நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Monday, August 2, 2010

எனக்கெனவும் ஒருநாள்!

புதுக் காலண்டர் வாங்கி
அம்மாவுக்கு ஒன்று
அப்பாவுக்கு ஒன்று
காதலுக்கு ஒன்று
அக்கா,தங்கை,
தம்பி,அண்ணன்
இன்னும் பொங்கல்,தீபாவளி,
தண்ணீர்,மகளிர், சுதந்திரம்
அது இதுவெனவும்
நண்பர்களுக்கும் ஒன்றெனப்
பிரித்துக் கொடுத்த பின்
மிஞ்சிய அட்டையை
முன்பின் திருப்பிப் பாவமாய்
எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!
என்று சிரித்துக் கொண்டேன்!

36 comments:

Chitra said...

இனிய (அன்புடன்) அருணா தின வாழ்த்துக்கள்! இன்றே கொண்டாடி விடுவோம்!

Unknown said...

என்னிடம் ஏராளமான காலண்டர்கள் சேர்ந்துவிட்டதால் சகோதரிக்கு ஒன்று தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் இவருட காலண்டரை ...

priya.r said...

Nice!
Shall i provide diary instead of calender!

அம்பிகா said...

செப்ட. 5 உங்களுக்கு தானே டீச்சர்.

எம்.எம்.அப்துல்லா said...

அக்காவுக்கு அட்டென்டென்ஸ் :)

அன்புடன் அருணா said...

Chitra said...
/இனிய (அன்புடன்) அருணா தின வாழ்த்துக்கள்! இன்றே கொண்டாடி விடுவோம்! /
ஆஹா!!நன்றி!நன்றி!

பா.ராஜாராம் said...

//எனக்கெனவும் ஒரு நாள் கொடுங்கப்பா//

எல்லோரின் நாட்களுக்காக தன்னை தொலைத்த வலி. கேலண்டர், பிற்பாடே.

ரொம்ப நல்லாருக்கு டீச்சர்! பூங்கொத்து!

sakthi said...

ரொம்ப நல்லாருக்கு அருணா

அன்புடன் அருணா said...

கே.ஆர்.பி.செந்தில் said...
/என்னிடம் ஏராளமான காலண்டர்கள் சேர்ந்துவிட்டதால் சகோதரிக்கு ஒன்று தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் இவருட காலண்டரை .../

priya.r said...
Shall i provide diary instead of calender!
காலண்டருக்கும் டையரிக்கும் நன்றிங்கோ செந்தில் & பிரியா!!

அன்புடன் அருணா said...

அம்பிகா said...
/செப்ட. 5 உங்களுக்கு தானே டீச்சர். /
ஆமாமா!நமக்கான தினங்களை நாமே எடுத்துக் கொள்ளவேண்டியதுதான்!நன்றி அம்பிகா!

Thamira said...

என்ன ஒன்னியும் புரியலை. சொல்லாமக் கொள்ளாம பின்னவீனக் கவிஞரா ஆயிட்டீங்களா?

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லாருக்கு அருணா .பூங்கொத்து!

பத்மா said...

கேக்காதீங்க எடுத்துகோங்க

priya.r said...

சற்று தாமதமாக தான் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது அருணா .
கவலை வேண்டாம் !
இந்த பதிவு வந்த ஆகஸ்ட் 2 இனி ஒவ்வொரு வருடமும் அருணா மற்றும் அவர் தோழிகள் தினமாக (சுய நலம் கலந்த பொது நலம் !)
பூங்கொத்து கொடுத்து கொண்டாடி மகிழ்வோம் ! சரிங்களா! :)

pudugaithendral said...

”எனக்கெனவும் ஒரு நாள்” இந்த ஒற்றைவரி சொல்லாமல் சொல்கிறது ஏக்கத்தை. பாராட்டுக்கள் அருணா.

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

மாலன் மாலதி said...

பரவாயில்லைங்க.

ஆனாலும், உங்க எழுத்தில் சமீப காலமாக ஏதோ ஒரு தொய்வு, மனச்சுமை, ஆதங்கம் காண்கிறேன்.

என்ன ஆயிற்று உங்களுக்கு?

என் பிரியமுள்ள அந்த எழுத்துக்களின் நினைவூட்டல் காண முடியவில்லை.

என்றாலும்...

வாழ்த்துகள்.

மாலன் மாலதி said...

மகாகவி பாரதியாரின் கவிதை ஏன் இப்படி கட்டுரை போல் நீள வாக்கியங்களாய்க் காட்சியளிக்கிறது?

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
என்றன் முன்னைத் தீவினைப் பயன்கள் யாவும்,
இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னை புதிய உயிராக்கி
எனக்கேதும் கவலையறச் செய்து
மதி தன்னை மிகத் தெளிவு செய்து
என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.

என்று இருக்க வேண்டுமில்லையா?

சில எழுத்துப் பிழைகள்.

ஆசிரியரான நீங்களே இப்படி இருக்கலாமா?

அப்பாதுரை said...

எந்த நாளுமே சொந்த நாள் தானே?
ரசித்துப் படித்தேன்..

priya.r said...

அருணா!வாரம் ஒரு பதிவாவது போடுவீர்கள் ! ஏன் கால தாமதம்!
வேலை பளு அதிகமோ !

ராமலக்ஷ்மி said...

’எனக்கெனவும் ஒருநாள்’ ஆகா அருமை அருணா.

பவள சங்கரி said...

நன்றாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

ரசிகன் said...

//எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!//

கவலைப்படாதிங்க தோழியே.. வருஷத்துக்கு ரெண்டு நாளை அதிகப்படுத்திடுவோம்ல்ல..

அன்புடன் அருணா said...

எம்.எம்.அப்துல்லா said...
/அக்காவுக்கு அட்டென்டென்ஸ் :)/
ம்ம்...எப்பவும் அட்டெண்டன்ஸ் மட்டும்தானா அப்துல்லா!?
பா.ராஜாராம் said...
/ எல்லோரின் நாட்களுக்காக தன்னை தொலைத்த வலி. கேலண்டர், பிற்பாடே./
அதே!பூங்கொத்துக்கு நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி sakthi !
பூங்கொத்துக்கு நன்றிப்பா ஜெஸ்வந்தி!
பத்மா said...
/ கேக்காதீங்க எடுத்துகோங்க /
ரைட்டு பத்மா!

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/என்ன ஒன்னியும் புரியலை. சொல்லாமக் கொள்ளாம பின்னவீனக் கவிஞரா ஆயிட்டீங்களா? /
பின் நவீனக் கவிஞர் ஆக விட்டுருவீங்களா என்ன???Friendship day அன்னிக்கு சரியாப் படிச்சிருந்தாப் புரிஞ்சுருக்குமோ என்னவோ???:))

அன்புடன் அருணா said...

priya.r said...

/ சற்று தாமதமாக தான் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது அருணா .
கவலை வேண்டாம் !
இந்த பதிவு வந்த ஆகஸ்ட் 2 இனி ஒவ்வொரு வருடமும் அருணா மற்றும் அவர் தோழிகள் தினமாக (சுய நலம் கலந்த பொது நலம் !)
பூங்கொத்து கொடுத்து கொண்டாடி மகிழ்வோம் ! சரிங்களா! :)/
அட!இது ரொம்ப நல்ல ஐடியாவா இருக்கே!செய்யலாமே!

நன்றி புதுகைத் தென்றல் ..அடிக்கடி வாங்க!எப்போவாது வர்றீங்க!

Sweatha Sanjana said...
/உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !! /
நன்றி Sweatha Sanjana !

அன்புடன் நான் said...

மற்றவருக்கான நாட்களில்தான் நீங்கள்(நீங்களும்) இருப்பீர்கள்.
உங்களுக்கான நாட்களில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.... அது பிறகு உங்களுக்கே பிடிக்காது!

உங்க கவிதைக்கான பார்வை மிக புதிய கோணம் பாராட்டுக்கள்.

அன்புடன் அருணா said...

மாலன் மாலதி said...
/ ஆனாலும், உங்க எழுத்தில் சமீப காலமாக ஏதோ ஒரு தொய்வு, மனச்சுமை, ஆதங்கம் காண்கிறேன். என்ன ஆயிற்று உங்களுக்கு?
என் பிரியமுள்ள அந்த எழுத்துக்களின் நினைவூட்டல் காண முடியவில்லை./
கொஞ்சம் வேலைப்பளு...நேரமின்மை...வேறொன்றுமில்லை மாலதி.

அன்புடன் அருணா said...

மாலன் மாலதி said...
/மகாகவி பாரதியாரின் கவிதை ஏன் இப்படி கட்டுரை போல் நீள வாக்கியங்களாய்க் காட்சியளிக்கிறது?/
சரி செய்து விடுகிறேன்....சீக்கிரம்.

/ஆசிரியரான நீங்களே இப்படி இருக்கலாமா? /
என்ன சொல்வது?ஆசிரியர்கள் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள்தான்....கற்றுக் கொள்கிறேன்.சரி செய்து விடுகிறேன்....சீக்கிரம்.

அன்புடன் அருணா said...

அப்பாதுரை said...
/எந்த நாளுமே சொந்த நாள் தானே?/
அதுவும் சரிதான்!
நன்றி கடல்!
priya.r said...
/அருணா!வாரம் ஒரு பதிவாவது போடுவீர்கள் ! ஏன் கால தாமதம்!
வேலை பளு அதிகமோ ! /
ஆமா!அது தவிர நெட் பிரச்னை வேற!நன்றி பிரியா!

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி !
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து !

அன்புடன் அருணா said...

ரசிகன் said...
/கவலைப்படாதிங்க தோழியே.. வருஷத்துக்கு ரெண்டு நாளை அதிகப்படுத்திடுவோம்ல்ல../
அட!மீண்டும் ரசிகனா!!!வாங்க!வாங்க!
வருடத்துக்கு ரெண்டு நாள் அதிகமா!!!!நன்றி நன்றி!

அன்புடன் அருணா said...

சி. கருணாகரசு said...

/மற்றவருக்கான நாட்களில்தான் நீங்கள்(நீங்களும்) இருப்பீர்கள்.
உங்களுக்கான நாட்களில் நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.... அது பிறகு உங்களுக்கே பிடிக்காது!

உங்க கவிதைக்கான பார்வை மிக புதிய கோணம் /
உங்கள் பின்னூட்டம் கூட புதிய கோணம்தான்!

vinu said...

முன்பின் திருப்பிப் பாவமாய்
எனக்கெனவும் ஒருநாள்
கொடுங்கப்பா!
என்று சிரித்துக் கொண்டேன்

NIjam

Karthik said...

Made me think. Nice one as usual. :)

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா