சிப்பிக்குள் ஒளிந்து கொண்டது
மழைத் துளி
கிடைத்தது முத்து....
இதழ் இதழாக உதிரும் பூ
ஒளித்து வைத்திருந்தது
நல் கனியை
மரம் ஒளித்து வைத்தது
சூரியக் கிரண்
கிடைத்தது நிழல்...
நிறம் ஒளித்து வைத்தது
வெள்ளைப் பக்கங்களை
உருவாகியது ஓவியம்...
கொஞ்சம் கொஞ்சமாக
ஒளிந்து கொண்டது காடு
உருவாகியது நகரம்
ம்ம்ம்....இந்த வார்த்தை விளையாட்டில்
உங்களுக்கான சேதி
ஒளிந்து கொண்டது...
புரிகிறதா?
19 comments:
கவிதை அருமை.. கன்டிப்பா பூங்கொத்து....
See,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_10.html
அருமை ப்ரின்ஸ்..
கருத்துக்கள் எழுத்துக்குள்
ஒளிந்துகொண்டது
உருவாகியது கவிதை...
ஒன்றை ஒன்று மறைத்து மற்றொன்றைக் கிடைக்கச் செய்கிறது-எழுத்துக்கள் மறைந்து இந்தக் கவிதை கிடைத்தது போலவும் பின் கவிதை மறைந்து வாழ்க்கையின் முடிச்சு பிடிபட்டது போலவும்.
பிடித்திருப்பதினும் பூங்கொத்தளிப்பதினும் மேலாய் ஒரு சொல்லைத் தேடுகிறேன்.அதையும் மறைத்திருக்கிறது மொழி.என்ன செய்ய அருணா?
இதழ் இதழாக உதிரும் பூ
ஒளித்து வைத்திருந்தது
நல் கனியை
நல்லா இருக்கு
வார்த்தைகளுள் ஒளிந்திருந்த கவிதை அழகாய் வெளிவந்திருக்கிறது, உங்கள் மூலம். பூங்கொத்து.
முத்து - கனி - நிழல் - ஓவியம் : பொக்கிஷம் - பலன் - நிம்மதி - கலை
நகரமும் இவையும் ஒன்று என்று சொல்றீங்க.... சரிங்க... நீங்க சொன்னா சரிதாங்க....
NALLA IRUKKU
மற்ற கண்ணாமூச்சி விளையாட்டுகளில் மனதுக்கு மகிழ்ச்சி கிட்டும்; நனமை விளையும். ஆனால் காடு-நகரம் கண்ணாமூச்சியில் நன்மையில்லை. அதானே செய்தி?
ம்ம்ம்....இந்த வார்த்தை விளையாட்டில்
உங்களுக்கான சேதி
ஒளிந்து கொண்டது...
புரிகிறதா?//
ஊகிக்க முடியலையே தலைவா சொல்லிடுங்க சஸ்பென்ஸ் தாங்கல.
நிழலும்
ஓவியமும் மிக அருமை
அருணாவின் மனதிற்குள் ஒளிந்துகொண்டு இருந்தது
அருமையான கவிதை ஒன்று வெளி வராமல்
நன்றி எங்கள் பார்வைக்கு கொண்டு வந்தமை பற்றி
நீங்கள் சொன்ன நல்ல கருத்தையும் புரிந்துகொண்டோம்
தலைப்பிலேயே புரிஞ்சிடுச்சி அருணாக்கா... :)
நன்றி sakthistudycentre-கருன் !
நன்றி ப்ரியமுடன் வசந்த் !
சுந்தர்ஜி said...
/ பிடித்திருப்பதினும் பூங்கொத்தளிப்பதினும் மேலாய் ஒரு சொல்லைத் தேடுகிறேன்.அதையும் மறைத்திருக்கிறது மொழி.என்ன செய்ய அருணா?/
அதுவேதானே மொழியின் வித்தை!நன்றி சுந்தர்ஜி
பூங்குழலி
அம்பிகா
Chitra நன்றிங்க!
அருமை!! எல்லா இழப்புக்களும் பின்வரும் நல்லவற்றிற்கே!!!
Anonymous said...
/NALLA IRUKKU/
பேரோடெ சொல்லலாமே Anonymous!
ஹுஸைனம்மா said...
/மற்ற கண்ணாமூச்சி விளையாட்டுகளில் மனதுக்கு மகிழ்ச்சி கிட்டும்; நனமை விளையும். ஆனால் காடு-நகரம் கண்ணாமூச்சியில் நன்மையில்லை. அதானே செய்தி?/
அதுவேதான் ஹுஸைனம்மா
கே. ஆர்.விஜயன் said...
/ ஊகிக்க முடியலையே தலைவா சொல்லிடுங்க சஸ்பென்ஸ் தாங்கல./
என்னாது த்ரில்லர் ரேஞ்சுக்குச் சொல்றீங்க!
ஈரோடு கதிர்
KParthasarathi
அன்னு அனைவருக்கும் நன்றிங்க!
வாழ்த்துகள் :)
நல்ல கவிதை அருணா.
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா