தலைவரின் ஆசைப் பட்டியலில்....
என் பெயரில் ஒரு ஊரும்
எனக்கான ஒரு தெருவும்
அங்கே என் பெயரில் ஒரு பள்ளியும்
கல்லூரியை எட்டிப் பார்த்திராத
நானாகிய என் பெயரில்
ஒரு பல்கலைக் கழகமும்
மட்டும் போதும்
எனக்குப் பின் என் பெயர் சொல்ல.....
இறந்தபின் எனக்கு
இந்த இடத்தில் புகைப்படம்
மாட்டுங்கள் என்றும்
இங்கே சிலை வையுங்கள்
என்றும் வேண்டுமானால்
சொல்லி விட்டுப் போகலாம்....
எனக்குப் பின் என் பெயர் சொல்ல......
என்று அடுக்கிக் கொண்டே போக....
மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு பொருள்களில்
பேரெழுதி அவை யாருக்கு
என்று வேண்டுமானால்
நீங்கள் தீர்மானியுங்கள்............
பொதுவில் யாருக்கு எங்கே
இடமென்பதை நீங்களல்ல
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே!
39 comments:
நெத்தியடி...
Good one Aruna!
ம்ம்ம்!
Good one!! :)
அருமைங்க :)
:) ரைட்டு .
நல்லாஇருக்கு அருணா
வந்தேன், படிச்சேன், சும்மா பார்த்துட்டு போகாமே கொஞ்சம் பிடிச்சிருந்ததால் பூங்கொத்து அதிகமென்பதால் ஒரு மலரை மட்டும் கொடுக்கிறேன்.
பிடிச்சிருக்கு.
அருமை அருணா.
நல்லா இருக்கு.
விடுங்கள் அருணா, எப்படியெல்லாம் சம்பாதித்தார்கள் என்று பேச,உதாரணம் வேண்டும்.மரங்களை இழந்த பறவைகள் உட்கார, எச்சமிட தலைவேண்டுமே,இருந்துவிட்டுப்போகட்டும்.
தமிழ் நாட்டுக்கு, இன்னும் அவுக பேரை வைக்காமல் இருக்காவுகளேனு சந்தோசப் பட வேண்டியதுதான்.
சித்ரா டீச்சர் சொன்னதை ரிப்ப்பீட்டிக்கிறேன்.. :))
பூங்கொத்து
அடுத்த வருஷம்(ஆட்சி) எல்லாம் மாறும்
//முகிலன் said...
சித்ரா டீச்சர் சொன்னதை ரிப்ப்பீட்டிக்கிறேன்.. :))//
நானும் ரிப்ப்பீட்டடிக்கிறேன்............
mmm.. nice
Nice one!
தில்லு தான் இப்படி எழுத
goodone aruna.
நாஞ்சில் பிரதாப்
சந்தனமுல்லை
ஆடுமாடு
Karthik
சென்ஷி
அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
தலைமுறைகளும்
தலைவர்களாகும்
அபாயம் இருக்கே?
【♫ஷங்கர்..
Rajeswari
padma
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
இப்பல்லாம் காலேஜும், பல்கலைக்கழகமும் வச்சிருந்தா, அவங்க ரேஞ்சே தனின்னு புரிஞ்சுக்கணும்!!
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே!
தலைமுறைனு நீங்க சொன்னது மகன் மகள் பேரன் மச்சான் வழி சொந்தம் தானே?
அப்போ, உங்க பேச்ச தான் நான் கேட்டுட்டு இருக்கேன்! சந்தோசம் தானே!
தங்களில் யார் பெயரை வைப்பது என தர்க்கித்து தாக்கிக் கொள்ளாமல்
இருக்க இப்போதே வகை செய்து விட்டுப் போகிறோம் நாங்கள் எதிலுமே முன் மாதிரிங்கோ.
மஞ்சூர் ராசா said...
/வந்தேன், படிச்சேன், சும்மா பார்த்துட்டு போகாமே கொஞ்சம் பிடிச்சிருந்ததால் பூங்கொத்து அதிகமென்பதால் ஒரு மலரை மட்டும் கொடுக்கிறேன்.
பிடிச்சிருக்கு./
மலர் வாங்கீட்டேன் மஞ்சூர் ராசா!
நன்றி ராமலக்ஷ்மி!
நன்றி இராமசாமி கண்ணண்!
Chitra
முகிலன்
ஜெய்லானி
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
காமராஜ் said...
/விடுங்கள் அருணா, எப்படியெல்லாம் சம்பாதித்தார்கள் என்று பேச,உதாரணம் வேண்டும்.மரங்களை இழந்த பறவைகள் உட்கார, எச்சமிட தலைவேண்டுமே,இருந்துவிட்டுப்போகட்டும்./
அந்த நினைப்பில்தான் தலைகளை விட்டு வைத்திருக்கிறோமோ காமராஜ்????
நன்றி இயற்கை !
நன்றி Priya
கண்மணி/kanmani said...
/தில்லு தான் இப்படி எழுத/
அட! இதுக்கெல்லாம் தில்லு வேணுமா!???
நன்றி Ammu Madhu
உங்களுடன் ஒரு விருதை பகிர்ந்து கொள்கிறேன் வந்து பெற்றுகொள்ளவும்
//பொதுவில் யாருக்கு எங்கே
இடமென்பதை நீங்களல்ல
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே! //
ஆமாங்க தலைவரே.. :-)
என்ன டீச்சர்,இப்படி கிளம்பிட்டீங்க?..
இந்தாங்க பூங்கொத்து!சும்மா போகாதீங்க..
நன்றி மதுமிதா!
நன்றி ஹுஸைனம்மா!
//பொதுவில் யாருக்கு எங்கே
இடமென்பதை நீங்களல்ல
உங்கள் தலைமுறைகள்
தீர்மானிக்கட்டும் தலைவரே!//
ரணகளமாயிடாது ?
இரத்த பூமியாகிப்போகுமே...
மதுமிதா சொல்லியது போல,
``தலைமுறைகளும்
தலைவர்களாகும்
அபாயம் இருக்கே?``
அப்போ நம்ம
தலைமுறைகளும்
இப்படியே எழுதிக் கிட்டெA தானா?
மாற மாட்டோமா?
மாற்ற மாட்டோமா?
அட! விருதுக்கு நன்றி பத்மா!
பா.ராஜாராம் said.../ என்ன டீச்சர்,இப்படி கிளம்பிட்டீங்க?..இந்தாங்க பூங்கொத்து!சும்மா போகாதீங்க../
பூங்கொத்துக்கு நன்றி பா..ரா.
அப்பப்போ இப்படி பூதம் கிளம்புறாப்புலே கிளம்புறதுண்டு!
கவிதை நல்லாயிருக்கு. ஆனா ஊரு, தெருவெல்லாம் இவங்களுக்கு போதாது போலிருக்கே!
இந்தாங்க பூங்கொத்து.
எனக்குப் பேர் சொல்ல என் வலைப்பூ இருக்கட்டும்னுதான் எழுதிட்டு இருக்கேன்...இஃகிஃகி!
Maddy said.../ தலைமுறைனு நீங்க சொன்னது மகன் மகள் பேரன் மச்சான் வழி சொந்தம் தானே?
அப்போ, உங்க பேச்ச தான் நான் கேட்டுட்டு இருக்கேன்! சந்தோசம் தானே!/
அடப்பாவமே இதில் இப்படி ஒரு குத்து இருக்கா????
சுல்தான் said...
/ நாங்கள் எதிலுமே முன் மாதிரிங்கோ./
அதுசரி!
Post a Comment
வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!
அன்புடன் அருணா