நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, September 27, 2010

உடனடித் தேவை....

என்னை இழுத்துச் செல்லும் ஒரு நதியும்
பறவையிறகு போல் மிதக்கச் செய்யும் காற்றும்
நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும்
உடனடித் தேவை....

நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்
உண்மை பேசிக் கொள்ளும் மனிதர்களும்
உடனடித் தேவை....

கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......
உடனடித் தேவை....

34 comments:

skamaraj said...

வாழ்வின் மிக உன்னதமானவைகள். ஓசியில் கிடைக்கக்கூடியவை.ரசனை மிகுந்ததவை,கவிஞனாக்குபவை எல்லாவற்றையும் கேட்டிருக்கிறீர்கள்.உடனடியாகத்தரப்பட்டது.ஒரு கண்டிசன்.அடிக்கடி பதிவெழுதனும்.அவ்ளோதான்.

நல்லா இருக்கீங்களா மேடம் அருணா. ரொம்ப வேலைச்சுமையா ?.
கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்க இங்க வந்துட்டுப்போங்க.

ராமலக்ஷ்மி said...

//கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.......//

ஆகா, வேண்டும் இவை எல்லோருக்குமே! அழகான கவிதை அருணா.

எல் கே said...

//நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்.//

இது இனி கற்பனைதான் . இந்தாருங்கள் பூங்கொத்து

சாந்தி மாரியப்பன் said...

//கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்//

இது எல்லாமே எங்க வீட்டுக்கும் வர்றதுண்டு, உங்க கிட்டயும் அனுப்பி வைக்கிறேன் :-))))அசத்தல் கவிதைக்கு பூங்கொத்து.

அம்பிகா said...

\\நினைத்ததைக் கொடுக்கும் ஜீ பூம்பா பூதங்கள் சிலவும்
சொர்க்கத்துக்கு வழி தெரிந்த தேவதைகளும்\\
ஆஹா!!!

வால்பையன் said...

கண்ணை மூடிகிட்டு தூங்கினா எல்லாம் கிடைக்கும், அதான் இப்போ உங்களது உடனடி தேவை!

பவள சங்கரி said...

உங்களுக்கு கண்டிப்பாக பூங்கொத்துதாங்க........அருமை. வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

எல்லாம் கிட்(டட்)டும்...

நல்லாயிருக்குங்க...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சின்னச் சின்ன ஆசை ? :))

ரவி said...

குட் !

சந்தனமுல்லை said...

ரசித்தேன்....

Anonymous said...

//தொலைக்கும் வெயிலும்
மீட்டுத் தரும் மழையும்
தூவும் அரிசி கொத்தும் குருவிகளும்....//

ஒரு காட்சி மனதில அப்படியே விரியுது..
நைஸ் :)

thiyaa said...

அருமை ரசித்து படித்தேன்

சுந்தரா said...

//கொஞ்சம் என்னைத் தொலைக்கும் வெயிலும்
கொஞ்சம் என்னை மீட்டுத் தரும் மழையும்
நான் தூவும் அரிசி கொத்தக் கொஞ்சம் குருவிகளும்....
பிடித்த கையில் ஒட்டிக் கொள்ளும் வண்ணங்களுக்காக
சில வண்ணத்துப் பூச்சிகளும்.....//

அழகு!!!

மாதேவி said...

ரசனை.

ஈரோடு கதிர் said...

||நிமிர்ந்து பார்க்க ஒரு வானமும் ||

நகர்புரத்தில் மறந்தே போச்சுங்க

அன்புடன் அருணா said...

16 comments:
skamaraj said...
/வாழ்வின் மிக உன்னதமானவைகள். ஓசியில் கிடைக்கக்கூடியவை.ரசனை மிகுந்ததவை,கவிஞனாக்குபவை எல்லாவற்றையும் கேட்டிருக்கிறீர்கள்.உடனடியாகத்தரப்பட்டது.ஒரு கண்டிசன்.அடிக்கடி பதிவெழுதனும்.அவ்ளோதான்./
எழுதணும்னு ஆசைதான்....ம்ம்ம்..நேரம்...நெட் கனெக்ஷன் பண்ற சண்டித்தனம்...எல்லாம் கூடி வரணுமே!
/நல்லா இருக்கீங்களா மேடம் அருணா. ரொம்ப வேலைச்சுமையா ?./
நல்லாவே இருக்கேன்...வேலையும் அதிகம்தான்!
/கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கோங்க இங்க வந்துட்டுப்போங்க/
ரைட்டு!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
பூங்கொத்துக்கு நன்றி LK !

ஆ.ஞானசேகரன் said...

தேவையான தேவைகள்தான்

ஹேமா said...

எங்களைஆசுவாசப்படுத்த மனிதர்களைவிட இயற்கையே உடனடித்தேவை.
பூங்கொத்துப் பிடியுங்கள் இப்போதைக்கு !

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said...
/ இது எல்லாமே எங்க வீட்டுக்கும் வர்றதுண்டு, உங்க கிட்டயும் அனுப்பி வைக்கிறேன் :-))))அசத்தல் கவிதைக்கு பூங்கொத்து./
ஆஹா!நன்றி அமைதிச்சாரல்!!!
நன்றி அம்பிகா !
வால்பையன் said...
/கண்ணை மூடிகிட்டு தூங்கினா எல்லாம் கிடைக்கும், அதான் இப்போ உங்களது உடனடி தேவை!/
ரொம்ப சரி வால்!!

அன்புடன் அருணா said...

நன்றிநித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
/உங்களுக்கு கண்டிப்பாக பூங்கொத்துதாங்க../
பூங்கொத்துக்கு நன்றி!
க.பாலாசி said...
/எல்லாம் கிட்(டட்)டும்.../
நன்றி க.பாலாசி !
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/சின்னச் சின்ன ஆசை ? :))/
அதே முத்துலெட்சுமி!நன்றி!
நன்றி செந்தழல் ரவி !

அருண் பிரசாத் said...

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் மாதிரி இருக்கு... கிடைக்காததா பார்த்து கேட்டு இருக்கீங்க

Karthik said...

தல பாட்ட ஞாபகப் படுத்திட்டீங்க மேம்! :)

அன்புடன் அருணா said...

சந்தனமுல்லை
Balaji saravana
தியாவின் பேனா அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தரா
நன்றி மாதேவி
ஈரோடு கதிர் said...
/நகர்புரத்தில் மறந்தே போச்சுங்க/
உண்மைதான் ..தலைக்கு மேலே வானம் இருப்பதையே மறக்கும் ஓட்டமல்லவா ஓடிக் கொண்டிருக்கிறோம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகான கவிதை

KParthasarathi said...

உங்கள் தேவைகள் நியாயமானவை .உடனேயே கைகூடட்டும்.தேவைகளில் ஒரு எழிலும் முதிர்ச்சியும் தெரிகிறது

VELU.G said...

உங்கள் தேவைகளை அடைய வாழ்த்துக்கள்

callezee said...

Good one enjoyed from top to bottom..

அன்புடன் அருணா said...

நன்றி ஆ.ஞானசேகரன்
பூங்கொத்துக்கு நன்றி ஹேமா !!

அன்புடன் அருணா said...

அருண் பிரசாத் said...
/சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் மாதிரி இருக்கு... /அட!!

Karthik said...
/தல பாட்ட ஞாபகப் படுத்திட்டீங்க மேம்! :)/
உங்களுக்கும் அதே அட!தான் கார்த்திக்!

Thamira said...

அழகு.

(எந்திரன் டிக்கெட்டு
இப்போதைக்கு எனக்கு
உடனடித்தேவை..)

:-))

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
(எந்திரன் டிக்கெட்டு
இப்போதைக்கு எனக்கு
உடனடித்தேவை..)//
எந்திரன் டிக்கெட்டு ஒண்ணு பார்சேல் to ஆதிமூலகிருஷ்ணன் !!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா