நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Saturday, May 15, 2010

எனக்கு மட்டும் ஏனிப்படீ???

எனக்கு மட்டும் ஏனிப்படீன்னு மண்ணில் புரண்டு புரண்டு அழணும் போல இருக்கும் பரீட்சைக் காலங்களை நினைத்தாலே.சிலேட்டுலே எழுதணும்னா ஸ்லேட்டுக் குசி உடைஞ்சு உடைஞ்சு போகும்.பென்சிலாலே எழுதணும்னா பென்சில் முனை உடைஞ்சு உடைஞ்சு போகும்.பேனாவாலே எழுதணும்னா நிப் உடைஞ்சு உடைஞ்சு போகும்.கையெல்லாம் வேர்த்து வேர்த்து ஊத்தும். வார்னிங்க் பெல் அடிச்சப்புறமும் புத்தகத்தை விட்டுப் பிரிய முடியாமல் திருப்பித் திருப்பிப் படிக்கும் ரகம் நான். இத்தனைக்கும் கொஞ்சம் நல்லாவே படிப்பேன்.

ஆங்கிலப் பரீட்சையின் போது like வார்த்தையில் வாக்கியம் அமைக்க வேண்டும்.....பக்கத்திலிருந்த ப்ரிட்டானிக்கா பிஸ்கட் டப்பாவில் எழுதியிருந்த biscuits பார்த்து "I like biscuits" என்று எழுதியதுதான் நான் அடித்த முதல் காப்பி.நோட்டில் எழுதிப் போட்ட வாக்கியம் "I like cakes"....அதை எழுதாதாலோ என்னவோ மிஸ் அதை அடித்துத் திருத்தியதால் 100க்கு 99 மார்க்கில் நின்று போனேன்.அதிலிருந்து சொந்தமாக எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

அப்புறமாய் வந்த பரீட்சைகளில் நேரத்தையும் எனர்ஜியையும் தூக்கத்தையும் தொலைத்து மார்க் பின்னால் ஓடி ஓடிக் கொஞ்சம் அடைந்தும் நிறைய அடையாமலும்......இன்னமும் கண்ணில் ஏமாற்றத்துடன் நிமிர்ந்து பார்க்கும் இடம் மெடிகல் சீட்.பெர்சனல் இன்டர்வியு வரை அழைப்பு வந்த பின்னும் போய் பங்கு கொள்ள முடியாத பணக்கஷ்டம்....மனக் கஷ்டமும்தான் இப்போ வரைக்கும்.ம்ம்ம்ம்ம்ம் சரி விடுங்க....ஒரு நல்ல டாக்டரை இந்த மருத்துவ உலகம் இழந்து விட்டது!!!! !!!!!

பரீட்சையின் போது யாருக்கும் காட்டவும் கூடாது...யாரையும் பார்த்தும் எழுதக் கூடாதுன்னு ஒரு அதி பயங்கரக் கொள்கைவாதியாகவே இருந்திருக்கிறேன்.யுனிவெர்சிட்டிகளின் நிலை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஒரு பரீட்சை எம்.ஃபில்.இங்கே ஜெய்ப்பூரில்தான் எழுதினேன் .தமிழகத்தைச் சேர்ந்த ஒரு யுனிவெர்சிட்டிதான்.இங்கேயுள்ளவர்கள்தான் சென்டர் இன் சார்ஜ்.
பரிட்சை நேரம் மதியம் 2 மணி.திடீரென ஒரு ஃபோன் கால் பரீட்சை 12 மணிக்கு ஆரம்பித்து விடும்னும் சீக்கிரம் வாங்கன்னும்.நான் இருந்த இடத்திலிருந்து போய்ச் சேருவதற்கு மணி ஒன்றரையாகி விட்டது.பரீட்சை ஆரம்பித்து விட்டது.பரீட்சை ஹால் அமைதியாக இருந்தது.எல்லோரும் புத்தகத்தைக் கையில் வைத்துப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தார்கள்.Mass copying!.அமைதியாக என் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டேன்.நடப்பதைப் பார்த்து வேர்த்து ஊத்தியது.கேள்வித்தாளைப் பார்த்தால் ஒண்ணுமே தெரியாதது போலிருந்தது.இந்த இடத்தில் பரீட்சை எழுதி என்னத்தைக் கிழிக்க என்னும் எண்ணத்துடன் எழுந்து கொண்டேன்.நமக்கு முந்தி நம்ம கண்ணீர்தான் நம்மளைக் காட்டிக் கொடுத்து விடுமே ...பக்கத்திலிருந்த மாணவன் கேட்டான்."என்னாச்சு மேம்?"
"பரீட்சை எழுதி என்ன ஆகப் போகுது?அதான் போறேன்".
"மேம்..நீங்க போறதினாலெ யாருக்கு நஷ்டம்...நல்லா யோசிச்சுப் பாருங்க.உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்க பார்த்து எழுதாதீங்க.உங்க படிப்பு எதுக்கு வீணாகணும்.?" என்று சொல்லி விட்டு அவன் பாட்டுக்கு எழுத ஆரம்பித்து விட்டான்.
சரின்னு அமைதியா எழுத ஆரம்பித்தேன்.எனக்குத் தெரிந்ததை எழுதி முடித்து வெளியில் வந்ததும் அதே பையனும் இன்னொருவனும் மேம் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தும் காப்பியடிக்காமல் எழுதினீங்களே மேம்.உங்களுக்கு ஒரு சல்யூட்.....என்றார்கள்.
கொஞ்சமாய் மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
அது எனக்காகவா?
அல்லது
வருங்கால சமுதாயத்துக்காகவா????
என்று இன்னமும் புரியாமல்......


தொடர அழைத்த முல்லைக்கு நன்றி !
தொடர அழைப்பது:
படித்தவுடன் அட!எனக்கும் எழுதணும் போலிருக்குன்னு நினைக்கும் எல்லோரையும்!

45 comments:

அமைதிச்சாரல் said...

காப்பியடிக்காததுக்கு ஒரு பூங்கொத்து.

VELU.G said...

உங்கள் நேர்மைக்கு என் பாராட்டுக்கள்

கார்க்கி said...

:)))

வேற வ்ழியில்லைங்க..கணிணிலயும் நான் காப்பி, பேஸ்ட் செய்ய மாட்டேன்னு உங்களால சொல்ல முடியாதில்ல? :))

முகிலன் said...

கார்க்கி............

முகிலன் said...

காப்பி அடிக்காததுக்குப் பூங்கொத்து..

அப்புறம் அந்தப் பல்கலைக் கழகத்தோட பேரு கா..ல ஆரம்பிக்குமா? :))))

அனு said...

நானும் ஸ்கூல் படிக்கும் வரை இப்படி தான்.. ஆனால், கல்லூரியில் செயல் படுத்துவது சற்று கடினமாகி விட்டது.. அதனால், மற்றவர்களுக்கு காப்பி அடிக்க என் பேப்பர் கொடுத்து உதவியிருக்கிறேன்..

கடைசி வரை maintain பண்ணிய உங்களுக்கு ஒரு பூங்கொத்து...

vasan said...

உங்க‌ள் க‌ண்ணீர் க‌சிந்த‌த‌ர்காய்,
த‌ங்கையே, `அவ‌ர்க‌ளை ம‌ன்னியும்,
தான் செய்வ‌து என்ன‌தென்று
அறியாம‌ல் செய்துவிட்டார்க‌ள்`.

இரசிகை said...

//
கார்க்கி said...
:)))

வேற வ்ழியில்லைங்க..கணிணிலயும் நான் காப்பி, பேஸ்ட் செய்ய மாட்டேன்னு உங்களால சொல்ல முடியாதில்ல? :
//

saththam pottu sirichchuttenga........
ivaru ithukkunne special class yethuvum poraaro??.....:))

ஹேமா said...

அருணா...நேர்மையா இருக்கிறவங்களுக்குன்னே ஆண்டவன் கொடுக்கிற பூங்கொத்து இப்பிடித்தான் இருக்கும்.எல்லாம் சரியாயிடும்.

செ.சரவணக்குமார் said...

உண்மையிலேயே மருத்துவ உலகம் ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டது. ஆனால் இத்தனை நேர்மையான ஆசிரியரைப் பெற்ற மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பூங்கொத்துகள் டீச்சர்.

பா.ராஜாராம் said...

//செ.சரவணக்குமார் said...
உண்மையிலேயே மருத்துவ உலகம் ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டது. ஆனால் இத்தனை நேர்மையான ஆசிரியரைப் பெற்ற மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள். பூங்கொத்துகள் டீச்சர்.//

இதேதான் டீச்சர்..

ஜெய்லானி said...

எல்லாம் நன்மைக்கே!!!

ஜெயந்தி said...

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

நசரேயன் said...

உலகம் தெரியாத டீச்சர் நீங்க

குசும்பன் said...

//ஒரு சல்யூட்.....என்றார்கள்.
கொஞ்சமாய் மீண்டும் கண்ணில் நீர் எட்டிப் பார்த்தது.
அது எனக்காகவா?
அல்லது
வருங்கால சமுதாயத்துக்காகவா????
//

ப்ளீஸ் அப்படியே ஆடாம அசையாம இருங்க!

(வேற ஒன்னுமில்லை இளைய சமுதாயம் அந்த கண்ணீரை குடுவையில் சேமிக்குது:)))

ஷர்புதீன் said...

உங்களுக்கு நன்றி சொல்லும் எனது இந்த இடுக்கை பார்வை இட அழைக்கிறேன்
http://rasekan.blogspot.com/2010/04/blog-post_10.html

மாதேவி said...

இரட்டைப் பூங்கொத்து அருணா.

kalyanii2002 said...

ய‌தார்த்த‌மான‌ ப‌திவுக‌ள்...

காமராஜ் said...

நேர்மை மிகப்பெரும் திறன்,இல்லையா மேடம்.

ஈரோடு கதிர் said...

இந்த நேர்மை பிடிச்சிருக்கு

சந்தனமுல்லை said...

நன்றி அருணா...கலாய்க்கிறது வாய்ப்பே கொடுக்கலை நீங்க..நம்ம கல்வி அமைப்பை பத்தி எழுதி தாளிச்சுடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..:)

அன்புடன் அருணா said...

நன்றி அமைதிச்சாரல்
நன்றி VELU.G

அக்பர் said...

உங்கள் நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது.

நேசமித்ரன் said...

ஒரு ராயல் சல்யூட் வித் பூங்கொத்து

thenammailakshmanan said...

உண்மைதான் சந்தர்ப்பம் கிடைத்தும் தவறு செய்யாமல் இருப்பதுதான் சிறப்பு..நம் மனசுக்குத் தெரிந்தால் போதும்

வினையூக்கி said...

:)

’மனவிழி’சத்ரியன் said...

//ஒரு நல்ல டாக்டரை இந்த மருத்துவ உலகம் இழந்து விட்டது!சரி விடுங்க...!//

அருணா,

டாக்டராகியிருந்தா பலரது உயிரைக்காப்பாத்தி இருப்பீங்க.

ஆசிரியரா, பலரது வாழ்வையே மாத்தறீங்களே. இதாங்க பெஸ்ட்.!

’மனவிழி’சத்ரியன் said...

//இந்த இடத்தில் பரீட்சை எழுதி என்னத்தைக் கிழிக்க என்னும் எண்ணத்துடன் எழுந்து கொண்டேன்.//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

ஆனா பாருங்க என் நேர்மை எனக்கு புடிக்காது.

அன்புடன் அருணா said...

கார்க்கி said...
/ வேற வ்ழியில்லைங்க../
ஏன் இல்லை????

/கணிணிலயும் நான் காப்பி, பேஸ்ட் செய்ய மாட்டேன்னு உங்களால சொல்ல முடியாதில்ல? :))/
ஆமாமா..சொல்ல முடியாது கார்க்கி.

நன்றி முகிலன்
நன்றி அனு

அன்புடன் அருணா said...

நன்றி vasan !
நன்றி இரசிகை !
நன்றி ஹேமா !
நன்றி செ.சரவணக்குமார்!

அன்புடன் அருணா said...

நன்றி பா.ராஜாராம் !
நன்றி ஜெய்லானி !
நன்றி ஜெயந்தி !
நசரேயன் said..
/உலகம் தெரியாத டீச்சர் நீங்க /
அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே நசரேயன்!

அமுதா கிருஷ்ணா said...

அந்த யுனிவர்சிட்டி அ-வில் தானே ஆரம்பிக்கும்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொஞ்சம் 'டச்' பண்ணிட்டீங்க.!

அன்புடன் அருணா said...

குசும்பன் said../
(வேற ஒன்னுமில்லை இளைய சமுதாயம் அந்த கண்ணீரை குடுவையில் சேமிக்குது:))) /
இளைய சமுதாயத்துக்கு இந்த அளவுக்காவது அக்கறை இருக்கேன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்!
சேமித்து???????அப்படீன்னு ஒரு கேள்வியும் வருது கூடவே!

அன்புடன் அருணா said...

நன்றி ஷர்புதீன்
பூங்கொத்துக்கு நன்றி!மாதேவி
நன்றி kalyanii2002
நன்றி காமராஜ்

+Ve Anthony Muthu said...

//காமராஜ் said...

நேர்மை மிகப்பெரும் திறன்,இல்லையா மேடம்.//

ஆம்! வாழ்த்துக்கள்! :)

அன்புடன் அருணா said...

நன்றி ஈரோடு கதிர் !

சந்தனமுல்லை said...
/நன்றி அருணா...கலாய்க்கிறது வாய்ப்பே கொடுக்கலை நீங்க../
அட! கவனமா பாருங்க முல்லை நிறைய loop holes கொடுத்திருக்கேன்!
/நம்ம கல்வி அமைப்பை பத்தி எழுதி தாளிச்சுடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்..:) /
அதை அவ்வ்ளோ எளிதா சொல்லலாமா?தனியா எழுதுவேன்மா!

அன்புடன் அருணா said...

நன்றி அக்பர்
நேசமித்ரன் said...
/ஒரு ராயல் சல்யூட் வித் பூங்கொத்து/
நன்றி ராயல் சல்யூட்டுக்கும் பூங்கொத்துக்கும் நேசமித்ரன்!

நன்றி thenammailakshmanan

அன்புடன் அருணா said...

வினையூக்கி said...
/:) /
அப்பாடா ஸ்மைலி போட இப்போவாவது நேரம் கிடைச்சுதே!

அன்புடன் அருணா said...

’மனவிழி’சத்ரியன் said...
/ ஆனா பாருங்க என் நேர்மை எனக்கு புடிக்காது./
அச்சச்சோ!
அமுதா கிருஷ்ணா said...
/ அந்த யுனிவர்சிட்டி அ-வில் தானே ஆரம்பிக்கும்.../
அய்யய்யோ நன் சொல்ல மாட்டேம்பா!
நன்றி ஆதிமூலகிருஷ்ணன் !

SanjaiGandhi™ said...

நல்ல டீச்சர் மட்டும்தான்னு நெனைச்சேன். நல்ல இஸ்டூடண்டும் கூட.. தம்பி பேரைக் காப்பத்திட்டிங்க.. :)

அன்புடன் அருணா said...

SanjaiGandhi™ said...
/ நல்ல டீச்சர் மட்டும்தான்னு நெனைச்சேன். நல்ல இஸ்டூடண்டும் கூட.. தம்பி பேரைக் காப்பத்திட்டிங்க.. :) /
அப்பாடா நல்ல வேளை தம்பி பேரைக் காப்பாத்திட்டேன்!

d said...

hi,

subject: do u want to display only post titles instead of showing both post titles and its content in your blogger?

எஸ்.ராமகிருஷ்ணனின் இணையதளத்தை பாருங்கள். அவருடைய அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே displayஆகியுள்ளன.Post titlesகளுக்குரிய கட்டுரைகளும்(content) post titlesக‌ளோடு சேர்ந்து அவரின் இணையதளத்தில் display ஆகியிருக்கவில்லை. ஒரு பக்கத்திற்கு 50 post titlesகள் அவருடைய இணையதளத்தில் display ஆகின்றன. இதனால் வாசககள் மிக விரைவாக அவருடைய இணையதளத்தில் அத்தனை post titlesகளையும் பார்த்து விடுகிறார்கள். தங்களுக்கு விருப்பமான post titleளின் தலைப்பை click செய்து அத்தலைப்பிற்குரிய கட்டுரையை படிக்கிறார்கள்.


உங்கள் blogல் post titleகளோடு சேர்த்து அப்post titlesகளுக்குரிய‌ contentஉம் சேர்ந்து display
ஆகின்றன. இதை மாற்ற விரும்புகிறீர்களா? Post titlesகள் மட்டும் உங்கள் bloggerல் displayஆக வேண்டும் என விரும்புகிறீர்களா?அப்படி என்றால் இந்த இணையதளத்தில் http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html சொல்லப்பட்டுள்ளவற்றை அப்படியே follow செய்யுங்கள். அதன் பின் உங்கள் பிளாகில் அத்தனை post titlesகளும் post titlesகளாக மட்டுமே display ஆகும். Post titleஐ click செய்தால் மட்டுமே அதனுடைய content display ஆகும்.(பின்குறிப்பு: நான் என் model பிளாகில் post titlesகள் மட்டுமே display ஆகும்படி மாற்றியுள்ளேன். இதன் மூலம் ஒரு பக்கத்தில் 50 post titlesகள் வரை display ஆகும்படி set செய்திருக்கிறேன். இது மிகவும் user friendlyயானது. பார்க்கவும் என் மாடல் blogஐ http://justchuma.blogspot.com/ FORWARD THIS MESSAGE TO YOUR FRIENDS WHO USE BLOGGER)......

priya.r said...

ஆமாங்க அருணா ;மேலே உள்ள கமெண்ட் லில் குறிப்பிட்டுருப்பது போல பதிவுகளின் தலைப்பை அமைத்தீர்கள் என்றால்

படிக்கும் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் ;முடிந்தால் செய்யுங்களேன்பா.

priya.r said...

பாருங்க அருணா ;பூங்கொத்து கொடுக்காமலே "சென்ற கமெண்ட்" அனுப்பி விட்டேன் .
// "I like biscuits" என்று எழுதியதுதான் நான் அடித்த முதல் காப்பி//
இது காபி இல்லைங்க ;உங்க creativity mind ஐ காட்டுது

அப்புறம் டாக்டரா ஆகி இருந்தாலும் மருத்துவ கல்லூரியில் பேராசிரியையாகவோ முதல்வராகவோ ஆகி
அப்போதும் கல்வி பணி ஆற்றி கொண்டு தான் இருந்து இருப்பீர்கள் என்று எனக்கு படுகிறது !

எனது தோழிகளிடம் தங்கள் பதிவுகளை பற்றி சொல்லி ,படித்து ரசித்து பயன் பெறும்படி கேட்டு கொண்டு இருக்கிறேன் .

அருணா ;மீண்டும் உங்களுக்கு பூங்கொத்து !!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா