நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, June 29, 2011

ஜஸ்ட் ஒரே வாரம் :(

          எப்படி ஒரு வாரத்துக்குள்ளே எல்லோரையும் பார்த்து ஒரு வருடக் கதையைப் பேசி முடிச்சேன்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு!!! ஆமா இந்த தடவை தமிழ்நாடு விஸிட் ஜஸ்ட் ஒரே வாரம்தான். எப்பவும் போல இந்த தடவையும் சென்னை போன போது பாண்டிச்சேரி மதர் ஆஷ்ரம் போயிருந்தோம். இந்த முறையும் புக்கிங்க் செய்யும் போது செய்த குழறுபடியால் ஆரோவில் உள்ள மாத்ரி மந்திர் என்ற ஒரு வட்ட வடிவான சர்வ சமயப் பிரார்த்தனைக் கூடத்திற்குள் செல்ல முடியவில்லை. இங்கு செல்வதென்றால், ஓரிரு நாட்களுக்கு முன்பே முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். 
                                மாத்ரி மந்திர்
124 நாடுகளில் இருந்தும் வந்திருந்த அதன் பிரதிநிதிகள், தங்கள் தாய் நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கைபிடி மண்ணை, மனித இன ஒற்றுமையின் அடையாளத்தை வெளிபடுத்தும் வண்ணம் ஒரே இடத்தில் குவித்து இந்த மந்திர் கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
                               வரவேற்பது போல நீர்ச் சுழல்! 
                               
   வழி நெடுக மூங்கில் காடு! அனைவரையும் ஈர்ப்பது சுற்றியுள்ள இயற்கை எழில். மூங்கில் மரங்கள் ஒரு பக்கம் விதம் விதமான மரங்கள் ஒரு பக்கமுமாக பின்னிப் பிணைந்து ஒரே மரமாக வளர்ந்து    
                         கிடக்கின்றது
அடித்துக் கிளப்பும் வெயிலிலும் குளிர் நிழல் தரும் மரக் கூட்டம்!

    மாத்ரி மந்திரின் சிறிய மாதிரியும் அதன் உள்கட்டமைப்புகளும் முகப்பில் உள்ள இன்ஃபர்மேஷன் சென்டரில் வைக்கப் பட்டிருக்கிறது.

            உள்ளே நுழைந்த நேரத்திலிருந்து இசைத்துக் கொண்டிருக்கும் உயர்ந்த மரத்தில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் விண்ட் சைம் ஒரு இனிமையான மன அமைதி கிடைக்கும் ஒரு வித்தியாசமான உணர்வு கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

12 comments:

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

என்னோட லிஸ்டில் இருக்கும் இடங்களில் இதுவும் ஒண்ணு :-)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.... புகைப்படங்களும் அருமை.... தொடருங்கள்....

ஷர்புதீன் said...

பாண்டிச்சேரி வெயில தாங்க முடிஞ்சுதா? ஜெய்பூர்ல வேர்காது, பாண்டியில ரொம்ப வேர்க்குமே..

:-)

துளசி கோபால் said...

எப்பவும் போல(வே) எல்லாம் நடந்துச்சுன்னு சந்தோஷப்படுங்க:-)))))

ராமலக்ஷ்மி said...

படங்களுடனான பகிர்வு அருமை அருணா. இந்த மந்திருக்கு சென்றுள்ளேன். தியான மண்டபத்தின் அமைதியில் கிடைத்த சிலிர்ப்பை வார்த்தைகளில் சொல்ல இயலாது.

KParthasarathi said...

உங்களை மாதிரி என்னாலும் பார்க்க முடியாமல் போய்விட்டது.
அந்த சூழ்நிலையே மனதுக்கு ஒரு அமைதியை கொடுக்கின்றது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என்ன அருணா இது நியாயமா?

ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்துகுள்ள சுத்திட்டு வந்த தகவலைக் கூடச் சொல்லாமல்?

கணவருக்கும் குழந்தைக்கும் சுந்தர்ஜியைக் காட்டியிருந்தீங்கன்னா மைத்ரி மந்திரை இந்த சுந்தர்ஜி காட்டியிருக்கப் போறான்.

ரெண்டையும் மிஸ் பண்ணிட்டீங்க.

இத்தனை நாளாப் பின்னூட்டம் இடமுடியாமல் ப்ளாக்கரின் குறுக்கீட்டால் பலதடவை வந்தும் இன்றுதான் வெற்றி.

அன்புடன் அருணா said...

நன்றி சந்ரு!
அமைதிச்சாரல் said...
/என்னோட லிஸ்டில் இருக்கும் இடங்களில் இதுவும் ஒண்ணு :-)/
சீக்கிரம் ப்ளான் பண்ணுங்க!!
நன்றி வெங்கட் நாகராஜ் !

அன்புடன் அருணா said...

ஷர்புதீன் said...
/ பாண்டிச்சேரி வெயில தாங்க முடிஞ்சுதா? ஜெய்பூர்ல வேர்காது, பாண்டியில ரொம்ப வேர்க்குமே../
அந்தக் கொடுமையை எங்க போய்ச் சொல்றது?
உஸ் புஸ்ஸுன்னு திணறிப் போயிட்டோம்! :(
துளசி கோபால் said...
/ எப்பவும் போல(வே) எல்லாம் நடந்துச்சுன்னு சந்தோஷப்படுங்க:-)))))/
அதைத்தான் செஞ்சோம் வேறென்ன செய்றது?

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்

கூட்டான்சோறு...

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா