக்டர்களிடம் சென்று பிள்ளையை வளர்ப்பது குறித்து besic விசயங்களை தெரிந்துகொண்ட பிறகு பெற்று கொள்ளட்டும். நான் பார்த்த பல குடும்பத்தினர் மகனை/மகளை ஜஸ்ட் வளர்க்கிறார்கள், அவர்களும் வளர்ந்துவிடுகிறார்கள். அப்புறம் எங்கிருந்து...... விளங்கும்?
அட ராமா..... நீரஜின் கடிதமே ஒரு சாட்சியா இருக்கே............
All the mistake lies only on parents seriously y shd a school goer shd be given a cell phone.. Parents shd be warned on all these n secondly the kids..
கடைசியில் நீங்க என்ன தான் பண்ணுனிங்க ... அந்த பொண்ணோட பிரச்னை சரி ஆகி விட்டதா?
நல்லதையும் கெட்டதையும் நரையின் வாயிலாகக் கற்க வழியின்றித் திரையின் வாயிலாகவே கற்கும் இத்தலைமுறையின் மொத்த பலவீனமே கல்வி என்று கற்பிக்கப்படுவதைத் தாண்டி வேறுநூல்களை வாசிக்காதிருப்பதும் வீட்டிற்குள் சகஜமாகப் பேசிக் கருத்துப் பரிமாறிக்கொள்ளும் இயல்பான நிலையின்றி இருத்தலும்தான் மூலகாரணம்.கெட்டுத்தான் அழியும்.மறுபடியும் எல்லாம் முளைக்கும்.
மனதை அதிர்ச்சிக்குள்ளாக்கும் மற்றுமொரு பதிவு அருணா.
உங்கள் அணுகுமுறையால், அவளின் பிரச்சினையைக் கண்டுபிடித்தீர்கள். நிச்சயம் அதற்கொரு சரியான தீர்வும் அவளுக்குக் கிடைத்திருக்கும்.
இதன் மூலம் பொதுமக்களாகிய நாங்கள் உணரவேண்டியது என்னவென்றால், எங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும், தோழமையுடன் இருந்தும் நல்லது கெட்டதுகளை விளங்கச் சொல்லி புரியவைக்க வேண்டும்.
பூங்கொத்து கொடுக்க மறந்துட்டேன். இந்தா புடிங்க.....அருணா!
நீரஜிடமும் பேச வேண்டியது மிக அவசியம்.கண்டிப்பாய் இல்லாமல் அன்பாய்.அவனுக்கு வீட்டில் என்ன பிரச்சனையோ? சாரிகாவின் பிரச்சனையினை கண்டுபிடித்தமைக்கு சல்யூட்..
problem solved? you ended this article at a crucial juncture. we are eagerly waiting to know what happened afterwards? neeraj-a adi pinnanum, rowdy paya makka.
நல்ல பதிவு.
வயதுக் கோளாறு தானே?
சினிமா, தொலைக்காட்சிகளும் காரணம் தான்.
ஒவ்வொரு வகுப்பிலும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை அதிகம் என்னும்போது ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த முடிவதில்லை என்பது உண்மை.
ஆனால், பெற்றோரிடம் என்ன பிரச்னையாக இருந்தாலும் சொல்லலாம் என்ற சுதந்திரம் மற்றும் மனவுறுதி இல்லாதது வேதனையாக இருக்கிறது - அதுவும் ஒரு தவறைத் தட்டிக் கேட்கும் பெண்ணுக்கு!
மென்மையாக முடிச்சவிழ்க்க வேண்டிய விஷயம் இது !
படிக்கவே அதிர்ச்சியாக இருந்தது அருணா. அந்த பிஞ்சு மனசு எவ்வளவு பயப்பட்டதோ. எப்படி கையாண்டீர்கள் இந்த பிரச்சனையை?
தொடர் கதை மாதிரி அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே., நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்,நீரஜ் புரிந்து கொண்டு திருந்தினானா, சாரிகாவின் தொல்லை தீர்ந்ததா என்பதையும் சொல்லியிருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்
ennaalaiyum purinchikka mudiyala.....
valththukkal...
can you come my said?
பச்சைப்புள்ளைய கூட சுலபமா வளர்த்திடலாம்,
பதின்ம வயதுக்குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம். அதேபோலத்தான் பதின்மவயது பிள்ளைகளுக்கு ஆசிரியையா இருக்கவும் ரொம்பவே பொறுமை வேணும்!!
ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html
blame the parents.
:(
ஷர்புதீன் said...
/இதை இரண்டு விதமான பதிலாக கூற முடியும், என்னை பொறுத்தவரையில்/
பெற்றோரும், ஆசிரியரும் கொஞ்சம் நேரம் பிள்ளைகளுடன் படிப்பை மறந்து பேசவேண்டும்.நி றைய பிரச்சினைகள் தீரலாம் இதனால்!
துளசி கோபால் said...
/ அட ராமா..... நீரஜின் கடிதமே ஒரு சாட்சியா இருக்கே............/
அதே தான் துளசிம்மா.!
Kalpana Sareesh said...
/ All the mistake lies only on parents seriously /
Can't say that completely the responsibility is with the parents.Even the school and teachers are equally responsible.
சுந்தர்ஜி said...
/வேறுநூல்களை வாசிக்காதிருப்பதும் வீட்டிற்குள் சகஜமாகப் பேசிக் கருத்துப் பரிமாறிக்கொள்ளும் இயல்பான நிலையின்றி இருத்தலும்தான் மூலகாரணம்./
ரொம்ப சரி சுந்தர்ஜி!
சத்ரியன் said...
/இதன் மூலம் பொதுமக்களாகிய நாங்கள் உணரவேண்டியது என்னவென்றால், எங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும், தோழமையுடன் இருந்தும் நல்லது கெட்டதுகளை விளங்கச் சொல்லி புரியவைக்க வேண்டும்./
அப்பாடா புரிஞ்சுக்கிடீங்களா? சாரலின்பா அப்பா புரிஞ்சுக்கிட்டார்மா! பூங்கொத்துக்கு நன்றி!
அமுதா கிருஷ்ணா said...
/நீரஜிடமும் பேச வேண்டியது மிக அவசியம்./
ரொம்ப சரி! அதைத்தான் முதலில் செய்தேன்...
Anonymous said...
/ problem solved?/
ya...ya..solved
you ended this article at a crucial juncture. we are eagerly waiting to know what happened afterwards?I'll write about it surely!
/ neeraj-a adi pinnanum, rowdy paya makka./
அய்யய்யோ அதெல்லாம் சரி வருமா? பார்த்துதான் செய்யணும்பா....
அதேதான் Rathnavel சார்!!
ஹேமா said...
/ மென்மையாக முடிச்சவிழ்க்க வேண்டிய விஷயம் இது !/
ரொம்ப சரி ஹேமா!
dheekshu said...
/ படிக்கவே அதிர்ச்சியாக இருந்தது அருணா. அந்த பிஞ்சு மனசு எவ்வளவு பயப்பட்டதோ. எப்படி கையாண்டீர்கள் இந்த பிரச்சனையை?/
ஒருவழியாய் முதல் கட்ட தீர்வு சொல்லியாச்சு
KParthasarathi said...
/தொடர் கதை மாதிரி அப்புறம் என்ன நடந்தது என்று சொல்லாமல் விட்டு விட்டீர்களே., /
நடவடிக்கை தொடருகிறது...,/நீரஜ் புரிந்து கொண்டு திருந்தினானா, சாரிகாவின் தொல்லை தீர்ந்ததா என்பதையும் சொல்லியிருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்/
அது உடனே தீரக் கூடியதா என்ன சார்?
http://pudugaithendral.blogspot.com/2011/07/blog-post_14.html
தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்
டீன் ஏஜ் டேஞ்ஜரஸ் ஏஜ்
vidivelli
புதுகைத் தென்றல்
குடந்தை அன்புமணி நன்றிங்க எல்லோருக்கும்!
அனாமிகா துவாரகன் said...
/ blame the parents./
Cannot be blamed 100%....Anamika
புதுகைத் தென்றல் said...
/தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்/
அச்சச்சோ கவனிக்கலியே!!! எழுதறேன்...எழுதறேன்!
சி.பி.செந்தில்குமார் said...
/டீன் ஏஜ் டேஞ்ஜரஸ் ஏஜ்/
ரொம்ப சரி சி.பி.செந்தில்குமார்!
இது கவனிக்க பட வேண்டிய விசயம்...இதில் பெண்கள் மட்டுமல்ல ஆண்கள், குழந்தைகள் என பலதரப்பட்டவர்களும் மனதுகுள்ளயே புழங்கும் அளவுக்கு ஏதாவது ஒரு சூழ்நிலைக்கான பிரச்சனையை சில நாதாரிகள் ஏற்படுத்திவிடுகின்றனர்... அடுத்தவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் இது போன்ற நரகர்கள் நாசமாக போகட்டும்... தோழியின் ஆதங்க பதிவு கவனிக்க பட வேண்டியவை பாராட்டுக்கள்

உண்மைதான் சகோ இவர் சொல்வது முற்றிலும் உண்மை.
இதையே நானும் வழிமொழிகின்றேன் .நன்றி தோழி பகிர்வுக்கு
வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கங்கள் மென்மேலும் சிறப்புற.....
இன்று வலைச்சரத்தில் - வானவில்லின் ஏழாம் வண்ணம்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_16.html
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன். முடிந்தால் பாருங்களேன்...
நட்புடன்
ஆதி வெங்கட்.
வருந்தத்தக்க விஷயம். மிகவும் யோசிக்க வேண்டியதும் கூட. இப்பதிவு எதிர்காலம் பற்றிய பயத்தை உண்டு பண்ணுவதாய் இருக்கிறது.
உங்களின் இந்த இடுகையை என் வலைச்சரத்தில் இணைத்துள்ளேன்.
உங்கள் பதிவு இணைத்த
எனது இடுகை
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா