நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, February 22, 2011

"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"

எங்க எட்டாம் வகுப்பு மாதிரி அழகான வகுப்பு எங்கேனும் இருக்குமா என்பது சந்தேகமே.கால்ட்வெல் ஹை ஸ்கூலில் இபபோவும் அந்த வகுப்பு அப்படியே இருக்கான்னு பார்க்கணும்னு ஆசை.உட்கார்ந்திருக்கும் திசைக்கு எதிர் திசையில் எழுதிடும் போர்டை ஒட்டிய ஜன்னலில் தெரியும் கடல்.வகுப்பு போரடிக்கும் பொழுதெல்லாம் ஆசையோடு பார்த்துக் கொண்டு கனவுகளில் மூழ்கி விடலாம்.தூரத்தில் தெரியும் கப்பல்களையும் கடற்கரை ஓரத்தில் நடக்கும் சல சலப்பையும் பார்த்தே பொழுதை ஓட்டி விடலாம்.

இன்னமும் நினைவிருக்கிறது ஈரோட்டிலிருந்து மாற்றலாகி வந்த ஒரு பையனிடம் கணக்கு ஆசிரியர்,"பழைய பள்ளிக்கூடத்திற்கும் இந்த பள்ளிக் கூடத்திற்கும் என்ன வித்தியாசம்?" என்று கேட்டவுடன் அந்தப் பையன் "அங்கெ வகுப்பு ரொம்பப் புழுக்கமா கசகசன்னு இருக்கும்...இங்கே நல்லா சிலு சிலுன்னு காத்து வருது சார்"அப்படீன்னு சொன்னவுடன் எல்லோரும் சிரிச்சது.

வகுப்பு ஆசிரியர் ஜெயச்சந்திரன் சார்,கணக்கு ஆசிரியர் டேவிட் சார்,தமிழ் ஆசிரியர் அருள்ராஜ் சார்,அப்புறம் ஹிந்தி ஆசிரியர் நாராயணன் சார்...இவர் பாடும் ரெம்மாமே ரெம்மாமே ரே...பாட்டு வகுப்பில் ரொம்ப பிரபலம்.

தமிழாசிரியர் அருள்ராஜ் சார் வகுப்பில் நடக்கும் கலாட்டாக்கள் ரொம்ப கலகல.அப்படித்தான் ஒருநாள் இன்ஸ்பெக்க்ஷன்.அப்போலாம் இன்ஸ்பெக்க்ஷன்னா நோட்டுக்கு அட்டை போடுவதிலிருந்து யூனிஃபார்ம் வரைக்கும் நீட்டா இருக்கணும்.

ரெண்டாவது பீரியட் தமிழ்.எப்பவுமே அருள்ராஜ் சார் வகுப்பில் பாடம் வாசிக்கச் சொல்லிட்டு காலைத் தூக்கி மேஜையில் போட்டுக் கொண்டு கண்ணை மூடி விடுவார்.இடையிடையே பசங்க சத்தம் போட்டா"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"அப்படீன்னு அடிக்கடி சொல்வார்.பசங்க சும்மா புத்தகத்தைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டு எம்.ஜி.ஆர்,சிவாஜி பட பாடல்களையும் வசனங்களையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.அவரும் கண்டுக்கவே மாட்டார்(தூங்கினா எப்பிடிக் கண்டுக்க முடியும்?)அன்னிக்கு வகுப்பில் வந்தவுடன் காளியப்பா "டி.இ.ஓ எங்கே வந்துட்டிருக்காருன்னு பாரு"அப்படீன்னார்.

காளியப்பன் அவருக்குப் பிடித்தமான பையன்.நல்லா வெளு வெளுன்னு வெள்ளாவியில் வச்சு எடுத்தது போலிருப்பான் குண்டுத் தக்காளி போலிருப்பான்.அவனும் ஓடிப் போய்ப் பார்த்துட்டு "இப்போதான் சார் ப்ரைமரிக்குப் போயிட்டிருக்கார்னு தகவல் கொடுத்தான்..

"சரி...இப்போதைக்கு இந்தப் பக்கம் வரமாட்டார்...ம் காளியப்பா வாசிக்க ஆரம்பி"அப்படீன்னு சொல்லிட்டுக் காலைத் தூக்கி மேஜையில் போட்டு தியானத்தை ஆரம்பிச்சுட்டார்.ஆனால் என்ன மாயமோ?எப்பிடி டி.இ.ஓ ரூட்டை மாற்றினாரோ தெரியவில்லை.பத்தாவது நிமிடத்தில் எங்க வகுப்பில் இருந்தார்.அவர் உள்ளே நுழைந்து நாங்க எழுந்து வணக்கம் சொன்னப்போ எப்பவும் போல ஆனந்தமா"டேய் மாட்டுனே வெடி வெடிச்சுடுவேன்"அப்படீன்னு சொல்லவும்....பசங்க சார்னு கத்திட்டாங்க.அவர் அவசர அவசரமா எழ, தலைமையாசிரியர் நெற்றிக்கண் திறந்து காட்ட அப்படியே வெல வெலத்துப் போயிட்டார்.

டி.இ.ஓ எங்க முன்னாலேயே "ஒண்ணும் சரியில்லையே"அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.பத்தே நிமிடத்தில் பியூன் வந்து சார் உங்களை ஹெட்மாஸ்டர் கூப்பிடுறாருன்னு சொன்னதும் அவர் பதறி ஓடியதும் பசங்க "இன்னிக்கு சார் மாட்டினார் வெடி வெடிக்க போகுது"ன்னு சொல்லி ஒரே கலகல!

25 comments:

காமராஜ் said...

இப்படித்தான் எல்லா பள்ளிகளிலும் வாஞ்சையாய் இருக்க,சிடுசிடுவென முறைக்க,சொல்லிச்சொல்லி சிரிக்க ஆசிரியர்கள் கிடைத்துவிடுவார்கள்.
எப்படி கள்ளங்கபடமற்ற நாட்கள் அவை.கிளறிவிட்டுவிட்டீர்கள் மேடம்.

Unknown said...

நகைச்சுவை சரவெடி

மாணவன் said...

நகைச்சுவையாக இருந்தாலும் அந்த பள்ளி நினைவுகள் மறக்க முடியாத நிகழ்வுகளாய் என்றும் பசுமை மாறாமல் இருக்கும் :)

சாந்தி மாரியப்பன் said...

ஸ்கூல் நாட்கள்ல எப்படா இந்த டீச்சர்ஸ்கிட்டயிருந்து தப்பிச்சுப்போவோம்ன்னு இருக்கும். இப்ப, அந்த நாட்கள்லயே நின்னுருக்கக்கூடாதான்னு இருக்கு. நினைவலைகளை கிளறிவிட்டுட்டீங்க அருணா மேடம் :-)))

Chitra said...

கலகலப்பான பள்ளி நினைவுகளுடன், பதிவு களை கட்டுது!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளிக்கூட நாட்களை அநியாயத்துக்கு நினைவூட்டிவிட்டீர்கள் அருணா.

ஒருநாளும் வெடிக்காத வெடிக்கு பலியான அருள்ராஜின் சோகம் கண்ணீருக்கு பதிலாக சிரிப்பை வரவழைத்ததை என்ன சொல்ல?

அன்புடன் அருணா said...

காமராஜ்
கலாநேசன்
மாணவன் நன்றிங்க!

ஈரோடு கதிர் said...

ஆஹா!!!

vinu said...

apppaadi me @top 10

Gowripriya said...

:))))

"போர்டை ஒட்டிய ஜன்னலில் தெரியும் கடல்.வகுப்பு போரடிக்கும் பொழுதெல்லாம் ஆசையோடு பார்த்துக் கொண்டு கனவுகளில் மூழ்கி விடலாம்."
---என்ன ஒரு ரசனை... நடத்துங்க நடத்துங்க..
எல்லாம் உங்க students கு தமிழ் தெரியாதுங்கற தைரியம்...

just kidding... கலகலப்பான பதிவு :))))))

isakki said...

very nice aruna , golden period of life!!!

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said...
/ அந்த நாட்கள்லயே நின்னுருக்கக்கூடாதான்னு இருக்கு. நினைவலைகளை கிளறிவிட்டுட்டீங்க அருணா மேடம் :-)))/
அதே அதே!
நன்றி Chitra !
சுந்தர்ஜி said...
/என் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளிக்கூட நாட்களை அநியாயத்துக்கு நினைவூட்டிவிட்டீர்கள் அருணா./
அதுதானே பதிவின் நோக்கமே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம் எங்க டீச்சர் வேற வேலையாவே இருப்பாங்க.. நாங்க நல்லா விளையாடுவோம் அது நினைவுக்கு வந்துச்சு..:)

Anisha Yunus said...

//ஸ்கூல் நாட்கள்ல எப்படா இந்த டீச்சர்ஸ்கிட்டயிருந்து தப்பிச்சுப்போவோம்ன்னு இருக்கும். இப்ப, அந்த நாட்கள்லயே நின்னுருக்கக்கூடாதான்னு இருக்கு. நினைவலைகளை கிளறிவிட்டுட்டீங்க அருணா மேடம் :-))) //

repeatt!!!!

:)))

அன்புடன் அருணா said...

ஈரோடு கதிர்
vinu நன்றி!

Philosophy Prabhakaran said...

வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_25.html

VELU.G said...

நல்ல கலாட்டா தான்

அன்புடன் அருணா said...

Gowripriya said...
/ "போர்டை ஒட்டிய ஜன்னலில் தெரியும் கடல்.வகுப்பு போரடிக்கும் பொழுதெல்லாம் ஆசையோடு பார்த்துக் கொண்டு கனவுகளில் மூழ்கி விடலாம்."
---என்ன ஒரு ரசனை... நடத்துங்க நடத்துங்க..
எல்லாம் உங்க students கு தமிழ் தெரியாதுங்கற தைரியம்.../
அட!நான் படித்த பள்ளிக்கூடம் இப்படித்தாங்க இருந்தது!!

அன்புடன் அருணா said...

நன்றி Isakki
நன்றி அன்னு
Philosophy Prabhakaran said...
/ வலைச்சரத்தில் லேடீஸ் ஸ்பெஷல்... உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்.../
கொடுத்தாச்சு! கொடுத்தாச்சு!
நன்றி VELU.G

Anonymous said...

> ஜெயச்சந்திரன் சார்,கணக்கு ஆசிரியர் டேவிட் சார்,தமிழ் ஆசிரியர் அருள்ராஜ் சார்

which means you are around 48years old, but the photo looks younger, if so its nice otherwise change it :)
iam an old student of caldwell

அன்புடன் அருணா said...

Anonymous said...
/which means you are around 48years old, but the photo looks younger, if so its nice otherwise change it :)
iam an old student of caldwell /
Nice to know that you are from Caldwell and would love to know which batch and other details!!
By the by this photo was taken on 24th feb 2011:)
Comment with your name....let me see whether I know you or not:)

PRABHU RAJADURAI said...

ஐயோ! ஐயோ!! ஐயோ!!! ரொம்ப சந்தோசமா இருக்கு....8Cயா? இல்லை 8Aயா? புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்...

அன்புடன் அருணா said...

ஓஹோ இந்த ரெண்டு வகுப்புலேதானே பெண்கள்!நான் 8"A"

அஞ்சா சிங்கம் said...

கால்ட்வெல் ஹை ஸ்கூலில் இபபோவும் அந்த வகுப்பு அப்படியே இருக்கான்னு பார்க்கணும்னு ஆசை.......//////////////////////

அக்கா இந்த பள்ளி எனக்கு மலரும் நினைவு ............

அன்புடன் அருணா said...

அஞ்சா சிங்கம் said...
/ அக்கா இந்த பள்ளி எனக்கு மலரும் நினைவு /
ஆஹா நிறைய கால்ட் வெல் சிங்கங்கள் இருக்கும் போலிருக்கே! சந்தோஷமாயிருக்குப்பா!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா