நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, November 2, 2010

என் நேரக் கணக்கு.....

என் நாட்குறிப்பில்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரியாகவில்லை.....

எப்போதும் போல
இருபத்தி நாலு மணி
நேரத்திற்குப் பதிலாக
இருபத்தியொரு மணியாகக்
குறைந்திருந்தது....

கணக்கில் வராத
மணித்தியாலங்களைத்
தேடித் தேடிக் கிடைக்காமல்.....

கடிகார முள்ளை
மூன்று மணி நேரம்
திருப்பி வைத்து விட்டுத்
தூங்கியெழுந்தால்

அன்றைய கணக்குக்கு
இருபத்தியேழு மணி
நேரம் கிடைத்தது!!!!

ம்ம்ம்...இன்றும்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரி வரப் போவதில்லை!!!

22 comments:

ராமலக்ஷ்மி said...

//பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரி வரப் போவதில்லை!!!//

என்றைக்கும் எவருக்கும்..

மிக அருமையான கவிதை அருணா.

Anonymous said...

அருமை..
பிக்சன் கவிதை?!

Philosophy Prabhakaran said...

நல்ல கவிதை :)

Philosophy Prabhakaran said...

// கண்க்கு சரியாகவில்லை //

குறை சொல்வதற்கு மன்னிக்கவும்... முதல் பத்தியில் கணக்கு ஸ்பெல்லிங் மாற்றவும்...

Anonymous said...

ரொம்ப நல்லாயிருக்கு யாரும் நினைக்கலை நேரத்தை பத்திரப்படுத்த..கணக்கு இன்னும் சரியாவரலைன்னு நினைக்கிறேன்... nice one aruna

காமராஜ் said...

என்னவென்று சொல்ல அருணா.
நீங்கள் தேர்வு செய்யும் கவிதைக்கான object
பல நேரங்களில் இல்லை எல்லா நேரங்களிலும்,ஆச்சர்யப்படுத்துகிறது.பூங்கொத்து.

அன்புடன் அருணா said...

philosophy prabhakaran said...
/ குறை சொல்வதற்கு மன்னிக்கவும்... முதல் பத்தியில் கணக்கு ஸ்பெல்லிங் மாற்றவும்.../
நன்றி!திருத்தி விட்டேன்!

மாணவன் said...

அருமையான வரிகள்....
மிகவும் யதார்த்தமாக உள்ளது

“என் நாட்குறிப்பில்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரியாகவில்லை.....””

மனதை தொட்டவை

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
மாணவன்

சந்தனமுல்லை said...

:-) enjoyed.

Chitra said...

ம்ம்ம்...இன்றும்
பத்திரப் படுத்தும் நொடிகளுக்கும்
களவு போகும் நொடிகளுக்கும்
கணக்கு சரி வரப் போவதில்லை!!!


.....ஆஹா... கலக்கிட்டீங்க!!! சூப்பர்!
HAPPY DEEPAVALI!

vinu said...

paavam yaaru peththaa pullaiyooo ippudi inthaa chinna vayasulla aagipochennu romba varuththamaa irrukuopaa; udambai paarthukkangaa; vartaaa

கிறுக்கன் said...

உண்மையில் எனக்கு புரியவில்லை!!!!
என்னமோ சொல்ல வரீங்க என்னனுதான் கிறுக்கு புத்திக்கு தெளியவில்லை.

-
கிறுக்கன்

priya.r said...

மாடர்ன் ஆர்ட் மாதிரி இந்த கவிதையும்!

புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு

ஒருவேளை நான் நினைப்பது போல நேரத்தை செலவிட முடியவில்லை
என்பது தான் உள் பொருளோ !

அன்பு டீச்சர் அருணாவின் பதிலுக்காக பூங்கொத்துடன் காத்திருக்கும்
மாணவி!

Maddy said...

அட, இப்படி ஒரு வித்தை இருக்கா? நல்ல வேலை முள் இருக்கற கடிகாரம் இல்லே இங்கே. உங்க வித்தைய யூஸ் பண்ணி ஒரு இருபது வயச குறைச்சுக்க போறேன்!!! ஸ் ஸ் ஸ் ஸ் யாருக்கும் இந்த ரகசியத்த சொல்லேடாதீங்க

க ரா said...

நல்லா இருக்குங்க இந்த் கவிதையும் :)

தாராபுரத்தான் said...

கணக்கு வரவில்லையே..

அன்புடன் அருணா said...

ராமலக்ஷ்மி
Balaji saravana
philosophy prabhakaran அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி தமிழரசி !
பூங்கொத்துக்கு நன்றி காமராஜ்!

Karthik said...

எனக்கு புரிஞ்சிடுச்சேய். நல்லாருக்கு. :)

Anonymous said...

அருமை தோழி

அன்புடன் அருணா said...

மாணவன் said...
/உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்/
நன்றி மாணவன்!

நன்றி சந்தனமுல்லை
நன்றி Chitra .

Public Domain said...

உண்மையில் எனக்கு புரியவில்லை

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா