அங்கே பொங்கல்...இங்கே சங்க்ராந்தி!
ம்ம்...பட்டம் வங்கியாச்சு...மாஞ்சாவும் ரெடி.விடிந்தவுடன் அலறும் ஸ்டீரியோ தட்டு தட்டாய்த் தின்பன்டங்கள் ஒருவீடு இல்லாமல் அத்தனை பேரும் மொட்டை மாடியில் ஒரு நாள் முழுவதும் பட்டம்....விடுவதும்...அறுபடுவதுமாய்....அறுபட்டவுடன் "ஓ காட்டியோ" என்ற அலறலும்.....சில வீடுகளில் மைக்கில் "நீலப் பட்டம் வெள்ளைப் பட்டத்தை அறுக்கப் போகிறது....இதோ நீலப் பட்டம் சிக்கலுக்குள்ளாகிறது...இதோ...ஆஹா...அறுந்தேவிட்டது நீலப் பட்டம்.."என்று ரன்னிங்க் கமென்ட்ரி கூட உண்டு.இது ஒரு புது வகையான பொங்கல்தான்.
வீட்டினுள் பொங்கல் வைத்துப் பூஜை செய்தும் பொங்கல் கொண்டாடிவிட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டுச் சங்க்ராந்தி கொண்டாடுவதாகவுமே பொங்கல் பல வருடங்களாக மாறிவிட்டிருக்கிறது..
முற்றம் நிறைக்க கோலம் போட்டு,வெளியில் பனியில் வெண்பொங்கலும்,சர்க்கரைப் பொங்கலுமாகப் பொங்க வைத்து குலவையென்ற பேரில் கூப்பாடு போட்டு,கரும்பு கடித்துத் துப்பி,பனங்கிழங்கு உடைத்து ம்ம்ம் எவ்வ்ளோ நாளாச்சு இப்படிப் பொங்கல் கொண்டாடி....
நீர் நிலம் எல்லாம் எனக்க்கேயென எடுத்துக் கொண்டாலும் இன்னும் திருப்தியில்லாமல் இன்று வான்வெளி முழுவதையும் எனக்கே என எடுத்துக் கொண்டு பறவைகளைப் பயப்படுத்துகிறான் மனிதன்.இந்த வாரத்தில் மட்டும் நூற்றுக் கணக்கான அடிபட்ட பறவைகளையும் இறந்து போன பறவைகளையும் கணக்குக் காட்டுகிறது செய்தித் தாள்.பள்ளிகளில் பிரார்த்தனையின் போது காலை 9 மணிக்கு மேலும் சாயங்காலம் 4 மணிக்குள்ளும்தான் பட்டம் விடவேண்டும் என்றும் அறிவுரை சொல்லப்படுகிறது ஆனாலும் விடியும் முன்னே பட்டம் என்னவோ பறக்க ஆரம்பித்து விடுகிறது.
வீட்டுக் கூண்டுக் கிளிகளின் மேலும் நாய்க்குட்டிகளின் மீதும் வைக்கும் பாசம் பொதுவாக பறவைகளின் மீது இல்லாமல்தான் போய்விடுகிறது.இங்கே ஜெய்ப்பூரில் அடிபட்டு விழும் பறவைகளை உடன் எடுத்து சிகிச்சை அளிக்க என்றே ஒரு இளைஞர் குழு ஊர் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆறுதல்.
ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.கூட்டை விட்டு வெளியில் வராமலிருந்தால் தப்பித்து விடும்..அப்புறம் அதுகளுக்கு இன்றைக்குச் சாப்பாடு.???கம்பு கம்பாய் இணைக்கிற கயறுகள் குருவிகள் ஊஞ்சலாடாமல் தனியே ஆடிக் கொண்டிருந்தது.வீட்டு ஜன்னல்களின் ஓரம் வைக்கப் பட்ட தண்ணீர் குடிக்காமல் தளும்பியிருந்தது.தூவப்பட்ட அரிசி கேட்பாரற்றுக் கிடந்தன்...மொட்டை மாடி நிறைக்க மனிதர்கள்...மனிதர்கள்...வீடு நிறைய வருவோரும்..போவோரும்...மனது மட்டும் தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் முங்க முடியாமல் கிடக்கும் ப்ளாஸ்டிக் மக் போல பறவைக்குப் பின்னால்.......விரித்து வைத்த செய்தித்தாளின் மேல் சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று விழுந்து கிடந்தது......ம்ம்ம்....காயம் பட்டு வீழ்ந்த பறவையோடதா??????....உயிர் பிரிந்து வீழ்ந்த பறவையோடதா????கவலையாயிருந்தது.
21 comments:
அருமையான அனுபவத்தை பகிர்ந்துகொண்டு நெகிழவைத்து விட்டீர்கள்
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்
அந்த இளைஞர் குழுவுக்கு எனது வணக்கங்கள்.
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல்நல்வாழ்ததுக்கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
இந்த கண்ணோட்டத்துடன் இன்று தான் உங்களுடைய பதிவுனால் பார்க்க முடிந்தது.மனம் ரொம்பவும் சஞ்சல பட்டது.பட்டத்தை பார்த்தாலே வெறுப்பு வந்து விட்டது. இது சில பேரிடமாவது தாக்கத்தை உண்டாக்கினால் மிகவும் நல்லது
//ஊரில் ஏதாவது கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?கொஞ்சம் பறவைகளுக்காய் இன்று மனம் பதறுகிறது.//
பேருந்தில் அடிபட்டு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பிராணிகள் மீதும் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.நேற்றுக்கொள்ளைப்பக்கம் போன இல்லத்துணை திடு திடுவென ஓடிவந்து எனை அரவமில்லாமல் இழுத்துக்கொண்டு போனாள்.வாயில் ஆட்காட்டி விரல் வைத்தபடி காட்டிய பக்கம் ஒரு முயல்.அவள் பறவைகளுக்கு வைத்த பருக்கை சிதறிய இடம் தேடி வந்திருக்கிறது.வாழ்வின் அர்த்தம் கீற்றாய் தெரிய,என்னோடு பறவைகளும் அணில்களும் அட அந்த முயல்களும்,அவளும்.
நெகிழ்வான அனுபவம்.
இனிய பொங்கல் நல்வாழ்ததுக்கள்!
உணர்வுபூர்வமான பதிவு..!!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)
மாணவன்
இளங்கோ
வேலன்.அனைவருக்கும் நன்றி!
//கலவரம் என்றாலோ,சூரிய கிரஹணம் என்றாலோ பிள்ளைகளிடம் இன்று வெளியே போகவேண்டாம் என்று சொல்வதைப் போலப் பறவைகளும் தன் குஞ்சுகளுக்கும் சொல்லிப் பத்திரப்படுத்துமா?//
நிலநடுக்கம் வருவதை முன்கூட்டி அறிந்துகொள்ள முடிவதைப் போல இதை அறியவும் அவற்றிற்கு முடிந்தால்...
KParthasarathi said...
/. இது சில பேரிடமாவது தாக்கத்தை உண்டாக்கினால் மிகவும் நல்லது/
அதேதான் என் எண்ணமும்!
காமராஜ் said...
/ பேருந்தில் அடிபட்டு சாலையில் கிடக்கும் ஒவ்வொரு பிராணிகள் மீதும் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது./
உண்மைதான் ...
உணர்வுபூர்வமான பதிவு..
நன்றி Priya !
நன்றி பால் [Paul] !
:( ஓ அருணா..
பறவைகள் தன் குஞ்சுகளுக்கு கத்துத்தரத்தெரியற அளவுக்கா ஆபத்துக்களை உண்டாக்கிவச்சிருக்கோம்.. ஒன்னா ரெண்டா.. இது புதுவகையா இருக்கு..
ஜெய்லானி
ஹுஸைனம்மா
ஆயிஷா !அனைவருக்கு நன்றி!
தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி! 'அழகி' யைப்படைத்தவர் என்றதும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அதைத்தான் நான் எனது எழுத்துக்களுக்கு பயன் படுத்துகிறேன்.இனி உங்களைத்தொடர்வேன்.
கடந்த 2008 ஆகஸ்டில் ஜெய்ப்பூர் வந்திருந்தேன். அது பற்றிய பதிவு கூட எனது வலைத்தளததில் இருக்கிறது. வாய்ப்பிருந்தால் படியுங்கள். என்னுடைய அம்மாவின் பெயர் அழகம்மாள்.அதனால்தான் 'அழகிய நாட்கள்' என்று எனது வலைப்பூவிற்கும் 'அழகி' மென்பொருளை தாய்த்தமிழில் எழுதவும் பயன் படுத்துகிறேன். என்றென்றும் திலிப் நாராயணன்
நிஜம்தான்.. எங்கள் மனமும் பறவைகள் பின்னால் அலையத் துவங்கிவிட்டது
nandri tholi varugaikkum vaalthiTkum
உணர்வுபூர்வமான பதிவுக்கு வாழ்த்துக்கள்
ஹலோ அருணாக்கா ... சௌக்கியமா இருக்கிறீங்களா...
றொம்ப நாட்களுக்குப்பிறகு...பொங்கல் சாப்பிடலாமே என்று வந்தேன். குருவிகளின் மீது இளையோடிய பிரியத்தை றொம்ப ரசித்தேன்.
சந்திக்கலாம் அக்கா
ப.அருள்நேசன்
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா