நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, February 16, 2011

அப்படிச் செய்வது நாங்களில்லை....

                            அவன் பெயர் அபிஷேக்.அவன் ரொம்ப நல்லா படிப்பான்.ஆனால் எப்போதும் ஒரு சின்ன பதட்டத்தோடவேதான் இருப்பான்.வகுப்பு பரீட்சையானாலும் சரி அரையாண்டுத் தேர்வு ஆனாலும் சரி,முழு ஆண்டுத் தேர்வு ஆனாலும் சரி ஒரே விதமான பதட்டத்திலிருப்பான்.ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்.போட்டியெல்லாம் நமன் கூட மட்டும்தான்.மதிப்பெண்கள் தந்த உடனே நமன் மதிப்பெண்கள் தெரியாவிட்டால் மண்டை உடைந்து விடும்.அது என்ன மாயமோ நமனை விட எப்படியாவது ஒரு மதிப்பெண்ணாவது அதிகமாக வாங்கி விடுவான்.
                            எப்போ பார்த்தாலும் நமன் ப்ராஜெக்ட் எப்படியிருக்கு?என்னை விட நல்லா பண்ணியிருக்கேனா என்றுதான் அவன் கவலையிருக்கும்.ஆசிரியர்களும் இப்படிப் போட்டியிருந்தால்தான் குழந்தைகள் நல்லா பண்ணுவாங்க என்றே பேசிக் கொள்வார்கள்.
                  ஒரு நாள் அவனை அசெம்பிளி நேரம் அங்கே செல்லாமல் ஒரு ஓரமாக நின்று  கொண்டிருந்தான்.
 "என்னடா அசெம்பிளிக்குப் போகலியா?இங்கே ஏன் நிக்கிறே?"
"இன்னிக்கு எனக்கு உடம்பு சரியில்லே மேம் ...கணக்கு பரீட்சை எழுத முடியாது போல இருக்கு.ஆனால் ஆப்சென்ட் ஆனா மதிப்பெண்கள் போய்விடுமேன்னு இன்னிக்கு வந்தேன்" என்றான்.
தொட்டுப் பார்த்தால் உடல் கொதித்தது.
"வா என் கூட"
"டைரி கொண்டு வா"
"மேம் ப்ளீஸ் மேம் வீட்ட்டுக்கு ஃபோன் போடாதீங்க மேம்....அம்மா திட்டுவாங்க மேம்.எப்பிடியாவது பரீட்சை எழுதிட்டுப் போயிட்றேன் மேம் இல்லைன்னா அப்பா கொன்னே போட்டிருவார்"
"அட!இன்னிக்கு வெறும் யூனிட் அஸெஸ்மென்ட்தானேடா?இதிலென்ன இருக்கு முதல்லே உடம்பைப் பார்த்துக்கோ.அப்புறமாய் பார்த்துக்கலாம்"
"கொண்டு வா டைரியை"
வேண்டாம் மேம்" எனப் பயங்கரமாய் அழ ஆரம்பித்து விட்டான்.
என்ன செய்வதென்றே புரியவில்லை
"சரி பரீட்சை முடிந்ததும் ஆஃபீஸ் ரூமுக்கு வா வீட்டுக்குப் ஃபோன்  போட்டு அப்பாவை வரச் சொல்லலாம்"
என்றபின் அரை மனதாக ஒப்புக் கொண்டு போனான்.

          அவங்கப்பா வந்தால் அவரிடம் அபிஷேக்கின் மனப்பதற்றத்தைப் பற்றிப் பேசவேண்டும் என மனதிற்குள் நினைத்தவளாய் வேலையில் மூழ்கினேன்.

ஆனால் வந்ததென்னவோ கடைப்பையன்.எனவே ஒன்றும் சொல்லாமல்"அபிஷேக்கின் அப்பாம்மாவைப் பார்க்க வேண்டும்" என்று மட்டும் சொல்லியனுப்பினேன்.

                                  மீண்டும் ஒரு நாள் அபிஷேக்கின் வகுப்பாசிரியர் அபிஷேக்கைக் கூட்டிக் கொண்டு என்னிடம் வந்தார்.
"மேம் அபிஷேக் காலையிலிருந்து ஒரே அழுகை.என்னவென்றும் சொல்ல மாட்டேனென்கிறான்.லன்ச் கூட சாப்பிடவில்லை.He is disturbing the whole class"என்று சொல்லி என்னிடம் விட்டுப் போனாள்.

        "என்ன அபிஷேக்?என்ன பிரச்னை?ஏன் அழுகிறாய்?"
"ஒன்றுமில்லை மேம்."என்ற படியே கண்ணீர் கொட்டியது.
அமைதியாக,அன்போடு,அதட்டி என்று பலமுறையாகக் கேட்ட போதும் சொல்லாமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான்.நான் பியூனை அனுப்பி அவன் டைரியைக் கொண்டு வரச் சொன்னேன்

                     அவ்வ்ளோதான்"ப்ளீஸ் வேண்டாம் மேம்....ப்ளீஸ் மேம் வேண்டாம் மேம் "எனக் கதற ஆரம்பித்தான்.
"அப்போ சொல்லு"
"மேம் இன்னிக்கு கணக்குப் பரீட்சை மதிப்பெண்கள் கொடுத்தாங்க.நமன் என்னை விட ரெண்டு மார்க் அதிகமா வாங்கிருக்கான் மேம் என்னாலே தாங்கவே முடியலை மேம்.நான் எப்பிடி அம்மாகிட்டே சொல்வேன் மேம் பயம்மாயிருக்கு.அதான் மேம் அழுகையா வருது."

                  என்ன சொல்லியும் சமாதானமாகாத அவனைப் பள்ளி நேரம் முடிந்து விட்டதால் வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவன் அப்பாவிடம் தொடர்பு கொண்டேன்.அவரும் ரிசல்ட் வெளியிடும் நாள் என்னை வந்து பார்ப்பதாகவும் கூறினார்.நிறைய யோசனைகளூடே இருந்தேன்.
ரிசட் நாளில் எங்கள் பள்ளியில் முதலில் வகுப்பாசிரியரைச் சந்தித்துப் பேசி ரிசல்ட் வாங்கி  விட்டு அப்புறம் தேவைப்பட்டால் முதல்வரைச் சந்திப்பது வழக்கம்.
                                  அபிஷேக்கின் அப்பாவும் அம்மாவும் வந்தார்கள். பிரச்னையைச் சொன்னவுடன் சொன்ன விஷயம்"நமன் எங்க பக்கத்து ஃப்ளாட் பையன்.பொதுவா நாங்க எல்லோரும் சேர்ந்தால் பேசுவது நமன் அபிஷேக் படிப்பு பற்றித்தான்.அது தவிர இதை இவ்வ்ளோ சீரியஸா எடுக்க வேண்டியதில்லை.நாங்க என்ன நினைக்கிறோம்னா இந்த பயம் அவனோட முன்னேற்றத்துக்கு உதவுதுன்னா அவனோட மார்க் வாங்குற திறமையை உயர்த்தினால் அதிலென்ன தப்பு?Don't bother about him,He'll be alright.We know about him.Anyways thank you for your concern....என்றவாறு எழுந்தவர் "அன்னைக்கு அவன் அழுதிருக்கவே வேண்டியதில்லை.ஏனென்றால் இப்பவும் அவன் நம்னை விட ரெண்டு மார்க் அதிகம் தான். பேப்பரில் ஒரு சரியான விடைக்கு ஆசிரியர் மார்க் கொடுக்கவிலலை.She will discuss that with you"என்றவாறு சென்றார்.
                            உடனடியாக ஐந்தாம் வகுப்பு ஆசிரியரைக் கூப்பிட்டுப் பேப்பரைப் பார்க்கையில் சில தவறான பதில்களை எரேஸரால் அழித்திருக்கும் தடம் தெரிந்தது.
                         அடுத்தநாள் அபிஷேக்கின் வகுப்பில் சென்று
"மதிப்பெண்களே வாழ்வின் முடிவன்று.நம் உழைப்பில் கிடைக்காத ஒரு மதிப்பெண் கூட நமக்குச் சொந்தமில்லை.மதிபெண்களை விட மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற நற்குணங்கள் வேண்டும்.ஒருமுறை தப்புச் செய்தால் அதை ஒத்துக் கொண்டு திருந்திக் கொள்ளலாம்.தவறை உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்"என்றெல்லாம் அறிவுரை கூறிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.பத்தாவது நிமிடத்தில் என் முன்னால் அபிஷேக் இருந்தான்.

                  "I'm sorry Mam,I was forced to rub and rewrite the answer by my Father Mam.Please don't tell this to anyone Mam.I'm sorry Mam"என அழ ஆரம்பித்தான்.
அபிஷேக்கைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.

29 comments:

சக்தி கல்வி மையம் said...

இக்கதை மனசை ஏதோ பன்னுதுங்க.. அருமை.. அருமை..

சக்தி கல்வி மையம் said...

ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

CS. Mohan Kumar said...

ஆசிரியராக உள்ளதால் இத்தகைய வித்தியாச அனுபவங்கள் கிட்டுகின்றன. அருமை

அம்பிகா said...

இப்படி மதிப்பெண்கள், ரங்க் பெறுவது மட்டுமே முக்கியம் என நினைக்கும் பெற்றொரும் இருக்கிறார்கள். அந்த பையனின் மனநிலையை நினைத்து பார்த்தால் ....
நல்ல பகிர்வு அருணா.

R.Gopi said...

அருணா மேடம்...

ரொம்பவே டச்சிங்கா இருக்கு...

பெற்றோர்கள் குழந்தைகளை இது போன்று வதைப்பதை கொஞ்சம் நிறுத்தினால், குழந்தைகள் நன்கு படிக்க ஏதுவாகும்...

R.Gopi said...

அருணா மேடம்...

எங்களின் முதல் முயற்சியான இந்த “சித்தம்” குறும்படத்தை கண்டு, உங்கள் கருத்தை பகிருங்களேன்.

'சித்தம்' – குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

சாந்தி மாரியப்பன் said...

பரிதாபமாகத்தான் இருக்குது, அபிஷேக்கை நெனைச்சா..

kamaraj said...

மனதைகலங்கடிக்கும் பதிவு இது

ராமலக்ஷ்மி said...

//மதிப்பெண்களே வாழ்வின் முடிவன்று.//

உண்மை. இந்த புரிதல் பெற்றோருக்கு வர வேண்டும். மிக நல்ல பகிர்வு அருணா.

அன்புடன் நான் said...

இதுவும் ஒருவகை வதைதான்...

Chitra said...

பத்திகள் பிரித்து இடம் விட்டு இருந்தால், பதிவு இன்னும் அருமையாக வாசிக்க இருந்து இருக்கும், அருணா...

Chitra said...

"மதிப்பெண்களே வாழ்வின் முடிவன்று.நம் உழைப்பில் கிடைக்காத ஒரு மதிப்பெண் கூட நமக்குச் சொந்தமில்லை.மதிபெண்களை விட மற்றவர்களிடம் நன்மதிப்பைப் பெற நற்குணங்கள் வேண்டும்.ஒருமுறை தப்புச் செய்தால் அதை ஒத்துக் கொண்டு திருந்திக் கொள்ளலாம்.தவறை உணர்ந்து ஒத்துக் கொள்வதற்கு ஒரு மனம் வேண்டும்"என்றெல்லாம் அறிவுரை கூறிவிட்டு அறைக்குத் திரும்பினேன்.பத்தாவது நிமிடத்தில் என் முன்னால் அபிஷேக் இருந்தான்.
"I'm sorry Mam,I was forced to rub and rewrite the answer by my Father Mam.Please don't tell this to anyone Mam.I'm sorry Mam"என அழ ஆரம்பித்தான்.
அபிஷேக்கைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது.



......பெற்றோரே இப்படி சொல்லி கொடுக்கும் போது, மனதுக்கு கஷ்டமாக இருக்குதுங்க... உங்கள் அணுகுமுறை பிடித்து இருக்குது.

ஹுஸைனம்மா said...

ரொம்ப பரிதாபமான நிலை அபிஷேக்கினது. பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க முயற்சிக்க முடியுமா?

சுந்தரா said...

பாவமா இருக்கு அந்தக் குழந்தையை நினைத்தால்...

ஆனாலும், தவறு எங்கேயென்று அவன் உணர்ந்திருப்பதாலும், அதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதாலும் அவன் இந்தப் பிரச்சனைகளைக்கடந்துவந்துவிடுவான் என்றே தோன்றுகிறது.

பா.ராஜாராம் said...

மிக நெகிழ்வான, மிக அவசியமான பதிவு டீச்சர்!

ஹேமா said...

பூங்கொத்து அருணா டீச்சர்.
உங்க மாணவனுக்கும் குடுக்கலாம் !

Philosophy Prabhakaran said...

மேடம் செம டச்சிங்... இறுதி வரிகள் இருதயத்தை கணக்கா செய்தது...

Unknown said...

இந்த மாதிரி பெற்றோர்கள்தான் மாணவர்களின் தோல்வி தற்கொலைகளுக்குக் காரணம். திருந்தாத ஜென்மங்கள்....:(

ஈரோடு கதிர் said...

அடப்பாவிகளா!!!

அன்புடன் அருணா said...

sakthistudycentre-கருன் said...
/ ஓட்டும் போட்டுட்டோம்ல்ல.../
நன்றி sakthistudycentre-கருன்!
மோகன் குமார் said...
/ஆசிரியராக உள்ளதால் இத்தகைய வித்தியாச அனுபவங்கள் கிட்டுகின்றன. அருமை/
உண்மைதான் சார்!
நன்றி அம்பிகா !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:((

அன்புடன் அருணா said...

R.Gopi said...
அருணா மேடம்...
/ எங்களின் முதல் முயற்சியான இந்த “சித்தம்” குறும்படத்தை கண்டு, உங்கள் கருத்தை பகிருங்களேன்./
கண்டிப்பா சொல்றேன்!
நன்றி அமைதிச்சாரல்
நன்றி kamaraj
நன்றி ராமலக்ஷ்மி !

அன்புடன் அருணா said...

சி.கருணாகரசு said...
/இதுவும் ஒருவகை வதைதான்.../
உண்மைதான் ..

Chitra said...
/ பத்திகள் பிரித்து இடம் விட்டு இருந்தால், பதிவு இன்னும் அருமையாக வாசிக்க இருந்து இருக்கும், அருணா.../
பத்தி பிரிச்சாச்சு சித்ரா!

Priya said...

மிக அவசியமான பதிவு. மனதை ஏதோ செய்கிறது!

ஆ.ஞானசேகரன் said...

டச்சிங்....
நல்லாயிருக்கு அருணா மேடம்

Anisha Yunus said...

பெத்தவங்களே குழந்தைங்க மனசில நஞ்சைப் பாய்ச்சினா என்ன சொல்ல?? ப்ச்... கதைன்னாலும் இதுதான் நிறைய நடக்குது உலகத்தில. !!

அன்புடன் அருணா said...

ஹுஸைனம்மா said...
/ பெற்றோருக்கு கவுன்சிலிங் அளிக்க முயற்சிக்க முடியுமா?/
முயற்சித்துக் கொண்டே....
சுந்தரா said...
/ ஆனாலும், தவறு எங்கேயென்று அவன் உணர்ந்திருப்பதாலும், அதை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இருப்பதாலும் அவன் இந்தப் பிரச்சனைகளைக்கடந்துவந்துவிடுவான் என்றே தோன்றுகிறது./
கடந்து விட்டால் நல்லதுதான் சுந்தரா!
நன்றி பா.ராஜாராம்

isakki said...

This is my story aruna, felt a lot!!

மாதேவி said...

பெற்றோரை என்ன செய்யலாம் :(

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா