நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Wednesday, March 17, 2010

மீன்களும் மீனாக்களும்!

ண்ணாடிக் குடுவை ஒன்றை இருப்பிடமாக்கி ஐந்து மீன்கள் அதில் குடியிருந்தது. ரொம்பவும் அலையாமல் கிடைத்தது இந்தக் குடுவை. பெரிய மீன்தொட்டிக்குள் ஆழமாகவும் விசாலமாகவும் நீந்தி வந்த மீன்களுக்குத் திடீரென குறுகிய குடுவைக்குள் வீடு மாற்றியதில் நிறைய சிரமங்கள் இருந்தன. எங்கு எப்போ திரும்பினாலும் கண்ணாடிச் சுவரில் முட்டிக் கொண்டன.

அந்தப் பெரிய தொட்டியில் நிறைய நட்பு மீன்களை விட்டு வந்ததில் வேறு வருத்தமாயிருந்தது. உணவுக்கு மட்டும் பஞ்சமில்லை. அங்கும் இங்கும் அலைந்து சக மீன்களோடு சண்டை போடாமலேயே தேவைக்கு அதிகமாகவே காலையும் மாலையும் கிடைத்தது. குடுவை வசதியாக இருக்கிறதா? பிடித்திருக்கிறதா? என்றெல்லாம் மீன்களிடம் யாரும் கேட்கவில்லை. பளிச் பளிச் பல்புகளையும்,ப்ளாஸ்டிக் செடிகளையும் ஃபௌன்டன்களையும் நட்டு அழகாக்கியாயிற்று.

மீனாவுக்குப் புது வீடு பிடிக்கவேயில்லை. பெரிய பெரிய தூண் வைத்து திண்ணையுள்ள வீட்டிலிருந்து இப்படி மாடியில் க்ரில் போட்ட வீடு சிறையாய்த் தெரிந்தது. எங்கு திரும்பினாலும் முட்டும் சுவரும் கதவுகளும் வினோதமாகத் தெரிந்தன. பாட்டி தாத்தாவையும் அம்பி, சவி, முத்து, லல்லி எல்லோரையும் விட்டு வந்ததில் ரொம்ப வருத்தத்தில் இருந்தாள் மீனா. அம்மா சந்தோஷத்தில் விதம் விதமாகச் சமைத்துக் கொடுத்தாள். போட்டி போட்டுச் சாப்பிடத்தான் ஆளில்லை.

வீடு பிடித்திருக்கிறதா, காற்று வருகிறதா, வசதியாக இருக்கிறதா என்றேல்லாம் யாரும் மீனாவிடம் கேட்கவில்லை. மீனாவின் அறை அழகழகான பொம்மைகளாலும் பூக்களாலும் அலங்கரித்தாயிற்று.

"மீனு... மீனாக்குட்டி அம்மா ஆஃபீஸ் போயிட்டு வரேன். கிரில்லுக்குப் பூட்டுப் போட்டாச்சு. சமத்தா இருக்கணும். சரியா? சாப்பாடு டேபிளில் வச்சுருக்கேன். எது வேணும்னாலும் ஃப்ரிட்ஜ்லேருந்து எடுத்துச் சாப்பிடு. அம்மா சீக்கிரம் வந்துருவேன். யாருக்கும் கதவு திறக்காதே... சரியா?"

பதிலை எதிர்பார்க்காமல் அம்மா போய் விட்டாள்.

மீனா மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்து மீன்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். மீன்கள் ஒரு இடத்தில் இல்லாமல் நீந்திக் கொண்டேயிருந்தன. குடுவையை விரலால் தட்டினால் பயத்தில் மிரண்டவை போல் வேகம் வேகமாக நீந்தின. திரும்பத் திரும்பக் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. பயம் மீன்களுடன் எப்போதுமிருப்பது போலத் தோன்றும். மீனா என்ன செய்யவென்று அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சாப்பிட்டாள். இடையிடையே மீன்களையும் எட்டிப் பார்த்துக் கொண்டாள்.

மீனுக்குப் பசிக்குமோ என்றெண்ணிக் கொஞ்சம் மீனுக்குச் சாப்பாடு போட்டாள். டி.வி போட்டாள். பாட்டைச் சத்தமாக அலறவிட்டாள். எல்லாம் செய்தும் இன்னமும் நேரம் இருக்கவே என்ன செய்வதென்று பின்னால் பால்கனிக் கதவைத் திறந்து நீச்சலடிக்கும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தாள். கடல் வரைந்து அழகாய்க் கலர் அடித்தாள். அதற்குள் நிறைய மீன்கள் வரைந்து கலர் அடித்தாள்.

பின்பு மீன்குடுவைக்குப் பக்கத்தில் வந்தாள். மீன்கள் அப்போதும் கண்ணாடிச் சுவரில் முட்டி முட்டிப் பார்த்து ஏமாந்தன. ரொம்பப் பாவமாய் இருந்தது.

மீன் குடுவையை அப்படியே தூக்கிக் கொண்டு பால்கனிக்குப் போனாள். அங்கிருந்து குடுவையிலுள்ள மீன்களோடு தண்ணீரையும் நீச்சல்குளத்துக்குள் விழுமாறு வீசினாள்...

மீன்களின் மொழி மீனாவுக்குப் புரிந்திருந்தது.

மீனாக்களின் மொழி அம்மாக்களுக்குப் புரியுமா?

இது யூத்ஃபுல்விகடனில்.....

40 comments:

புலவன் புலிகேசி said...

அமேசிங் அருணா...நல்ல சிந்தனை..நல்ல நடை..

காமராஜ் said...

வாழ்த்துக்கள் அருணா மேடம்.
அருமையான எழுத்தும் கருத்தும்.
மீன்களுக்கு கூடவே இருக்கும் பயம்
நல்ல நினவூட்டல்.

sathishsangkavi.blogspot.com said...

உங்கள் எழுத்து அழகு...

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை! நல்லாயிருந்தது!

Thamira said...

நேரடியான கடைசி இரண்டு வரிகள் இல்லாமலிருந்தால் இன்னும் கவிதையாய் இருந்திருக்கும்.

Chitra said...

மெல்லிய உணர்வுடன் அமைக்கப்பட்ட கதை. விகடனில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க அருணா..

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

துல்லியமான ஒரு உணர்வைக் கதையாக்கி இருக்கிறீர்கள் அருணா. நடை அழகு. ரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை அருணா.

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, mail users, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
.
 
 
(Pls ignore if you get this mail already)

அன்புடன் அருணா said...

புலவன் புலிகேசி said...
/அமேசிங் அருணா...நல்ல சிந்தனை..நல்ல நடை../
நன்றி புலிகேசி!

அன்புடன் அருணா said...

கருத்துககு ந்ன்றி காமராஜ்!

க ரா said...

அருமையான கதை.

Madumitha said...

மீன்கள்
குளத்துக்குள்
போய்விட்டன.
மீனா?

தமிழ் அமுதன் said...

பூங்கொத்து..!

Unknown said...

சூப்பரா இருக்கு... நல்ல சிந்தனை..

ஆமா இப்பிடி குழந்தைகளைத் தனியா வீட்டுக்குள்ள வச்சிப் பூட்டிட்டுப் போறாங்களா என்ன?

அன்புடன் அருணா said...

நன்றி Sangkavi
நன்றி சந்தனமுல்லை

அன்புடன் அருணா said...

ஆதிமூலகிருஷ்ணன் said...
/நேரடியான கடைசி இரண்டு வரிகள் இல்லாமலிருந்தால் இன்னும் கவிதையாய் இருந்திருக்கும்./
அச்சோ...கொஞ்சம் சொல்லாமலே முடிக்கும் வித்தை கற்றாக வேண்டும்...நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி Chitra
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி ஜெஸ்வந்தி

அன்புடன் அருணா said...

Mehar said...

/My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. /
Nice topic and surely I'll help out Mehar!

அன்புடன் மலிக்கா said...

எல்லாருக்கும் பூங்கொத்துக்கொடுக்கும் அருணாவுக்கு.
இன்று நான் கொடுக்கிறேன். அருமை அழகான நளினம் எழுத்தில்...

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

Madumitha said...

/மீன்கள்
குளத்துக்குள்
போய்விட்டன.
மீனா?/
அட! இப்படிக் கூட முடித்திருக்கலாமோ????

பா.ராஜாராம் said...

அருமையாய் எழுதி இருக்கீங்க டீச்சர்!!!

அன்புடன் அருணா said...

நன்றி ஜீவன்!

மாதேவி said...

எடுத்துக்கொண்ட விடயமும் சொன்ன விதமும் அருமை.

Priya said...

மிக அருமை!

அன்புடன் அருணா said...

முகிலன் said.../ ஆமா இப்பிடி குழந்தைகளைத் தனியா வீட்டுக்குள்ள வச்சிப் பூட்டிட்டுப் போறாங்களா என்ன?/
அட! பெருநகரங்களில் இது ரொம்ப சாதாரணம் முகிலன்!

அன்புடன் அருணா said...

நன்றி இராமசாமி கண்ணண்!
நன்றி ராஜாராம் அவர்களே!

வேலன். said...

மிகவும் அருமை...வாழ்க வளமுடன்,வேலன்.

அன்புடன் அருணா said...

நன்றி மாதவி,பிரியா!

அன்புடன் அருணா said...

நன்றி வேலன்!

Porkodi (பொற்கொடி) said...

அருமை! இவ்வளவு நாளா விகடன் படிக்கறேன், ப்லாக் உலகத்துல சுத்தறேன்.. ஆனா உங்களை பாக்காம போயிட்டனே! :( மெதுவா எல்லாத்தையும் படிச்சுர்றேன்.. :)

அன்புடன் அருணா said...

Porkodi (பொற்கொடி) said...
/ஆனா உங்களை பாக்காம போயிட்டனே! :( மெதுவா எல்லாத்தையும் படிச்சுர்றேன்.. :)//
படிங்க! படிங்க! முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பொற்கொடி!

Magia da Inês said...

Olá, amiga!
Voltei para mais uma visitinha...
É uma pena que você não tenha um tradutor Google em seu cantinho...
Assim eu poderia ler sua postagens.
Você pode baixar esse tradutor gratis pela internet.
Bom domingo! Boa semana!
Beijinhos.
Itabira - Brasil

ப்ரியமுடன் வசந்த் said...

சொன்ன விஷயம் விதம் பளிச்சென்று மனதில் பதிகிறது....

அன்புடன் அருணா said...

hola Magia da Inês ,
Es agradable saber que quería leer mis mensajes .... He leído su comentario con la ayuda del traductor Google ... pero en la actualidad no hay ningún traductor para Tamil.Thanks para su visit.keep tipo de visita.

cheena (சீனா) said...

அன்பின் அருணா

மீன்களும் மீனாக்களும் - அருமையான கதை
விவரித்த விதம் - சூழ்நிலைகளை விளக்கிய விதம் அனைத்தும் அருமை

நல்வாழ்த்துகள் அருணா
நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

மீன்களின் பாஷை புரிந்த மீனாவிற்கு வாழ்த்துக்கள்.

krishna said...

good

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா