நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, January 12, 2011

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-8

வீடு கட்டக் கடன்
கேள்விப்பட்டவுடன்
முதல் தடவையாய்
கனவுவீடு கனவில்
வரத் தைரியம் பெற்றது....

நிறையக் காகிதங்களும்
கொஞ்சம் மிஞ்சிய நகைகளும்
வங்கிக்கு இடம் பெயர்ந்தன
வீடு ஆசையில்......


வெறும் மணல் வீடாய் சில நாளும்
வெறும் செங்கல் வீடாய் சில நாளும்
கொஞ்சம் சிமென்டுப் பூச்சில் சில நாளும்
கதவில்லா நிலையும் ஜன்னலும்....
கொஞ்சம் கொஞ்சமாய் உருமாற.....


இது என் அறை
இங்கே படுக்கையறை
இது படிக்குமிடம்....
இது கூடிப் பேசுமிடம்

இங்கே சாப்பாட்டு மேஜை

இங்கே விளையாடுமிடம்
எனப் பாகம் குறிக்கையில்
மறக்காமல் இது ஒளிந்து
விளையாடுமிடமும்
இடம் பெற்றது......


முழுதாக முகம்
காட்டிய வீட்டில்
பாகம் குறித்த இடங்கள்
எல்லாம் ஒற்றை அறையாய்
சுருங்கிப் போனதில்
கலைந்தது கனவு வீடு.....

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!

21 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

//முழுதாக முகம்
காட்டிய வீட்டில்
பாகம் குறித்த இடங்கள்
எல்லாம் ஒற்றை அறையாய்
சுருங்கிப் போனதில்
கலைந்தது கனவு வீடு//

பிறருக்காக வீடு கட்டுகிறோம்.
நமக்காக அந்த வீட்டில் வாழ்கிறோம்.
கனவுகளோடு கட்டப்பட்ட அந்த வீட்டின் பல இடங்களில் காலத்தின் பரபரப்பில் பல இடங்களில் நம் கால் பாவாமலே ஒற்றை அறைக்குள் முடங்கிவிடுகிறோம்.

நிதர்சனம் அருணா.

மாணவன் said...

//முழுதாக முகம்
காட்டிய வீட்டில்
பாகம் குறித்த இடங்கள்
எல்லாம் ஒற்றை அறையாய்
சுருங்கிப் போனதில்
கலைந்தது கனவு வீடு//

மிகவும் ரசித்த வரிகள்... நல்லாருக்கு மேடம் கவிதை

Porkodi (பொற்கொடி) said...

வீடு படம் பார்த்த பாதிப்பு இந்த கவிதைலயும் இருக்கு.. (சின்ன வயசுல அந்த பாகவதர் தாத்தாவை பார்த்து ஒரே அழுகாச்சி தான்..)

pichaikaaran said...

யதார்த்தமான உண்மையான கவிதை

Paul said...

//கனவுவீடு கனவில்
வரத் தைரியம் பெற்றது....//

//வெறும் மணல் வீடாய் சில நாளும்
வெறும் செங்கல் வீடாய் சில நாளும்
கொஞ்சம் சிமென்டுப் பூச்சில் சில நாளும்
கதவில்லா நிலையும் ஜன்னலும்....
கொஞ்சம் கொஞ்சமாய் உருமாற.....//

//எனப் பாகம் குறிக்கையில்
மறக்காமல் இது ஒளிந்து
விளையாடுமிடமும்
இடம் பெற்றது......//

அழகு..!! ரசித்தேன்..!! அழகா சொல்லியிருக்கிறீங்க அருணா..!!

KParthasarathi said...

நன்றாகத்தான் இருக்கு.இருந்தாலும் 'பாகம் குறித்த இடங்கள் எல்லாம் ஒற்றை அறையாய் சுருங்கி' ஏன் போகவேண்டும்?கனவு என்றால் சரி.நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லையே

முனைவர் இரா.குணசீலன் said...

கலைந்த வீடும்
கலையாத கனவும்!!

சாந்தி மாரியப்பன் said...

//முழுதாக முகம்
காட்டிய வீட்டில்
பாகம் குறித்த இடங்கள்
எல்லாம் ஒற்றை அறையாய்
சுருங்கிப் போனதில்
கலைந்தது கனவு வீடு//

ஒற்றை அறையாய் சுருங்கினாலும் நம்ம வீடு இல்லியா :-)))

Chitra said...

எத்தனை பேருக்கு ஏக்க பெருமூச்சாய் .......... ம்ம்ம்ம்......

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை அருணா..

கொஞ்ச நாட்கள் அந்த வீடு மணல்வீடா செங்கல்வீடாய் சிமெண்ட் வீடாய்..

கடைசியி ஒற்றை அறையாய்..ரொம்ப உண்மை.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கவிதை அருணா.

Skamaraj said...

மேடம் இந்த வீடு கட்டுகிறபோது அருகிருத்தல் ரொம்பச்சுவாரஸ்யமானது.அதன் ஒவ்வொரு நிலையையும் அழகாச்சொல்லிருக்கீங்க.முடிவும் கவிதை.

க ரா said...

arumaiya iruku :)

ஹேமா said...

ஒற்றை அறையாச்சும் கிடைச்ச நிம்மதி.
யதார்த்தம் அருணா !

priya.r said...

நல்ல பதிவு ;மற்றுமொரு வாழ்வியல் கவிதை ;வாழ்த்துக்கள்.,

இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருணா !

அன்புடன் அருணா said...

சுந்தர்ஜி said...
/ பிறருக்காக வீடு கட்டுகிறோம்.
நமக்காக அந்த வீட்டில் வாழ்கிறோம்.
கனவுகளோடு கட்டப்பட்ட அந்த வீட்டின் பல இடங்களில் காலத்தின் பரபரப்பில் பல இடங்களில் நம் கால் பாவாமலே ஒற்றை அறைக்குள் முடங்கிவிடுகிறோம்./
ரொம்ப சரியாச் சொன்னீங்க சுந்தர்ஜி !
நன்றி மாணவன்
நன்றி Porkodi(பொற்கொடி)
நன்றி பார்வையாளன்
நன்றி பால் [Paul]
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
KParthasarathi said...
/நன்றாகத்தான் இருக்கு.இருந்தாலும் 'பாகம் குறித்த இடங்கள் எல்லாம் ஒற்றை அறையாய் சுருங்கி' ஏன் போகவேண்டும்?கனவு என்றால் சரி.நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பது இல்லையே/

சொல்ல நினைத்தது வேறாகவும்,சொல்ல முடிந்தது வேறாகவும் ஆனதால் வந்த வினை சார்!

அருண் காந்தி said...

கை நிறையப் பூங்கொத்துக்கள்!!!

அன்புடன் நான் said...

வீடு மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

vinu said...

asusaul aruna rocks;


supersp sisterrrrrrrrrrrrrrrrrrrr.

vinu said...

asusaul aruna rocks;


supersp sisterrrrrrrrrrrrrrrrrrrr.


virakthiyaaa, emaatraththin vellipaadaaa; eathooo onnu aanaa nallaairrukupaaaa

அன்புடன் அருணா said...

முனைவர்.இரா.குணசீலன்
அமைதிச்சாரல்
Chitra
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா