எந்தப் பேனாவால் எழுதினாலும்
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்
கொஞ்சம் புகுந்து கொள்கிறது
பொய்யும்.....
எந்த தேசம் சுற்றினாலும்
எந்த உயரம் பறந்தாலும்
எந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்
ஒடுங்கிக் கொள்ளத் தேவைப்படுகிறது
வீடும்
எத்தனை நிறைவேறிய
கனவுகள் முடிந்தாலும் ஒவ்வொரு
கனவின் முடிவிலும்
உயிர்ப்பித்துக் கொள்கிறது
ஒரு புதுக் கனவும்!
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்
கொஞ்சம் புகுந்து கொள்கிறது
பொய்யும்.....
எந்த தேசம் சுற்றினாலும்
எந்த உயரம் பறந்தாலும்
எந்தக் கடலின் ஆழம் அறிந்தாலும்
ஒடுங்கிக் கொள்ளத் தேவைப்படுகிறது
வீடும்
எத்தனை நிறைவேறிய
கனவுகள் முடிந்தாலும் ஒவ்வொரு
கனவின் முடிவிலும்
உயிர்ப்பித்துக் கொள்கிறது
ஒரு புதுக் கனவும்!
17 comments:
பூங்கொத்து...
மையப்புள்ளியாய் மனம் இருந்து
தொலைப்பதனால்தான் இந்தத் தொல்லையோ?
சிந்தனையை தூண்டிச் செல்லும் நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் அருணா ....
இரண்டு கவிதைகளுமே அழகு.
ஒவ்வொரு
கனவின் முடிவிலும்
உயிர்ப்பித்துக் கொள்கிறது
ஒரு புதுக் கனவும்!//
அழகு!அழகு!! தொடர வாழ்த்துக்கள்!
மிக அருமை அருணா.
Tamilmanam la unkal pathivai enaithuviten
-:)
"உயிர்ப்பித்துக்கொள்கிறது புதுக்கனவு...
கனவுகள்... புதிய கனவுகள் மீண்டும் மீண்டும்.... நல்லா இருக்குங்க உங்க கவிதை....
அருமையான கவிதை..ஒரு கனவின் முடிவில் இன்னொரு கனவின் தொடக்கம்....பாராட்டுக்கள் !!
எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் சில என்றும் மாறுவதில்லை..
சான்றாக..
உயிர்கள்பேசும் ஒரே மொழி.
http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post_10.html
கவிதைக்குப் பொய்யழகு என்று காலகாலமாகச் சொல்லிவந்ததை நீங்கள் மாற்றிச் சொன்னவிதம் அழகு.
அழகான அர்த்த்முள்ள கவிதை!
எத்தனை விதமான புத்தகங்கள் படித்தாலும்,
எத்தனையோ நயமான கவிதைகள் படித்தாலும்,
எப்படி எப்படியோ பலர் எழுதி இருந்தாலும்,
அருணாவின் கவிதைகளை படிக்கத்தான் மனம் விழைகிறது.
how to add particular label feed only in google reader
https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US
please forward this to others...d..
எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டால் கணவுகள் முடிந்துவிடும். . .நினைவில் இருந்தால் கணவுகளாகிவிடும். . .எதிர்பார்ப்புகள் இல்லையெனில் வாழ்க்கையில்லை. . .உங்கள் பதிப்பு அருமை. . .
எந்தப் பேனாவால் எழுதினாலும்
எந்த மொழியில் எழுதினாலும் அதனுள்
கொஞ்சம் புகுந்து கொள்கிறது
பொய்யும்.....
ஆழமான சிந்தனைகள் நிறைந்த கவிதை
சுப்பர்....
வாழ்த்துக்கள்
எனது பக்கமும் காத்திருக்கு உங்களுக்காக
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா