நின்னைச் சில வரங்கள் கேட்பேன்-

அவை நேரே இன்றெனக்குத் தருவாய் -

என்றன் முன்னைத் தீயவினை பயன்கள் யாவும்,

இன்னும் மூளாதொழிந்திடல் வேண்டும்.

இனி என்னைப் புதிய உயிராக்கி -

எனக்கேதும் கவலையறச் செய்து -

மதி தன்னை மிகத் தெளிவு செய்து -

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்.


Tuesday, March 9, 2010

ஸ்பரிசம்

இந்த நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது...- அருணா சுரேஷ்
இந்தக் கட்டுரையும் கவிதையும் மகளிர் தினம் ஸ்பெஷல் சக்தி-2010 இதழில்..........

குட்டிம்மாவின் பிறப்பில்
தேவதை இறக்கைகளுக்கான
தேடல் ஆரம்பம்...

ரோஜா நிறக் குட்டிக் கால்
கண்டதுமே சின்ட்ரெல்லாவின்
தொலைந்த காலணியைத் தேட
ஆரம்பித்தது மனது...

பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை

கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...

யாரையோ மணமகனாக்கி
உடன் ஏற்றி
ரயில் நகரும் போது
அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்...

கைகளில் ஒட்டிக் கொண்டு வீடு
வந்து சேர்ந்து அழ வைத்தது...

வீடு முழுவதும் நீ செய்த
ப்ளாஸ்டிக் பூக்களும்
சுவர் கிறுக்கல்களும்
கொடியில் தொங்கும்
சூடிதார்களும்
கண்ணாடியில் ஸ்டிக்கர்
பொட்டுமாய்
கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...



39 comments:

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் அருணா...

ப்ரியமுடன் வசந்த் said...

//கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...//

அழகியல் வரிகள் பிரின்ஸ் நல்லாருக்கு...

காமராஜ் said...

மிகவும் நெகிழ்வானதிந்த பிரிவும் பரிவும்.
அழகிய கண்ணீர் மேடம்.
சக்தி 2010 இதழில் இடம் பெற்றமைக்கு
வாழ்த்துக்கள் மேடம்,

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் கண்ணிலும் வருகிறது மழை. மேலுள்ள பாதியை அனுபவித்தாயிற்று.

பெசொவி said...

//எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை
//
//
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...
//

ஒரு தாய்க்கு இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் இருக்குமோ......சூப்பர், மேடம்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

நெகிழ்வு

பூங்கொத்து :)

ராமலக்ஷ்மி said...

விகடனிலும் வாசித்தேன் அருணா. மிக அருமை.
//பயத்தில் குட்டிம்மாவின் கை
இறுக்கத்திலும் முதுகுப் பின்
மறைவிலும்
கடவுளானேன் சிலநேரம்...

எனதுடையணிந்து
என் முன் நிற்கும் போது
என் முற்றத்தில்
எனக்கான மழை//

// கைநிறைய உன் பிரிவு
ஸ்பரிசமுமாய்...
கண் நிறைய ஒளித்து
வைத்த மழையுமாய்
அம்மா...//

நெகிழ்வு. நல்ல கவிதைக்கு நன்றி

pudugaithendral said...

கலக்கிட்டீங்க அருணா

மனமார்ந்த வாழ்த்துக்கள்

சுந்தரா said...

நெகிழவைக்கிறது கவிதை...

வாழ்த்துக்கள் அருணா!

Rajeswari said...

ஆயிரம் பூங்கொத்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துக்கள் அருணாக்கா.

அன்புடன் அருணா said...

நன்றி புலவன் புலிகேசி!
பிரியமுடன்...வசந்த்
/அழகியல் வரிகள் பிரின்ஸ் நல்லாருக்கு.../
கருத்துக்கு நன்றி வசந்த்!

அன்புடன் அருணா said...

நன்றி காமராஜ்,
நன்றி முத்துலட்சுமி!

அன்புடன் அருணா said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...
/ ஒரு தாய்க்கு இதைவிட மகிழ்ச்சியான தருணங்கள் இருக்குமோ......சூப்பர், மேடம்!/
அதேதான் "பெயர் சொல்ல விருப்பமில்லை" நன்றி!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து வாங்கீட்டேன் ஜமால்.நன்றி!

குட்டிப்பையா|Kutipaiya said...

lovely lines !!

சாந்தி மாரியப்பன் said...

//அவசரமாய்த் தொட்டுக்
கோர்த்துக் கொள்ளும் கைகளின்
ஸ்பரிசம்..//

இது இப்பவும் எனக்கு கிடைக்கிறது என் அம்மாவிடமிருந்து. நெகிழ்ச்சியாய் இருந்தது அருணா மேடம்.

+Ve Anthony Muthu said...

3 நாட்களாய் இணையத்தின் பக்கம் வார முடியாதிருந்தது. இப்பத்தான் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

மிகச் சரியாக உங்களின் எழுத்துக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது.

உண்மையிலேயே எனக்கே கிடைத்தாற்போல, என் எழுத்தே பிரசுரமானதைப் போல பெரு மகிழ்ச்சியை உணர்கிறேன்.

வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

நன்றி ராமலக்ஷ்மி!

அன்புடன் அருணா said...

நன்றி புதுகைத் தென்றல்!

Unknown said...

ச்சே....சூப்பர் மேடம்!!!!

வேலன். said...

மேடம் முதலில் இரண்டு பூங்கொத்துக்களை பிடியுங்கள். முதல் பூங்கொத்து உங்கள் மகளின் பிறந்த நாளுக்கு. அடுத்துது உங்களுக்கு ...வாழ்த்துக்கள். உங்கள் மாணவன்...வாழ்க வளமுடன்,வேலன்.

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தரா !
Rajeswari said...
/ஆயிரம் பூங்கொத்துக்கள்/
ஆயிரமும் வாங்கியாச்சி!நன்றி ராஜி!

அன்புடன் அருணா said...

நன்றி சுந்தரா!

அன்புடன் அருணா said...

Rajeswari said...
/ஆயிரம் பூங்கொத்துக்கள்/
ஆயிரமும் வாங்கியாச்சு ராஜி!

எம்.எம்.அப்துல்லா said...
/வாழ்த்துக்கள் அருணாக்கா./
வாங்க அப்துல்லா...எப்போவாது வ்ர்றீங்க!

Madumitha said...

ஒவொருவர்
வீட்டிலும்
ஒரு தேவதை
மகள் வடிவத்தில்.

அம்பிகா said...

கவிதை அருமையாக இருக்கிறது.
தேவதையின் இறக்கையிலும், சிண்ட்ரெல்லாவின் காலணி தேடலிலும் ஆரம்பமான நெகிழ்வு, பிரிவின் ஸ்பரிசத்தில் முழுமையடைந்தது.
வாழ்த்துக்கள் அருணா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள். கவிதை ரொம்ப நல்லா இருந்துச்சு, குறிப்பா இந்த வரிகள்

//கண்ணாடிக் கைவளையோசையும்
சுவரில் நெற்றிப் பொட்டும்
மொட்டு சத்தமில்லாமல் மலர்வதைக்
கொஞ்சம் சத்தமாகவே சொல்லியது...//

அன்புடன் அருணா said...

நன்றி kutipaiya !!!
அமைதிச்சாரல் said...
/ இது இப்பவும் எனக்கு கிடைக்கிறது என் அம்மாவிடமிருந்து. நெகிழ்ச்சியாய் இருந்தது அருணா மேடம்./
அம்மாவிடம் உணர்ந்ததுதான் இதுவும் அமைதிச்சாரல்.!

அன்புடன் அருணா said...

+Ve Anthony Muthu said...
/மிகச் சரியாக உங்களின் எழுத்துக்கும் உழைப்புக்கும் கிடைத்த பரிசு இது. /
நன்றி Anthony!

anto said...
/ ச்சே....சூப்பர் மேடம்!!!!/
ச்சே! யும் சொல்றீங்க! சூப்பரும் சொல்றீங்க! பாராட்டுதானே!!!

நன்றி Anto!

அன்புடன் அருணா said...

இரண்டு பூங்கொத்தும் வாங்கியாச்சு வேலன்!

அன்புடன் அருணா said...

நன்றி மதுமிதா,அம்பிகா!

அன்புடன் அருணா said...

நன்றி அமித்தம்மா!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு டீச்சர்.வாழ்த்துக்கள்!

Thamira said...

மிக அருமையான ஒரு போர்ட்ரெய்ட். வாழ்த்துகள்.

பிரிவது பெண்கள். அதை உணர்வது பெண்கள் மட்டுமேயல்ல..

பாச மலர் / Paasa Malar said...

அருணா...முத்துலெட்சுமி சொன்னாற்போல் பாதியை அனுபவித்தாயிற்று..இனி மீதி...உங்கள் கவிதை ஒரு முன்னோட்டம்.

Porkodi (பொற்கொடி) said...

அருமைங்கறதை தவிர வேற என்ன சொல்லனு தெரியலை. வாழ்த்துக்கள் அருணா!

அன்புடன் அருணா said...

நன்றி பா.ராஜாராம் !
ஆதிமூலகிருஷ்ணன் said.../
/பிரிவது பெண்கள். அதை உணர்வது பெண்கள் மட்டுமேயல்ல../
அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!நன்றி!

அன்புடன் அருணா said...

நன்றி பாசமலர்,பொற்கொடி!

Post a Comment

வந்தீங்க..!
படிச்சீங்க..!
சும்மா பார்த்துட்டு போகாதீங்க..!
பிடிச்சிருந்தால் பூங்கொத்து கொடுங்க..!
பிடிக்கலைன்னாலும் எழுதுங்க..!

அன்புடன் அருணா