நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, May 19, 2010

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்-4

கிறுக்குதல் சந்தோஷம்! அதிலும்
வெள்ளை அடித்த சுவரில்
கிறுக்குதல் மகா சந்தோஷம்
பாப்பாவுக்கு....

குடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்
வானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்
தரையில் சூரியனும் நட்சத்திரமும்
பக்கம் பக்கமாய்....

நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த
பூனையும் எலியும் உயிர்
பிழைக்க ஓடாமல்
பக்கம் பக்கமாய்.....

அம்மா அவசரமாய் அழித்துப் போன
ஓவியத்தில் மிச்சமிருக்கிறது
பாப்பாவின் கைரேகைகளும்
கொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...

தரை ஈரம் காய்வதற்குள்
மீண்டும் பென்சிலும்
கலர் க்ரேயானுமாய்
குப்புறப் படுத்து வரைய
ஆரம்பித்த தருணத்தில்.........

மீண்டும் ஓடி வருகிறாள்
அம்மா ஈரத்துணியும்
கையுமாய்.......

கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!!!

40 comments:

VELU.G said...

அருமையான கவிதை

VELU.G said...

மிகவும் ரசித்தேன்

ஜெய்லானி said...

இந்தாங்க பிடிங்க பூங்கொத்து .

அகல்விளக்கு said...

அருமையான கவிதை...

அமைதிச்சாரல் said...

இதுக்கு பூங்கொத்து போதாது, பூந்தோட்டமே கொடுக்கணும்.

க.பாலாசி said...

//கலைந்து கொண்டேயிருக்கும் வீடுகள்!!!//

வரைந்துகொண்டேயிருக்கும் குழந்தை...

அருமைங்க....

Chitra said...

அருமையான கவிதை. சின்ன சின்ன காட்சியையும் அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கிறது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான அந்தக்கால சிமெண்ட் தரையில் இப்படி வரைந்து வரைந்து கலைந்து கொண்டிருந்த வீடுகல் உண்டு இப்ப எங்கங்க எல்லாம் மொசைக்கும் டைலும்.. :(
தாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை..

பூங்கொத்தை பிடிங்க

dheva said...

//கிறுக்குதல் சந்தோஷம்! அதிலும்
வெள்ளை அடித்த சுவரில்
கிறுக்குதல் மகா சந்தோஷம்
பாப்பாவுக்கு.....//

nijamthaanga! Vaazthukkal!

நேசமித்ரன் said...

பூங்கொத்துகள் !

கவிதையின் உள்ளடக்கம் பிடித்திருக்கு ...!

வாழ்த்துகள்

Kirukkan said...

கிறுக்குனு பாத்தவுடன் நம்மள பத்திதான்னு ஓடி வந்தேன்...
சுட்டித்தனம் சுட்டியவிதம் அருமை!!!
-
கிறுக்கன்

கார்க்கி said...

ரொம்ப நாள் கழிச்சு..இந்தாங்க பூங்கொத்து...

LK said...

என் வீடு சுவற்றில் முழுவதும் என் ராஜகுமாரியின் கை வண்ணமே

//தாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை..//
ஆமாம். சிறு வயதில், பாட்டி தரையில் கட்டம் வரைய நாங்கள் ஆடியது நினைவுக்கு வருகிறது

ஜெயந்தி said...

கவிதை அருமை.

முகிலன் said...

பூங்கொத்தைப் பிடிங்க அருணா.. அருமை

இராமசாமி கண்ணண் said...

கவிதை அருமை.

கமலேஷ் said...

கவிதையொன்று கவிதை கிறுக்குவதை பற்றி கவிதையில் கவிதையாக சொல்லி இருக்கிறீர்கள்..அருமை..தொடருங்கள்...

Madumitha said...

குழந்தை இல்லா வெறுமை
வீட்டுச் சுவரில் தெரியும்.
கவிதை அருமை.

Mugilan said...

அருமையான கவிதைங்க! மழலைச் செய்கைகள் எல்லாமே அழகுதாங்க! உங்க கவிதையைப் போல!

Gowripriya said...

:)))

Raja said...

கலைந்தாலும்
எண்ணத்தில் காயாமல்
ஈரமாயிருக்கும் (கவிதை) நினைவுகள்.

கே.ஆர்.பி.செந்தில் said...

//அம்மா அவசரமாய் அழித்துப் போன
ஓவியத்தில் மிச்சமிருக்கிறது
பாப்பாவின் கைரேகைகளும்
கொஞ்சம் பூமியின் கால் சுவடுகளும் ...//

என் வீட்டிலும் அருணா ...

kaamaraj said...

கிறுக்குதல் அருமை.
பூங்கொத்து அருணா.

padma said...

குழந்தைகளின் கிறுக்கல்கள் தான் மிகச்சிறந்த ஓவியங்கள் .
அழகான கவிதை அருணா

ஹேமா said...

//கிறுக்குதல் சந்தோஷம்! அதிலும்
வெள்ளை அடித்த சுவரில்
கிறுக்குதல் மகா சந்தோஷம்
பாப்பாவுக்கு.....//

அருணாவுக்கு
அழகு பூங்கொத்துத்தான்....வேறன்ன !

அன்புடன் அருணா said...

நன்றி VELU.G !
பூங்கொத்துக்கு நன்றி ஜெய்லானி .!
நன்றி அகல்விளக்கு !
பூந்தோட்டத்துக்கு நன்றி அமைதிச்சாரல் !

அன்புடன் அருணா said...

நன்றி க.பாலாசி !
நன்றி Chitra !
முத்துலெட்சுமி/muthuletchumi said...
/தாயக்கட்டங்கள் கூட வரைய முடிவதில்லை../
உண்மைதான்மா!
வாங்கீட்டேன் பூங்கொத்தை முத்துலெட்சுமி!
நன்றி dheva !

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி நேசமித்ரன் !
நன்றி Kirukkan
கார்க்கி said...
/ ரொம்ப நாள் கழிச்சு..இந்தாங்க பூங்கொத்து.../
அட்டெண்டன்ஸே எப்பவாவதுதான் இதுலே பூங்கொத்துக்கு வேற கணக்கு வச்சுருக்கீங்களா??
நன்றி LK

இரசிகை said...

superb........mam:)

HVL said...

நல்லா இருக்குதுங்க!
பிடிங்க பூங்கொத்து!

Anonymous said...

வருக கவிதை பருக...
http://solkelanavgiri.blogspot.com/

அன்புடன் அருணா said...

நன்றி ஜெயந்தி!
பூங்கொத்துக்கு நன்றி!முகிலன்
இராமசாமி கண்ணண்!
கமலேஷ்!
Madumitha !

அன்புடன் அருணா said...

Mugilan
Gowripriya
Raja
கே.ஆர்.பி.செந்தில்
அனைவருக்கும் நன்றி!

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்கு நன்றி kaamaraj !
நன்றி padma !
நன்றி ஹேமா !

ராமலக்ஷ்மி said...

அழகான கவிதை அருணா.

//குடுவையில் ஒரு பறவை பறந்து கொண்டும்
வானத்தில் ஒரு மீன் நீந்திக் கொண்டுமாய்
தரையில் சூரியனும் நட்சத்திரமும்
பக்கம் பக்கமாய்....

நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த
பூனையும் எலியும் உயிர்
பிழைக்க ஓடாமல்
பக்கம் பக்கமாய்.....//

மிக ரசித்த வரிகள்.

வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

நன்றி இரசிகை !
நன்றி HVL !
நன்றி Anonymous!
நன்றி ராமலக்ஷ்மி!

யாதவன் said...

வாழ்த்துக்கள்

kartin said...

இதனை முடித்தும் ஒரு visuals விரிவதைத் தவிர்க்க முடிவதில்லை..

Elango said...

//நீ உயிர் கொடுத்து உயிர்ப்பித்த
பூனையும் எலியும் உயிர்
பிழைக்க ஓடாமல்
பக்கம் பக்கமாய்...//

மிகவும் லயித்த வரிகள்..
வாழ்த்துக்கள் அருணா..!

திகழ் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா