நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Sunday, September 5, 2010

தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!

"நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி
ஞ்சனை சொல்வாரடி கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி"
"மஹாகவி பாரதியார்"
நேர்மையாக இருப்பது கடினம்தான் ஆனால் முடியாததல்ல.
அறிவியல்,ஆங்கிலம்...அது இது என்று ஆயிரம் பாடங்களை எளிதாகக் கற்றுக் கொடுத்து விடலாம்.ஆனால் இந்த நேர்மை இருக்கே இதை எப்பைடிச் சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு பெரிய கலை.அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொள்ள வைப்பதே தவறான வழி...அதை நடைமுறைப்படுத்தி அதிலிருந்து கற்றுக் கொள்ளச் செய்வதே சரி.ஆசிரியர்கள் பெற்றோர்கள் ரோல் மாடல் அல்லது வழிகாட்டியாக இருப்பது அவசியம்.சமயங்களில் இது முடியாமல் போய் விடுகிறது ஆசிரியர்களுக்கு.
உதாரணம் ஒன்று:

எங்கள் பள்ளியில் 12-ம் வ்குப்பு மாணவர்களுக்கு ஐ.ஐ.டி பற்றிய செமினார் ஒன்றுக்கு வந்த ஒரு பெரிய அதிகாரி சொன்ன விஷயமிது.....
"எல்லோரும் காப்பியடிக்கும் ஒரு அறையில் நீங்கள் காப்பியடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்களின் நேர்மையை அல்ல உங்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.அங்கே நீங்கள் சிறப்பாகக் காப்பியடித்து உங்களை முன்னிறுத்திக் கொள்ள வேண்டிய தருணமது.அங்கே நேர்மை அது இது என்று நினைத்து நேரத்தை வீணாக்கினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர் என்றுதான் முத்திரை குத்துவோம்"
முகத்திலறைந்தது உ ண்மை.
உதாரணம் இரண்டு:
ஒரு ஆசிரியர் தான் தயாரித்த கேள்வித்தாளில் வரும் அத்தனை கேள்விகளையும் டியூஷனுக்கு வரும் மாணவர்களுக்குச் சொல்லிப் படிக்க வைத்து விட்டார்.இது தெரிந்த நன்றாகப் படிக்கும் மாணவன் என்னிடம் முறையிட..உட்னடியாகக் கேள்வித்தாள் மாற்றியமைத்து அந்த ஆசிரியரின் பேரில் நடவடிக்கையும் எடுக்கப் பட்டது.
அடுத்த நாள் அந்த மாணவனை நிறைய மாணவர்கள் அடித்துத் துவைத்து விட்டார்கள்.ஆஸ்பத்திரியில் பார்க்கச் சென்ற போது...
"எல்லோரும் சும்மாயிருக்கும் போது இவனுக்கு மட்டும் என்ன வந்ததும்மா..?இவன் ஏம்மா கம்ப்ளெயின்ட் பண்ணணும்????இப்படிப் போட்டு அடிச்சுருக்காங்களே" என்றலறும் அம்மாவிடம் நேர்மை பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியவில்லை.
உதாரணம் மூன்று:

ஒரு பள்ளியின் 12ம் வகுப்புத் தேர்வுக்கு அடுத்த பள்ளியில் போய்தான் பரீட்சை எழுதவேண்டும்.சென்டர் எங்கு போட்டிருக்கிற்தோ அங்கு.அங்கு சென்று எழுதிய பள்ளி மாணவர்கள் திரும்பி வந்து அங்கு நடந்த முறைகேடுகளை ஒவ்வொன்றாகச் சொன்னார்கள் பள்ளி முதல்வரிடம்.பள்ளி முதல்வர் உடனடியாக இதை போர்ட் அதிகார்களுக்குத் தகவல் அளிக்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சிட் கொண்டு வந்து கொடுப்பதுவும்,விடைகளை சொல்வதுவுமாகவே பரீட்சைகளும் முடிந்தன.அந்தப் பள்ளி முதல்வரும் விடாது மேலிடத்துக்கு மேலிடம் என அனைத்து இடங்களிலும் முட்டி மோதிப் பார்த்துவிட்டார்.ஒன்றும் நடக்கவில்லை.எதுவும் முடியாமல் நேரில் சென்றும் முறையிட்டார்.அன்றிலிருந்து இன்றுவரை இப்போது அந்தப் பள்ளியின் மீதும் பள்ளி முதல்வர் மீதும் தேவையில்லாமல் தினமும் ஒரு கம்ப்ளெயின்ட் மேலிடத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது.பரீட்சை முறைப்படி நடக்க வேண்டும் எனப் பள்ளி முதல்வர் நினைத்தது தவறா?நேர்மையான எண்ணமுள்ளவர்கள் இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டுமா?
நேர்மையை இவ்வ்ளோ கஷ்டப்பட்டுக் கற்றும் அது நிறைய எதிரிகளை உருவாக்கும் என்பதுவும்,நண்பர்களைத் தூரம் விரட்டிவிடும் என்பதுவும் தெரிந்தால் எவ்வ்ளோ மாணவர்கள் நேர்மையை நிலைநாட்ட முயல்வார்கள் எனபதுவும் பெரிய கேள்விக்குறி.
பொதுவிடத்தில் நேர்மையைப் பற்றிச் சொல்வதற்கும் பதிவதற்கும் வேறு வேறு வார்த்தைகளும்,நாம் தனித்திருக்கும் போது பதிவு செய்யும் நேர்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பதை வேறு வேறு நிகழ்வுகளில் உணர்ந்தேயிருக்கிறேன்.கோடாரி தந்த தேவதையின் முன்னால் தங்க,வெள்ளிக் கோடரிகளை எனதில்லை எனச் சொல்லும் நேர்மை எனக்கிருக்கிறதா என்றும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்...........
தேவை எதையும் தாங்கும் இதயம் கொண்ட ஆசிரியர்கள்!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

39 comments:

pudugaithendral said...

ஆமாம் அருணா,

பூங்கொத்துக்களுடன் என் மனமார்ந்த ஆசிரியை தின நல்வாழ்த்துக்கள்

kaamaraj said...

முதல் தகவல் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் ஓங்கி அடிக்கிற அதிர்ச்சி த்தகவல்.
எத்தனையோ ஆசிரியர்கள் வந்து போனாலும் ஒரு சிலர் மட்டும் மனசில் சம்மணமிட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையாளர்களாகவும்,மனிதாபிமானிகளாகவும் கதை சொல்லிகளாகவும் இருப்பதே காரணம்.

அருணா என்கிற ஆசிரியருக்கும். கற்றலை இனிமையாக்குகிற எல்லோர்க்கும் என் வாழ்த்துக்கள்.

பத்மா said...

happy teachers day Aruna...

i owe a lot to my teachers ..i firmly believe i
am what i am only due to them ..

greetings again

ny said...

hpy teachers day..
i admire u all :)

சுந்தரா said...

வாழ்த்துக்கள் அருணா!

சத்ரியன் said...

//அறிவியல்,ஆங்கிலம்...அது இது என்று ஆயிரம் பாடங்களை எளிதாகக் கற்றுக் கொடுத்து விடலாம்.ஆனால் இந்த நேர்மை இருக்கே இதை எப்பைடிச் சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு பெரிய கலை.//

ஆமாங்க அருணா,

நேர்மையே ஒரு கலை தாங்க. அதை ரசிக்கலாமேத் தவிர, கடைப்பிடிப்பதென்பது.....??????

(பள்ளியில் நீங்கள் எனக்கு ஆசிரியர் அல்ல. பதிவின் மூலம் ஏதோ ஒன்றை எனக்குப் புகட்டியிருப்பீர்கள். அந்த வகையில் நீங்களும் எனக்கு ஆசிரியை தான்.)

உங்களுக்கு இந்த மாணவனின் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...

அம்பிகா said...

\\.கோடாரி தந்த தேவதையின் முன்னால் தங்க,வெள்ளிக் கோடரிகளை எனதில்லை எனச் சொல்லும் நேர்மை எனக்கிருக்கிறதா என்றும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.........\\
அருமையான பகிர்வு மேடம்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

Karthik said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் மேம்! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பூங்கொத்து, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அருணா..

உண்மையான உண்மை ,நேர்மையாக வாழ்வதில் முட்டாள்த்தனமொன்றும் இல்லை. ஆனால் நேர்மையற்றோரை காட்டிக்கொடுப்பதில் அதனால் ஆபத்தை வரவழைக்காதவகையில் அதனை செயல்படுத்த தெரியவேண்டும்..

பவள சங்கரி said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...... உங்களுக்கு ஒரு அழகான பூங்கொத்து........

கிறுக்கன் said...

இச்சிறியனின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!!!

நல்சிந்தனை தூண்டும் பதிப்பு...அதுவும் ஆசிரியர்கள் கட்டாயம் யோசிக்க வேண்டிய விஷயம்...நீங்கள் தான் ஒரு நல் சமூகத்தை உருவாக்கும் ப்ரம்மா...உங்களின் சக்தி அளப்பரியது...
தங்களை போல் யாவரும் சிந்திப்பார்களேயானால்...இப்புவி புதிராய் தெரியாது அதன் புனிதம் புரியும்...
/...
"எல்லோரும் காப்பியடிக்கும் ஒரு அறையில் நீங்கள் காப்பியடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்களின் நேர்மையை அல்ல உங்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது.....தருணமது.அங்கே நேர்மை அது இது என்று நினைத்து நேரத்தை வீணாக்கினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர் என்றுதான் முத்திரை குத்துவோம்"

--/
இத்தகைய சிந்தனைகள் பயமுறுத்துகின்றன...நம் இளைஞனின் மனநிலை என்னாகும்...இதை தானே அவன் மெரினா கடற்கரையிலும் பின்பற்ற முயலுவான்....

/--
நேர்மையை இவ்வ்ளோ கஷ்டப்பட்டுக் கற்றும் அது நிறைய எதிரிகளை உருவாக்கும் என்பதுவும்,நண்பர்களைத் தூரம் விரட்டிவிடும் என்பதுவும் தெரிந்தால் எவ்வ்ளோ மாணவர்கள் நேர்மையை நிலைநாட்ட முயல்வார்கள் எனபதுவும் பெரிய கேள்விக்குறி.
--/

இந்த கேள்விக்கு உங்களை போல் ஆசிரியர்களால் கட்டாயம் விடை காண முடியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து....

அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்.

-
கிறுக்கன்

R.Gopi said...

இதயம் கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்....

நல்ல ஆசிரியர்களாலேயே நல்ல மாணாக்கர்களை உருவாக்க முடியும்...

நல்ல மாணாக்கர்களே வரவிருக்கும் நாட்களில் புதியதொரு உலகை செய்ய இயலும்....

மற்றுமொரு நல்ல பதிவு அருணா மேடம்...

இதோ என் வாழ்த்துக்களுடன் ஒரு பெரிய பூங்கொத்து

vinu said...

கோடாரி தந்த தேவதையின் முன்னால் தங்க,வெள்ளிக் கோடரிகளை எனதில்லை எனச் சொல்லும் நேர்மை எனக்கிருக்கிறதா என்றும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்...........

pathil

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்- அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - மதி தன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

all your's, i'm just a composer

annaiyinarul said...

அன்பு அருணாஜி என் மகன் திரு விஷி என்ற விஸ்வநாதன் உங்களைப்பற்றிச்சொல்ல இதைப்பார்த்தேன் .ஆசிரியர் மாணாக்கர் உறவு எங்கேயோ போய் நிற்கிறது என் ஒரு அனுபவம்
பத்தாவது பரீட்சை ஹாலில் ஒரு பெண் ஆங்கிலம்
பரீட்சையில் சரியாக ஆங்கிலத்தில் விடை அளிக்கமுடியாமல் திணறி பின் ஹிந்தியில் எழுதினாள்
விடைத்தாளைத்திருத்தப்போகும் ஐயா நான்
மூன்றாம் தடவை பத்தாவது பரீட்சை எழுதுகிறேன்
எனக்கு எப்படியாவது மார்க் போட்டுவிடு நான் என்னையே உனக்குத்தருவேன்"

நான் invigilationசெய்து வருகையில் இது என்ன! ஆங்கிலத்தாளில் ஹிந்தியில் எதோ எழுதுகிறாளே என்ற
ஆர்வம் மேலிட பின்னால் நின்று படிக்க ஒரே ஷாக்
என்ன செய்வது ? ஒன்றும் செய்யமுடியாமல் அவள்
பேப்பரும் வாங்கிக்கொண்டோம் private canditate
ஆக வந்தவளாம் அவள்
இப்போதெல்லாம் ஆசிரியர் முள் மேல் நிற்பது போல்
தான் நிலமை ....அன்புடன் விசாலம்

அன்புடன் அருணா said...

நன்றி புதுகைத் தென்றல் !
kaamaraj said...

/முதல் தகவல் முகத்தில் மட்டுமல்ல முதுகிலும் ஓங்கி அடிக்கிற அதிர்ச்சி த்தகவல்.
எத்தனையோ ஆசிரியர்கள் வந்து போனாலும் ஒரு சிலர் மட்டும் மனசில் சம்மணமிட்டுக்கொள்கிறார்கள். அவர்கள் நேர்மையாளர்களாகவும்,மனிதாபிமானிகளாகவும் கதை சொல்லிகளாகவும் இருப்பதே காரணம்./
புரிதலுக்கு நன்றி காமராஜ்!

Thank you பத்மா !

அன்புடன் அருணா said...

Thank you kartin !
நன்றி சுந்தரா!

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இப்பவெல்லாம் மாணவர்கள் அறிவாளிகளாக, புத்திசாலிகளாக, தீறமையானவர்களாக இருப்பதைவிட, "Street smart"ஆக இருக்க வேண்டும் என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு நேர்மை தேவையில்லை போல!!

அன்புடன் அருணா said...

சத்ரியன் said...
/ஆமாங்க அருணா,
நேர்மையே ஒரு கலை தாங்க. அதை ரசிக்கலாமேத் தவிர, கடைப்பிடிப்பதென்பது.....??????/
முடியாதென்பதொன்றுமில்லை!

(பள்ளியில் நீங்கள் எனக்கு ஆசிரியர் அல்ல. பதிவின் மூலம் ஏதோ ஒன்றை எனக்குப் புகட்டியிருப்பீர்கள். அந்த வகையில் நீங்களும் எனக்கு ஆசிரியை தான்.)
நன்றி சத்ரியன்

தமிழரசி
அம்பிகா

அன்புடன் அருணா said...

நன்றி தமிழரசி அம்பிகா !!

அன்புடன் அருணா said...

நன்றி Karthik !
முத்துலெட்சுமி/muthuletchumi said...

/உண்மையான உண்மை ,நேர்மையாக வாழ்வதில் முட்டாள்த்தனமொன்றும் இல்லை. ஆனால் நேர்மையற்றோரை காட்டிக்கொடுப்பதில் அதனால் ஆபத்தை வரவழைக்காதவகையில் அதனை செயல்படுத்த தெரியவேண்டும்../
நேர்மையற்றவர்கள் நிறைய பலமுள்ளவர்களாகவும் இருந்து விடுகிறார்களே முத்துலெட்சுமி!

அன்புடன் அருணா said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
பூங்கொத்துக்கு நன்றி!
கிறுக்கன் said...
/இத்தகைய சிந்தனைகள் பயமுறுத்துகின்றன.../
அதே பயம்தான் எனக்கும்.

/இந்த கேள்விக்கு உங்களை போல் ஆசிரியர்களால் கட்டாயம் விடை காண முடியும் என்பது இக்கிறுக்கனின் கருத்து..../
அந்த முயற்சியில்தான் என் பயணம்....

/அறிவுக்கண் திறவும்போது இதயகண் பழுதானால்
அழிவே அறிவின் பயன்./
100% உண்மை.

vinu said...

present teacher

priya.r said...

Belated Teachers Day wishes Aruna

Nice Post
சமுக சிந்தனை உள்ள பகிர்வு
இந்த பதிவு என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது
நன்றி அருணா
உங்கள் நேர்மைக்கு எங்கள் பூங்கொத்து!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அருணா..

சாந்தி மாரியப்பன் said...

தாமதமான வாழ்த்துக்கள் அருணாமேடம்.. ரொம்பவே சிந்திக்க வெச்ச இடுகை. நேர்மையா இருப்பது அவ்வளவு தப்பாக பார்க்கப்படுது இப்போதைய காலகட்டத்தில்.. என்னதான் தீர்வு!!!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றிப்பா R.Gopi !
vinu said...

/all your's, i'm just a composer/
It's not even mine!!!:)

annaiyinarul said...

/அன்பு அருணாஜி என் மகன் திரு விஷி என்ற விஸ்வநாதன் உங்களைப்பற்றிச்சொல்ல இதைப்பார்த்தேன் ./
உங்கள் வருகைக்கும்..கருத்துக்கும் ரொம்ப நன்றிம்மா!
/இப்போதெல்லாம் ஆசிரியர் முள் மேல் நிற்பது போல்தான் நிலமை ....அன்புடன் விசாலம்/
ரொம்ப சரியாச் சொன்னீங்கம்மா.

அன்புடன் அருணா said...

ஹுஸைனம்மா said...
/ "Street smart"ஆக இருக்க வேண்டும் என்றுதானே எல்லாரும் சொல்கிறார்கள். அதற்கு நேர்மை தேவையில்லை போல!! /
அதுதான் கவலை!
vinu said...

/ present teacher/
முத்ல்லே கமென்ட் போட்டவுடனேயே அட்டெண்டன்ஸ் போட்டுட்டேனே!

Anonymous said...

madam,
the harsh reality of eroding values had once again hit me and only because of a few well wishers of the society who still go around talking it still rains.
Salutaions teacher on this holy day.
sidharth

Unknown said...

நேர்மையைச் சொல்லிக் கொடுப்பதுடன், நேர்மையுடன் வாழ்வதெப்படி என்பதையும் (தெரிந்தால்) சேர்த்தே சொல்லித் தர வேண்டும்.

அன்புடன் அருணா said...

அமைதிச்சாரல் said...
/ என்னதான் தீர்வு!!!! /
அதே என் கவலையும்....
சுல்தான் said...

/நேர்மையைச் சொல்லிக் கொடுப்பதுடன், நேர்மையுடன் வாழ்வதெப்படி என்பதையும் (தெரிந்தால்) சேர்த்தே சொல்லித் தர வேண்டும். /

ரொம்ப சரி!

அன்புடன் அருணா said...

madam,
/ the harsh reality of eroding values had once again hit me and only because of a few well wishers of the society who still go around talking it still rains.
Salutaions teacher on this holy day.
sidharth /
Rightly said Sidharth!Thanx for the comment and wishes.

ரசிகன் said...

//எல்லோரும் காப்பியடிக்கும் ஒரு அறையில் நீங்கள் காப்பியடிக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது உங்களின் நேர்மையை அல்ல உங்களின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது//

இதுதான் நிதர்சனமோ???

அன்புடன் அருணா said...

ரசிகன் said...
/ இதுதான் நிதர்சனமோ???/
இது நிதர்சனம் என்பதுதான் முகத்தில் அறைந்தது ரசிகன்..

ஆ.ஞானசேகரன் said...

மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் அருணா

மந்திரன் said...

நேர்மையாக இருக்க பலர் முயற்சிக்க வில்லை . அதை கூட பொறுத்து கொள்ளலாம் . ஆனால் நேர்மையாக இருப்பது கேனத் தனமானது என்ற அறிவுரை பலர் கூறுகிறார்கள் .
உங்கள் பதிவு கூட அதை மறைமுகமாக சொல்லி கொடுக்கிறதோ என எனக்கு சந்தேகம் .

மாய உலகம் said...

பெரும்பாலும் ஆசிரியர்கள் இது போல் நடந்து கொள்வதால் ஆசிரியர்களின் மீதுள்ள மதிப்பு குறைந்துக்கொண்டே வரும்.... நீங்கள் சொன்ன ஆசிரியர்களை எனது அனுபவத்திலும் தரிசித்து விட்டு வந்திருக்கிறேன்... நன்றி தோழி

மாய உலகம் said...

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

SURYAJEEVA said...

நேர்மையாக இருப்பதால் எவ்வளவோ இழக்கலாம், சொகுசு, பணம் பதவி அருமையான வாழ்க்கை என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் சத்தியமாய் பெயரை நீங்கள் இழக்கப் போவதில்லை.. உங்கள் நேர்மை தான் உங்கள் முகவரி.. எனது கல்லூரி காலங்களில் காப்பி அடிக்க மாட்டேன் என்று சொன்னதற்காக என் விடைத்தாள்களில் சீர்திருத்தம் செய்து நீ எப்படி பாஸ் பண்ணுகிறாய் என்று பார்க்கிறேன் என்று கூறிய என் விரிவுரையாளர்கள் இன்றும் என் மனக்கண்ணில் அடிக்கடி வந்து போவதுண்டு.. அவர்களுக்கு நான் சொல்வது எல்லாம் ஒன்று தான் நான் வாழ்க்கையில் பாஸ் செய்து விட்டேன்..

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா