நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 23, 2010

மன்னிக்க வேண்டுகிறேன்--1

இரவு ஏழு மணிக்காகக் காத்திருப்போம்.அப்போதானே பெட்டிக் கடை மொட்டைத் தாத்தா விளக்கேத்துவார்.சின்னதா ப்ரௌண் கலர் க்ளைகோடின் பாட்டிலில் துணித்திரி போட்டு ஒரு அலுமினியப் பெட்டி மேல வச்சு அவ்வ்ளோ புகையாக்கிக் கொண்டிருப்பார் கடையை ...அப்புறமா பூதங்களாகிய நாங்க வெளியே கிளம்புவோம்.வேறொண்ணுமில்லை.வீட்டில் மாம்மை கொடுத்த பழங்காலத்து செப்பு நாணயங்கள்.....ராஜா, ராணி படம் போட்ட செல்லாத காசு...ஆனால் அதைச் செல்ல வைக்கணுமே.அதுக்கு தேர்ந்தெடுத்த நேரம்தான் இரவு ஏழு மணி.அவர்கிட்டே சூப்பரான கல்கோணா மிட்டாய் கிடைக்கும்.ஒரு மணி நேரம் ஆனாக் கூட கரையவே கரையாது......அந்தச் செல்லாத செப்புக் காசை 25 பைசாவாக நினைத்து 5 கல்கோணா கொடுப்பார்.ஆனாலும் அவ்வ்ளோ சீக்கிரம் கொடுத்து விடமாட்டார்.......விளக்குப் பக்கத்தில் காசை வைத்துக் கொண்டு புரட்டிப் புரட்டி ஐந்து தடவையாவது பார்ப்பார்.

ஆனாலும் கண்டு புடிச்சதேயில்லே.....சந்தோஷத்தில் வீடு அதிரும்.ஏமாத்துறொம்னு கொஞ்சம் கூட உணர்வேயில்லாத வயசு.தினம் தினம் இப்படிச் செல்லாத செப்புக் காசுகள் தீரும் வரைக்கும் தினம் தினம் கல்கோணாதான்.யோசிச்சுப் பார்த்தா பாவமாயிருக்கு இப்போ....

அப்புறமா பதின்ம வயதில் பெரிய மேதாவித் தனத்தைக் காட்ட அப்போதுதான் கற்றுக் கொண்ட ரூபா நோட்டை வெயிலில் உயர்த்திப் பிடித்து ஒற்றைக் கோடு பார்த்துக் கள்ள நோட்டு நல்ல நோட்டுக் கண்டு பிடிக்கும் உத்தியைப் பரிசீலிக்கும் ஆர்வத்துடன் அப்பா முன்னிலையில் வீட்டுக்கு வந்த டோபியின் முன்னால் செய்ய...."நல்ல நோட்டுத்தான் பாப்பா" அப்படீன்னு அவர் சொல்லச் சொல்லத் திரும்பவும் வெயிலுக்கு நேரே உயர்த்திப் பிடிக்க அப்பா சொன்னது

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."

தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றியதற்காகவும், மனதை நோகடித்ததற்காகவும் இருவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.

36 comments:

காமராஜ் said...

பட்டுப்பூச்சிகளின் சிறகை பிய்க்காத சிறு பிராயம் உண்டா.

இந்தப் பொருளில் ஒரு கவிதை உண்டு.
அதுபோலவே...முதியவர்களை ஏமாற்றாத பிள்ளைப்பருவம் வாய்ய்ப்பதும் அரிது.
அதுஒன்றும் மாபாதகம் இல்லை மன்னிப்புக்கேட்க.அவரும் வரது தாத்தாவிடமோ பாட்டியிடமோ இப்படி
இனிக்கிற ஏமாற்றுவேலை செய்திருப்பார்.நாம் கொடுத்துவைத்தவர்கள் அதை சிலாகிக்கத்தருகிறோம்.

இனிதான் காலைப்பொழழுதில் பசக்கென்ரு பிடித்துக்குழந்தைப்பருவத்துக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டது டீச்சர், எழுத்து.

Balaji saravana said...

சின்ன வயதிலையும் பதின்மத்திலேயும் பண்ணின விசயங்களுக்கு இப்போ மன்னிப்பு கேக்குறது உங்க முதிர்ச்சிய காமிக்குது அருணா!
பட் இந்த விஷயங்கள் உங்கள ஆழமா வருத்தத்துல தள்ளாம பாத்துக்கங்க!
இந்த கருத்துல தவறிருந்தா மன்னிக்க!

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."

ஆஹ்ஹா..நாம் எழுதிக்கொண்டிருக்கும்போதே நமக்குத்தெரியாமல் ஒரு பூ பூத்துவிடும் þÃñÎ சிறகு முளைத்துவிடும். அசத்தலான இப்படி வரிகள் தெறித்துவிழும்.

ஆனாலும் இப்போது யாரும் உங்களை மன்னிக்கத் தயாராக இல்லை. நீங்கள் தாத்தாவிடம் கேட்க,அவர் «வரது தாத்தாவிடம் கேட்À¡÷.இப்படித் தொடர் சங்கிலியாய் பின்னோக்கிப்போக கால எந்த்ரம் தடுமாறும். ஆகையால் உங்கள் மன்னிப்புக்கான கோரிக்கையை மீளப்பெற்றுக் கொள்ளுங்கள் அருணா..

Chitra said...

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."


.....எத்தனை ஆழமான அர்த்தம் கொண்ட வரி...... ஆஹா.....

இந்த இடுகை வாசித்த போது, தப்பு செய்து உள்ளதாக தோன்றவில்லை. It is a child's play. :-)

ஹுஸைனம்மா said...

நமது சிறுவயதில் தட்டாம்பூச்சியைப் பிடித்துத் துன்புறுத்தி விளையாடியதுண்டு; ஆனால் இப்போது யாரேனும் அவ்வாறு விளையாடினால் கண்டிப்போமா அல்லது விளையாடி மகிழட்டும் என்று விடுவோமா? இது நாம் செய்த தவறுக்கு மானசீகமாக ஒரு பிராயசித்தம்தானே?

அப்புறம், கல்கோணா.... ஸ்... நாக்கு ஊறுது...

யாசவி said...

கல்கோணா மிட்டாயை பற்றி எழுதும் முதல் ஆள் நீங்கள்தான்.

யாரிடம் கேட்டாலும் தெரியவில்லை என்றே சொன்னார்கள்.

என்னுடைய பேவரிட் அது.

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."

ஆழமான வரிகள்

பத்மா said...

செல்லுமா செல்லாதா பார்த்து வாங்குவதில் தப்பு இல்லைங்க அருணா ....

வங்கியில் வேலை பார்ப்பவர்கள் அப்பா அம்மா பணம் கொடுத்தாலும் எண்ணி தான் வாங்கிக்கொள்வார்கள் .அவர்கள் பழக்கம் அப்படி

பத்மா said...

கல்கோணா மிட்டாய் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ..எனக்கும் தெரியவில்லை

கார்க்கி said...

டீச்சர், பதிவு ஃபாண்ட்டின் சைசு ரொம்ப சின்னதா இருக்கே!! கொஞ்ச்ம பெருசுப்படுத்தினா படிக்க வச்டஹியா இருக்கும்

Priya said...

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."....அர்த்தமுள்ள...சிந்தனையை தூண்டும் வரி!

சுசி said...

இதெல்லாம் தப்பே இல்லை மேடம்..

:))))

VELU.G said...

//தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றியதற்காகவும், மனதை நோகடித்ததற்காகவும் இருவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.
//

நல்ல விஷயம் தானே. தவறை உணர்ந்தவகள் மன்னிக்கப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை என்பது தான் வேதனையான விஷயம்

அருமையான பதிவு சகோதரி

செ.சரவணக்குமார் said...

கல்கோணாவை ஞாபகப்படுத்திவிட்டீர்களே டீச்சர்.

மணிவேலன் said...

அட போங்க டீச்சர் :(

பழசையெல்லாம் ஞாபகபடுத்தி..............

ராமலக்ஷ்மி said...

அறியாப் பருவத்தில் எத்தனை விஷயங்கள் இப்படி:)?

//"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."//

அருமையான பகிர்வு அருணா.

kutipaiya said...

//"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."//
மிக ஆழமான வரி!!!

மற்றபடி, இந்த மாதிரி அறியாமல் செய்த தவறுகள் எல்லாம் தப்பு தான், தவறு அல்ல ;) :)

ஆ.ஞானசேகரன் said...

//"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."///


ஆகா.... அருமையான வரி அருணா....

ரசிகன் said...

//"நல்ல நோட்டுத்தான் பாப்பா" அப்படீன்னு அவர் சொல்லச் சொல்லத் திரும்பவும் வெயிலுக்கு நேரே உயர்த்திப் பிடிக்க அப்பா சொன்னது

"நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...."
//

நச்.இப்போதும் அதற்க்கு மன்னிப்பு கேற்க ஒரு பெருந்தன்மை வேண்டுமே.மலர்ந்த நினைவுகள் நல்லாத்தானிருக்கு:)

புன்னகை தேசம். said...

உங்க பெருந்தன்மை நன்று..

நம் குழந்தைகளும் செய்யும்.

தவறுகளிலிருந்தே பல கற்கிறோம்.. முக்கியமா அடுத்தவரை மன்னிக்க.

philosophy prabhakaran said...

உருக்கமான பதிவு தோழி...சின்னதா இருந்தாலும் சிறப்பா இருந்தது...

ஜெஸ்வந்தி said...

Aruna's special. Nice.

priya.r said...

நல்ல பகிர்வு .
அறியாத வயதில் தெரியாமல் செய்ததற்கு
மன்னிப்பு மனதிற்க்குள் கேட்பதே போதும் அருணா; உங்கள் நல்ல உள்ளத்தை
எங்களுக்கும் இந்த பதிவு புரிய வைத்து இருக்கிறது
கல்கோனா வின் சுவையை நினைவூட்டியதற்கு ஒரு சிறப்பு நன்றி
இந்தாங்கோ அருணா பூங்கொத்தும் ஒரு பாக்கெட் கல்கோனாவும்!!

செளமியன் நற்குணன் said...

\\யோசிச்சுப் பார்த்தா பாவமாயிருக்கு இப்போ\\

அப்ப அது யோசிச்சுப் பார்க்கும் பக்குவம் இல்லாத விளையாட்டுப் பருவம்.

ஒரு வேளை தெரிந்தே தங்களிடம் ஏமாந்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.

ஏனெனில் அந்தக் காலத்து மனிதர்களின் கபடமற்ற வாழ்க்கை.

priya.r said...

நாளை கிருஷ்ணா அஷ்டமிக்கு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்
அடுத்த பதிவு எப்பொழுது என அறிய ஆவல் !

GSV said...

பதிவு நல்லா இருக்கு டீச்சர், அப்பறம் இந்த லிங்க் " TAMIL E-BOOKS DOWNLOADS " கொடுத்ததுக்கு இன்னும் ஒரு பூங்கொத்து.

பதிவுலகில் பாபு said...

ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க..

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/இனிதான் காலைப்பொழழுதில் பசக்கென்ரு பிடித்துக்குழந்தைப்பருவத்துக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டது டீச்சர், எழுத்து./
நன்றி காமராஜ்!
Balaji saravana said...
/இந்த கருத்துல தவறிருந்தா மன்னிக்க! /
அட..இதிலென்ன தப்பிருக்கு பாலாஜி?

அன்புடன் அருணா said...

காமராஜ் said...
/ ஆனாலும் இப்போது யாரும் உங்களை மன்னிக்கத் தயாராக இல்லை. நீங்கள் தாத்தாவிடம் கேட்க,அவர் «வரது தாத்தாவிடம் கேட்À¡÷.இப்படித் தொடர் சங்கிலியாய் பின்னோக்கிப்போக கால எந்த்ரம் தடுமாறும். ஆகையால் உங்கள் மன்னிப்புக்கான கோரிக்கையை மீளப்பெற்றுக் கொள்ளுங்கள் அருணா.. /
வாழ்நாளில் மன்னிப்புக் கேட்க நினைத்தும் முடியாமல் தடுக்கும் தருணங்கள் நிறைய இருக்கும்...இப்படிச் செய்வது அதற்கான பரிகாரங்களாகக் கூட இருக்கக் கூடும்.இருந்து விட்டுப் போகட்டும் காமராஜ்.

அன்புடன் அருணா said...

Chitra said...
/ It is a child's play. :-)/
I understand.
ஹுஸைனம்மா said...
/ அப்புறம், கல்கோணா.... ஸ்... நாக்கு ஊறுது.../
எனக்கும் ரொம்பப் பிடிக்கும்.

யாசவி said...
/என்னுடைய பேவரிட் அது./
எனக்கும்!
நன்றி பத்மா!

அன்புடன் அருணா said...

பத்மா said...
/கல்கோணா மிட்டாய் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் ..எனக்கும் தெரியவில்லை/
அது ஒரு கரையவே கரையாத மிட்டாய் பத்மா.
கார்க்கி said...
/டீச்சர், பதிவு ஃபாண்ட்டின் சைசு ரொம்ப சின்னதா இருக்கே!!/
சரி கார்க்கி சரி பண்ணிடலாம்.
நன்றி Priya !
சுசி said...
/இதெல்லாம் தப்பே இல்லை மேடம்../
நீங்க சொன்னா சரிதாங்க!

அன்புடன் அருணா said...

VELU.G said...

//தெரிந்தோ தெரியாமலோ ஏமாற்றியதற்காகவும், மனதை நோகடித்ததற்காகவும் இருவரிடமும் மன்னிக்க வேண்டுகிறேன்.
//

நல்ல விஷயம் தானே. தவறை உணர்ந்தவகள் மன்னிக்கப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை என்பது தான் வேதனையான விஷயம்

அருமையான பதிவு சகோதரி
August 23, 2010 7:14 PM
செ.சரவணக்குமார் said...
/ கல்கோணாவை ஞாபகப்படுத்திவிட்டீர்களே டீச்சர்./
எனக்கும் ஞாபகம் வந்துருச்சே!

மணிவேலன் said...
/அட போங்க டீச்சர் :(/
எங்க போக?

பழசையெல்லாம் ஞாபகபடுத்தி..............

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி kutipaiya
?மற்றபடி, இந்த மாதிரி அறியாமல் செய்த தவறுகள் எல்லாம் தப்பு தான், தவறு அல்ல ;) :)/
அப்படியா??நன்றி kutipaiya
நன்றி ஆ.ஞானசேகரன் !
நன்றி ரசிகன்!

அன்புடன் அருணா said...

புன்னகை தேசம். said...
/ தவறுகளிலிருந்தே பல கற்கிறோம்.. முக்கியமா அடுத்தவரை மன்னிக்க./
அதே புன்னகை தேசம்.!

நன்றி philosophy prabhakaran
ஜெஸ்வந்தி said...
/Aruna's special. Nice./
Thanks for understanding jeswanthi!

priya.r said...

/ இந்தாங்கோ அருணா பூங்கொத்தும் ஒரு பாக்கெட் கல்கோனாவும்!!/
நன்றி பிரியா!

அன்புடன் அருணா said...

செளமியன் நற்குணன் said...
/ஏனெனில் அந்தக் காலத்து மனிதர்களின் கபடமற்ற வாழ்க்கை./
உண்மைதான் செளமியன் நற்குணன்!
/priya.r said...

நாளை கிருஷ்ணா அஷ்டமிக்கு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிய படுத்துகிறேன்/ நன்றி !
/அடுத்த பதிவு எப்பொழுது என அறிய ஆவல் !/
போட்டாச்சு!

Vidhoosh said...

//நோட்டை உயர்த்திப் பிடித்து மனுஷனைக் கீழே தள்ளாதீங்கப்பா...." //

super.. :)

very nice post.

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா