நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, August 17, 2010

மழையும் மழைசார்ந்த நிகழ்வுகளும்--2.

தேங்கிக் கிடக்கும் மழை நீரில்.........

முகம் பார்த்துக் கொண்டது மரம்...
பூ உதிர்த்து அழகு பார்த்தது செடி...
விழுந்து கிடந்தது வானம்....
குனிந்து அலகால் நீர் குடித்தது குருவி....
கத்திக் கப்பல் விட்டான் பையன்...
கல்லெறிந்து ஆனந்தித்தான் இன்னொருவன்..
குதித்துத் தண்ணீர்ச் சிதறியடித்தாள் சிறுமி.....
அத்தனையும் நிமிடத்தில் கலைத்து
விர்ரெனச் சீறிப் பறந்தான் பைக் இளைஞன்....

மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...
பாதம் பதித்த ஈரம் சொல்லியது
வீதியில் பெய்த மழையின் மீதி கதையை!!

35 comments:

சந்தனமுல்லை said...

Lovely!

பூங்குழலி said...

முகம் பார்த்துக் கொண்டது மரம்...
பூ உதிர்த்து அழகு பார்த்தது செடி...
விழுந்து கிடந்தது வானம்....


அழகான வரிகள் அருணா

காமராஜ் said...

மழை சொல்லியதும் சொல்லாததுமாக, காயாத ஈரத்தோடு கிடக்கிறது கவிதை

சுஜா செல்லப்பன் said...

நல்ல கவிதை ! மழையின் ஈரம் நனைத்த கவிதை...பாராட்டுக்கள் !

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகு அழகு.. அருணா..

மழையழகை சொட்டிக்கிட்டே நிக்குது உங்க கவிதை

VELU.G said...

கவிதையாய் ஒரு கவிதை

Chitra said...

மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...

..... beautiful!

அம்பிகா said...

அருமை.
அழகான ரசிப்புகளை அழகான கவிதையாக்கி விட்டீர்கள்.

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்குங்க டீச்சர்.

அன்புடன் அருணா said...

நன்றி சந்தனமுல்லை !
நன்றி பூங்குழலி !

புலவன் புலிகேசி said...

அருமையான கவிதை... //மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது..// நச் வரிகள் அருணா....

Unknown said...

ஈரம் என் பால்யத்தோடு காயாமல் இருக்கிறது ..

Anonymous said...

//பூ உதிர்த்து அழகு பார்த்தது செடி...
விழுந்து கிடந்தது வானம்....
மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...//
அருமையான வரிகள்.
நல்ல கவிதை அருணா!
பூங்கொத்து!

ஈரோடு கதிர் said...

ரொம்ப அழகுங்க கவிதை

வாசித்த பின்னும் ஈரம் படிந்திருக்கிறது நெடுநேரத்திற்கு

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அழகு வரிகள்.

//மழையின் நினைவாக வீட்டுக்கு எடுத்துச் செல்ல
உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...
பாதம் பதித்த ஈரம் சொல்லியது
வீதியில் பெய்த மழையின் மீதி கதையை!!//

மிகப் பிடித்தன அருணா.

தமிழ் said...

பூங்கொத்து

pudugaithendral said...

மழையில் நனைந்த புத்தம்புது பூங்கொத்துக்கள் அருணா

அன்புடன் அருணா said...

காமராஜ்
சுடர்விழி
முத்துலெட்சுமி/muthuletchumi அனைவருக்கும் நன்றி!

Karthik said...

Beautiful. :)

அன்புடன் அருணா said...

VELU.G
Chitra
அம்பிகா அனைவருக்கும் நன்றி!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரசித்தேன் அருணா

vinu said...

உடையின் ஈரம் மட்டுமே மிஞ்சியிருந்தது...
வீதியில் பெய்த மழையின் மீதி கதையை!!


i wonder how you people looks rain in this poetice way when you are enjoing it

கோமதி அரசு said...

வந்தேன் படித்தேன் கொடுத்தேன் பூங்கொத்து.

மழை கவிதை அருமை.

மழையின் நினைவாய் உடையின் ஈரம் மட்டுமே
அழகான வரிகள்.

மணிவேலன் said...

மழை எல்லோராலும் இரசிக்கப்படுவது.....

அருமையான கவிதை.......


பிடிங்க பூங்கொத்தை!

அன்புடன் அருணா said...

செ.சரவணக்குமார்
புலவன் புலிகேசி
கே.ஆர்.பி.செந்தில் அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

Balaji saravana
ஈரோடு கதிர்
ராமலக்ஷ்மி அனைவருக்கும் நன்றி!

ரசிகன் said...

அருமையா இருக்கு:)

சத்ரியன் said...

எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டது...கவிதை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுக்கு நன்றி திகழ் !
புதுகைத் தென்றல் !
Karthik !

அன்புடன் அருணா said...

நன்றி ஜெஸ்வந்தி !
vinu said...
/i wonder how you people look rain in this poetic way when you are enjoying it/
The magic is with the rain!

நன்றி கோமதி அரசு

அன்புடன் அருணா said...

மணிவேலன் said...
/பிடிங்க பூங்கொத்தை!/
பிடிச்சாச்சு!

நன்றி ரசிகன் !
/எனக்குப் பிடித்த கவிதைகளின் பட்டியலில் இடம் பிடித்துக்கொண்டது...கவிதை./
ஹையா!நன்றி!

Anonymous said...

hi,
very nice..
i dont have flower bouquets..
but a smile for u thozhi..
:)

அன்புடன் அருணா said...

Thank you Anonymous!

பத்மா said...

ரொம்ப அருமையா இருக்குங்க அருணா

priya.r said...

Nicepa.,

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா